மிளகின் நற்பலன்கள் – உடல் நலம் மற்றும் சரும நலம்!

மிளகின் நற்பலன்கள் – உடல் நலம் மற்றும் சரும நலம்!

மிளகு(pepper) – இதன் நன்மைகளை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. சமையலுக்கு மட்டுமல்லாது, மருத்துவத்திலும் இதன் பயன்பாடு எண்ணில் அடங்காதவையாக இருகின்றது. இதன் நற்குணங்களை பற்றி தெரிந்து கொண்ட ஆங்கிலேயர்களும், பிற நாட்டவர்களும், அதிக அளவு நம் நாட்டில் இருந்து மிளகை ஏற்றுமதி செய்யத்தொடங்கினர். இன்று நம் தமிழ்நாட்டு உணவில் மட்டுமல்லாது, உலகில் பெரும்பாலும் சமைக்கக் கூடிய அனைத்து உணவுகளிலும் இன்று மிளகு பயன்படுத்தப்படுகின்றன.  மிளகு, சமையலுக்கு நல்ல மனத்தையும், சுவையையும் தருகின்றது. இதை பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள, இந்த தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்!

Table of Contents

  மிளகை பற்றிய சுவாரசியமான தகவல்கள்(Interesting facts about Black Pepper)

   எந்த உணவில் சேர்த்தாலும், மிளகு நல்ல காரம், மனம் மற்றும் சுவையைத் தரும். இதை பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள இங்கே சில சுவாரசியமான தகவல்கள்

  • உணவு மற்றும் மருத்துவத்தில் மிளகு பயன்படுத்தப்படுகின்றது
  • இது அதிக ஆளவு தென்னிந்தியாவில் பயிரிடப்படுகின்றது
  • பழங்காலம் முதல் இது அதிக அளவு மக்களால் பயன்படுத்தப்பட்டு, பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது
  • இது ஆண்டின் அனைத்து பருவத்திலும் கிடைக்கும்
  • உணவை பதப்படுத்த மிளகு அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றது
  • இது ஒரு நல்ல அழற்சி எதிர்ப்பு முகவராக செயல்படுகின்றது
  • மிளகு, கருப்பு மிளகு, வெள்ளை மிளகு மற்றும் பச்சை மிளகு என்கின்ற மூன்று வகையில் பயன்படுத்தப்படுகின்றது. எனினும், கருப்பு மிளகே அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது
  • எந்த சீர்தோஷ நிலையில் வாழ்பவர்களும் இதனை எடுத்துக் கொள்ளலாம்
  • 5௦௦௦ ஆண்டுகளுக்கும் மேலாக மிளகு தென்னிந்தியர்களின் உணவு மற்றும் மருத்துவத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது 

  மேலும் படிக்க தமிழில் இஞ்சியின் நன்மைகள்

  மிளகில் நிறைந்திருக்கும் சத்துக்கள்(Nutritional Values of Black Pepper)

  1௦௦ கிராம் மிளகில் நிறைந்துள்ள சத்துக்களின் விவரங்கள் இங்கே:

  • சக்தி - 225 கலோரிகள்
  • கார்போஹைட்ரெட் – 64.81 கிராம்
  • புரதம் – 10.95 கிராம்
  • மொத்த கொழுப்பு – 3.26 கிராம்
  • நார் சத்து – 26.5 கிராம்
  • வைட்டமின்கள்
  • வைட்டமின் A: 299 IU
  • தியாமின்: 0.109 மிகி
  • ரிபோஃப்ளேவின்: 0.240 மி.கி.
  • நியாசின்: 1.142 மி.கி.
  • வைட்டமின் C: 21 மி.கி.
  • வைட்டமின் E: 4.56 மி.கி.
  • வைட்டமின் K: 163.7 .g

  தாது பொருட்கள் 

  • சோடியம்: 44 மி.கி.
  • பொட்டாசியம்: 1.25 கிராம்
  • கால்சியம்: 437 மி.கி.
  • தாமிரம்: 1.127 மிகி
  • இரும்பு: 28.86 மி.கி.
  • மெக்னீசியம்: 194 மி.கி.
  • மாங்கனீசு: 5.625 மிகி
  • பாஸ்பரஸ்: 173 மி.கி.
  • துத்தநாகம்: 1.42 மி.கி.
  pixabay

