முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுஜா வருணி : ரசிகர்கள் வாழ்த்து!

முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சுஜா வருணி : ரசிகர்கள் வாழ்த்து!

14 வயதில் சினிமாத்துறையில் அடியெடுத்து வைய்த்த  சுஜா வருணி (suja), இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம் திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்தார். 

இதில் கிடாரி, பென்சில், மிளகா போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கன. சத்ரு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இடையில் பட வாய்ப்புகள் இல்லாததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார் சுஜா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

twitter

இதனை தொடர்ந்து  சுஜா வருணியும்(suja), நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரும் 10 ஆண்டுகளாக  காதலித்து வந்துள்ளனர். சிவாஜியின் பேரனான சிவகுமார் தமிழில் 2008ம் ஆண்டு வெளியான இயக்குனர் வெங்கடேஷ் இயக்கிய “சிங்கக்குட்டி” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 

எல்லாத்தையும் இங்கயே தூக்கிப் போட்டுட்டு வா.. 10 வருட பாசத்தை ஒத்தி வைத்த லாஸ்லியா அப்பா!

அந்த படத்திற்கு பின்னர் “புதுமுகங்கள் தேவை”, “இதுவும் கடந்து போகும்” போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு இரு விட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு சுஜாவுக்கும், அவரின் கணவருக்கும் தனது வீட்டில் அமர்க்களமான விருந்து வைத்து பரிசுகள் கொடுத்தார் கமலஹாஸன்.

twitter

பின்னர் சுஜா கர்ப்பமாக இருந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கோலாகலமாக சீமந்தம் நடைபெற்றது. அதன் புகைப்படங்களை சுஜா தனது சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்திருந்தார். அதில் இந்த உலகின் சிறந்த மனிதரான சிவகுமாருக்கு நன்றி. என் வாழ்கையில் உண்மையான மகிழ்ச்சியை காட்டியவர் சிவகுமார். 

நான் ஒரு உண்மையான பெண் என்பதை உணர வைத்தவர். ஐ லவ் யூ அத்தான். நீங்கள் கொடுக்கும் பரிசுகள் எப்பொழுதுமே ஸ்பெஷலானவை என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சமீபத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை சுஜாதாவின் கணவர் மிகவும் உற்சாகத்தோடு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

என்னுடைய சிம்ஹா பிறந்துவிட்டான் என்று அறிவித்திருந்தார். மேலும் இந்த நாளிலே என்னுடைய 'பிங்கர் டிப்' என்ற வெப் சீரிசும் தொடங்குகிறது." இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது என்றும் பதிவு செய்து இருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் சுஜா ட்விட்டர் பக்கத்தில் கணவர் சிவக்குமார் மற்றும் தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

twitter

அதில் எனக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் கனிமொழிக்கு நன்றி. அவரால் பிரசவம் பார்க்கப்பட்டது உண்மையிலேயே எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். இப்படி ஒரு மருத்துவரை எனது வாழ்நாளில் தான் சந்தித்ததில்லை. ஒரு டாக்டராக மட்டுமல்லாமல், அவர் ஒரு தாயாக மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். என்னுடைய குழந்தை அவரது கைகளால் உலகத்தைப் பார்க்க அழைத்து வரப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பாக்கியசாலி தான் என்று குறிப்பிட்டு அவருக்கு மனதார நன்றியை தெரிவித்திருந்தார்.

தமிழ்நாட்டில் பிறந்த மதுமிதா தமிழக பிரச்சனைகள் குறித்து பேச உரிமை இல்லையா? ஸ்ருதி சித்ரா!

இந்த நிலையில் சுஜா (suja) மற்றும் சிவகுமார் தனது குழந்தையுடன் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை முதன் முறையாக வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. முன்னதை செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய சிவகுமார், சுஜாவின் பிரசவத்தின் போது என்னைப் பார்த்து "லவ் யூ"னு சொன்னாங்க. 

twitter

நான் தாலி கட்டியதும் இதே வார்த்தையைத்தான் சொன்னாங்க" என்று மகிழ்ச்சியில் கண் கலங்கினார். குழந்தை என்னை மாதிரி இருக்கதா நிறைய பேர் சொன்னாங்க. சுஜாவுடைய கணவராவும் ஒரு அப்பாவாவும் எனக்கு ரொம்ப சந்தோஷமாவும், எமோஷனலாவும் இருக்கு என கூறினார். மேலும் ஒரு பெண்ணால் இவ்வளவு வலியைத் தாங்கிக்க முடியும்ங்கிறதை பிரசவத்தின் போது தான் பார்த்தேன் என்று எமோஷ்னல் ஆனார்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறப்பு மிக்க உணவுகள்... இனி நாம் வீட்டிலேயே சமைக்கலாம்!

ஏற்கெனவே இரண்டு, மூன்று பெயர்களை முடிவு செய்து வெச்சிருக்கேன். இன்னும் சில நாள்களில் அந்தப் பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கணும் என கூறி இருந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகையான நேற்று சுஜா-சிவகுமார் தம்பதியரின் குழந்தைக்கு அத்வைத் பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.