logo
ADVERTISEMENT
home / Health
கண் பார்வையை அதிகரிக்க சில எளிய வழிகள்!

கண் பார்வையை அதிகரிக்க சில எளிய வழிகள்!

கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்வது மட்டுமல்லாமல், மீதி நேரத்தில் செல் ஃபோனை பார்த்துக்கொண்டிருப்பதால், கண் பார்வையில் குறைபாடு ஏற்படுகிறது. கடந்த பத்து வருடங்களில் கண் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. 

கண்ணாடி போடுவது ஸ்டைல் என்று நினைத்துக் கொள்பவர்களும் உண்டு. அதுவே நாளாக நாளாக பெரிய தலைவலியாகிவிடும். மோசமான உணவுப் பழக்கத்தாலும், நாம் சாப்பிடும் உணவில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல், கண் ஆரோக்கியம் (eye sight)பாதிப்படைகிறது. ஆகையால், சேதம் அதிகம் ஆகாமல் பார்த்துக் கொள்ள சில குறிப்புகள்(tips). 

கண் பார்வையில் பிரச்சனை உள்ளவர்களுக்கான வீட்டுத் தீர்வு

Pexels

ADVERTISEMENT

செய்முறை1: குங்குமப்பூ + தண்ணீர் + தேன்

ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வையுங்கள். அடுப்பை அனைத்து பின் குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் மூடி வையுங்கள். பிறகு வடித்து, தேன் கலந்து பருகினால் போதும்.

நன்மைகள்: இந்த தேநீரை பகலில் ஒரு வேளை அருந்தலாம். பார்வையை மேன்படுத்துவது மட்டுமல்லாமல், உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ஆர்தரைட்டிஸ் நோயினால் ஏற்படும் வலியை குணப்படுத்தும். ஒருமுகப்படுத்தும் திறனை அதிகரிக்கும்(improve).

செய்முறை 2: சோம்பு + பாதாம்

சோம்பு, பாதாம் இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சக்கரை சேர்த்துக்கொள்ளலாம். இந்த மூன்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்துக்கொள்ளுங்கள். இரவு தூங்குவதற்குமுன், பாலில் ஒரு தேக்கரண்டி இந்த பவுடரைக் கலந்து பருகுங்கள். 

நன்மைகள்: கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கேட்ராக்ட் பிரச்சனை எதுவாக இருந்தாலும், 40 நாட்கள் இந்த செய்முறையை பின்பற்றி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். 

ADVERTISEMENT

கண் பார்வையை மேம்படுத்தும் பிற பொருட்கள்

வேறு எந்த எந்த பொருட்கள் கண்களுக்கு எந்தமாதிரியான நன்மைகள் செய்கிறது என்று பார்க்கலாம்.

1. வைல்ட் ரோஸ் டீ

Pexels

கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது.

ADVERTISEMENT

2. கொத்தமல்லி இலைகள்

கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ,இரும்புச்சத்து, ஜிங்க், லூடைன் போன்ற அணைத்து வைட்டமின் சத்துக்களும் இதில் இருக்கிறது.

3. கேரட்

இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ, பீட்டா கரோடின் உங்கள் கண் பார்வையை சீராக வைக்க உதவும்.

4. ப்ரோக்கோலி

Pexels

ADVERTISEMENT

கண்களில் படும் அதிக வெளிச்சத்தினால் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் பார்வைக்கோளாறை சரி செய்யும் ப்ரோக்கோலி . இதில் வைட்டமின் பி, லூடைன், ஜீஏந்த்ஏக்ஸ்கின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது.

5. மீன்

மீன்களில் குறிப்பாக, காலா மீன், கெளுத்தி மீன் வயதான பின் ஏற்படும் பார்வைப் பிரச்சனைகளை சரி செய்யும்.

மேலும் படிக்க – மனக்கும் பாரம்பரிய மீன் குழம்பு செய்வது எப்படி?

6. அவகேடோ அல்லது பட்டர் ப்ரூட்

கண் பார்வைத் திறன் அதிகரிக்கும் அனைத்து சத்துக்களும் அதாவது வைட்டமின் பி, சி, ஈ
லூடைன், பீட்டா கரோடின் கொண்டது அவகேடோ. 

ADVERTISEMENT

7. பெரிஸ்

Pexels

இதில் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ரோடாப்ஸின் சத்துக்கள் உடம்பில் புது செல்களை உருவாக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து கண் பார்வையை மேம்படுத்தும்.

வேறு என்ன பயிற்சிகள் கண்களைப் பாதுகாக்க கடைபிடிக்க வேண்டும்?

கண்களை கழுவுங்கள்

காலையில் எழுந்தவுடன் கண்கள் மீது தண்ணீரை நன்றாகத் தெளித்து 3, 4 முறை கண்களை நன்றாக சுத்தப்படுத்துங்கள்.வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்கொண்டு, பின் கண்கள்மீது குளிர்ந்த தண்ணீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள். இதனால் கண்கள் நன்றாக விரிந்தவாறு இருக்கும். 

ADVERTISEMENT

பிறகு, ஆப்டிக்கல்ஸ் கடைகளில் எளிதாகக் கிடைக்கும், ஐ வாஷ் கப் ஒன்று வாங்கிக்கொள்ளுங்கள். ரோஸ் வாட்டரை 15 துளிகள் இதில் நிரப்பி, பின் தண்ணீரால் இந்த கப்பை நிரப்பி, கண்களை திறந்தவாறு இந்த கப் பயன்படுத்துங்கள். தண்ணீர் வெளியில் வராதவாறு கப்பை அழுத்தி பிடித்துக்கொண்டு, தலையை மேலே தூக்குங்கள். கண் விழிகளை சுற்றுங்கள். ரோஸ் வாட்டர் கண்களின் மேற்பரப்பை நன்றாக சுத்தம் செய்யுமாறு கண் விழியை சுற்றுங்கள். ஒரு நிமிடம் களித்து, தண்ணீரை மாற்றி அடுத்த கண்ணையும் இவ்வாறு சுத்தம் செய்யுங்கள். 

கண்களில் உள்ள தொற்றை சரி செய்ய மிகவும் உதவும். மேலும், கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, கண்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். 

Pexels

ADVERTISEMENT

கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்

  • வேலை செய்யும்போது ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கு ஒரு முறை சிறிது தண்ணீர் பருகுங்கள். பின் கைகளைத் தேய்த்து, மூடிய கண்கள்மீது வைக்கவும். 
  • கைகளில் உள்ள அக்குப்ரேசர் புள்ளிகளை அழுத்துங்கள்.
  • ஒவ்வொருமுறை சிறுநீர் கலிக்கச் செல்லும்போதும், வாயில் தண்ணீர் நிரப்பி, கண்களைக் கழுவுங்கள். 

கண் பார்வை அதிகரிக்க, தினசரி உங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்

Pexels

  1. வெறும் காலில் நடப்பதை தவிர்க்கலாம். கண்களின் தசைகளை வலுவிலகச் செய்யும்.
  2. கண்கள் வறண்டு போவதைத் தடுக்க, கண்களை அடிக்கடி சிமிட்டுங்கள்.
  3. டிம் விளக்குகளைத் தவிர்த்து, நன்றாக இருள் சூழ்ந்த அறையில் தூங்குங்கள். 
  4. வெய்யில் அதிகம் உள்ள நேரங்களில், கண்களை கூலர்ஸ் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
  5. தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுங்கள்.
  6. கண்களை பாதுகாக்கும், கம்ப்யூட்டர் ஸ்கிரீன் கார்ட்(screen guard) பயன்படுத்துங்கள்.
  7. கண்களை வலுவாகும் கேரட், பச்சைப் பயிறு, நெய் சாப்பிடுங்கள்.
  8. கண்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், சர்வாங்காசனம் செய்யுங்கள்.

சில இயற்கையான பொருட்களைக் கொண்டு, உங்கள் குறைபாடுகளை நீக்கும் உறுதியான மனமும் இருந்தால், நிச்சயம் எந்த வயதினரும் கண் கண்ணாடியில் இருந்து விடுபடலாம்.

மேலும் படிக்க –மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லி மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்!

ADVERTISEMENT

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !

12 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT