விரைவாக குணமடைய சில இயற்கை வலி நிவாரணிகள் !

விரைவாக குணமடைய சில இயற்கை வலி நிவாரணிகள் !

சின்ன சின்ன வலிகளுக்கு வீட்டிலேயே தீர்வு இருக்கிறது. நீங்கள் மருத்துவமனைக்கு செல்லும் நேரம், அங்கு காத்திருக்கும் நேரம், சற்று பொறுமையாக வீட்டு வைத்தியத்தை பின்பற்றிப் பார்க்கலாம். வலிகளில் இருந்து விடுபட மேற்கொள்ளும் இயற்கை  மருந்துகளில் அப்படி என்ன பிரமாதம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆசையா? மிகவும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய இயற்கை பொருட்கள் தான் அவை. ஆனால், அது ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப விரைவாகவோ அல்லது தாமதமாகவோ வேலை செய்யும். சரி, அவற்றைப்பற்றி ஒவ்வொன்றாக, என்னென்ன  வலிகளுக்கு என்ன வீட்டு மருந்து என்று பார்க்கலாம்.

1. பல் வலி

கடவுளே! இந்த வலியை யாராலும் தாங்க முடியாது. பற்களில் பொதுவாக வலி சொத்தை பற்களினால், பல் உடைந்தோ அல்லது வீறிட்டு இருந்தாலோ ஏற்படும் அல்லது பற்பசை தொற்று நோய் வலியாகவோ, கடவாய் பற்கள் வளரும் போது ஏற்படும் வலியாகவோ இருக்கலாம் .

  • பற்களில் வலி இருந்தால் அதிக சூடாகவும், குளிராகவும் உள்ள உணவுகளை சாப்பிடக்கூடாது. அது வலியை மேலும் அதிகரிக்கும். 
  • தலையை உயர்த்தி படுத்துக் கொள்ளுங்கள். பற்கள் மீது ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். 
  • பெப்பர்மின்ட் எண்ணெய் பயன்படுத்தலாம்.சிறிது காரமாக இருக்கும் என்பதால், வலிக்கு நன்றாக இதமாக இருக்கும்.
  • மிதமான சூடு உள்ள தண்ணீரில், கல் உப்பை கலந்து வாய் கொப்பளித்தால், வலி நீங்கும். வீக்கம், தொற்று இருந்தாலும் நீங்கி விடும்.

இந்த எளிய முறைகளை பின்பற்றி பல் வலியில்  இருந்து விடுபடுங்கள். நீண்ட நாட்கள் தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.

2. தலைவலி

Shutterstock

இது நம்மில் பெரும்பாலோருக்கு வரக்கூடிய பொதுவான வலிதான் என்றாலும் இதை பெரிதாகாமல் கவனித்து கொள்ளவது நல்லது. நன்றாக தண்ணீர் குடித்து, போதிய ஓய்வு எடுத்தால் தலைவலி போய்விடும். அப்படியும் போகவில்லை என்றால், நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு மிக அதிக ஓய்வு தேவை. 

மைகிரேன் போன்ற வலிகளுக்கு லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்தலாம். உடலில் ஏற்படும் வலியையும் போக்கும் குணம் கொண்டது. நல்ல வலி நிவாரணியாகவும், ஆன்டி-இன்பிளமேடரி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை கொண்டதாவும் இருக்கிறது.லாவெண்டர் எண்ணெய்யை முகர்ந்தால் போதும் பதட்டத்தில் இருந்து விடுபடலாம். வீட்டில் ஒரு விளக்கின்மீது இந்த எண்ணெயை வைத்தால் இந்த எண்ணெயின் மனம் வீடு முழுவதும் பரவும். அல்லது இதற்கு பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சி ஒரு சிறந்த தீர்வு ஆகும்.

3. கழுத்துவலி மற்றும் பின்முதுகுவலி

உடற்பயிற்சி செய்யாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால், கழுத்து வலி, முதுகுவலி ஏற்படும். நீங்கள் அமர்ந்து வேலை செய்யும் நிலையை சரி செய்தாலே பாதி வலிகள் தீர்ந்துவிடும்.தினமும், 30 முதல் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி, அல்லது வாக்கிங் செல்ல வேண்டும்.மசாஜ் செய்து கொள்தல், அக்குபங்க்சர் கூட உடல் வலிகளுக்கு நல்ல வலி நிவாரணம் தரும்.  

