பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் : அதிர்ச்சியில் கண்கலங்கிய சாண்டி, லாஸ்லியா!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் : அதிர்ச்சியில் கண்கலங்கிய சாண்டி, லாஸ்லியா!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டங்களை எட்டியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் என தெரிய வந்துவிடும் நிலையில் ரூ. ஐந்து லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் (kavin) வெளியேறிள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக நடித்து மக்கள் மனம் கவர்ந்தவர் நடிகர் கவின். 

கவின் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முக்கியமான காரணம் அவருடைய குடும்ப சூழ்நிலை தான். அவருக்கு நிறைய கடன் பிரச்சனை உள்ளது. பிக்பாஸ் சீசன் 2- வில் அவரை அழைத்ததற்கு, அவர் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். ஆனால் கடன் தொல்லையால் வேறுவழியின்றி இந்த பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டார்.

twitter

ஆரம்பத்தில் அனைவருக்கும் பிடித்தவராக இருந்த கவின் சில நாட்களிலேயே மக்கள் வெறுப்பவராக மாறினார். இதற்கு காரணம் அவரது விளையாட்டு தனமான காதல் தான். ஆரம்பத்தில் ரேஷ்மா,ஷெரின், அபிராமி, லாஸ்லியா, சாக்‌ஷி என ஐந்து பெண்களை காதலிப்பதாக கூறிய கவின் பின் சாக்‌ஷியுடன் காதலில் விழுந்தார். 

ஆனால் அந்த காதல் நிலைக்கவில்லை, அதன் பின் லாஸ்லியாவுடன் காதலை ஆரம்பித்தார். லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் இருப்பது தெரிந்ததால் மட்டுமே கவின் (kavin) , லாஸ்லியாவை காதலிப்பதாக நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்த காதல் இன்று வரை சென்று கொண்டிருகின்றது. 

இதற்கு ஏற்கனவே லாஸ்லியாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும் அதனை கண்டுகொள்ளாமல் காதல் நகர்கிறது.  இதுவரைக்கும் பிக்பாஸ் வீட்டில் அதிகமாக நாமினேஷன் லிஸ்டில் இருந்தவர் கவின்தான். ஆனாலும் ரசிகர்கள் அவருக்கு வாக்களித்து அவரை தொடர்ந்து காப்பாற்றி வருகின்றனர். 

twitter

இதனால் அவர் இந்த சீசனில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம் கவின் இந்த நிகழ்ச்சில் ஜெயிக்க வேண்டும் என நினைக்காமல் தன் நண்பர்கள் தான் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்ற பெருந்தன்மையான குணமே. 

தர்ஷன் மற்றும் முகனுக்கு இல்லாத அளவுக்கு கவினுக்கு ரசிகர்கள் உள்ளனர். மேலும் சாண்டியுடன் இவர் நல்ல நட்பில் இருப்பதால் அவரது ரசிகர்களும் கவினுக்கு (kavin) ஆதரவு அளித்து வந்தனர். அதனால் கண்டிப்பாக அவருக்கு ஓட்டு போட்டு அவரை வெற்றிபெற வைத்துவிடுவார்கள். ஆனால் இன்று சூழ்நிலை தலைகீழாக மாறிவிட்டது. 

இன்னும் 6 போட்டியாளர்கள் மீதமுள்ள நிலையில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற இருக்கிறார். மேலும் டிக்கெட் டு பினாலே டாஸ்கில் முகென் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். இறுதி வாரம் என்பதால் முகெனை தவிர மீதமுள்ள 5 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் நேரடியாக நாமினேட் ஆகியுள்ளனர். 

twitter

எனவே, இந்த வாரம் யார் வெளியேறப் போவது என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. மேலும் இறுதி போட்டிக்கு யார் நுழைய போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் பிக்பாஸில் எல்லா சீசனிலும் நடக்கும் ஒரு நிகழ்வு தான் தற்போதும் நடைபெற்றுள்ளது. 

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் 5 லட்ச பணப்பெட்டி வைக்கப்படும். எனக்கு பிக்பாஸ் டைட்டிலை வென்று 50 லட்சம் வேண்டாம், 5 லட்சம் போதும் என்று நினைப்பவர்கள் அந்த பெட்டியை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து உடனடியாக செல்லலாம். நான் இந்த டைட்டிலை வெல்வது கடினம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். 

