logo
ADVERTISEMENT
home / Health
முதுகு வலியால் அவதியா ? யோகாசனம் மூலம் முதுகு வலியை  சரி செய்யும் முறைகள் – Yoga To Get Rid Of Back Pain

முதுகு வலியால் அவதியா ? யோகாசனம் மூலம் முதுகு வலியை  சரி செய்யும் முறைகள் – Yoga To Get Rid Of Back Pain

முதுகு தண்டு மனிதனின் உடலில் ஒரு முக்கியமான பகுதியாகும். கடும் வேலை , முறையற்ற உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், அலுவலகங்களில் நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து இருத்தல் போன்ற பல காரணிகளால் முதுகு வலி (back pain)ஏற்படுகின்றது. இதனை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.

மருந்து , மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணி போன்ற மருந்துகளை உபயோகித்து இதனை சரி செய்ய முயன்றாலும் கூட முழுமையான பலன் கிடைப்பது அரிது.பக்க விளைவவு வரவும் வாய்ப்புள்ளது .ஆனால் இவ்வகை வலியினை யோகா (yoga) பயிற்சியின் மூலம் சுலபமாக சரி செய்ய இயலும்.

என்ன?! யோகா (yoga) பயிற்சியின் மூலம் முதுகு வலியை (back pain) சரி செய்ய முடியுமா? ஆம்!

கண்டிப்பாக முடியும். தொடர்ச்சியான யோகா (yoga) பயிற்சியின் மூலம் உங்களின் முதுகு வலியை (back pain)  கட்டுப்படுத்தி சரி செய்ய முடியும். ஆரம்பத்தில் இது கடினமானதாக இருந்தாலும் கூட தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் இதனை கட்டுக்குள் கொண்டு வர முடியும். தகுதி வாய்ந்த யோகா (yoga) ஆசிரியரின் முன்னிலையில் இதனை செய்வது நல்லது. ஏனென்றால் ஆரம்ப காலங்களில் புதிதாய் யோகா (yoga)பழகுபவர்கள் ஆசிரியரின் மேற்பார்வையில் அதனை செய்வதே நன்று.

ADVERTISEMENT

முதுகு வலியை சரி செய்யும் யோகாசன முறைகளை பற்றிய தொகுப்பு இதோ உங்களுக்காக (Yoga Postures To Get Rid Of Back Pain)

1. புஜங்காசனா (Bhujangaasana) 

   சூரிய நமஸ்கரத்தின் 12 முறைகளுள் இதும் ஒன்று. இது கோப்ரா நிலை(ராஜ நாகம் தலையை உயர்த்துவது போல ) என்றும் அழைக்கப்படும். இது யோகாசனங்களில் முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஒரு ஆசனமாகும். புஜங்கா என்றால் சம்ஸ்கிருத மொழியில் ராஜநாகம் என்று பொருள்.

yoga-for-back-pain-1

செய்யும் முறை (Method)

        வயிறுப்பகுதி தரையில் படுமாறு படுக்கவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி கால்களை நேராக நீட்டவும். ராஜநாகம் படம் எடுப்பதைப்போல கைகளை மடக்கி உடலை நேராக வைத்து சுவாசிக்கவும். வயிற்று பகுதி தரையில் நன்றாக படும்படி இதனை செய்ய வேண்டும். இதனை இரண்டு  நிமிடங்கள் என மூன்று முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

2. அர்தா மட்ஸ்யேந்திராசனா (Half Spine Twist)

    இந்த ஆசனமானது யோகி மத்ஸ்யேந்திரநாத் அவர்கள் நினைவாக வைக்கப்பட்டது.சம்ஸ்கிருத மொழியில் அர்தா என்றால் பாதி ,மாட்ஸய என்றால் மீன் மற்றும் இந்திரா என்றால் அரசன் என்று பொருள். இது முது வலியை குறைக்க வல்லது.

ADVERTISEMENT

 yoga-for-back-pain-  480

செய்யும் முறை (Method)

        தரையில் சம்மணமிட்டு நேராக அமரவும். முதுகுத்தண்டு நேராக இருப்பது மிகவும் அவசியம். பின்னர் வலது  காலை எடுத்து இடது  புற இடுப்பிற்கு பக்கமாக மடக்கவும்.பின்னர் இடது கையை கொண்டு இடது காலின் முட்டியை தொடுமாறு அமரவும். பின்னர் உங்கள் முகத்தையும்,இடுப்பையும் பின் பக்கமாக சற்றே திருப்பி மூச்சினை மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் இழுத்து விடவும். இதுபோல் மாற்றி மாற்றி செய்து வரவும்.

மேலும் வாசிக்க – மன அழுத்தத்தை நொடியில் போக்க யோகா ஆசனங்கள்

3. மார்ஜரியாசனா ( Marjari asana)

        இது பூனையை போன்றதொரு ஆசனமாகும். இதனை செய்வது எளிது மற்றும் இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம்.

ADVERTISEMENT

 

 yoga-for-back-pain-3

செய்யும் முறை (Method)

நான்கு கால்களை கொண்டு பூனை அமரும் முறையில் அமரவும். இப்பொது உங்கள் கைகள் தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். முகத்தினை நேராக  வைத்து மூச்சினை மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் இழுத்து விடவும். தலையை முன்னும் பின்னும் அசைத்து மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

4. பிட்டிலாசானா  (Cow Pose) – 

      பிட்டிலாசானா  என்பது சம்ஸ்கிருத மொழியில் பசுவின் பெயரான பட்டிலா என்பதிலிருந்து உருவானதாகும். பெயரை போலவே நமது உடலையும் பசுவை போல வைத்து இதனை செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

 yoga-for-back-pain-4
செய்யும் முறை (Method)

   கைகள் இரண்டையும் தரையில் ஊன்றி, கால்களை மடக்கி நன்கு கால்கள் கொண்ட பசுவை போல நிற்க வேண்டும். பின்னர் உங்களின் பின்பகுதியை சற்றே உயர்த்தி, உங்களின் வயிற்று பகுதியை கீழ்நோக்கி தள்ள வேண்டும். தலையை நேராகவோ அல்லது மேல் பக்கமாகவோ உயர்த்தி மூச்சினை மெதுவாகவும், வேகமாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.

பலன்கள் (Benefits)

   இது முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு சேர்க்கிறது.முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது.மேலும் இது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

 
மேலே சொன்ன யோகாசன (yoga) பின்பற்றி வாழ்வில் ஆரோக்கியம் பெற்று வாழ எங்களின் வாழ்த்துக்கள்! 

மேலும் வாசிக்க – க்ரீன் டீ என்றொரு அற்புத பானமும் அதன் பயன்களும்!

ADVERTISEMENT

படங்களின் ஆதாரங்கள் – இன்ஸ்டாகிராம்,பிக்சாபெ 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Also read how yoga can help you to reduce stress.

ADVERTISEMENT
04 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT