logo
ADVERTISEMENT
home / Health
உங்கள் உடல் நலனை அதிகரிக்க நார் சத்தின் முக்கியத்துவம்!

உங்கள் உடல் நலனை அதிகரிக்க நார் சத்தின் முக்கியத்துவம்!

பல வகை சத்துக்கள் நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவில் இருந்தாலும், நார் சத்துக்கு ஒரு தனி முக்கியத்துவம் உள்ளது. தினமும், குறைந்தபட்ச அளவாவது நார் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். இது உங்கள் உடல் நலத்தை நிச்சயம் நல்ல நிலையில் வைத்துக் கொள்ளும் என்று மருத்துவ ரீதியாகவும், அனுபவப் பூர்வமாகவும் நிரூபிக்கப்படுகின்றது.

நீங்கள் தினமும் நார் சத்து நிறைந்த உணவை (fibre rich food) எடுத்துக் கொள்கின்றீர்களா?இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா?அப்படியென்றால், இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்!

தொடர்ந்து படியுங்கள்!

ADVERTISEMENT

நார் சத்து என்றால் என்ன? (What is fiber)

நார் தாவரம் சார்ந்த சத்தாகும். இது ஒரு விதமான கார்போஹைட்ரெட் என்றாலும், இதனை சர்க்கரை மூலக்கூறுகளாக உடைக்க முடியாது. அதனால், இது குடல் வழியாக செல்கின்றது. எனினும், இதன் பயணத்தின் போது எண்ணிலடங்காத நன்மைகளை உடலுக்குத் தருகின்றது. நார் சத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்;

  • நார் சத்து நல்ல சீரான ஜீரணத்தைப் பெற உதவுகின்றது
  • இது உடல் எடையை சீரான அளவில் வைத்துக் கொள்ள உதவுகின்றது
  • இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றது
  • 5௦ வயதிற்கு மேலான ஆண்கள் தினமும் 38 கிராம் நார் சத்தும், இளம் வயதினர் 25 கிராம் நார் சத்தும் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • 5௦ வயதிற்கு மேலான பெண்கள் தினமும் 25 கிராமும், இளம் வயது பெண்கள் தினமும் 21 கிராம் நார் சத்தும் எடுத்துக் கொள்ள வேண்டும்
  • நாரம் கரையும் மற்றும் கரையா நார் சத்து என்று இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது
  • கரையும் நார் தண்ணீரில் கரையும், ஆனால் கரையா நார், கரையாது
  • இரண்டு நார் சத்துகளும் உடலுக்கு மிக முக்கியம். இவை இரண்டும் வெவ்வேறு பலன்களை உடலுக்குத் தருகின்றது
  • கரையும் நார் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை சீர் செய்ய உதவுகின்றது
  • கரையா நார் உணவு விரைவாக ஜீரண அமைப்பில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவுகின்றது
  • அனைத்து தாவரங்களிலும் நார் சத்து உள்ளது. எனினும், அதன் அளவு வேறுபாடும்

எவ்வளவு நார் சத்து எடுத்துக் கொள்ள வேண்டும்? (How much fiber you need )

Shutterstock

ADVERTISEMENT

 

வயதுஆண்பெண்
9 -133126
14 – 183826
19 – 303825
31 – 503825
51 – 703021
70க்கு மேல்302

(கிராம்களில்)                                                         

நார் சத்தால் கிடைக்கும் நன்மைகள்(Benefits of fiber)

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நார் சத்து மிக முக்கியம். தினமும், பரிந்துரைக்கப்பட்ட அளவு நார் சத்தை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நார் சத்தால், உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள்(benefits) என்ன என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்:

ADVERTISEMENT

1. இருதய ஆரோக்கியம்

கரையும் நார் சீரம் எல்.டி.எல் கொழுப்பு உடலில் உரிஞ்சப்படுவதை தடுக்கின்றது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் நலம் சீராக இருக்க உதவுகின்றது.

2. இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும்

நார் சத்திற்கு இரத்தத்தில் சர்க்கரை உரிஞ்சப்படுவதை தடுக்கும் பண்புகள் உள்ளன. இதனால், அது அதிக அளவு சர்க்கரை இரத்தத்தில் சாராமல், சீரான அளவு இருக்க உதவும். இதனால் நீரழிவு நோயை தடுக்கலாம்.

3. உணவு செரிமானம் ஆக உதவும்

கரையா நார் குடல் பகுதியில் பயணித்து செல்லும் என்றாலும், அது அப்படி சியும் போது, வயிற்றில் இருக்கும் உணவை எளிதாக செரிமானம் செய்யவும் உதவுகின்றது. இதனால், எளிதாக ஜீரணித்து, உடல் ஆரோக்கியம் பெறுகின்றது. மேலும் இது நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகின்றது.

4. உடல் எடை குறைப்பு

ADVERTISEMENT

Shutterstock

அதிக உடல் எடை இருப்பவர்கள், நார் சத்து நிறைந்த உணவை தினமும் எடுத்துக் கொள்ளும் போது, உடல் எடை நாளடைவில் சீராவதை நீங்கள் கவனிக்கலாம். நார் சத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை வெளியேற்ற உதவுகின்றது. மேலும், சிறிதளவு உண்டாலும், வயிர் நிறைந்திருப்பது போன்ற உணர்வை தருகின்றது. இதனால், அதிகம் உணவை எடுத்துக் கொள்ளும் தேவை குறைகின்றது. இது இறுதியில், உங்கள் உடல் எடையை சீரான அளவிற்கு கொண்டு வருகின்றது.

5. புற்றுநோய் அறிகுறியை தடுகின்றது

நாரில் அதிக அளவு ஆக்சிஜனேற்றம் மற்றும் பைடோ ரசாயனங்கள் உள்ளன. இது ஒரு சில குறிப்பிட்ட புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.

மேலும் படிக்க – ஆரோக்கிய வாழ்விற்கு வைட்டமின் டி – முக்கியத்துவம் & வைட்டமின் டி சத்து நிறைந்த ஆதாரங்கள்!

ADVERTISEMENT

6. நீண்ட ஆயுள்

மருத்துவ ஆய்வின் படி, நார் சத்தை தினமும் எடுத்துக் கொள்பவர்கள் நல்ல ஆயுளோடு வாழ முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இதனை எடுத்துக் கொள்பவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு பல வருடங்கள் வாழலாம்.

7. உணவு ஒவ்வாமை

பலருக்கும் ஒரு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடும். இதனால் பல உபாதைகள் உடலில் உண்டாகலாம். எனினும், நார் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும் போது குடல் பகுதியில் ஏதாவது பக்டீரியா இருந்தால், அதனை அழித்து, உங்கள் உணவு சீராக செரித்து, ஒவ்வாமையை ஏற்படுத்தாமல் நார் உதவியாக இருக்கும்.

8. ஆஸ்த்மா

Shutterstock

ADVERTISEMENT

குடல் பகுதியில் இருக்கும் தேவையற்ற பக்டீரியா போல, தேவையற்ற துகள்கள் குடலில் இருந்து தப்பித்து இரத்த ஓட்டத்தில் நுழைவது ஆஸ்துமா போன்ற தன்னுடல் எதிர்ப்பு பதிலை ஏற்படுத்துகின்றது. எனினும், அதிக நார் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அததகைய பிரச்சனைகளில் இருந்து விடு பட்டு, சுவாச ஆரோக்கியத்தைப் பெறலாம்.

9. சரும ஆரோக்கியம்

ஈஸ்ட் மற்றும் பூஞ்சை சருமதிற்குள் ஊடுருவி, பருக்கள், புண் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். எனினும், நார் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும் போது உடலில் தேவையற்ற கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேறி, சுத்தமாகின்றது. இது சருமத்திற்கு நல்ல பலனைத் தந்து, சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.