ஆனால் இதுவரைக்கும் அப்படி யாரும் செய்ததில்லை. இந்தமுறை யாராவது செய்வார்களா என்று எதிர்பார்த்த பிக் பாஸ் நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். அதில் 5 லட்ச ரூபாயுடம் இன்றே பிக் பாஸ் லட்ச விட்டு வெளியேற விருப்பும் இன்றே வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டது. 

போட்டியாளர்கள் அனைவரும் அமைதியாக இருந்த நேரத்தில் கவின் சற்றும் யோசிக்காமல் எழுந்தார். இதனை பார்த்த லாஸ்லியா மற்றும் சாண்டி ஆகியோர் கவினை தடுத்தனர். ஆனால் அவர்களிடம் இது குறித்து நான் உங்களுக்கு பின்னர் விளக்கம் அளிக்கிறேன் என கூறி கவின் நான் தயாராக இருக்கேன் என பிக் பாஸிடம் தெரிவித்து விட்டார். 

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், கவின் வெளியாவது உறுதியாகியுள்ளது. மேலும் தான் வெளியேறுவதற்கான காரணத்தையும் சாண்டியிடம் கூறுகிறார்புரோமோவில் சாண்டி எதுக்கு நீ இப்படி பண்ணிட்டு இருக்க என கேட்க, கவின் ஒண்ணுமே இல்ல இன்னும் பத்தே நாள் தான். முடிச்சிட்டு வெளியே வாங்க என கூறுகிறார். 

இந்த முடிவை நான் ஏற்கனவே எடுத்துவிட்டேன், மேலும் இவ்வளவும் பண்ணிட்டு என்னால் கூச்சமே இல்லாமல் மேடை ஏறி நிக்க முடியாது என கவின் கூறுகிறார். இதனால் இன்றைய நிகழ்ச்சியில் கவின் வெளியேறுவது ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டாவது புரோமோவில் கவினை வெளியே செல்ல வேண்டாம் என லாஸ்லியா வலியுறுத்துகிறார். அதற்கு கவின் உன்னிடம் நான் கூறியதை மட்டும் மனதில் வைத்து கொண்டு விளையாடு என கூற, எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை கவின் என லாஸ்லியா கலங்கியவாறு கூறுகிறார். எதுவும் ஞாபகம்  இல்லை என்றால் அந்த போட்டோவை எடுத்து பாரு என லாஸ்லியாவின் அப்பா அவருக்கு பரிசளித்த புகைப்படத்தை எடுத்து அவரிடம் கவின் கொடுக்கிறார். 

மேலும் எதுவும் யோசிக்காதே, விளையாடிவிட்டு வெளியே வா என கவின் கூறுகிறார். அப்போது அழுது கொண்டே பேசிய லாஸ்லியா எனக்கு தெரியும் அவர்களுக்காக தான் நான் இங்கே இருக்கிறேன் இல்லையேற்றால் நான் எப்போதோ சென்றிருப்பேன், என்னால் இங்கே இருக்க முடியாது என கூறுகிறார். அதற்கு கவின் நீ என்னிடம் எதுவும் கூற வேண்டாம், இவ்வளவு நாள் நான் இங்கே ஏன் இருந்தேன் எனக்கு தெரியும் என கவின் கூறுகிறார். அப்போது அவர் கையில்  பெட்டியுடன் வெளியே செல்வது புரோமோவில் உறுதியாகியுள்ளது.

மூன்றாவது புரோமோவில் லாஸ்லியா மற்றும் சாண்டி அழுதவாறு இருக்க கவின் வெளியே செல்ல தயாராக இருக்கிறார். பின்னர் அனைவருக்கும் பாய் சொல்லியவாறு அழுதபடி கவின் விடை பெறுகிறார். அப்போது கவின் வேண்டாம் என சொல்லியவாறு கதவில் கைவைத்தவாறு லாஸ்லியா கதறி அழுகிறார். கவின் வெளியே செல்வது உறுதியாகியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு யார் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!