வனிதா குடும்பத்தினர் வருகையால் ஹவுஸ் மேட்ஸ் கொண்டாட்டம் : சேரனுக்கு அறிவுரை வழங்கிய மகள்!

வனிதா குடும்பத்தினர் வருகையால் ஹவுஸ் மேட்ஸ் கொண்டாட்டம் : சேரனுக்கு அறிவுரை வழங்கிய மகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதில் முக்கியமாக தர்ஷன்,  சேரன் மற்றும் முகன் இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. 

எல்லாத்தையும் இங்கயே தூக்கிப் போட்டுட்டு வா.. 10 வருட பாசத்தை ஒத்தி வைத்த லாஸ்லியா அப்பா!

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி வழக்கத்தைவிட கலகலப்பாகவும், உணற்சிபூர்வமாகவும் சென்று கொண்டிருக்கிறது. முதல் முறையாக ஃப்ரீஸ் டாஸ்க் முகென் தாயார் மற்றும் அவரது சகோதரி பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். இதனை தொடந்து லாஸ்லியாவின் குடும்பத்தினர் வந்தனர். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி உணர்ச்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

twitter

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் யார் வருவார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில் இன்றைய மூன்றவது புரோமோவில் சேரனின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். அப்போது சேரனிடம் அவரது தனியாக பேசி கொண்டிருக்கிறார். லாஸ்லியா மீது அதிகம் கேர் எடுத்து கொள்ள வேண்டாம் என சேரனுக்கு அறிவுரை வழங்கும் அவர், மகள் என்று கூறுவதால் அவர் உங்கள் மகளாகிவிடமாட்டார் என லாஸ்லியாவை குறிப்பிட்டு பேசுகிறார். அதற்கு சேரன் என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்க கூடாது என்று கூற, உங்களை அவர் விட்டு கொடுத்தார் அல்லவா?

உங்களை விட்டு சென்று லாஸ்லியா மகிழ்ச்சியாக இருந்தார், அது தவறு என்று சேரன் மகள் தெரிவிக்கிறார். மேலும் நீங்க தான் லாஸ்லியாவை நம்பி கொண்டிருக்கிறீர்கள். இனிமேல் லாஸ்லியா கூட பேசினால் நான் டென்ஷன் ஆகிவிடுவேன் என கோவமாக கூறுகிறார். மற்றொரு புறம் லாஸ்லியா, தர்ஷன் உள்ளிட்டோர் சேரன் குடுப்பதினருடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியவை மகளாக பாவித்தே சேரன் பாசமாக இருந்து வருகிறார்.லாஸ்லியா எந்த வகையிலும் தப்பான வழியில் சென்று விட கூடாது என சேரன் எப்போதும் கவனமாக இருப்பார். ஆனால் இப்போது அவரது சொந்த மகளே லாஸ்லியாவிடம் பேச கூடாது என கூறுகிறார். தனது மகளின் பாசத்திற்கு கட்டுப்பட்டு லாஸ்லியாவிடம், சேரன் பேசாமல் இருப்பாரா அல்லது லாஸ்லியாவும் தனது மகளே என கடைசி வரை நினைப்பாரா என பொறுத்திருந்து பார்போம். 

இரண்டாவது புரோமோவில் "வாயாடி பெத்த புள்ள" என்ற பாடால் ஒலிக்க வனிதாவின் குழந்தைகள் தான் வர போகிறார்கள் என வனிதா உள்ளிட்ட போட்டியார்களுக்கு தெரிந்துவிட்டது. வாயாடி பெத்த புள்ள என கூறி வனிதா சிறிது கொண்டிருக்க, அவரது மகள்கள் இருவரும் கெத்தாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைகின்றனர். 

அவர்களை பார்த்த வனிதா இருவரையும் மகிச்சியாக கட்டியணைத்து கொள்கிறார். பின்னர் தனது இரண்டாவது மகளை அரிசி மூட்டை என்று கிண்டல் செய்தவாறு இருவருக்கும் சாப்பிடாது ஊட்டி விடுகிறார். இதனை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் வனிதா குழந்தைகளுடன் விளையாடுகின்றனர். இதனால் இன்றைய நிகழ்ச்சி  கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் புரோமோவில், "காலையில் தினமும் கண்விழித்தால்" பாடல் ஒலிக்க தர்ஷனின் (tharshan) அம்மா உள்ளே வருகிறார். அவரை கண்டதும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கண்கலங்க அணைத்து கொண்டார் தர்ஷன். பின்னர் அவரது தங்கையையும் வரவேற்கின்றார். 

இதையடுத்து தர்ஷன் அம்மாவின் பிறந்தநாளை ஹவுஸ்மேட்ஸ் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். சர்ப்ரைஸாக பிறந்த நாள் கொடாடப்படுவதால் தர்ஷன் தயார் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். இதனை கண்ட மற்ற ஹவுஸ்மெட்ஸ் அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர். இவ்வாறாக இந்த புரொமோ  வீடியோ முடிகிறது. இந்த புரொமோ எல்லோரின் முகத்திலும் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அறிமுகமில்லாத தர்ஷன் (tharshan) சாஃப்ட் வேர் துறையில் இருந்தவர் மாடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர். பிக் பாஸ் போட்டியாளர்களில் வெளிச்ச முகம் ஏதுமற்ற போட்டியாளர் என்றால் அவர் தர்ஷன் தான். ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர். தற்போது பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து உள் நுழைந்திருக்கிறார்.

twitter

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய தர்ஷன், சினிமா துறைக்கு நான் வந்ததை யாரும் விரும்பவில்லை. செய்துகொண்டிந்த வேலையை விட்டு விட்டு சினிமாவிற்கு சென்று என்ன ஆகப்போகிறது என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் என் அம்மா, அப்பா எனக்கு ஆதரவாக இருந்தனர். இப்பொது வரை என் செலவிற்கு இலங்கையில் இருந்து என் அப்பத்தான் பணம் அனுப்பி விடுவார்.

முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுஜா வருணி : ரசிகர்கள் வாழ்த்து!

ஓய்வு எடுக்க வேண்டிய வயதில் அவர் உழைத்து கொண்டிருக்கிறார். அவர்களுக்காக நான் சாதிக்க வேண்டும். நான் இந்த நிகழ்ச்சியில் இருப்பதை என் பெற்றோர் பார்க்க வேண்டும் என்பது என ஆசை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது வேண்டுகோளை பிக் பாஸ் நிறைவேற்றுள்ளார்.

twittter

பிக் பாஸ் வீட்டில் முக்கியமான போட்டியாளராக தர்ஷன் கருதப்படுகிறார் (tharshan) . பெரும்பாலானோர் தர்ஷன் தான் முதலில் வெற்றிபெற்று வருவார் என கூறி வருகின்றனர். அவருக்கு ரசிகர் பட்டாளமும் அதிகமாக உள்ளது, குறிப்பாக பெண்கள் அதிகமானோர் தர்ஷனுக்கு ரசிகர்களாக உள்ளனர். 

பிக் பாஸ் ஃப்ரீஸ் டாஸ்கில் முகென் அம்மா, சகோதரி வருகை : மகிழ்ச்சியில் திளைத்த முகென்!

ஒவ்வொரு வார இறுதியிலும் அவர் பேசும் போது அரங்கம் அதிரும். இதனிடையே தர்ஷன் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. புகைபடத்தில் அவர் முரட்டுத்தனமாக உடம்பை வளைத்து செல்ஃபி புகைப்படம் எடுத்து தற்போது ரசிகர்கள் அதனை கமெண்ட் செய்து வருகின்றனர்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.