மக்களின் ஆதரவுடன் பிக் பாஸ் டைட்டிலை வென்ற முகென்: இரண்டாவது இடத்தை பிடித்த சாண்டி!

மக்களின் ஆதரவுடன் பிக் பாஸ் டைட்டிலை வென்ற முகென்: இரண்டாவது இடத்தை பிடித்த சாண்டி!

மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் கோலாகளமாக நிறைவு பெற்றது. கடந்த ஜூன் 23 ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

இந்நிகழ்ச்சியில் சாண்டி, கவின், கஸ்தூரி, லாஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி, வனிதா, ரேஷ்மா, ஷெரின், சரவணன், மோகன் வைத்யா, தர்ஷன், சேரன், முகென் (mugen), மீரா மிதுன், மதுமிதா, கஸ்தூரி ஆகிய 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சக போட்டியார்களால் நாமினேட் செய்யப்படுபவர்கள் மக்களின் வாக்குகள் அடிப்படையில் வாரந்தோறும் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதையும் தாண்டி இந்த சீசன் உணர்வுபூர்வமாக இருந்தது மறுக்க முடியாத உண்மையை.

முந்தைய இரண்டு சிசன்களில் இருந்ததை விட, இந்நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சந்தோஷம், சண்டை, காதல், நட்பு, அண்ணன் - தங்கை பாசம், அப்பா - மகள் உறவு என்று அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கி பரபரப்பாக சென்றது.

ரூ .5 லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

twitter

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கவினுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்தது. நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய நிலையில் இப்பொது வெளியே செல்ல விரும்பும் நபருக்கு ரூ. 5 லட்சம் தரப்பட்டும் என பிக் பாஸ் அறிவித்தார். அப்போது கவின் அந்த ரூ .5 லட்சம் பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஒருவேலை கவின் வெளியேறாமல் இருந்திருந்தால் இறுதிப் போட்டி வரை கவின் வந்திருப்பார். போட்டியும் மாறியிருக்கும் என்று கமல் ஹாசன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த தர்ஷன் தான் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வருவார் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

மேலும் சக போட்டியாளர்களும் வெற்றி பெறும் அனைத்து திறமையும் தர்ஷனிடம் இருப்பதை ஆதரித்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முக்கிய காரணம் இது தான் ... தர்ஷனின் முதல் பதிவு!

twitter

இறுதியில் இந்த நிகழ்ச்சியில் 105 ஆவது நாளில் முகென், சாண்டி, லாஸ்லியா மற்றும் ஷெரின் ஆகிய 4 போட்டியாளர்கள் மட்டுமே இருந்தனர். இந்தநிலையில் இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி பிரமாண்டமாக நடந்தது. இதில் யார் டைட்டில் வின்னராக வருவார் என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வழக்கமான குறைந்த வாக்குகள் பெற்றிந்ததன் அடிப்படையில் ஷெரின் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஸ்ருதி ஹாசன் லாஸ்லியாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து 2 ஆவது ரன்னராக வெளியில் அழைத்து வந்தார்.

அப்போது கமல் ஹாசனிடம் இதுவும் ஒரு வெற்றிதான் என வாழ்த்து கூறினார். இந்தநிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முகென் (mugen) (mugen) அறிவிக்கப்பட்டார். அவருக்கு ரூ .50 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மற்ற போட்டியாளர்களை விட இவர் அதிகமான வாக்குகளை பெற்று இவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இரண்டாம் இடத்தை சாண்டி பிடித்திருக்கிறார்.

twitter

முகென் (mugen) தனது நண்பருடன் இருக்கும் கையில் பிக் பாஸ் கோப்பையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இவர்களுக்கு மற்ற போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனிடையே மற்ற போட்டியாளர்களுக்கும் அவர்கள் நடந்து கொண்ட விதம் அடிப்படையில் விருதுகள் வழக்கப்பட்டன.

கவினுக்கு கேம் சேஞ்சர் விருது வழங்கப்பட்டது. இவர் போட்டியில் இருந்து பாதியில் வெளியேறியது போட்டியை மொத்தமாக மாற்றியது. அதனால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த நண்பர் (best buddy) விருது ஷெரினுக்கு வழங்கப்பட்டது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சித்த முன்னாள் போட்டியாளரின் கணவர்: வனிதா பதிலடி!

நிகழ்ச்சியில் எல்லோருடனும் நட்பாக இருந்தார் என்று இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் வனிதாவிற்கு கட்ஸ் அண்ட் கிரிட் (guts and grit) விருது வழங்கப்பட்டது. மிகவும் தைரியமாக இருந்ததால் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. மேலும் சேரனுக்கு மிகவும் ஒழுக்கமானவருக்கான விருது வழங்கப்பட்டது. இதனால் சேரன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

twitter

தர்ஷனுக்கு இதில் ஆல் ரவுண்டர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இவருக்கு ராஜ்கமல் நிறுவனம் பெஸ்ட் டேலண்டர் விருதும் வழங்கி உள்ளது. இதன் மூலம் அவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்த பேசிய தர்ஷன், நான் போட்டியில் இருந்து வெளியேற போது எனக்காக பல ரசிகர்கள் அழுதுள்ளனர் இதையே நான் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன் என கூறினார். மேலும் இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை லாஸ்லியா பெற்றுள்ளார். இவர் இரண்டாவது ரன்னர் அப் விருதை வென்று சாதனை படைத்து இருக்கிறார்.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shop ல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!