தற்போதைய இளைய சமுதாயத்தை கவலைக்கொள்ளும் விஷயங்களில் இளநரை பிரச்னையும் ஒன்றாகும். இந்த பிரச்சனையால் ஆண் – பெண் இருபாலருமே மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இருபது வயதுக்கு உட்பட்டோருக்கு இளநரை ஏற்படுவதால் அவர்களின் தன்னம்பிக்கை வெகுவாக குறைந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. சிறுவயதில் இளநரை ஏற்படுவதால் அவர்களுக்கு வயதான தோற்றம் அளிக்கிறது. இதற்காக பல்வேறு சிகிச்சைகளை செய்து பார்த்தாலும், பலன் மட்டும் கிடைப்பதில்லை.
ஆனால் இளநரையை (white hair) குணப்படுத்த முடியும். இளநரை ஏற்படுவதற்கான முதன்மை காரணங்கள் மற்றும் அதனை இயற்கை பொருட்களை கொண்டு எப்படி சரி செய்வது என்பது குறித்தும் இங்கு காணலாம்.
இளநரை ஏற்படுவதற்கான காரணங்கள்
- இளநரை பெரும்பாலும் வாரிசு ரீதியாகவும் வரக்கூடியது. அப்பா அல்லது அம்மாவிற்கு இளநரை பிரச்னை இருந்தால் அவர்களது பிள்ளைகளுக்கும் வர 90% வாய்ப்புள்ளது.
- தலையில் பொடுகு அதிகம் தோன்றினால் அது வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும்.
- தலைக்கு பயன்படுத்தும் சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் எண்ணெய்களில் உள்ள ஹைட்ரஷன் பெராக்சைடு, வேர்க்கால்களை சேதமடைய செய்து கறுப்பு நிறமிகளை அழித்து நரைமுடிகளை அதிகப்படுத்தும்.
- புரதச்சத்து மற்றும் இரும்பு சத்து குறைவினால் முடியின் கறுமை நிறம் மங்கி, செம்பட்டை நிறம் தோன்றுகிறது. நாளடைவில் இதுவே நரைமுடிக்கு காரணமாக அமைகிறது.
- புற ஊதாக்கதிர்களின் அதிகப்படியான தாக்கம், காற்று மாசு ஆகிய சுற்றுசூழலியல் காரணிகளும் மெலனின் உற்பத்தியைக் குறைக்கும். மெலனின் உற்பத்தி நின்று விட்டால் அந்த வேரில் இருந்து வளரும் முடிக்கும் கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும்.
இயற்கை பொருட்களை கொண்டு இளநரையை குணப்படுத்தலாம்!
- தேங்காய் எண்ணெயில் சிறுது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதனை தலை முடியில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.
- நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். பின்னர் அதனை எண்ணெயில் போட்டு அந்த எண்ணெயை சூடேற்றி, ஸ்கல்ப்பில் படும்படி மசாஜ் செய்து வந்தால், வெள்ளைமுடி மறைவதை நன்கு காணலாம்.
- கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து அதனை தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால் முடியில் நல்ல மாற்றம் உண்டாகும்.
- ஊட்டச்சத்து சப்ளிமென்ட்டுகளான ஜின்க், காப்பர், பயோட்டின், செலினியம், மெத்அயோனின், ஐ-சைட்டின் ஆகியவைகளை உட்கொள்ளலாம். உணவில் எப்போதும் பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்ளுதல் அவசியம்.
- தயிரில் மிளகுத் தூள் சேர்த்து கலந்து அதனை தலை முடிக்கு தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதன் மூலம் வெள்ளை முடி (white hair) மறையும்.
- மென்மையான ஷாம்பூ, அமோனியா இல்லாத ஹேர் கலர்கள், இயற்கையாக கிடைக்கக்கூடிய ஹென்னா ஆகியவற்றை பயன்படுத்தும் பொழுது இளநரைக்கான சாத்தியக்கூறுகள் குறைகின்றன.
- இளநரைக்கு மருதாணி பூசுவது இயற்கை சாய முறை. மருதாணியுடன் கறிவேப்பிலை, அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி போன்றவற்றைச் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். நரைமுடி நிறம் மாறிவிடும்.
- வெந்தயம் அரைத்து பேஸ்ட் செய்து தலைக்கு தடவி ஊற வைத்து கூந்தலை அலசி வந்தால் நரைமுடி மறையும்.
- கறிவேப்பிலையை, தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடுபடுத்தவும். பின்னர் இந்த எண்ணெய்யை வடிகட்டி இரவில் கூந்தலில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். காலையில் எழுந்ததும் கூந்தலை அலசி விடுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நரைமுடி (white hair) கருமையாகும்.
- மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி, ஒரு கப் தயிர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர் இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்து காய வைத்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!