கூந்தலுக்கு உணர்ச்சி இல்லை என்பதால் அதை அழுத்தியோ அல்லது கடினமாகவோ கையாளக்கூடாது. சிலர் கொதிக்கும் நீரை தலையில் ஊற்றுவார்கள்.அது சரியான (பராமரிப்பு) முறை அல்ல . முடியை நம் சருமம் போல நினைத்து பராமரிக்க வேண்டும். ஆமாம் அவ்வளவு மென்மையானது தான் நம் தலைமுடி.தலைமுடிக்கு பிரபலாமான கேரளா பெண்களே நம் சாய் பல்லவியின் ஃபேன்ஸ் ஆகிவிட்டார்கள்! சாய் பல்லவி அப்படி என்ன வழிகளில் முடியைப் பராமரிக்கிறார்ன்னு பார்க்கலாமா?
சாய் பல்லவிக்கு (sai pallavi) தோள் சம்மந்தமான பிரச்சனை இருப்பதால் இரசாயனம்(கெமிக்கல்) உள்ள எந்த பொருளும் கடையில் வாங்கி உபயோகிப்பது இல்லை. அவருடைய முடி இயற்கையாகவே சுருண்டு இருக்கிறது. அது போல ஒவ்வொருவருக்கும் இயற்கையாக இருக்கும் கூந்தல் தன்மையை அழகாக பராமரித்தாலே (hair care) நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்.
1. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எண்ணெய் மசாஜ் செய்யுங்கள்
என்ன எண்ணெய் என்று கேட்கிறீர்களா? தேங்காய் எண்ணெய் போதுமுங்க. தலையில் சொட்டை இல்லாது எல்லாப் பக்கமும் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து அப்படியே ஒரு நாள் முழுவதும் வைத்து, அடுத்த நாள் குளியுங்கள். இதைவிட உங்கள் முடிக்குப் பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. ஒரு நாள் முழுவதும் வைத்திருக்க நேரம் இல்லை என்றால் உங்கள் அலுவல்கள் முடிந்ததும் இரவு படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை தேய்த்து கொண்டு உறங்குங்கள். காலையில் குளித்துவிட்டு பிரெஷ்ஷாக கிளம்புங்கள்.
புருவம் சரியாக வளரவில்லை என்றால் உங்க வீட்டில் என்ன செய்வாங்க உங்க பாட்டி? விளக்கெண்ணெய் தடுவுவார்கள். கடவுளுக்கு ஏற்றும் தீப விளக்கு எண்ணெய் அல்ல. சமையலுக்கு பயன்படுத்தும் விளக்கெண்ணெய். இது மிகவும் குளிர்ச்சியான எண்ணெய். அதனால் தேங்காய் எண்ணெயோடு கலந்து மசாஜ் செய்து குளித்து வாருங்கள். உங்கள் கூந்தல் கருமையாகவும், அடர்த்தியாகவும், உறுதியாகவும் வளரும்.
2. முட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி ஹேர் பேக் செய்யுங்கள்
Pixabay
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் முடியின் அளவைப்பொறுத்து சிறிது தேங்காய் எண்ணெய்யை கலக்குங்கள். நன்றாக நுரை வரும். அதை உங்கள் தலையில் தேய்த்துக்கொள்ளுங்கள். உங்கள் விரல்களைக்கொண்டு முடியின் வேரில் இருந்து நுனிவரை நன்றாக தேய்த்து விடுங்கள். 20 நிமிடம் காயவிட்டு பின் நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் ஷாம்பு போட்டு குளித்துக்கொள்ளுங்கள். உங்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைச்சாச்சு!
3. முடி இயற்கையில் வறண்டு இருக்கிறதா? புத்தம்புதிய கற்றாழை(அலோவேரா) ஜெல்லை தடவி கொள்ளுங்கள்
- கற்றாழையை தோள் நீக்கி நன்றாக கழுவிவிட்டு, அந்த ஜெல்லை தலை முடியில் தேய்த்துக்கொள்ளுங்கள்.
- அதை அப்படியே விடக்கூடாது. ஒரு மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு கொண்டு தலையை கழுவுங்கள்.
- உங்களுக்கு மென்மையான, பளிச்சிடும், உறுதியான கூந்தல் வந்து விடும்.
- இது போல உங்களுக்கு எண்ணெய்ப் பசை உள்ள சருமம் என்றால், வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, நன்றாக அரைத்து அதைக்கொண்டு தலையை அலசுங்களேன், உங்கள் தலையில் உள்ள எண்ணெய் பசை காணாமல் போய்விடும்.
4. மாதத்தில் இரண்டு முறை அழுத்தமான தேங்காய்ப்பாலை தலையில் தேய்த்து மசாஜ் செய்து கொள்ளுங்கள்
Pixabay
உங்களுக்கு முடி உதிர்வது அதிகமாக இருக்கிறதா? கவலையை விடுங்கள். சாய் பல்லவியைப் போல தேங்காய்ப்பால் மசாஜ் செய்து சரி செய்து விடலாம்.
நம்ம ஊரில் தேங்காய் எளிதில் கிடைக்குமே. ஒரு அரை மூடி தேங்காய் துருவலை சிறிது தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளுங்கள். அதை ஒரு வடிகட்டி மூலம் வடித்துக்கொள்ளுங்கள். அந்த தேங்காய்ப் பாலை உங்கள் தலையில் படுமாறு நன்றாக தேய்த்து விடுங்கள். ஒரு அரை மணி நேரம் கழித்து லேசான ஷாம்பு போட்டு குளியுங்கள். உங்கள் கூந்தலுக்கு தனியாக கண்டிஷனர் தேவை இல்லை. முடி உதிர்வது குறையும். நாம் சமயலில் சில பதார்த்தங்களுக்கு(பிரியாணி, இடியப்பம்) தேங்காய்ப் பால் சேர்ப்பது வழக்கம். அப்போது கொஞ்சம் தேங்காய்ப்பாலை எடுத்து வைத்துக் கொண்டால் போதும் . கூந்தல் உதிர்வதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் நீளமாக வளரவும் தேங்காய்ப்பால் உதவும். இதை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்யலாம்.
5. கூந்தலுக்குக்கு ஏற்ற இயற்கையான ஒரு கண்டிஷனரை தடவுங்கள்
தயிர்- கண்டிஷனர் மட்டுமல்ல உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். சிலருக்கு உடல் சூட்டினால் முடி அதிகம் உதிரும். தயிர் பயன்படுத்தினால் முடி உதிர்வது குறையும். தயிரை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் அலசிப்பாருங்களேன், உங்கள் கூந்தலா என்று சந்தேகம் வரும்படி உங்கள் கூந்தல் மென்மையாக இருக்கும். முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளருவதற்கு தயிர் உதவுகிறது.
இதுவரை நாம் சாய் பல்லவியின் வழியில் என்ன என்ன இயற்கை வகைகளில் கூந்தலை பராமரிக்கலாம் என்று பார்த்தோம். இவை எல்லாம் உடலுக்கு வெளியில் தலையில் தடவுவது. அது மட்டும் போதாது.
6. நிறைய தண்ணீர் குடிப்பதும் ஆழ்ந்த உறக்கமும் அவசியம்
Pixabay
எல்லாவற்றையும் விட, போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அது உங்கள் உடலை நீரோட்டமாக வைத்திருக்கும். பிறகு உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுங்கள். நன்றாக உறங்குங்கள். இன்றைய அவசர வாழ்க்கையில் எதற்கும் நேரம் இல்லை என்று ஓடிக்கொண்டே இருக்காமல், ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’ என்ற பழமொழிக்கு இணங்க உங்கள் உடலை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள். அது சரியாக இருந்தால் மனமும் சரியாக இருக்கும். அதை தொடர்ந்து உங்களுக்கு எல்லாம் சரியாக அமையும்.
பட ஆதாரம் – Pexels, Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.