logo
ADVERTISEMENT
home / Health
பல நன்மைகளைத் தரும் துளசி – உங்களுக்காக சில சுவாரசியமான தகவல்கள்!

பல நன்மைகளைத் தரும் துளசி – உங்களுக்காக சில சுவாரசியமான தகவல்கள்!

துளசியை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. பூஜைக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டாலும், இதில் இருக்கும் நற்குணங்கள் இதை ஒரு நல்ல மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகவும் ஆக்குகின்றது. இன்று பலருக்கும் துளசியை பற்றின விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால், அவர்கள் பல வகையில் உணவில் இதை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.

மேலும் துளசி, சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பயன்படுகின்றது. துளசி பல உடல் நல பிரச்சனைகளை எளிதாக சரி செய்ய (tulsi health benefits) பயன்படுத்தப்படுகின்றது. இதனை நீங்கள் எளிமையான முறையில் வீட்டிலேயே மருத்துவத்திற்கும் பயன்படுத்தலாம். துளசியை பற்றிய பல சுவாரசியமான தகவல்களாய் பற்றித் தெரிந்து கொள்ள மேலும் தொடர்ந்து படியுங்கள்!

துளசியின் வகைகள் (types of tulsi)

துளசி பல வகைகளில் கிடைகின்றன. அவற்றில் பச்சை நிறத்திலும், சற்று கருமை நிறத்திலும் இருக்கும் துளசி அதிக அளவு பயன்பாட்டில் இருகின்றது. இவை மேலும் பிரபலமான வகைகளுமாகும். எனினும், இவை இரண்டு மட்டுமல்லாது, மேலும் பல வகை துளசி உள்ளன. இங்கே உங்களுக்காக அவைகள்:

ADVERTISEMENT

மேலும் படிக்க முடிக்கு இஞ்சி

1. லட்சுமி துளசி

இந்த வகை துளசி வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். இவை அதிக அளவில் கோவில்கள் மற்றும் பூஜைக்கு பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இவை உணவிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது நல்ல நறுமணத்தை கொண்டுள்ளது.

2. கிருஷ்ண துளசி / கரும் துளசி

இந்த வகை மற்றுமொரு பிரபலமான துளசியாகும். இந்த துளசி அடர் பச்சை மற்றும் அடர் சிவப்பு நிறம் கலந்து இருக்கும். இதுவும் நல்ல நறுமணத்தை தரும்.

3. அமிர்த துளசி

இதற்கு பச்சை நிற இலைகள் இருக்கும். மேலும் சிவப்பு ஊதா நிறமும் சற்று கலந்திருக்கும். இந்த வகை மருத்துவத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

ADVERTISEMENT

4. கற்பூர துளசி

இந்த வகை துளசி, பச்சை நிற இலைகளை கொண்டிருக்கும். மேலும் இதில் நல்ல நறுமணம் இருக்கும்.

5. வன துளசி

இந்த வகை துளசி அதிக பிரபலம் இல்லை. என்றாலும், இவற்றிலும் நல்ல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த வகை துளசி இந்தியாவில் அதிக அளவு காணப்படும். இது காடுகளில் அதிகம் வளரும். வெப்ப மண்டல பகுதிகளில் இவற்றை அதிகம் காணலாம்.

துளசியை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் (interesting facts of tulsi)

ADVERTISEMENT

Pexels

துளசிக்கு நச்சு தன்மையை போக்கக் கூடிய பண்புகள் உள்ளது

  • இது சுத்திகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது
  • இந்த சுத்திகரிக்கும் பண்புகளால் இது சரும ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக உள்ளது
  • துளசி, அரிப்பு, மற்றும் பிற சரும பிரச்சனைகளை போக்க உதவுகின்றது
  • இதை தேநீர் போல செய்து அருந்தும் போது, உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது
  • இதில் அண்டிபயோடிக், அண்டி-பக்டேரியல் மற்றும் அண்டி கர்சிநோஜெனிக் பண்புகள் நிறைந்துள்ளது
  • சுரம், தலைவலி, வறண்ட தொண்டை, இருமல், சளி, மற்றும் நெஞ்சில் இறுக்கம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது
  • சுவாச பிரச்சனைகளை, குறிப்பாக ஆஸ்த்மா அறிகுறிகளை குறைக்க / போக்க உதவுகின்றது
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் நல்ல பலம் பெற உதவுகின்றது
  • உடலுக்குள் நடக்கும் பல செயல்பாடுகளை இது சீர் செய்கின்றது