உணவுகளில் இருக்கும் நார் சத்தின் விவரங்கள்(Fiber food fact sheet)

ஒவ்வொரு உணவுப் பொருளிலும் நார் சத்தின் அளவு மாறுபட்டிருக்கும். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக ஒரு சிறிய பட்டியால்;

ADVERTISEMENT
தானியங்கள்100 கிராம் உணவில் இருக்கும் நார் சத்து
அரிசி0.2
கோதுமை1.2
கம்பு1.2
மக்காச்சோளம்2.7
சோளம்1.6
கேழ்வரகு3.6
வங்காள பயிர்3.9
பச்சை பயிர்4.1
கேரட்4.4
காலிஃபிளவர்1.2
தாமரை தண்டு, உலர்ந்த25.0
கொய்யா5.2

 

நார் சத்து நிறைந்திருக்கும் காய் வகைகளும், பழங்களும்

ஒவ்வொரு காய்கறிகள் குறிப்பிட்ட சில சத்துக்களை கொண்டவை. இந்த வகையில் எந்ததெந்த காய்கறி மற்றும் பழங்களில் அதிக நார் சத்து உள்ளன என்பதை இங்கு பார்ப்போம்.

1. பேரிக்காய்

இந்த பழம் ஆப்பில் போன்று இருக்கும். இது பச்சை நிறம் மற்றும் மஞ்சள் நிறங்களில் பெரும் அளவு கடைகளில் எளிதாக கிடைக்கும். இதன் விளையும் மலிவானது. இந்த பழத்தில் அதிக நீர் மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது. ஒரு 1௦௦ கிராம் எடை உள்ள பழத்தில் 5.5 கிராம் வரை நார் சத்து நிறைந்திருக்கும்.

ADVERTISEMENT

2. ஸ்ட்ராபெரி

இந்த பழம் இனிப்பாகவும், சுவையாகவும் இருக்கும். இதில் வைட்டமின் சி நிறைந்திருந்தாலும், அதிக ஆக்சிஜனேற்றமும் உள்ளது. ஒரு 1௦௦ கிராம் ஸ்ட்ராபெரி பழத்தில் 3 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

3. அவகோட

Shutterstock

ஒரு 1௦௦ கிராம் அவகோட பழத்தில் 1௦ கிராம் வரை நார் சத்து நிறைந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் இதி வைட்டமின் பி, இ மற்றும் சி நிறைந்துள்ளது. மேலும் இதில் பொட்டசியம் மற்றும் மக்னேசியம் நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

4. ஆப்பிள்

இதை பற்றி அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், ஒரு 1௦௦ கிராம் ஆப்பிளில் 4.4 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் விரும்பி உண்பார்கள்.

5. ராஸ்பெரி

இது வித்யாசமான சுவையை கொண்டிருந்தாலும், இதில் வைட்டமின் சிஸ் மற்றும் மங்கனீஸ் சத்து உள்ளது. ஒரு 1௦௦ கிராம் ராஸ்பெரி பழத்தில் 8 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

6. வாழைப்பழம்

வாழைப்பழம் எங்கும் எளிதாக கிடைக்கக் கூடிய பழமாகும். இதில் கார்போஹைட்ரெட், வைட்டமின் சி, பி 6 மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. 1௦௦ வாழைப்பழத்தில் 3.1 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

7. கேரட்

ADVERTISEMENT

Shutterstock

கேரட், முள்ளங்கி போன்ற ஒரு சிவப்பு கிழங்கு. இதில் பல வகை சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை மக்கள் பச்சையாக அதிகம் விரும்பி இதன் சுவைக்காக உண்பார்கள். 1௦௦ கிராம் காரட்டில் 3.6 கிராம் நார் சத்து உள்ளது.

8. பீட்ரூட்

இந்த கிழங்கில் இரும்பு, செம்பு, மங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை பெரும்பாலும் சாராகவு, சமையலிலும் மக்கள் பயன்படுத்துவார்கள். 1௦௦ கிராம் பீட்ரூட்டில் 3.8 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

9. ப்ரொகொலி

காளிப்பலவரை போன்ற தோற்றம் உடைய இந்த ப்ரோகொலியில் வைட்டமின் சி, கெ பி, பொட்டாசியம், இரும்பு நிறைந்துள்ளது, இதில் ஆக்சிஜனேற்றமும் அதிகம் உள்ளது. 1௦௦ கிராம் ப்ரோகொலியில் 2.4 கிராம் நார் சத்து உள்ளது.

