யோனி ஆரோக்கியத்திற்கான 10 எளிய வழிகள் !

யோனி ஆரோக்கியத்திற்கான 10 எளிய வழிகள் !

பெண்ணுறுப்பு மிகவும் உணர்ச்சியுள்ள மிருதுவான அங்கம். அதை மிகவும் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதை பராமரிக்க அலட்சியம் காட்டினால், எளிதில் கிருமிகள் தங்கி உங்கள் வாழ்க்கையை நரகமாக்கி விடும். உங்களுக்கு அதன் விளைவுகளைப்பற்றி தெளிவாகத் தெரிந்தால், நிச்சயம் கவனமாக இருப்பீர்கள். 

பாக்டீரியா தொற்றினால் பெண்ணுறுப்பில் அரிப்பு போன்ற தொல்லைகள் தோன்றும்; சோப்பு, உள்ளாடையின் தன்மை, இறுக்கமாக உடை அணிதல், வாசனை திரவியம் போன்ற காரணங்களால் பெண்ணுறுப்பில் எரிச்சல் உண்டாகும்; கேண்டிடா அல்பிகான்ஸ் என்னும் பங்கஸ் நோய்த்தொற்றை உண்டாக்கும்; ப்ரோடோஜோன் பாரசைட் என்னும் கிருமியால் டிரைகொமோனியாஸிஸ்(trichomoniasis) என்னும் தொற்று உண்டாகும்; மகப்பேறுக்குபின், மெனோபாஸ் போன்ற காலங்களில் உடலில் சத்து குறையும் என்பதால், பெண்ணுறுப்பு வறண்டு, மெல்லியதாகிவிடும்.

எனவே இதுபோன்ற யோனி பிரச்சினைகள் அனைத்தையும் அகற்றுவதற்காக, நீங்கள் பின்பற்ற சில எளிய உதவிக்குறிப்புகளை நாங்கள் இங்கு பரிந்துரைத்துள்ளோம்.

பெண்ணுறுப்பு பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது?

1. சரியான உடை அணிதல்

Shutterstock

இறுக்கமான உடை அணிவதால், நுண்கிருமிகள் பெருகிவிடும். மேலும், பெண்ணுறுப்பை ஈரமாக வைக்கக்கூடாது. மாதவிடாயின்போது நீண்ட நேரம் ஒரே நாப்கின் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

2. ப்ரோபையோட்டிக் உணவை உண்ணுங்கள்

தயிர், யோகர்ட், போன்ற ப்ரோபையோட்டிக் உள்ள உணவுகளை உட்கொள்வதால், பெண்ணுறுப்பில் நல்ல பாக்டீரியா உருவாகும்.

3. சுகாதாரம் தேவை

பெண்ணுறுப்பை கழுவும்போதும், முன்னிருந்து பின் சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறையை பயன்படுத்திய பின், பெண்ணுறுப்பை நன்றாக ஈரம் இல்லாமல் துடைத்து பின் உள்ளாடை அணிய வேண்டும். கழிப்பறையையும் டெட்டால் பயன்படுத்தி சுத்தம் செய்து, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கைகளையும் நன்றாக கழுவ வேண்டும்.

4. அதிகமாக ஆன்டிபயோடிக்ஸ் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்

Shutterstock

நம் உடல் இயற்கையாக நோய்யை எதிர்த்து போராடும் சக்தி கொண்டது. வேலை பளு காரணமாக, விரைவாக நோய்களில் இருந்து விடுபட, தாங்களாகவே, ஏன் மருத்துவரையும் அணுகாமல் ஆன்டிபயோடிக்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இது பெண்ணுறுப்பில் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் நீக்கிவிடும். உங்கள் பெண்ணுறுப்பின் pH அளவை பரிசோதித்து, அதற்கு ஏற்ற சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார். அதன்படி பின்பற்றுங்கள். 

5. ஆப்பிள் சிடர் வினீகர் கழுவுதல்

ஆப்பிள் சிடர் வினீகரில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், பெண்ணுறுப்பை பாதிக்கும் கிருமிகளை நீக்கி விடும். குளித்து முடித்தவுடன் உங்கள் பெண்ணுறுப்பை இந்த வினீகரை மிதமான சூடு கொண்ட தண்ணீரில் கலந்து நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்(hygiene). வினீகருக்கு பதிலாக கல் உப்பும் பயன்படுத்தலாம்.

6. காண்டம் பயன்படுத்துங்கள்

பல நேரங்களில் ஆண்களிடம் இருந்து பாக்டீரியா போன்ற தொற்றுகள் எளிதாக உடலுறவின்போது பெண்களை தொற்றிவிடும். ஆண்களுக்கு அது பிரச்சனை ஆகாது. ஆனால் பெண்களுக்கு அரிப்பு போன்ற தொல்லைகளை தரும். காண்டம் பயன்படுத்தலாம்.

7. மாமிசம் தவிர்க்கலாம்

Shutterstock

தொற்று இருக்கும் காலங்களில் மாமிசத்தை தவிர்த்துப் பாருங்கள். அதற்கு பதிலாக பாதாம், பழங்கள், பெர்ரி வகைகள்(கிரான்பெர்ரி, ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி), கேரட் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். பெண்ணுறுப்பின் pH அளவு சாதாரணமாக 3.8ல் இருந்து 4.5 வரை இருக்கலாம். இவற்றில் மாறுதல்கள் இருந்தால் அவற்றிக்கேற்ற உணவை உட்கொண்டு ஆரோக்கியமாக (health) உடலை பராமரிக்கவும். 

8. தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள்

சுத்தமான தேங்காய் எண்ணெய் ஆன்டி-பங்கள், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் தன்மைகள் கொண்டது. மேலும் எரிச்சல், அரிப்பிற்கு நல்ல தீர்வாக அமையும். பெண்ணுறுப்பை நன்றாக சுத்தம் செய்து தேங்காய் எண்ணெய்யை தடவிக்கொள்ளுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை பயன்படுத்தலாம்.

9. தண்ணீர் அருந்துதல்

உங்கள் பெண்ணுறுப்பில் (vagina) இருந்து லேசாக நாற்றம் வர ஆரம்பித்தவுடன், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீரில் எலுமிச்சை, புதினா போன்றவற்றை கலந்து வைத்துக்கொண்டு, அந்த தண்ணீரை ஒரு நாளைக்கு 5 பாட்டில் தண்ணீரில் அருந்தினால், நிச்சயம் 3 அல்லது 4 நாட்களில் துர்நாற்றம் போய்விடும். 

10. தொற்றுக்கு சிகிச்சை அளிக்கவும்

Shutterstock

பெண்ணுறுப்பு தானே சரி செய்து கொள்ளும் தன்மை கொண்டது. என்றாலும், நீண்ட நாள் தொற்று உங்கள் உள் உறுப்புகளையும் பாதிக்க ஆரம்பித்து விடும். ஒரு நல்ல மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெற்று ஆரோக்கியத்தை திரும்ப பெறுங்கள்.

 

மேலும் படிக்க - டம்பொன்ஸ் , மென்ஸ்ட்ருல் கப் (menstrual cup) அல்லது நாப்கின்களா ? வசதியும் விவரமும் !

மேலும் படிக்க - அந்த' இடத்தில் இருக்கும் கருமையால் கவலையா? இரண்டே வாரங்களில் அதனை போக்கும் சில எளிய தீர்வுகள் !

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!