துளசியில் நிறைந்துள்ள சத்துக்கள் பற்றிய விவரங்கள் (nutritional values tulsi)

துளசியில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதன் காரணமாகவே, இது மருத்துவத்தில், பல நோய்களை குணப்படுத்த உதவுகின்றது. துளசியில் நிறைந்திருக்கும் சத்துக்கள் பற்றிய விவரங்கள் இங்கே: 

ADVERTISEMENT

1. வைட்டமின் A மற்றும் C 
2. கால்சியம்
3. துத்தநாகம் 
4. இரும்பு
5. பச்சையம்  
6. யூஜெனோல்
7. ஓலியானோலிக் அமிலம் 
8. உர்சோலிக் அமிலம்
9. ரோஸ்மரினிக் அமிலம் 
10. β- காரியோபிலீன்
11. யூஜெனோல் 
12. ஜெர்மாக்ரீன் டி
13. லினினூல்  
14. மெத்தில் சாவிகோல்
15. மெத்தில் சினமேட் 
16. லினோலன்
17. புரதம்  
18. கொழுப்ப
19. கார்போஹைட்ரேட்

 

துளசியால் உடலுக்கு கிடைக்கும் நற்பலன்கள் (health benefits of tulsi)

துளசி பல நற்பலன்களை உடலுக்குத் தருகின்றது. இதன் காரணமாகவே மக்கள் இதனை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். துளசி எவ்வாறெல்லாம் உடல் நலனுக்கு பயன்படுகின்றது என்று இங்கே பார்க்கலாம்:

ADVERTISEMENT

1. மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலை போக்கும்

Pixabay

துளசியில் அடப்டோஜென் நிறைந்துள்ளது. இது மனதில் தோன்றும் நிலையற்ற தன்மையை போக்க உதவும். இதனால் மன அழுத்தம் குறைந்து, மனம் தெளிவுப் பெரும்.

2. உடலுக்கு சக்தி தரும்

துளசியில் நிறைந்திருக்கும் ஆக்சிஜெநாற்றம், உடலை சுத்தம் செய்ய உதவுகின்றது. இதனால் உடலில் இருக்கும் நச்சு வெளியேறி, உடல் சுத்தமாகின்றது. மேலும் இது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும், சக்தியையும் தருகின்றது.

ADVERTISEMENT

3. நோய் தொற்று ஏற்படாமல் காக்கும்

 இதில் அண்டி பக்டேரியல், அண்டி விரல், அண்டி பங்கள், மற்றும் வலியை போக்கும் பண்புகள் இருப்பதால், நோய் தொற்று ஏற்படாமல் காக்க உதவும். இதனால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

4. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர் செய்யும்

துளசியில் இருக்கும் சத்துக்கள், நீரழிவு நோயை குணப்படுத்த உதவும். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்க செய்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிகின்றது. இதன் காரணமாக நீரழிவு நோயும் குணமடைகின்றது.

5. கொழுப்பின் அளவை குறைக்கும்

துளசி உடலில் இருக்கும் தேவையற்ற மற்றும் கேட்ட கொழுப்பை வெளியேற்ற உதவுகின்றது. குறிப்பாக சிறுநீரகம், கல்லீரல், மற்றும் இருதயத்தில் சேர்ந்திருக்கும் கொழுப்பை கரைத்து வெளியேற்ற உதவுகின்றது.

6. மூட்டு வலியை போக்கும்

ADVERTISEMENT

Shutterstock

தினமும் துளசியை ஏதாவது ஒரு வகையில் உட்கொள்ளும் போது, இது மூட்டு வலியை போக்க உதவுகின்றது,. இதில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மூட்டு வலியை போக்க பெரிதும் உதவியாக உள்ளது.

7. வயிற்றில் ஏற்படும் பிரச்சனையை போக்கும்

துளசி வயிற்றில் உருவாகும் அமிலத்தை குறைக்கும். இதனால் வயிற்றில் புண் உண்டாவது தடுக்கப்படும். மேலும் இது ஜீரனத்தையும் சரி செய்து, ஆரோக்கியமாக இருக்க உதவும்.

8. பல் பிரச்சனைகளை போக்கும்

பல ரசாயனங்கள் கலந்த மௌத் வாஷ் போன்ற பொருட்களை பயன்படுத்துவதை விட, துளசியை முறையாக பயன்படுத்தி வந்தால், பல பலன்களைப் பெறலாம். துளசி ஈர்களை பலப்படுத்தி, பற்கள் உறுதியாக உதவுகின்றது. மேலும் இது வாயில் புண் மற்றும் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றது.

ADVERTISEMENT

9. உடல் பருமன்

துளசி தேவையற்ற கொழுப்பை உடலில் இருந்து அகற்றி, இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீர் செய்வதால், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் குறைகின்றது. இது மேலும் சீரான உடல் எடையைப் பெற உதவுகின்றது.

10. சிறுநீரகத்தில் கல்

துளசி சிறுநீரகத்தில் இருக்கும் நச்சு பொருட்களை வெளியேற்ற உதவும். மேலும் இதனை தினமும் சாறாகவோ அல்லது தேநீர் போன்றோ எடுத்துக் கொள்ளும் போது, சில நாட்களிலேயே சிறுநீரகத்தில் இருக்கும் கல் கரைந்து நல்ல ஆரோக்கியத்தைப் பெற உதவுகின்றது.

11. நல்ல ஜீரணத்தை உண்டாக்குகின்றது

Pixabay

ADVERTISEMENT

துளசி வயிற்றில் உணவு ஜீரணமாக உதவுகின்றது. இது ஜீரண சுரபி உற்பத்தியாக உதவுகின்றது. இதன் காரணமாக உணவும் எளிதாக ஜீரனமாகின்றது.

12. சுரத்தை போக்கும்

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை துளசியை சுரத்தை போக்க பயன்படுத்தலாம். இதை முறையாக சாறு அல்லது கசாயம் போல செய்து அருந்தி வந்தால், ஆரோக்கியம் அதிகரிக்கும். சுரத்தை உண்டாக்கும் பக்டீரியா மற்றும் வைரசுகளை அழித்து விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப உதவும்.

13. சுவாச பிரச்சனைகளை குணப்படுத்தும்

துளசியில் இருக்கும் காம்பீன், சினியோல் மற்றும் யூஜெனோல் சுவாச குழாய் மற்றும் நுரையீரலில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, நன்கு மூச்சு விட உதவும். இதனால் சுவாச பிரச்சனைகளும் குணமாகும்.

14. இருதய நலன்

துளசி ப்ரீ ராடிகல்ஸ்களால் இருதயத்திற்கு உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உதவுகின்றது. இதனால் இருதயம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுகின்றது.

ADVERTISEMENT

15. சரும ஆரோக்கியம்

துளசியில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மற்றும் வைட்டமின் C மற்றும் தேவையான எண்ணை, சருமத்திற்கு பல நற்பலன்களைத் தருகின்றது. மேலும் இது ப்ரீ ராடிகல்ஸ்களை எதிர்த்து போராடுகிறது. இதனால் சருமம் பாதிக்கப்படாமல், நல்ல ஆரோக்கியத்தைப் பெறுகின்றது.

16. தலைவலியை போக்கும்

Pixabay

துளசியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாலும், அழற்சி எதிர்ப்பு இருப்பதாலும், இது வலி ஏற்படுவதை குறைகின்றது. இதனால் தலைவலி ஏற்பட்டால், துளசியை கசாயமாகவோ அல்லது தேநீராகவோ அருந்தும் போது, தலைவலி குறைகின்றது.

ADVERTISEMENT

17. அறிவாற்றல் செயல்திறனை அதிகரிகின்றது

துளசி அசிடைல்கொலினெஸ்டரேஸைத் தடுப்பதன் மூலம் நினைவாற்றல்  மற்றும் கவனத்தை அதிகரிகின்றது, இதனால் அசிடைல்கொலின் அளவும் அதிகரிகின்றது. வயதாவதால் ஏற்படும் நினைவாற்றல் பிரச்சனையை துளசி போக்க உதவும்.

18. உயர் இரத்த அழுத்தத்தை சீர் செய்யும்

துளசியில் இருக்கும் பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீர் செய்ய உதவும். துளசி விதைகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பு நிறைந்த எண்ணை, இரத்த அழுத்தத்தை குறைத்து சரியான அளவு இருக்க உதவும். இதனால் இருதயத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதையும் குறைக்கலாம்.

19. நீரழிவு நோய்

துளசி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும். மேலும் இதனால் இன்சுலின் செயல்பாடும் சீராகும். இது நீரழிவு நோயை தடுக்க அல்லது இதனால் ஏற்படும் பிரச்சனையை குறைக்க உதவும்.

20. கல்லீரலை பாதுகாக்கும்

துளசி இலைகளில் இருந்து வரும் ஒரு விதமான அல்கஹோல் சாறு கல்லீரல் நச்சுத் தன்மையால் பாதிக்கப்படுவதை தடுக்க உதவும். இதனால் கல்லீரல் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுகின்றது.

ADVERTISEMENT

21. வயிற்றில் புண் உண்டாவதை போக்கும்

Pixabay

துளசி சிக்கலான அமில-பெப்சின் சுரப்பைக் குறைக்கிறது, மேலும் வயிற்றைக் கட்டுப்படுத்தும் உயிரணுக்களை முறிகின்றது. மேலும், துளசி வயிற்றை பாதுகாக்கும் சுரபிகள் உற்பத்தியாக உதவுகின்றது.

22. ஆக்ஸிஜனேற்றியாக வேலை செய்கிறது

துளசியில் அதிக அளவு ஆக்சிஜனேற்றம் உள்ளது. மேலும் துளசியின் சாறு சூப்பர்ஆக்ஸைடு டிஸ்முடேஸ் மற்றும் வினையூக்கி போன்ற ஆக்ஸிஜனேற்ற நொதிகளின் அளவை அதிகரிகின்றது. இதனால் பல நற்பலன்கள் உடலுக்கு கிடைகின்றது.

ADVERTISEMENT

23. வலியை குறைக்கும்

துளசி ஒரு நல்ல வலி நிவாரணியாக வேலை செய்கின்றது. இதன் இலைகளில் இருக்கும் சாறு, உடலில் ஏதாவது வலி உண்டானால் அதனை போக்க அல்லது குறைக்க உதவுகின்றது.

24. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது

துளசி இலைகளில் இருக்கும் சாறு IFN-y, IL-4, மற்றும் T- உதவி அணுக்கள் மற்றும் இயற்கை கொலையாளி செல் செயல்பாடு ஆகியவற்றை கணிசமாக அதிகரிக்க உதவுகின்றது. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை அதிகரிகின்றது.

25. புற்றுநோயை குணப்படுத்தும்

சரும புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், வயிற்றில் புற்றுநோய் மற்றும் வாயில் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளை போக்க துளசி பெரும் அளவு உதவுகின்றது.

26. கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கும்

ADVERTISEMENT

Pixabay

துளசியில் இருக்கும் இரண்டு ஃபிளாவனாய்டுகள், ஓரியண்டின் மற்றும் வைசெனின் மனித இரத்த அணுக்களை கதிர்வீச்சினால் தூண்டப்பட்ட டி.என்.ஏ சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.

27. எலும்புகளை குணப்படுத்தும்

எலும்புகளில் முறிவு அல்லது வேறு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், அதனை போக்க துளசி உதவும். துளசி கால்சியம் உடலில் சார உதவும். மேலும் இது எலும்புகளுக்கு நல்ல கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவு கிடைக்க உதவும். இதனால் எலும்புகள் பலம் பெரும்

28. எதிர்ப்பு பக்டீரியல் பண்புகள்

துளசியில் தேவையான எண்ணை உள்ளன. இது எதிர்ப்பு பக்டீரியா பண்புகளை அதிகரித்து பக்டீரியாவின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாகின்றது.

ADVERTISEMENT

29. எதிர்ப்பு வைரஸ் பண்புகள்

துளசி இலை சாற்றில் அதிக எதிர்ப்பு வைரஸ் பண்புகள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படாமல் இருக்க உதவுகின்றது.

30. கண்புரை உண்டாவதை தடுக்கும்

துளசி ஆக்சிஜனேற்ற நொதிகளை அதிகரிக்க உதவுகின்றது. இது கண்களில் ஏற்படும் புரை, குறிப்பாக நீரழிவு நோயினால் ஏற்படும் கண்புரையை குணப்படுத்த உதவுகின்றது.

31. தலைமுடி நரையை போக்கும்

Shutterstock

ADVERTISEMENT

துளசி ஹைட்ரஜன் பெராக்சைடை உடைக்கும் நொதி கேடலேஸை அதிகரிக்கிறது. இதனால் தலைமுடி நரைக்காமல் தடுக்கப்படுகின்றது. மேலும் நல்ல ஆரோகியத்தையும் பெறுகின்றது.

32. வாய் துர்நாற்றத்தைப் போக்கும்

துளசி வாய் துர்நாற்றத்தைப் போக்கி, நல்ல புத்துனற்சியைப் பெற உதவுகின்றது. இது வாயில் இருக்கும் பக்டீரியா மற்றும் கிருமிகளை போக்கி, வாய் நல்ல ஆரோக்கியத்தைப் பெற உதவுகின்றது. மேலும் துளசி வாயில் புண் உண்டாவதையும் தடுகின்றது.

33. அஜீரணத்தை போக்கும்

துளசியை தேநீர் போல செய்து தினமும் அருந்தி வந்தால் நல்ல ஜீரணத்தை ஏற்படுத்தும். இதனால் உணவு விரைவாக ஜீரணமாகி மல சிக்கல் மற்றும் இது சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

34. வைட்டமின் K நிறைந்துள்ளது

இது ஒரு கொழுப்பை கரைக்கும் வைட்டமின். இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது, மேலும் இதயத்தின் ஆரோகியத்தையும் அதிகப்படுத்த உதவுகின்றது. அணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க அதிகம் உதவுகின்றது. எலும்புகளின் பலத்தை அதிகரிக்க இந்த வைட்டமின் K  தேவைப்படுகின்றது.

ADVERTISEMENT

35. வயது முதிர்ச்சியை போக்கும்

துளசியில் வைட்டமின் C மற்றும் A, மற்றும் தாவர ஊட்டசத்தக்க்கள் அதிகம் இருப்பதால், ப்ரீ ராடிகல்ஸ்களால் உண்டாகும் பாதிப்புகளை போக்க உதவுகின்றது. இதனால் இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் உண்டாகாமல் தடுத்து நல்ல இளமை தோற்றத்தைப் பெற உதவுகின்றது.

உங்களுக்காக சில துளசி குறிப்புகள் (tulsi easy to make recipes)

Pixabay

ADVERTISEMENT

1. துளசி தேநீர்

  • ஒரு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
  • இந்த தண்ணீரில் சிறிது துளசி இலைகளை சேர்க்கவும்
  • இதனுடன் சிறிது சீரகம் மற்றும் மிளகை நுணுக்கி சேர்க்கவும்
  • நன்கு கொதித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி,  வடிகட்டி பின் அருந்தலாம்
  • தேவைப்பட்டால், தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்

2. துளசி தண்ணீர்

  • தினமும் நீங்கள் அருந்தும் தண்ணீரில் காலையில் சிறிது துளசி இலைகளை போட்டு வைத்து சிறிது நேரம் கழித்து இந்த தண்ணீரை அருந்தலாம்
  • மேலும் நீங்கள் துளசி இலைகளுடன், சிறிது மிளகு மற்றும் சீரகம், நன்னாரி போன்றவற்றையும் சேர்த்து, ஒரு பருத்தி துணியில் சிறிய மூட்டைப் போல கட்டி, தண்ணீரில் போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து அந்த தண்ணீரை அருந்தத் தொடங்கலாம்.
  • இது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் அதிகரிக்க உதவும்

3. துளசி கசாயம்

  • தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
  • இதில் துளசி இலைகள், சீரகம், மிளகு, சுக்கு அல்லது இஞ்சி மற்றும் வேறு சில மூலிகைககளையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
  • இந்த தண்ணீர் பாதி அளவு வரும் வரை நன்கு கொதிக்க விட்டு பின் வடிகட்டி அருந்தலாம்

சரும பாதுகாப்பிற்கு துளசி (tulsi skin care )

Pixabay

துளசி பல சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகின்றது. குறிப்பாக சருமத்தில், அரிப்பு, ஒவ்வாமை, புண், பருக்கள், வறட்சி போன்றவற்றை போக்க உதவும். துளசி எப்படி சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்

ADVERTISEMENT

1. சரும நோய்களை போக்கும்

துளசி இலைகளை நன்கு அரைத்து, பசை போல செய்து சருமத்தில் தடவி வந்தால், சருமத்தில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் விரைவாக குணமடையும். மேலும் இது சருமத்திற்கு நல்ல பலபலப்பு மற்றும் பொலிவைத் தரும்.

2. பருக்களை போக்கும்

துளசி சருமத்தில் தோன்றும் பருக்களை போக்க பெரிதும் உதவியாக இருக்கும். துளசி எண்ணையோடு, சந்தனம், எலுமிச்சைப்பழ சாறு மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து வந்தால், பருக்கள் நீங்கும். மேலும் நல்ல பொலிவை சருமம் பெரும். இது ஒரு நிரந்தர தீர்வாகவும் இருக்கும்.

3. கருமுள் மற்றும் வெள்ளை முள்ளை போக்கும்

துளசி எண்ணையுடன் முல்தானிமட்டி, தேன் மற்றும் எலுமிச்சைப்பழ சாறு சேர்த்து கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், கருமுள் மற்றும் வெள்ளை முள் போன்ற பிரச்சனைகள் அகலும்.

4. நல்ல நிறம்

துளசி உங்கள் சருமத்திற்கு நல்ல நிறத்தை தரும். காய்ந்த துளசி இலைகளை பொடி செய்து அதனுடன் சிறிது எலுமிச்சைப்பழ சாறு மற்றும் ஆலிவ் எண்ணை கலந்து முகத்தில் பூசி வந்தால், சருமத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும்.

ADVERTISEMENT

5. படர்தாமரை தொற்றை போக்கும்

துளசி இலைகளை நன்கு அரைத்து அதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாற்றை சேர்த்து நன்கு கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து வந்தால், படர்தாமரை தொற்று குணமாகும்.

6. அரிப்பை போக்கும்

அரிப்பால் பல பிரச்சனைகள் ஏற்படும். இதனை போக்க, துளசி எண்ணையை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து வந்தால், அரிப்பு குணமாகும்.

7. புண் மற்றும் எரிச்சலை போக்கும்

சருமத்தில் ஏற்படும் புண் மற்றும் எரிச்சலை போக்க, துளசி பொடியில், சிறிது தேங்காய் எண்ணை கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து வந்தால், நல்ல பலனை விரைவில் பெறலாம். இது மேலும் சருமத்திற்கு குளிர்ச்சியான உணர்வைத் தரும்.

ADVERTISEMENT

சரும அழகை அதிகரிக்க துளசி பேஸ் மாஸ்க் (tulsi face mask)

Pixabay

1. சருமத்தை சுத்திகரிக்க

  • துளசி பொடி சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்
  • அல்லது துளசி இலைகளை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் தயிர் கலந்து நன்கு பசை போல செய்து கொள்ள வேண்டும்
  • இந்த பசியை முகத்தில் தடவி சிறிது நேரம் கசாஜ் செய்ய வேண்டும்
  • பின்னர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

2. பருக்களை போக்க

  • துளசி மற்றும் வேப்ப இலைகளை சமமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் இரண்டு கிராம்பு சேர்த்து நன்கு பசை போல் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்
  • இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
  • பின்னர் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்
  • இது சருமத்தை தெளிவாக்கி, நல்ல பலபலப்பைத் தரும்

3. நிறத்தை அதிகரிக்கும்

  • சிறிது துளை இலைகளை நன்கு பசை போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் சிறிது ஓட்மீல் பொடி மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  • இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
  • பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்

4. சருமத்தில் கறைகளை போக்க

  • சமமான அளவு வெப்ப இலைகள் மற்றும் துளசி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
  • பின்னர், குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

5. சரும நிறத்தை மேம்படுத்த

  • தேவையான தண்ணீர் எடுத்து அதில் துளசி இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
  • இந்த துளசி நீர் ஆறியவுடன் வடிகட்டி இதனுடன் சிறிது பன்னீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • இந்த தண்ணீரை உங்கள் முகத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்
  • இப்படியே ஒரு நாளைக்கு ஐந்து முறை செய்து வந்தால், சருமம் நல்ல நிறத்தைப் பெரும்

துளசி மற்றும் தலைமுடி வளர்ச்சி (tulsi hair health)

ADVERTISEMENT

Shutterstock

துளசி தலைமுடி நன்கு வளரவும் உதவுகின்றது. நீங்கள் இதை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:

1. தலைமுடி வளார்ச்சி

துளசி எண்ணையை தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலனை எதிர் பார்க்கலாம். தலைமுடி வேர்களில் துளசி எண்ணையை நன்கு தேய்த்து மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் தலைமுடி நல்ல வளர்ச்சி பெறுவதை நீங்கள் காணலாம்.

2. வறண்ட வேர் பகுதிகளை குணப்படுத்தும்

துளசியில் இருக்கும் தேவையான எண்ணை தலைமுடியின் வேர் பகுதிக்கு போஷாக்கைத் தரும். மேலும் இது வேர் பகுதி வறண்டு போகாமல் இருக்கவும் உதவும்.

ADVERTISEMENT

3. பொடுகு தொல்லையை போக்கும்

தலையில் அதிக பொடுகு இருந்தால், நீங்கள் துளசி இலைகளை தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் பயன்படுத்தி வரலாம். இப்படி செய்தால் நாளடைவில் பொடுகு தொல்லை நீங்கும். நல்ல ஆரோக்கியமான தலைமுடியையும் பெறலாம்.

4. முடி உதிர்வை குறைக்கும்

துளசி எண்ணையை தினமும் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் முடி உதிர்வு குறைந்த அடர்த்தியான தலைமுடி வளருவதை நீங்கள் காணலாம்.

5. நல்ல அடர் நிறத்தைப் பெற உதவும்

துளசி தலைமுடி நரைப்பதை தடுக்க உதவும். குறிப்பாக தேங்காய் எண்ணையில் துளசி இலைகள் மற்றும் நெல்லிக்காய் கலந்து பயன்படுத்தி வந்தால், தலைமுடி ஆரோகியமாவதோடு, நல்ல நிறத்தை பெறுவதையும் நீங்கள் காணலாம்.

ADVERTISEMENT

தலைமுடி நன்கு வளர சில குறிப்புகள் (tulsi for hair treatment)

Pixabay

1. பொடுகு தொல்லை நீங்க

  • சிறிது துளசி இலை பொடியை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது நெல்லிக்காய் பொடி மற்றும் எழுமிச்சைபழ சாறு சேர்த்துக் கொள்ளவும்
  • இவற்றை நன்கு கலந்து பசை போல செய்து தலைமுடியின் வேர் பகுதியில் தேய்க்கவும்
  • சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்
  • பின்னர் குளிர்ந்த நீரில் தலைமுடியை (கூந்தல்) நன்கு அலசி விடவும்

2. அரிப்பை போக்க

  • தேவையான அளவு துளசி இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையை சேர்த்துக் கொள்ளவும்
  • இந்த கலவையை லேசாக சூடு செய்து கொள்ளவும்
  • பின்னர் மிதமான சூடு இருக்கும் போது தலைமுடியின் வேர் பகுதியில் நன்கு தேய்க்கவும்
  • சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசி விட வேண்டும்

துளசியால் ஏற்படும் பக்க விளைவுகள் / உபாதைகள் (side effects of tulsi)

துளசி நல்ல பலனையே தரும். எனினும், இதனை சரியான முறையில் பயன்படுத்தாமல் போனாலோ, அல்லது அதிக அளவு பயன்படுத்தினாலோ சில உபாதைகளை ஏற்படுத்தக் கூடும். அந்த வகையில், இங்கே துளசியால் ஏற்படும் சில உபாதைகள்;

ADVERTISEMENT
  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், துளசியை அதிக அளவு உட்கொள்ளக் கூடாது. இது கர்ப்ப காலத்தில் சில உடல் நல  பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்
  • ஹைபோ தைராய்டு இருப்பவர்கள், துளசியை அதிகம் எடுத்துக் கொண்டால், இது மேலும் தைராய்டு ஹார்மோன் குறைபாட்டை அதிகரிக்கும்
  • துளசி இரத்தம் உறைதலை மெதுவாக்கும் என்பதால், அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது

கேள்வி பதில்கள் (FAQs)

1. துளசியை முகத்திற்கு பயன்படுத்தலாமா?

துளசி சருமத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை போக்க உதவுவதால், நீங்கள் இதனை முகத்திற்கு பயன்படுத்தலாம். இது நல்ல பொலிவையும், பலபலப்பையும் பெற உதவும்.

2. துளசியை சாப்பிடுவதால், சருமம் ஆரோக்கியம் பெறுமா?

சருமத்தின் மீது துளசியை பயன்படுத்துவதை விட, உட்கொள்ளும் போது மேலும் பல நன்மைகளை சருமத்திற்கு தருகின்றது. நீங்கள் துளசி தேநீர் செய்தோ அல்லது பச்சையாகவோ துளசியை உட்கொள்ளலாம். இது பருக்கள், தழும்பு மற்றும் புண் போன்ற பிரச்சனையை போக்க உதவும்.

3. துளசி பருக்களை போக்குமா?

துளசி ஒரு நல்ல ஆயுர்வேத மருந்தாக பயன்படுகின்றது. இது சருமத்தில் ஏற்படும் புண், மற்றும் பிற பாதிப்புகளை எளிதாக போக்க உதவுகின்றது. குறிப்பாக துளசி இலைகளை அரைத்து முகத்தில் தேய்த்து வந்தால் பருக்கள் விரைவாக குணமடையும்.

ADVERTISEMENT

4. துளசி தண்ணீரை அருந்தலாமா?

தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் துளசி தண்ணீரை அருந்துவது மிக நல்லது. இது நீங்கள் நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க உதவும். மேலும் துளசி தேநீர் செய்தும் அருந்தலாம்.

5. மன அழுத்தத்தை குறைக்க எவ்வளவு துளசி எடுத்துக் கொள்ளலாம்?

தினமும் 5 கிராம் துளசி இலைகளை நீங்கள் இரண்டு வேளை எடுத்துக் கொள்ளலாம். இப்படி 3௦ நாள் முதல் 6௦ நாள் வரை எடுத்துக் கொள்ளும்போது மன அழுத்தம் அதிக அளவு குறைகின்றது.

6. துளசி நல்ல தூக்கம் வர உதவுமா?

துளசி மன அழுத்தத்தை குறைத்து, மனதை அமைதிப்படுத்துகின்றது. இதனால் இது நல்ல தூக்கத்தை உண்டாக்க உதவுகின்றது.

7. எந்த வகை துளசி உடலுக்கு நல்லது?

அனைத்து வகை துளசியும் உடலுக்கு நல்லது. எனினும், பெரும்பாலும் பச்சை அல்லது லட்சுமி துளசியே அதிக அளவு எளிதாக கிடைப்பதால், நீங்கள் இதனை பயன்படுத்தலாம். அல்லது பிற துளசி வகைகளை உங்கள் வீட்டில் வளர்த்து பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

8. துளசி இலைகள் உடல் எடையை குறைக்க உதவுமா?

துளசி ஒரு நல்ல மூலிகை. இது இயற்கையாகவே உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவும். தினமும் துளசி தேநீரை அருந்தி வந்தாலோ அல்லது பச்சை துளசி இலைகளை அப்படியே சாப்பிட்டு வந்தாலோ உங்கள் உடல் எடை குறைவதை நீங்கள் காணலாம்.

9. தலைமுடி வளர்ச்சிக்கு துளசி நல்லதா?

துளசி எண்ணையை நீங்கள் தலைமுடி வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம். இது தலைமுடி வளர்ச்சியை ஊக்கவித்து, வேறு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதனை குணப்படுத்தவும் உதவுகின்றது.

 

மேலும் படிக்க – மிளகின் நற்பலன்கள் – உடல் நலம் மற்றும் சரும நலம்! மேலும் படிக்க – எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள கடுக்காய் : அழகு மற்றும் ஆரோக்கிய நன்மைகள்!

பட ஆதாரம்  – Shutterstock

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

23 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT