உங்கள் உறவில் நல்ல இணக்கத்தை ஏற்படுத்த சில சுவாரசியமான கேள்விகள்!

உங்கள்  உறவில் நல்ல இணக்கத்தை ஏற்படுத்த சில சுவாரசியமான கேள்விகள்!

நண்பர்களாக, காதலர்களாக, துணையாக ஒருவர் மற்றவரைப்பற்றி ஆழமாக அறிந்துகொள்வதில் பல நிலைகள் உள்ளது. முதலில், மேலோட்டமாக ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்வோம். பெரும்பாலும், இருவருக்கும் பொதுவான பிடிக்கும் விஷயங்களே முதலில் வெளியில் வரும். அடுத்த நிலையில் ஒருவரது இலக்கு என்ன, மதிப்பு என்ன, உந்துதல்கள் என்ன போன்ற விஷயங்களில் அக்கறை கொண்டு அவற்றைப்பற்றி வினவ துவங்குவார்கள். இறுதியாக ஒருவரைப் பற்றி உண்மையாக தெரியும்போது, அவர்களுடைய வாழ்க்கைப் பாதையை அவர்களாகவே சொல்ல முற்படுவார்கள். 

கணவன் மனைவி இருவரும் இப்படி பரஸ்பரமாக  நல்ல இணக்கத்தோடு உறவை கொண்டு செல்ல (உறவில் இணக்கத்தை ஏற்படுத்த) எப்படிப் பட்ட கேள்விகள் (questions) இருவரையும் நெருக்கமாக்கும் என்ற பட்டியல் இதோ உங்களுக்காக! 

1. எந்த விஷயத்திற்கு நீங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறீர்கள்?

2. சிறுவராக இருக்கும்போது உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது? அது ஏன் அவ்வளவு பிடித்தமானது?

3. நீங்கள் வளர்ந்த விதத்தை மாற்ற நினைத்தால், அது என்னவாக இருக்கும்?

4. நம் குழந்தையினுள் உங்களை பார்க்கிறீர்களா? எப்படி?

5. உலகத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்று இருந்தால், அது எந்த இடமாக  இருக்கும்? உலகத்தில் நீங்கள் எந்த இடத்தில் மிகவும் சந்தோசமாக இருப்பீர்கள்?

6. என்னிடம் உங்களுக்கு ரொம்பவும் பிடித்த எது?

7. மனிதர்களாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? மனிதர்களாக இருப்பதில் என்ன கடினம் இருக்கிறது?

Pexels

8. நீங்கள் என்னுடன் பாதுகாப்பாக உணர்கிறீர்களா?

9. நாம் இருவரும் நல்ல துணை என உணர்கிறீர்களா?

10. நம் உறவில் உங்களுக்கு திருப்தியாக இருக்கிறதா?

11. நான் செய்த விஷயங்களில் இதுவரை  எது உங்களை மிகவும் சந்தோசப்படுத்தியது?

12. எந்த குணத்தை மிகவும் எதிர்நோக்குகிறீர்கள்?

13. நாளை காலை எழுந்தவுடன் உங்களுக்குள் ஏற்பட விரும்பும் ஒரு திறன் என்னவாக இருக்கும்?

14. உங்களைப் பற்றிய உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அது எதுவாக இருக்கும்?

Pexels

15. உங்கள் தாயாருடனான உறவு எப்படிப்பட்டது?

16. உங்களுடன் இன்று இரவு விருந்து சாப்பிட, இந்த உலகத்தில் நீங்கள் தேர்தெடுக்க விரும்பும் நபர் யாராக இருக்கும்? ஏன்?

17. உங்களுக்கு மிகவும் பிடித்த சின்ன வயது நிகழ்வு எது?

18. அடிக்கடி உங்களுக்கு தோன்றும் கனவு எது?

19. உங்கள் வாழ்க்கையில் எந்த மூன்று விஷயங்கள் செய்யாமல் உங்களால் வாழ முடியாது?

20. உங்களுக்கு போதிய அளவு பணம் கிடைத்தால், எந்த தொழில் துவங்க ஆசைப்படுவீர்கள்?

21. உங்கள் நண்பர்கள் அனைவரையும் உங்களைப்பற்றி சொல்லச் சொன்னால், எந்த நண்பர் சொல்வது சரியாக இருக்கும்? ஏன்?

Pexels

22. நாம் இருவரும் எதை இணைந்து செய்வதில் சிறந்தவர்களாக  இருப்போம்?

23. நீங்கள் குழந்தையாக இருந்தபோது நீங்கள் விரும்பிய உணவு எது? இப்போது எந்த உணவை மிகவும் விரும்புகிறீர்கள்?

24. உங்கள் தந்தை  உங்களுக்கு கற்றுக்கொடுத்த பெரிய பாடம் எது?

25. உங்கள் பருவ வயதில் உங்களுக்கு மிகவும் உத்வேகம் அளித்த படம் என்றால் எதை சொல்வீர்கள்? ஏன்?

26. இப்போது உங்கள் வாழ்க்கைக்கு நிஜமாக ஆதரவு கொடுப்பவராக யாரை நினைக்கிறீர்கள்?

27. உங்களுக்குள் இருக்கும் மனித நேயத்தில் எந்த விஷயம் வெளிகொண்டுவருகிறது?

28. நீங்கள் நமக்காக ஒரு சிறந்த பூரணமான நாளை செதுக்க நினைத்தால், அது என்னவாக இருக்க முடியும்?

Pexels

29. நம் உறவை எது மிகவும் அழுத்தமாக பிடித்து வைத்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

30. உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் உருவாக்க விரும்பும் மூன்று விஷயங்கள் என்ன?

31. என்னை முதன் முதலில் பார்த்தபோது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

32. ஒரு ஆணிடமும், பெண்ணிடமும் எந்த குணங்களை நீங்கள் ரசிக்கிறீர்கள்?

33. உங்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட மிகவும் இக்கட்டான நிலைமை எது? ஏன்?

34. என்னிடம் உங்களை முதலில் ஈர்த்த விஷயம் எது?

35. உங்கள் தோற்றத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் எது?

நிச்சயம் இந்த கேள்விகள் ஒரு நாளில் ஒரு முறையில் கேட்டு இணக்கமாகி(intimacy/compatibility) விட முடியாது. ஒவ்வொரு முறை இருவரும் பேசும்போது, ஒவ்வொன்றாக பரஸ்பரம் இருவரும் பகிர்ந்துகொண்டு, ஒருவர் மற்றவரின் குணத்தை எடை போடும் எண்ணத்தில் வினவாமல், அவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளும் நோக்கத்தில் ஈடுபட்டால், உங்களைப் போன்ற இணையானவர்கள் வேறு யாரும் இருந்து விட முடியுமோ!

மேலும் படிக்க - பொறாமையில் இருந்து விலகி உறவைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி?

பட ஆதாரம்  - Shutterstock, Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!