உணவு! இது அனைவருது வாழ்க்கையிலும் ஒரு பெரிய பங்கு வகிக்கின்றது. நல்ல சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு, நீண்ட ஆல்யுலடன் நல்ல வாழ்கையை வாழ உதவும். எனினும், இன்றைய விரைவாக ஓடும் வாழ்க்கையில், துரித உணவு ஒரு மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. அதே நேரத்தில், இந்த துரித உணவு, விரைவாக ஒருவர் நோய்வாய்ப் பாடவும் காரணமாகின்றது. குறிப்பாக, பெண்கள் (women) பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
பெண்கள், நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் வாழ, இங்கே உங்களுக்காக சில உணவு குறிப்புகள்(diet), தொடர்ந்து படியுங்கள்!
எண்ணில்லடங்கா சத்துக்கள் காய், பழம் மற்றும் இறைச்சி வகைகள் இருந்தாலும், ஒரு சில குறிப்பிட்ட சத்துக்கள் கட்டாயம் உங்களது தினசரி உணவில் இருக்க வேண்டும். அந்த வகையில், இங்கே சில:
பெண்கள் தினமும் 1௦௦௦ மில்லி கிராம் கால்சியத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக 5௦ வயதிற்கு மேலான பெண்கள் 12௦௦ மில்லி கிராம் கால்சியத்தை (nutrients) எடுத்துக் கொள்ள வேண்டும்.
கால்சியம் கிடைக்கும் உணவுகளின் விவரம்:
தயிர்,
மொஸரெல்லா
செடார் சீஸ்
பாலாடைக்கட்டி
சீஸ், கிரீம்
பால்
முளைகட்டிய தானியங்கள்
நன்னீர் மீன்கள்
டர்னிப் கீரைகள்
முட்டைக்கோஸ்
ப்ரோக்கோலி
இரும்பு உடலில் ஹீமோக்ளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகை மற்றும் பிற பிரச்சனைகளை போக்குகின்றது. இதனால் உடல் எப்போதும் ஆரோக்கியத்தோடும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
இரும்பு கிடைக்கும் உணவுகளின் விவரம்:
காலை உணவு தானியங்கள்
சிப்பிகள்
மத்தி மீன் / நன்னீர் மீன்
மாட்டிறைச்சி
நாட்டுக் கோழி, வான்கோழி,
வெள்ளை பீன்ஸ்
வேகவைத்த பருப்பு
பீன்ஸ்
கொண்டைக்கடலை
கீரை
தக்காளி
ப்ரோக்கோலி
பச்சை பட்டாணி
திராட்சை
உருளைக்கிழங்கு
முந்திரி கொட்டைகள்
கோதுமை
முட்டை
போலேட் சத்து நிறைந்த உணவு நரம்பியல் பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. இது குறிப்பாக இருதய நோய், புற்றுநோய், மற்றும் மூளை சார்ந்த பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், இறுதி மாதவிடாய் காலத்திலும், தேவையான சத்துக்களைப் பெற உதவும்.
போலேட் / வைட்டமின் B9 கிடைக்கும் உணவுகள்
மாட்டிறைச்சி
நாட்டுக் கோழி
கீரை
அஸ்பாரகஸ்
ப்ரோக்கோலி
கடுகு கீரைகள்
கருப்பு-கண் பட்டாணி
பச்சை பட்டாணி
பீன்ஸ்
காலை உணவு தானியங்கள்
தக்காளி சாறு
கமலா பழம்
பப்பாளி
வாழைப்பழம்
நண்டு
மீன்
முட்டை
பால்
மேலே குறிப்பிடப்பட்டவை, நீங்கள் தினமும் கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய வகைகள், என்றால், இங்கே பின் வரும் பொருட்களை, குறைத்துக் கொள்ளவோ அல்லது நீங்கள் முற்றிலும் தவிர்க்கவோ வேண்டும். அவை, பின்வருமாறு:
இந்த குறிப்புகள் மட்டுமால்லாது, நீங்கள் தினமும் போதிய நீர் அருந்த வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும், மேலும் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி, எ, சி போன்ற சத்துக்கள் நிறைந்த உணவும் மிக முக்கியமானவை. மேலும் உங்கள் உணவை, குறிப்பாக காலை உணவை தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பட ஆதாரம் - Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !