கருப்பை பிரச்சனையா? பெண்களின் கருப்பையை வலுவாக்கும் சிறந்த உணவுகள்!

கருப்பை பிரச்சனையா? பெண்களின் கருப்பையை வலுவாக்கும் சிறந்த உணவுகள்!

பெண்களுக்கு  உடல் ஆரோக்கியம்  மிக முக்கியம். அதுவும் கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக மிக அவசியம். பொதுவாக  பெண்கள் பிள்ளைகளைப் பெற்ற பின் உடல் ஆரோக்யத்தைப் பற்றியும், கருப்பை தொந்தரவுகளைப் பற்றியும் பெரிதாக அக்கறை கொள்வதில்லை. ஆரோக்கியமான குழந்தைகளை  பெற்றெடுக்க மகப்பேறுக்கு முன்னும், மகப்பேறுக்கு பின்னும் பெண்கள் கருப்பையை பத்திரமாகவும், சுகாதாரமாகவும், வலுவாகவும் (strengthen uterus) வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். கருப்பை (uterus) வலுவாக  இருந்தால் எந்த நோயும் அண்டாது.இதற்காக நீங்கள் உங்கள்  உணவு (food) முறையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் போதுமானது.

கருப்பையை வலுவாக்கும் சிறந்த பத்து இயற்கை உணவுகள்

1. மாதுளை

தினமும் மாதுளையை உண்பதன்மூலம் கருப்பை பலம் பெரும்.மாதுளையில் நியாசின், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றது. இந்த சத்துக்கள் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்தையும், வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. கர்ப்பகாலத்தில் தோன்றும் சதை பிடிப்புகள், தூக்கமின்மை ஆகிய பிரச்சனைகளையும் குறைக்க  மாதுளை உதவுகிறது

2. பப்பாளி

Pixabay

தினமும் பப்பாளிப்பழத்தை உண்பதன் மூலம் கருப்பையில் உள்ள அழுக்குகள் நீங்கும்.பப்பாளியில் உள்ள பைபிரின் புரதம் ஜீரணத்தை அதிகரித்து, இரத்தம் உறைவதை தடுக்கிறது. உடலுக்கு உள்ளேயும் வெளியிலும் ஏற்படும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது. உடலுக்குள் தேவையற்ற இரத்தம் உறைவதை தடுக்கிறது.

3. கருஞ்சீரகம்

கருப்பை புண், கருப்பையில் உள்ள அழுக்குகளை நீக்கி பலமடைய கருஞ்சீரகம் உதவுகிறது. கருஞ்சீரகம் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. கருப்பை கோளாறினால் பெண்களுக்கு ஏற்படும் உடல் பருமனை கட்டுப்படுத்தவும் கருஞ்சீரகம் உதவுகிறது. கருஞ்சீரகத்தில் உள்ள அசிடோகோளின் புரதம் மூளையை சுறுசுறுப்பாக வைக்க மிகவும் சிறந்தது.

4. வெந்தயம்

Pixabay

வெந்தயம் கருப்பையை வலுவாக்கும். மாதவிடாய் வலியை நீக்கி, மாதவிடாய் சுழற்சியை மேன்படுத்தும். ஈரப்பதம் 8.6 சதவீதம், 35.7 சதவீதம் மாவுச்சத்தும், ப்ரோடீன் 10.4 சதவீதம், கொழுப்பு 15.9 சதவீதம், நார்ச்சத்து 20.1 சதவீதம், 6.5 சதவிகிதம் உலோக சத்துக்கள், வைட்டமின் பி1, பி2, சி, எ ஆகிய இரசாயன கலவை கொண்டது வெந்தயம்.

உடலில் எந்த இடத்தில் இரத்த கசிவு இருந்தாலும் அங்கு இந்த வெந்தயம் வேலை செய்யும்.

5. நெருஞ்சில்

நெருஞ்சில் கசாயம் கருப்பையில் உள்ள கிருமிகளை அழித்து கருப்பையை சுத்தமாக்கும்.இதில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. நெருஞ்சில் இலை, காய், பூ, வேர் என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இது பாலியல் பிரச்சனைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் தீர்க்க வல்ல ஒரு அரு மருந்து. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகளை குணப்படுத்தி, குழைந்தை பேரும் உண்டாக்குகிறது.

6. பேரிட்ச்சை

Pixabay

தினமும் மூன்று பேரிட்ச்சையை எடுத்துக்கொண்டால் கருப்பைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெற்று கருப்பை பலமடையும். பேரிட்ச்சையில் அதிகமான இரும்புச்சத்து உள்ளது. இது தாய்யையும் சேயையும் இரத்த சோகை வராமல் பாதுகாக்கும். கருப்பை தசைகளை வலுவாக்கி பேறுகாலத்தில் சுலபமாக குழந்தை பெற்றிட உதவும்.  

7. கற்றாழை

கற்றாழை திரவம் கருப்பையில் உள்ள நுண் கிருமிகளை அழித்து, கருப்பை சூட்டை தணிக்கும்.நீர் கடுப்பு, உடல் உஷ்ணம், வயிற்றில் எரிச்சல் ஆகிய நேரங்களில் கற்றாழையை உண்பதால் குணமாகும். உடல் எடை அதிகரிக்கும் போதும், கர்ப்ப காலத்திற்கு பின்னும் உடலில் தசையில் மார்க்குகள் தோன்றும். கற்றாழையை பயன்படுத்தினால் தசை மார்க்குகள் மறையும்.

8. எள்

Pixabay

தினமும் ஒரு தேக்கரண்டி எள்ளை எடுத்துக்கொண்டால் கருப்பை சுத்திகரிக்கப்பட்டு கருப்பை பலமாகும். இரும்பு சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையில் இருந்து விடுபட தினமும் எள் சாப்பிடுவது நல்லது. வளரும் குழந்தைகளுக்கு எள் கொடுத்து வந்தால் மிகுந்த ஆரோக்கியத்துடன், புத்திசாலியாகவும், பலசாலியாகவும் வளருவார்கள்.

9. முருங்கை கீரை

முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள் கருப்பையை வலுவாக்கும். மாதவிடாய் சுழற்சியை சரி செய்யும். உடல் சோர்வை நீக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு இரத்தத்தை அதிகரிக்கும், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். அதிக  வைட்டமின் சத்து, இரும்பு சத்தும், கால்சியம் சத்தும் நிறைந்து இருப்பதால், வாரத்திற்கு இரண்டு மூன்று முறையாவது முருங்கை கீரையை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது கர்ப்பிணிகளுக்கு சக்கரை அளவை கட்டுப்படுத்தும், கிருமிகளை எதிர்த்து போராடும். கற்பகாலத்திற்கு பிறகும் பால் சுரப்பது அதிகரிக்கும். 

10. இளநீர்

Pixabay

இளநீர் உடலின் ஐந்து முக்கிய எலெக்ட்ரோ லைன்களையும் கவனித்துக் கொள்கிறது. மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தகிறது. இது தவிர இளநீர் இயற்கையில் சிறுநீரை பிரித்து அனுப்பும் ஆற்றல் கொண்டது. அதனால் சிறுநீரக பாதையில் வரும் நோய்களை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி பெண்கள் தினமும் இளநீர் குடிப்பதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். அது உங்களுக்கும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. 

 

மேலும் படிக்க - கர்ப்பமடைவது எப்படி?பெண்களுக்கான சில ஆலோசனைகள்!

பட ஆதாரம் - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.