ADVERTISEMENT

10. கூனைப்பூ

இது ஒரு வகை காய் வகையாகும். இதில் அதிக நார் சத்து நிறைந்துள்ளது. 1௦௦ கிராம் கூனைப்பூவில் 1௦.3 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

11. முளைகட்டிய பயிர்

Shutterstock

1௦௦ கிராம் முளைகட்டிய பயிரில் 4 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் அதிக ஆக்சிஜனேற்றமும் உள்ளது. இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்.

ADVERTISEMENT

12. பச்சை பயிறு

1௦௦ கிராம் பச்சை பயிரில் 15.6 கிராம் நார் சத்து உள்ளது. இதனை நீங்கள் சமைத்தோ அல்லது முளைகட்டியோ சாப்பிடலாம். மேலும் இதில் புரதம் போன்ற பிற சத்துக்களும் நிறைந்துள்ளது.

13. பீன்ஸ்

இந்த காய் வகை பெரும்பாலும் அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. 1௦௦ கிராம் பீன்ஸில் 11.3 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

14. பச்சை பட்டாணி

இந்த பட்டாணியை பச்சையாகவோ, அல்லது உலர்ந்த பட்டாணியை ஊற வைத்து வேக வைத்து சாப்பிடலாம். 1௦௦ கிராம் பச்சை பட்டாணியில் 16.3 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

15. ஓட்ஸ்

ADVERTISEMENT

Shutterstock

இதில் கரையும் நார் சத்து நிறைந்துள்ளது. இது உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. 1௦௦ கிராம் ஓட்ஸ்சில் 16.5 கிராம் நார் சத்து உள்ளது.

16. சோளம்

இது அதிக பிரபலமான உணவுப் பொருள் என்று கூறலாம். மக்கள் இதனை பல வகைகளில் சமைத்து உண்பார்கள். 1௦௦ கிராம் சோளத்தில் 14.5 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

17. பாதாம் கொட்டை

இதில் வைட்டமின் இ, மக்னேசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. 1௦௦ கிராம் பாதாம் கோட்டையில் 12.5 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

18. சக்கரைவள்ளி கிழங்கு

இது மிகவும் சுவையான கிழங்கு. இதனை பச்சையாகவோ அல்லது அவித்தோ, சமைத்தோ எடுத்துக் கொள்ளலாம். 1௦௦ கிராம் சர்க்கரைவள்ளி கிழங்கில், 2.5 கிராம் நார் சத்து உள்ளது.

19. கோதுமை

Shutterstock

கோதுமை பல உணவுகளை தயார் செய்ய உதவுகின்றது. ஒரு கப் கோதுமையில் 6 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

20. சிவப்பு அரிசி

வழக்கமாக பயன்படுத்தும் புளுங்கள் அரிசி மற்றும் பச்சை அரிசி வகைகளில் இருந்து சற்று மாறுபட்டு, இந்த சிவப்பு அரிசி அதிக நார் சத்து கொண்டதாக உள்ளது. ஒரு கப் சிவப்பு அரிசியில் 4 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

21. உலர்ந்த ப்ளம்ஸ்

ஒரு கப் உலர்ந்த ப்ளம்ஸ் பழத்தில் 12 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது. இது மிகவும் சுவையாகவும் இருக்கும்.

22. ஆளி விதை

இந்த விதையில் அதிக அளவு நார் சத்து உள்ளது என்று கூறலாம். ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 3க்கு மேல் கிராம் நார் சத்து உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான நார் சத்து நிறைந்த உணவுப் பொருள்.

