சுவையான மென்மையான மதுரை பன் பரோட்டா,செய்வது எப்படி?!

சுவையான மென்மையான மதுரை பன்  பரோட்டா,செய்வது எப்படி?!

பரோட்டா எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்றாலும், மதுரை புகழ் பன் பரோட்டாவை (madurai bun parotta) நீங்கள் சாப்பிட்டதுண்டா? இதற்கு நீங்கள் மதுரை செல்லவேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே இதை எளிதில் செய்யலாம் வாங்க. 

தேவையான பொருட்கள்

  • மைதா 2 கப்,
  • முட்டை - 1
  • பால் 1 டேபிள் ஸ்பூன்
  • சர்க்கரை 1 தேக்கரண்டி
  • எண்ணெய்
  • உப்பு தேவைக்கேற்ப

பன் வடிவத்தில் இருக்கும் இந்த பரோட்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம் (Bun Parotta Recipe)


1. முதலில் நீங்கள் மாவை கலந்து பிசைந்து கொள்ள வேண்டும். எனவே இதற்காக, 2 கப் மைதாவை 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரையுடன் கலக்கவும். 

மாற்றாக, நீங்கள் மைதாவைப் பயன்படுத்த விரும்பவில்லை என்றால் கோதுமை மாவைப் பயன்படுத்தலாம்.

2. இந்த கலவையில் 1 முட்டை சேர்த்து மாவை நன்கு பிசையவும்.

3. பின்னர் 2 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

4. இப்போது இந்த கலவையில் தண்ணீரை தேவைகேற்ப சேர்த்து, மாவை மென்மையாகும் வரை பிசைந்து கொள்ளுங்கள்.

டிப் - நீங்கள் இந்த பரோட்டா  மாவை மூன்று எளிய வழிகளில் மென்மையாக்கலாம் :

  • உங்கள் கைகளைப் பயன்படுத்தி சிறிய இடைவெளியில் மாவை கைகளால் பன்ச் குடுங்கள் 
  • மாவு  பந்தை தொடர்ந்து உங்கள் தவாவில் அடித்து  மென்மையாக்குங்கள்
  • அல்லது மாவு மென்மையாக்க ஒரு அம்மிக்கல் உரலை (சிறிய உரல் ) பயன்படுத்தி அதை மிதமாக குத்தவும்.  

5. இப்போது அதில் சிறிது எண்ணெய் சேர்த்து இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்.

6. அதன் பிறகு பிசைந்த மாவில் இருந்து ஒரு சிறிய பந்தை இழுத்து உருட்டவும். மாவிலிருந்து நடுத்தர அல்லது பெரிய அளவிலான பந்துகளை உருவாக்குவதைத் தொடருங்கள்.

7. பந்துகளுக்கு மேல் சிறிது எண்ணெய் தடவி மற்றொரு மணி நேரம் விட்டு விடுங்கள்.

8. இப்போது,  பரோட்டா மாவை உருட்டப் போகும் கல்லில் சிறிது எண்ணெயை தடவவும். 

9. மெல்லியதாக வரும் வரை (கீழிருக்கும் கல் தெரியும் அளவுக்கு) அதை உருட்டிக் கொண்டே இருங்கள்.

10. இப்போது, ​​உருட்டப்பட்ட மாவை இரண்டு முறை உள்நோக்கி மடியுங்கள். உங்கள் ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி, அதை சுற்றி மாவை உருட்டத் தொடங்குங்கள்.

 Also Read : ஜோவரின் ஊட்டச்சத்து மதிப்பு

Pinterest

11. பின்பு , ஒரு தவாவில் சிறிது எண்ணெய் தடவவும். மிதமான சூட்டில் , மாவை பொன்னிறமாக மாறும் வரை இருபுறமும் திருப்பி எடுக்கவும் 

12. இரு கைகளையும் பயன்படுத்தி பரோட்டாவை ( கை தட்டுவது போல் ) தட்டி  விடவும். இதனால் பரோட்டா நல்ல பஞ்சுபோன்றதாகவும் மென்மையாகவும் மாறும்.

13. சுவையான மட்டன் கிரேவியுடன் சூடாக பரிமாறவும்.

நேரம் இருந்தால், மதுரை/ தேனீ /கம்பம் சென்றால், ஜிகாத்தாண்டாவை போல இந்த பன் பரோட்டாவையும் ருசித்து மகிழுங்கள்!

Also Read About காதல் தமிழ் திரைப்படங்கள்

மேலும் படிக்க - உங்கள் லேட் நைட் பசியை போக்க சென்னையில் 6 சிறந்த உணவகங்கள்

அடுப்பில்லா உணவு, சில சுவையான சமையல் குறிப்புகள்!

ருசியான பிரியாணி சாப்பிட ஆசையா? உங்கள் பிரியாணி ஆசையை நிறைவேற்ற சென்னையில் 8 சிறந்த உணவகங்கள் !

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.