மேலும் படிக்க - முதுகு வலியால் அவதியா ? யோகாசனம் மூலம் முதுகு வலியை சரி செய்யும் முறைகள்

4. முடக்குவாதம் (arthiritis)

Shutterstock

உடல் எடை அதிகமாக இருந்தால் மூட்டுகளில் கூடுதல் அழுத்தத்தை கொடுத்து வலியை ஏற்படுத்துகிறது.

  • தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும்.
  • நடைபயிற்சி, ஏரோபிக்ஸ், நீச்சல் போன்ற எளிமையான பயிற்சிகள் போதுமானது.மூட்டுகளில் மேலும் அழுத்தத்தை தரும் பயிற்சிகளை தவிர்க்க வேண்டும்.
  • வில்லோ மரப்பட்டை பயன்படுத்தி தேநீர் தயாரித்து அருந்தினால் வீக்கத்தை குறைக்கும். வலியை எதிர்த்து போராடும் குணம்கொண்டது. 
  • கேட்ஸ் கிலாவ்(cat’s claw) முடக்குவாதத்தினால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும் ஆன்டி-இன்பிளமேட்டரி(anti-inflammatory) பண்புகள் கொண்ட மூலிகையாகும். பண்டைக்காலத்தில், நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்த மூலிகையை பயன்படுத்தி வந்தார்கள்.போஸ்வெலியா(boswellia) அல்லது குங்கிலியம் என்று அழைக்கப்படும் மூலிகை மரத்தின் பிசின், வாதத்தை குணப்படுத்தும், ஆன்டி-இன்பிளமேட்டரி(anti-inflammatory) பண்புகள் கொண்டது.

5. இரைப்பை குடல்வலி

ஏலக்காய் குடலில் ஏற்படும் வலி நிவாரணியாகும். மேலும், ஏலக்காயின் மனம், மன அழுத்தத்தை போக்கவல்லது. ஏலக்காய்யை வாயில் போட்டு மென்றால் நல்ல செரிமான சக்தியை உண்டு செய்து, வலியைப் போக்கும்.

6. வயிற்றில் ஏற்படும் தசைபிடிப்புகள்(stomach cramps)

Shutterstock

வயிற்றில் காற்று உண்டாகாமல், ஜீரணத்தை எளிதாக்கி, கல்லீரலுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது வெந்தயம். பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், ஜிங்க் போன்ற பல சத்துக்கள் உள்ளடக்கியது வெந்தயம். வெந்தய எண்ணெயை வயிற்றில் பூசினால், வயிறு (வயிற்று) இழுத்துப்பிடிக்கும் வலியில் இருந்து விடுபடலாம்.

7. நரம்பு வலி

கூச்சம், எரிச்சல், உணர்வற்ற நிலை, சத்து குறைவு ஆகியவை உங்கள் நரம்பில் வலி தோற்றுவிக்கும். நீரழிவு நோய், அம்மை நோய் ஆகியவையும் உங்கள் நரம்புகளில் வலி ஏற்படுத்தலாம்.உங்கள் உறுப்புகள் கோளாறானல், ஜீரண சக்தி குறைந்துவிடும். நல்ல உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவை உட்கொண்டால் நரம்புவலி நீங்கும்.நல்ல இசையை 20 நிமிடங்கள் அமைதியாக கேட்டு ரசித்தால், உங்கள் உடலில்  உள்ள வலி நீங்கி விடும். மனம் அமைதியாகி ஓய்வு பெற்றால், உடல் வலி பெரிதாக தோன்றாது போலும்!

வலி நிவாரணி மாத்திரைகள் (pain killers) பயன்படுத்த ஆரம்பித்தால், நாளடைவில் உங்கள் உடல் அதற்கு பழகிவிடும். ஒரு மாத்திரைக்கு பதில் இரண்டு மாத்திரை சாப்பிட்டால்தான் வலி நீங்கும் என்ற நிலைக்கு உங்களை தள்ளி விடும். இயற்கை மருந்துகள் ஒருபோதும் தீங்கு விளைவிக்காது. எந்த பக்க விளைவுகளும் தராது. இருப்பினும், உங்கள் உடல் நிலையை கவனத்தில் கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை செய்து பயன்படுத்துங்கள்.

 

மேலும் படிக்க - யோனி ஆரோக்கியத்திற்கான 10 எளிய வழிகள் !

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!