  மிளகில் நிறைந்துள்ள நற்பலன்கள்(Health Benefits of Black Pepper)

  மிளகில் பல நற்பலன்கள் நிறைந்துள்ளது என்று அனைவருக்கும் தெரியும், இருப்பினும், நீங்கள் அறியா சில பலன்களும் இதில் உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக, மிளகில் நிறைந்துள்ள நற்பலன்களை பற்றிய ஒரு தொகுப்பு

  சீரான ஜீரணம்:

  மிளகு ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பிற செரிமான சாறுகள், அதிக அளவு சுரக்க உதவுகின்றது. இவை, உணவு பொருட்களை உண்டைத்து, எளிதாக ஜீரணமாக உதவுகின்றது. மேலும் இதனால், மல சிக்கல், மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. இது மட்டுமல்லாது, மிளகு வயிற்றில் இருக்கும் வாயு பிரச்சனையையும் போக்க உதவுகின்றது.

  உடல் எடையை குறைக்க:

  மிளகு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. இது வயிற்று பகுதிகளிலும், உடலில் உள்ள பிற பகுதிகளிலும் கொழுப்பு சேராமல், அவற்றை கரைக்க உதவுகின்றது. இதனால், உடல் எடை அதிகரிப்பதும் குறைந்து சீரான உடல் எடையைப் பெற உதவுகின்றது.

  மூக்கடைப்பை போக்கும்:

  சுவாச பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதனை போக்க மிளகு பெரிதும் உதவுகின்றது. மிளகு, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும் ஒரு முக்கிய மூலிகையாக செயல்படுகின்றது. மேலும் சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை போக்கி, சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது அதிக அளவு உதவுகின்றது.

  ஆஸ்த்மாவை குணப்படுத்துகின்றது:

  எந்த விதமான சுவ பிரச்சனைகளையும் எளிதாக போக்க மிளகு உதவும். இந்த வகையில் இதில் இருக்கும் சளி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எளிதாக ஆஸ்த்மா அறிகுறிகளை குணப்படுத்த உதவும்/ மேலும் சுவாச குழாயை தெளிவுபடுத்தி எளிதாக சுவாசிக்கவும் உதவும்.

  நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது:

  இது மிளகின் ஒரு சிறப்பு அம்சமாகும். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள், நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றது. இதனால் நோய் பரவுவதும் குறைந்து, விரைவில் குணமடைய உதவுகின்றது. மேலும் தமனிகள் சுவற்றில் இருந்து கொழுப்பை அகற்றி சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றது.

  உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை போக்கும்:

  மிளகு, சிறுநீர் மற்றும் வியர்வை மூலமாக உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும். மேலும் உடலில் இருக்கும் அதிக அளவிலான நீரையும் வெளியேற்ற உதவும். மேலும் சிறுநீர் மூலமாக தேவையற்ற கொழுப்பு உடலில் இருந்தால், அதனையும் வெளியேற்ற உதவும். இதனால் தமனிகளும் சுத்தமாகின்றது.

  pixabay

  டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும்:

  மிளகில் ஜின்க் மற்று மக்னீசியம் இருப்பதால், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் விந்துவின் அளவும் அதிகரிகின்றது.
  ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கும்: மிளகில் ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளதால், ப்ரீ ராடிகல்ஸ்களை எதிர்த்து போராடி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிக பினோலிக் மிளகில் இருப்பதால், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களையும் எதிர்த்து போராட உதவும்.

  இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்:

  மிளகு உடல் மற்றும் இரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறிப்பதால், இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றது. இதில் இருக்கும் பெப்பெரைன் இரத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் ரத்த கொதிப்பின் அளவையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதனால் இருதயத்தின் ஆரோக்கியம் சீராக இருகின்றது.

  அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிகின்றது:

  மிளகில் இருக்கும் பெப்பரைன் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் நினைவாற்றலும் அதிகமாகின்றது. மேலும் மூளை நல்ல செயல்திறனை பெற்று வயதாகாமல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகின்றது. இதன் விளைவாக அல்சைமர், பார்கின்சன் நோய் மற்றும் முதுமை அடைதல் போன்றவை தவிர்க்கப்படுகின்றது.

  கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்:

  மிளகு கண்களின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த பெரிதும் உதவுகின்றது. மிளகை நெய்யுடன் சேர்த்து உணவில் எடுத்து வந்தால், கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

  வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்:

  மிளகில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பக்டீரியா தாக்கத்தை தடுத்து பற்களில் வலி, வாயில் நோய் போன்றவை ஏற்படாமல் இருக்க உதவுகின்றது. பற்கள் மற்றும் வாய் சம்பந்தமான எந்த நோய்க்கும் மிளகு ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.

  ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கிறது:

  மிளகு ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகின்றது. இதனால் ஒரு சில குறிப்பிடத்தக்க தாது பொருட்கள் மற்றும் சத்துக்கள் உடலில் சீராக சார்ந்து நல்ல செயல்லாற்றல் பெற மிளகு உதவுகின்றது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிகின்றது. பீட்டா கரோடீன், வைட்டமின்கள், மற்றும் மேலும் பல சத்துக்கள் உடலில் நன்றாக சார்ந்து அவற்றின் நலன்களை உடல் பெற உதவுகின்றது.

  புற்றுநோயை தடுக்க உதவும்:

  மிளகில் இருக்கும் பெப்பரைன் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவுகின்றது. மேலும் இது செலெனியம், குர்குமின், பீட்ட கரோடீன் மற்றும் வைட்டமின் B போன்றவை குடல் பகுதிகளில் நன்கு சார உதவுகதால், குறிப்பாக குடல் மற்றும் வயிற்று பகுதிகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.

  இரத்த கொதிப்பை குறைக்கும்:

  மிளகில் இருக்கும் பெப்பரைன் இரத்த கொதிப்பை சீரான அளவு வைத்திருக்க உதவும். மேலும் பெப்பரைன் மஞ்சளில் இருக்கும் குர்குமின் போன்ற பொருட்களை நன்கு உடலுக்குத் தேவைப்படும் அளவு எடுத்துக் கொள்ளும் பண்பை கொண்டுள்ளதால், மேலும் நல்ல பலங்கள உடல் பெற உதவுகின்றது.

  சளி இருமலை போக்கும்:

  5௦௦௦ ஆண்டுகளுக்கும் முன்னதாக இருந்து மிளகு பல உடல் நல பிரச்சனைகளை போக்க உதவுகின்றது,. இதில் குறிப்பாக சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைக்கு உடனடி தீர்வு பெற உதவுகின்றது. மிளகுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளும் போது இருமல் மற்றும் சளிக்கு உடனடி தீர்வு கிடைகின்றது.

  புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட உதவுகின்றது:

  மிளகின் புகையை முகரும் போது, அது புகையிலை / புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபடும் உணர்வை உண்டாக்குகின்றது என்று கண்டறியப்படுகின்றது. இதனால் மிளகின் புகையை முகர்வது நல்லப்பலனைத் தருகின்றது என்று நம்பப்படுகின்றது.

  pixabay

  நீரழிவு நோயை போக்க உதவுகின்றது:

  மிளகு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. அவை ஹைப்பர் கிளைசீமியாவைக் கட்டுப்படுத்துகின்றன. இதனால் நீரழிவு நோய்க்கு ஒரு நல்ல மருந்தாக மிளகு செயல்படுகின்றது. மேலும் மிளகு குளுக்கோஸ் உறிஞ்சுதலை தாமதப்படுத்த உதவுகின்றது. இதனால் நீரழிவு நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

  வலி நிவாரணி:

  மிளகில் இருக்கும் பெப்பெரைன் ஒரு நல்ல வலி நிவாரணியாக செயல்படுகின்றது. இதனால் உடலில் ஏற்படும் வலியை விரைவாக குறைத்து ஆரோக்கியத்தை உண்டாக்க உதவுகின்றது.