23. வெண்டக்காய்

ADVERTISEMENT

Shutterstock

இது நார் சத்து நிறைந்த மற்றுமொரு காய் வகை. 1௦௦ கிராம் வெண்டைக்காயில் 5 கிராம் நார் சத்து உள்ளது. பிற காய் வகைகளுடன் ஒப்பிடும் போது, இதில் பிற சத்துக்களும் அதிக அளவு உள்ளது.

24. காலிப்ளவர்

இந்த பூ அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று என்று கூறலாம், ஒரு கப் காலிப்ளவரில் 2.8 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

25. உருளைக்கிழங்கு

இதை பிடிக்காதவர்களே இருக்க முடியாது என்று கூறலாம். ஒரு 5௦ கிராம் உருளைக்கிழங்கில் 5 கிராம் நார் சத்து உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி மற்றும் பி 6 உள்ளது.

ADVERTISEMENT

26. கமலாப்பழம்

இந்த பழம் மிகவும் சுவையாகவும், சாறு நிறைந்ததாகவும் இருக்கும். ஒரு 5௦ கிராம் பழத்தில் 3.1 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

27. நவாப்பழம்

Shutterstock

இந்த பழத்தில் எண்ணிலடங்கா சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக ஒரு கப் பழத்தில் 8 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

28. அவரைக்காய்

இதை அதிக அளவு சமையலில் பயன்படுத்துவார்கள். ஒரு கப் அவரக்காயில் 13 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

29. பாதாம் கொட்டை

ஒரு கப் பாதாம் கோட்டையில் 13 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது. இதில் புரதமும் அதிக அளவு உள்ளது.

30. உலர்ந்த அத்திப்பழம்

அத்திப் பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில் குறிப்பாக உலர்ந்த அத்திப்பழத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. ஒரு கப் அத்தி பழத்தில் 15 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது.

31. வெங்காயம்

ADVERTISEMENT

Shutterstock

வெங்காயத்தை தினமும் மக்கள் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். ஒரு சிறிய அளவு வெங்காயத்தில் 2 கிராம் நார் சத்து நிறைந்துள்ளது. மேலும் வெங்காயம் உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகின்றது.

32. தேங்காய்

தேங்காயில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. எனினும், இதில் நார் சத்தும் அதிக அளவு உள்ளது. ஒரு சிறிய துண்டு தேங்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், உங்களுக்கு தினமும் தேவைப்படும் நார் சத்தில் 16% அது தந்துவிடும்.

ADVERTISEMENT

கரையக் கூடிய, கரையாத மற்றும் ப்ரோபயாடிக் நார் சத்து (List of soluble, insoluble and probiotic fiber)

நார் சத்து இரண்டு வகைகளில் பிர்ரிக்கப்பட்டுள்ளது, கரையக்கூடிய நார் மற்றும் கரையாத நார். மேலும் இது ப்ரோபயோடிக் என்று மூன்றாவது வகையிலும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு நார் சத்தும் எந்த உணவுப் பொருட்களில் கிடைக்கும் என்பதை பற்றிய ஒரு சிறய பயனுள்ள பட்டியால்;

1. கரையும் நார்

முழு தானிய ஓட்ஸ்
பார்லி
கருப்பு பீன்ஸ்
பயறு
ராஸ்பெர்ரீஸ்
ஆப்பிள்கள்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
கமலாப்பழம்

2. கரையா நார்

கோதுமை
கோதுமை தவிடு
சோளம்
முளைகட்டிய பயிர்கள்
ஆப்பிள்
பீன்ஸ்

3. ப்ரோபயோடிக் நார்

சிக்கரி வேர்
டான்டேலியன் வேர்
கூனைப்பூ
வெங்காயம்
பூண்டு
பார்லி
வாழைப்பழம்

ADVERTISEMENT

தினசரி உணவில் நார் சத்தை அதிகரிக்க குறிப்புகள்(Tips to boost fiber)

Shutterstock

  • தினமும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்களின் மீது கவனம் செலுத்துங்கள்
  • உலர்ந்த பழம் அல்லது கொட்டை வகைகளை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்
  • ஏதாவது ஒரு பயிர் வகையை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்
  • தக்காளி, கேரட் போன்ற காய்கள் தினமும் உங்கள் உணவில் இருக்க வேண்டும்
  • மதிய உணவில் அதிகம் காய் மற்றும்  பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்
  • காய் மற்றும் பழங்களை முடிந்த வரை தோல் நீக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
  • வெள்ளை அரிசிக்கு பதிலாக, கைகுத்தல் அரிசி மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
  • தினமும் காலையில் நார் சத்து நிறைந்த ஏதாவது ஒரு உணவை கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்
  • நொறுக்கு தீனிக்கு பதிலாக பழங்கள் மற்றும் பச்சை காய் வகைகளை சாப்பிடுங்கள்
  • பழச்சாறுக்கு பதிலாக பழத்தை முழுமையாக சாப்பிடுங்கள்

கேள்வி பதில்கள்(FAQ)

1. எந்த பழத்தில் அதிக நார் சத்து நிறைந்துள்ளது?

ஆப்பில், வாழைப்பழம், கமலாப்பழம், ஸ்ட்ராபெரி, நவாப்பழம், மாம்பலம் ஆகியவற்றில் நார் சத்து நிறைந்துள்ளது.

ADVERTISEMENT

2. எந்த உணவில் நார் சத்து அதிகம் உள்ளது?

அடர்ந்த நிறம் கொண்ட காய் வகைகளில் அதிக நார் சத்து இருகின்றது. மேலும் கொட்டை வகைகள், பயிர் வகைகளில் அதிக நார் சத்து உள்ளது.

3. எந்த காய் வகையில் அதிக நார் சத்து உள்ளது?

பீன்ஸ், பட்டாணி, முளைகட்டிய பயிர் ஆகியவற்றில் அதிக நார் சத்து உள்ளது.

4. ஒரு நாளைக்கு 3௦ கிராம் நார் சத்தை எப்படி எடுத்துக் கொள்வது?

இதற்கு உங்கள் உணவில் தினமும் சோளம், முளைகட்டிய பயிர், வாழைப்பழம், மற்றும் ஏதாவது ஒரு பழ வகையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. வாழைபழத்தில் நார் சத்து நிறைந்துள்ளதா?

வாழைபழத்தில் வைட்டமின் சி, பி 6 மற்றும் பொட்டாசியம் இருப்பதோடு, நார் சத்தும் அதிக அளவு உள்ளது. 1௦௦ கிராம் வாழை பழத்தில் 2.6 கிராம் நார் சத்து உள்ளது.

ADVERTISEMENT

6. முட்டையில் நார் சத்து உள்ளதா?

முட்டையில் அதிகம் புரத சத்து உள்ளது. எனினும், இதில் நார் சத்து இல்லை. நார் சத்து தாவர வகைகளில் மட்டுமே நிறைந்திருக்கும். இதனை செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது.

7. தக்காளியில் நார் சத்து உள்ளதா?

ஆம். தக்காளியில் நார் சத்து அதிக அளவு உள்ளது. ஒரு சராசரி தக்காளியில் 1.5 கிராம் நார் சத்து உள்ளது.

8. ஒரு நாளைக்கு எவ்வளவு நார் சத்து எடுத்துக் கொள்ள வேண்டும்?

சராசரியாக ஆண்கள் ஒரு நாளைக்கு 38 கிராம் நார் சத்தும், பெண்கள் 25 கிராம் நார் சத்தும் எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும், இந்த அளவு, 5௦ வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு சற்று மாறுபடும்.

9. அதிக அளவு நார் சத்தை எடுத்துக் கொள்ளலாமா?

நார் சத்து உடலுக்கு நல்லது என்றாலும், இதனை குறிப்பிட்ட அளவிற்கு மிக அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. அப்படி எடுத்துக் கொண்டால் வேறு வகையான பிரச்சனைகளை அது தரக் கூடும்.

ADVERTISEMENT

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த கரிசலாங்கண்ணி மூலிகையின் ஆரோக்கிய மற்றும் கூந்தல் வளர்ச்சி நன்மைகள்!

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

19 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT