பொறாமையில் இருந்து விலகி உறவைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி?

பொறாமையில் இருந்து விலகி உறவைத் தக்க வைத்துக்கொள்வது எப்படி?

பொறாமையுடன் இருப்பதை யாரும் விரும்புவதில்லைதான். ஆனால் அது நம்மையும் அறியாமல் நம்மைத் தொற்றிக்கொள்ளும்போது ஜாக்கிரதையாக விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும். இல்லையெனில் நன்றாக போய்க்கொண்டிருக்கும் உறவுகளுக்குள் விரிசல் வந்துவிடும். அப்படி பொறாமை (jealous) எண்ணத்தில் இருந்து வெளிவர என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

1. எப்போதெல்லாம் பொறாமை எண்ணம் வருகிறது என்று கவனிக்கவும்

உங்களுக்கு பொறாமை எண்ணம் வரும்போது எதனால் என்று சொல்லாமல், ஒரு சின்ன வாக்குவாதம் அல்லது குத்தலான ஒரு பேச்சில் உங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவீர்கள். அது நிச்சயம் குழப்பதில்தான் கொண்டுவிடும். அதை விடுத்து, உதாரணத்திற்கு ,  ‘நீங்கள் நேற்று அவரிடம் அப்படி பேசிக்கொண்டிருந்தது எனக்கு வித்யாசமாக இருந்தது’ என்று சொன்னால், அவருக்கு எளிதில் புரிந்துவிடும். மேலும் உங்களை சங்கடப்படுத்த விரும்பமாட்டார்.

2. மற்றவர்களின் பார்வையில் நிலைமையைப் பாருங்கள்

Pexels

உங்கள் தோழியின் இடத்தில் உங்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிரச்சனையை அவர் எப்படி பார்ப்பார்? வித்யாசமாகவா? அல்லது சாதாரணாமாகவா?இப்படி உங்களுக்குள் சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு யோசித்துப்பார்த்தால், பிரச்சனை புரிந்துவிடும். ஒன்றும் இல்லாத ஒன்றை பெரிதுபடுத்துகிறோம் என்பதை உணர்வீர்கள். 

3. நீங்கள் பொறாமைப்படுகிறீர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்

அதற்கு உடனடியாக செயல்படத் தேவையில்லை.பொறாமை எண்ணம் தோன்றியதால் உங்களுக்கு கோபம் வரலாம், அதற்காக ஒரு பொருளைத் தூக்கி எறிவது, கத்தி ஆர்ப்பாட்டம் செய்வது போன்றவற்றை செய்து அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.‘நான் கோபமாக இருக்கிறேன்’ என்று கூறி அமைதியாக சிறிது நேரம் அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கோபமும் கரைந்துவிடும். அவருக்கும் எளிதில் புரிந்துவிடும். பொறாமை எண்ணத்தை இப்படியும் கையாளலாம்!

4. முதலில் நீங்கள் நேசிக்கப்படுவதற்கு தகுதியானவர் என்று நம்புங்கள்

Pexels

பெரும்பாலான நேரங்களில், நாம் பொறாமை எண்ணத்துடன் இருக்கும்போது, நம்மை இன்னும் அதிகமாக காதலிக்க வேண்டும். நான் அதற்கு தகுதிவாய்ந்தவள் இல்லை போலும் என்ற எண்ணம் தோன்றும். நீங்கள் தகுதியானதினால்தான் உங்களுக்கு ஒரு நல்ல உறவு (relationship) கிடைத்திருக்கிறது. ஏதோ ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்று கூறியதை மனதில் வைத்துக்கொண்டு பொறாமையோடு இருக்காதீர்கள். அதுவே மெதுவாக உங்களுக்குள் பூசலை ஏற்படுத்தும். உங்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். 

5. போட்டி போடுங்கள்

இங்கு நான் ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுவதைக் குறிப்பிடவில்லை. உங்களுக்கு நீங்களே போட்டியிட்டுக்கொள்ளுங்கள். அதாவது, உங்களின் தனிப்பட்ட இலக்கு, நீங்கள் இப்போது இருக்கும் உங்களைவிட இன்னும் சிறந்தவராக உருவாக்குவது எப்படி என்று போட்டி போடுங்கள். உங்களை சுற்றி உள்ளவர்களின் மதிப்பு உங்களுக்கு வேண்டுமெனில், மற்றவர்களுடன் பரஸ்பரம் நன்றாக நீங்கள் பழக வேண்டும்.

உங்கள் உறவு தொடர்ந்து உங்கள் மீது அன்போடு இருக்க வேண்டுமெனில், நீங்கள் தொடர்ந்து அவருக்கு பிடித்த விஷயங்களில் ஒவ்வொருநாளும் ஈடுபட வேண்டும். நேர்மையாக உங்கள் இலக்கை நோக்கிப் பயணித்தீர்களானால், மிக கடினமான சவால்களை எளிதாக ஜெயித்து விடுவீர்கள். 

மேலும் படிக்க - ஓ! பெண்களிடம் உள்ள இந்த விஷயம் ஆண்களுக்கு பிடிக்காதா?! (இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!)

6. உங்கள் பாதுகாப்பற்ற எண்ணத்தை அவருடன் பகிராதீர்கள்

Pexels

அவருடைய ஒவ்வொரு அசைவையும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்காதீர்கள். பொறாமை கொண்ட பெண்ணை தொல்லைதரும் பெண்ணாகத்தான் ஒரு ஆண் பார்க்கிறார். உதாரணத்திற்கு, எப்போதும் உங்களுடைய பாதுகாப்பற்ற எண்ணத்தினால், ‘போகாதீர்கள்’, ‘அவளுடன் ஏன் அவ்வளவு நேரம் பேசினீர்கள்’, ‘நான் உங்களுக்கு தகுதியானவளா?’, ‘உங்களுக்கு என்னை உண்மையில் மிகவும் பிடித்திருக்கிறதா’ போன்ற கேள்விகள், நிச்சயம் ஒருவரை எதிர்மறை எண்ணத்திற்குள் தள்ளும். 

அதை விடுத்து உங்கள் ஆசைகளை, அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை நேர்மறை வார்த்தைகளில் பகிர்ந்து கொள்ளுங்கள். அது நேர்மறையான எண்ணங்களை அவருக்குள்ளும் உருவாக்கும்.

7. கைகளில் ஒரு ரப்பர்பேண்ட் அணிந்து கொள்ளுங்கள்

நீங்கள் பொறாமை கொள்ளும்போதெல்லாம், உணர்ச்சிவயப்படாமல் இருக்க, கையில் ஒரு ரப்பர்பேண்ட் அணிந்து கொள்ளுங்கள்.பொறாமை எண்ணம் தோன்றும்போது, ரப்பர்பேண்ட்டை இழுத்துவிடுங்கள். அதன் சுள்ளென்ற வலி உங்கள் மனதில் பொறாமை எண்ணம் தோன்றும்போதே வெளியேற்றிவிடும்.ஆம்! வலி நல்லது ;)

8. உங்கள் எண்ணங்களை எழுதுங்கள்

Pexels

உங்கள் மனதில் தோன்றும் பொறாமை எண்ணங்களை எல்லாவற்றையும் எழுதுங்கள். அது உங்கள் மனதை இலகுவாக்கும். ஒரு இரண்டு நாட்கள் களித்து படித்துப்பாருங்கள், உங்களுக்கே சிரிப்பு வரும். நீங்களா இப்படி எழுதி இருப்பது என்று எண்ணுவீர்கள். பொறாமை எண்ணத்தில் இருந்து வெளிவர இது ஒரு எளிய வழி.சில நேரங்களில் , உண்மையிலேயே உங்களவர் உங்களுக்கு பின்னால் வேலை பார்க்கிறார் ,உங்களை ஏமாற்றுகிறாரோ , என்று தெரிந்தால், வெளிப்படையாக அவருடன் அமர்ந்து பேசி விடுங்கள். உங்கள் மனதில் உள்ள குழப்பங்களும் தீர்ந்து விடும். அவரும் தெளிவாகி விடுவார். 

பொறாமை எண்ணம் என்பது ஒரு தவறுதலான எண்ணம் இல்லை. இது அனைவருக்கும் தோன்றுவதுதான் . ஆனால், அதைப் எப்படி கையாளுகிறோம் என்பதில்தான் நம் உறவில் பிரச்சனை ஏற்படுகிறது. நீங்கள் ஒரு வேலையில் முழுவதும் ஈடுபடும்போது, இந்த எண்ணங்கள் வந்த வேகத்திலேயே மறைந்து போகும். வேலை இல்லாமல் அதையே நினைத்துக்கொண்டிருக்கும்போதுதான் அது பூதாகரமாகி, வளர்ந்து மெது மெதுவாக, இருவருக்குள்ளும் பெரிய விரிசலை ஏற்படுத்தும். சிலவற்றை அப்போதே பேசி விட்டால் முடிந்து விடும். அவருடன்தான் பேச வேண்டும் என்பதில்லை, உங்கள் நலம் விரும்பும் ஒரு நல்ல தோழியுடன் பகிர்ந்து கொள்ளும்போது பொறாமை எண்ணம் காணாமல் போவதை உணர்வீர்கள். எப்போதும் ஆரோக்கியமான நேர்மறை எண்ணங்களையே மனதில் உதிக்கச்செய்யுங்கள். இன்பமாக வாழுங்கள்!

மேலும் படிக்க - ஆண்கள் பெண்களில் கவனிக்கும் முதல் விஷயம் இவைதானா?! தெரிந்து கொள்ளுங்கள் !

பட ஆதாரம்  - Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!