  பசியை குறைக்க உதவுகின்றது:

  மிளகு கலந்த பானங்களை எடுத்துக் கொண்டால், பசியின்மை உண்டாவதாக மருத்துவ ஆய்வு கூறுகின்றது. இதனால் பசியை குறைத்து, ஆரோக்கியத்தோடும் இருந்து, உடல் எடையை குறைக்கலாம்.

  இரத்த சோகையை போக்க உதவுகின்றது:

  மிளகில் இருக்கும் சத்துக்கள், குறிப்பாக மிளகை நெய்யுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போது இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் குறைகின்றன. இதனால் ஆரோக்கியம் அதிகரிகின்றது.

  தாது சத்துகள் நிறைந்துள்ளது:

  தியாமின், பிரிடாக்சின், போஃப்ளாவினோடு,  ஃபோலிக் அமிலம், கோலைன், காப்பர், இரும்பு, கால்சியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாக போன்ற சத்துக்கள் இதில் நிறைந்திருப்பதால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் எளிதாக கிடைத்து ஆரோக்கியம் அதிகரிகின்றது.

  பெப்டிக் அல்சரை போக்க உதவுகின்றது:

  மிளகில் நிறைந்திருக்கும் சத்துக்கள், பெப்டிக் அல்சர் உண்டாகும் வாய்ப்புகளை குறைத்து, நல்ல ஆரோக்கியத்தை உண்டாக்குகின்றது.

  கட்டி எதிர்ப்பு பண்புகள்:

  மிளகு உடலில் கட்டி ஏற்படாமல் அல்லது கட்டி ஏற்பட்டிருந்தால் அதனை போக்கவும் உதவுகின்றது. இது ஒரு நல்ல வலி நிவாரணியாக செயல்படுவது இதன் கூடுதல் பண்பாகும்.

  மிளகு மற்றும் சரும ஆரோக்கியம்(Black pepper and skin health)

  உடல் நலத்திற்கு மட்டுமல்லாது, மிளகு சரும ஆரோகியதிருகும் பெரிதும் உதவுகின்றது. சரும ஆரோக்கியத்திற்கு எப்படி மிளகு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்:

  • ப்ரீ ராடிகல்ஸ்களை எதிர்த்து போராடுவதால், சருமத்தில் சுருக்கம், வயதான தோற்றம் மற்றும் மெல்லிய கோடுகள் தோன்றுவதை போக்க உதவுகின்றது
  • இயற்கை எக்ஸ்ஃபோலியண்ட்டாக மிளகு செயல்படுகின்றது. இது சருமத்தில் இருக்கும் இறந்த அணுக்களை அகற்ற உதவும்
  • இயற்க்கை நிறமிகளை சருமம் இழக்கும் போது மிளகு அவற்றை தக்க வைத்து, சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவுகின்றது. ரசாயனம் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் இந்த பிரச்சனையை குணப்படுத்த இது ஒரு நல்ல தீர்வாக செயல்படுகின்றது
  • மிளகை பொடி செய்து திருடன் கலந்து சருமத்தில் தேய்த்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் இருக்கும் இறந்த அணுக்கள் மறைவதோடு, நச்சு மற்றும் அழுக்கும் அகன்று நல்ல மிருதுவான சருமம் கிடைக்கும்
  • அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப் பருக்களை போக்க உதவும்
  pixabay

  தலைமுடி ஆரோக்கியத்திற்கு மிளகு(Black pepper and Hair Growth)

  சரும ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாது, தலைமுடி ஆரோக்கியத்திற்கும் மிளகு பெரிதும் உதவுகின்றது. அதில் சில

  • மிளகு பலவகை தலைமுடி பிரச்சனைகளை போக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும்
  • இதில் அதிக அளவு ஆக்சிஜனேற்றம் இருப்பதால், தலைமுடி வேர் பகுதியை சுத்தம் செய்து, வளர்ச்சியை அதிகப்படுத்த உதவும்
  • வேரை பலப்படுத்தி, தலைமுடிக்கு ஊட்டச்சத்தை தந்து, நல்ல பலபலப்பை பெற உதவும்
  • தலையில் பொடுகு உண்டாகாமல் தடுக்க உதவும். மிளகுப் பொடியுடன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி வந்தால், நாளடைவில் பொடுகுத் தொல்லை குறையும்
  • சிறிது மிளகுப் பொடியுடன் எழுமிச்சைபழ சாறு சேர்த்து, நன்கு கலந்து தலைமுடியின் வேர் பகுதியில் தேய்த்து வந்தால், தலைமுடி நல்ல போஷாக்கைப் பெரும்
  • இதுபோன்று சிறிது மிளகுப் பொடியுடன் தேன் கலந்து தலைமுடி வேர் பகுதியில் தேய்த்து குளித்து வந்தால், வழுக்கை ஏற்படாமல் தவிர்க்கலாம்

  சில மிளகு சமையல் குறிப்புகள்(Black Pepper Recipes)

  நீங்கள் எளிதாக வீட்டில் செய்து பார்க்க சில, மிளகு சமையல் குறிப்புகள்: 

  1. மிளகு தேநீர்

  செய்முறை

  • அரை தேக்கரண்டி மிளகை எடுத்து, பொடி செய்துக் கொள்ளவும்
  • ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீருடன் நுணுக்கிய மிளகை சேர்த்து கொதிக்க விடவும்
  • இதனுடன் சிறிது சீரகம் மற்றும் மஞ்சள்த்தூளை சேர்த்துக் கொள்ளலாம்
  • நன்கு கொதிக்க விட்டு இறக்கி விடவும்
  • தேவைப்பட்டால், இதனுடன் நாடு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

  2. மிளகு சாதம்

   செய்முறை

  • தேவையான சாதத்தை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
  • தேவைப்படும் அளவு மிளகை நன்கு பொடி செய்து கொள்ளவும்
  • சூடாக இருக்கும் சாதத்தோடு நுணுக்கிய மிளகுப் பொடி, மற்றும் சிறிது சீரகத்தூள் சேர்த்து கலக்கவும்
  • இதனுடன் தேவைப்படும் அளவு நெய் சேர்த்துக் கிளறவும்
  • இது ஒரு எளிய முறையாகும்
  • மாறாக நீங்கள் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிள்ளை சேர்த்து தாளித்தும் செய்யலாம் 

  3. மிளகு குழம்பு

  செய்முறை

  • தேவையான புளியை கரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • தேவையான அளவு சின்ன வெங்காயத்தை உரித்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பின் அதில் தனியா – 2 தேக்கரண்டி , மிளகு – 2 தேக்கரண்டி, உளுந்து – 1 தேக்கரண்டி , பச்சை அரிசி -1 தேக்கரண்டி மற்றும் கடலை பருப்பு – 1 தேக்கரண்டி அளவு வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • பின் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சீரகம், கடுகு, சோம்பு மற்றும் வெந்தயம் சேர்த்து வறுக்கவும்
  • பின் 5 காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிள்ளை சேர்த்து பொரிக்க விடவும்
  • இதனுடன் சின்னவெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  • இப்போது அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து வதக்கவும்
  • பின் கரைத்து வைத்திருக்கும் புளியை சேர்த்து, தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, சில நிமிடங்கள் கொதிக்க விடவும்
  • இப்போது சூடான மிளகு குழம்பு தயார்
  pixabay

  மிளகிள் செய்து கொள்ள வீட்டு வைத்தியம்(Black pepper and home remedies)

  மிளகை பயன்படுத்தி நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ள சில வீட்டு வைத்தியங்கள்

  மலேரியா:

  இரண்டு பூண்டு பற்கள் மற்றும் சிறிது மிளகுத் தூள் எடுத்து தண்ணீரில் காந்து நன்கு கொதிக்க விட்டு, இதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால், 3 நாட்களில் மலேரியா குணமாகும்.

  கொழுப்பை குறைக்க:

  கால் தேக்கரண்டி மிளகுப் பொடியை ஒரு கப் மூரில் கலந்து, இதனுடன் மெல்லியதாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும், தேவைக்கேற்ப உப்பையும் கலந்து தினமும் அருந்த வேண்டும்.

  உடல் எடை அதிகரிக்க:

  தினமும் 8 -10 மிளகை வெற்றிலையுடன் சேர்த்து மென்று விழுங்க வேண்டும். இப்படி செய்து வந்தால், உடல் எடை அதிகரிக்கும்.

  உடல் எடையை குறைக்க:

  ஒரு கப் தண்ணீரில் கால் தேக்கரண்டி மிளகுத் தூள், இரண்டு தேக்கரண்டி எழுமிச்சைபழ சாறு மற்றும் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால், உடல் எடை குறையும்.

  பசியை அதிகரிக்க:

  5 – 6 மிளகை எடுத்து நன்கு அரைத்து அதனுடன் தேன் கலந்து ஒரு பசை போல செய்து தினமும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் பசி அதிகரிக்கும்.

  இருமல்:

  சிறிது மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து சாப்பிட்டு, சிறிது சுடு தண்ணீர் குடித்தால், இருமல் குறையும்.

  சளி:

  சிறிது மிளகுத் தூள், மற்றும் நெய்யுடன் கலந்து சாபிட்டால் சளி, இருமல் குறையும். மேலும், தினமும் சிறிது மிளகு, லவங்கம், துளசி இலை மற்றும் இஞ்சி, ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் அருந்தி வந்தால், சளி மற்றும் இருமல் குறையும்.

  மூக்கடைப்பு / தும்மல்:

  மிளகு தூள், ஏலக்காய் தூள், லவங்கம் மற்றும் பட்டை ஆகியவற்றை சம அளவு பொடி செய்து எடுத்து, முகர்ந்து வந்தால், தும்மல் மற்றும் சளி, மற்றும் மூக்கடைப்பு குணமாகும்.

  ஆஸ்த்மா:

  சிறிது மிளகுத் தூள் எடுத்து, அதனுடன் இரண்டு லவங்கம் சேர்த்து, 5 துளசி இலைகள் எடுத்துக் கொண்டு, அனைத்தையும் தண்ணீரில் போட்டு, 15 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்னர் வாடி கட்டி, தேன் கலந்து அருந்த வேண்டும். இப்படி செய்தால், ஆஸ்த்மா அறிகுறி குறையும்.

  தொண்டை கரகரப்பு:

  சிறிது பனங்கற்கண்டு மற்றும் மிளகுத் தூள், ஆகிய இரண்டையும் கலந்து மென்று விழுங்க வேண்டும். இப்படி செய்தால், தொண்டையில் இருக்கும் கரகரப்பு நீங்கும். வறட்டு இருமலும் குறையும்.

  ஈர்களை குணப்படுத்த:

  சிறிது நன்கு பொடி செய்த மிளகை எடுத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ஈர்களை நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால், ஈர்கள் பலம் பெற்றும் ஆரோக்கியமாகும்.

  தசை வலி:

  சிறிது மிளகுப் பொடி எடுத்து நல்லெண்ணையில் கலந்து, வலிக்கும் இடத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் இது ஒரு நல்ல வலி நிவாரணியாக செயல் பட்டு வலியை குறைக்கும்.

  சோர்வை போக்க:

  சிறிது நன்கு பொடி செய்த மிளகை எடுத்து தேனில் கலந்து தினமும் இரண்டு வேலை எடுத்துக் கொண்டால், சோகை மற்றும் சோர்வு நீங்கும்.

  பல் வலி:

  ஒரு தேக்கரண்டி மிளகை சிறிது தண்ணீரில் நன்கு கொத்திக்க விட்டு, அதனை சிறிது நேரம் குளிர விட்டு, அல்லது மிதமான சூடு வந்தவுடன், இந்த மிளகு நீரால் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.

  சர்ம பிரச்சனைகளை போக்க:

  சிறிது மிள்கப் பொடியை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது நெய் அல்லது வெண்ணை சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் பிரச்சனையை இருக்கும் இடத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் சரும பிரச்சனைகள் அகலும்.

  கீல்வாதம்:

  3 தேக்கரண்டி மிளகு, 6 தேக்கரண்டி சுக்கு மற்றும் சீரகம் 3 தேக்கரண்டி எடுத்து நன்கு பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியில் அரை தேக்கரண்டியை தினமும் தண்ணீரில் கலந்து மூன்று வேலை அருந்தி வந்தால், நல்ல பலனைத் தரும்.

  அஜீரணம்:

  சிறிது மிளகுத் தூள், கல் உப்பு மற்றும் இஞ்சி தேவையான அளவு ஆகியவற்றை நன்கு கலந்து அரைத்துக் கோல வேண்டும். இதை மூரில் கலந்து அருந்தி வந்தால் அஜீரண பிரச்சனை குணமாகும்.

  மிளகின் பின்விளைவுகள் (Side effects of Black pepper)

  மிளகை சீரான அளவு பயன்படுத்தும் போது நல்ல பலனைத் தரும். ஆனால், அதிக அளவு பயன்படுத்தும் போது சில பின்விளைவுகளை இது உண்டாக்குகின்றது. அவை:

  • கண்கள் சிவந்தல் மற்றும் கண்களில் எரிச்சல்
  • கர்ப்பிணி பெண்களுக்கு சில பிரச்சனைகளை கர்ப்ப காலத்தில் உண்டாக்கக் கூடும்
  • வயிறு மற்றும் தொண்டைப் பகுதியில் எரிச்சலை உண்டாக்கக் கூடும்
  pixabay

  கேள்வி பதில்கள்(FAQ)

  1. சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிளகு நல்லதா?

  சிறுநீரக கற்களை ஏற்படுத்தக்கூடிய ஆக்சலேட்டுகள் மிளகில் இருப்பதால், பலவீனமாக இருப்பவர்கள் முடிந்த வரை மிளகை அதிக அளவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. குறிப்பாக சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் மிளகை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

  2. ஒரு நாளைக்கு எவ்வளவு மிளகு எடுத்துக் கொள்ளலாம்?

  அப்படி எந்த அளவும் இல்லை. எனினும் இயல்பாக தினமும் சமையலில் நீங்கள் சேர்த்துக் கொள்ளும் அளவை பின்பற்றலாம்

  3. தினமும் காலையில் மிளகு எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

  தினமும் காலையில் மிளகு தூள், மஞ்சள் தூள் மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து எடுத்துக் கொள்வதால், உடல் எடை குறைவதோடு, நோய் எதிருப்பு சக்தியும் அதிகரிக்கும்.

  4. மிளகு உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

  நிச்சயம் நல்லது. மிளகை சரியான முறையில் உணவில் சேர்த்து எடுத்துக் கொண்டால், இதில் இருக்கும் ஆக்சிஜனேற்றம் மற்றும் நோய் எதிருப்பு பண்புகள் நல்ல பலனை உங்கள் உடலுக்குத் தரும். மேலும் ஜீரணத்தை சீர் செய்து உடல் ஆரோகியத்தையும் அதிகப்படுத்தும்.

  5. மிளகு உடலுக்கு தீங்கு விளைவிக்குமா?

  மிளகை சமையலில் தினமும் சிறிது அளவு சேர்த்து பயன்படுத்தி வந்தால் எந்த தீங்கும் ஏற்படாது,. எனினும், இதனை அதிக அளவு பயன்படுத்தும் போது, சில பிரச்சனைகளை உடலுக்கு ஏற்படுத்தக் கூடும். அதனால், சரியான அளவு பயன்படுத்துவது நல்லது.

  6. ஏன் மஞ்சள் மற்றும் மிளகு ஒரு சக்திவாய்ந்த கலவையாக உள்ளது?

  மிளகு மற்றும் மஞ்சளில் பெப்பரைன் மற்றும் குர்குமின் இருகின்றது. இவை 2௦௦௦% சத்துக்கள் உடலில் சார உதவுகின்றது. இதனால் நல்ல ஜீரணம், உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு என்று பல நன்மைகள் கிடைகின்றன.

  7. நீரழிவு நோயை குணப்படுத்த மிளகு உதவுகின்றதா?

  மிளகு எண்ணெய் இயற்கையாகவே இரண்டு நொதிகளைத் தடுக்கிறது, அவை மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைக்கின்றன. இதன் விளைவாக இரத்ததில்  குளுக்கோஸைக் கட்டுப்படுத்தி, குளுக்கோஸ் உறிஞ்சுதலை தாமதப்படுத்துகின்றது.

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!