எப்படி கர்ப்பத்தை தவிர்ப்பது – சில எளிய குறிப்புகள்!

எப்படி கர்ப்பத்தை தவிர்ப்பது – சில எளிய குறிப்புகள்!

அனைத்து திருமணம் ஆன தம்பதியினரும், திருமணம் ஆன சில நாட்களிலேயே கருவுற விரும்புவதில்லை. சில மாதங்கள் அல்லது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருந்து, பின் குழந்தை பேரு பெற விரும்புகின்றார்கள். எனினும், அவர்கள் இளம் வயதினர்கள் என்பதாலும், ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் நிலையில் இருபதாலும், குழந்தை பெரும் வாய்புகள் அதிகமாக உள்ளது. இதனால், எளிதாகவும், விரைவாகவும் பெண்கள் கருவுற்று விடுகின்றனர்.

திருமணம் ஆன தம்பதியினர், கருவுறும் காலத்தை தள்ளிப் போட (avoid pregnancy) பல காரணங்கள் இருக்கலாம். எனினும், அதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகள் மிக முக்கியமானது. பாதுகாப்பான முறையிலும், உடலுக்கு தீங்கு விளைவிக்காத முறையிலும், எளிமையாகவும் கருவுறம் வாய்ப்பை தள்ளிப் போட முயற்சி செய்ய வேண்டும். இந்த வகையில், இங்கே உங்களுக்காக சில பாதுகாப்பான மற்றும் எளிய குறிப்புகள்.

Table of Contents

  கர்ப்பத்தை எப்படி தவிர்ப்பது(Ways to avoid pregnancy)

  ஒரு சிலர் கருவுருவாவதற்கு முன்னரே பாதுகாப்பு முறைகளை செய்து அதனை தடுத்து விடுகின்றனர். சிலர் கரு உண்டாகிய பின், அவசர அவசரமாக அதனை தவிர்க்க முயற்சிகளை செய்கின்றனர். கரு உண்டாகிய பின் அத்தகைய முயற்சிகள் எடுப்பது நல்லதல்ல. மாறாக, நீங்கள் முன்னதாகவே, கரு உண்டாகாமல் தடுக்க தேவையான முறைகளை செய்வதே சிறப்பு. உங்களுக்காக, இங்கே சில எளிய, ஆனால் பயனுள்ள குறிப்புகள்:

  1. கருத்தடை செய்து கொள்ள இருக்கும் வாய்புகள்

  நீங்கள் பல கருத்தடை முறைகளை பின்பற்றலாம், அதில் பல உள்ளன. ஹோர்மோன் மற்றும் ஹோர்மோன் இல்லாத முறை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹோர்மோன் முறையில், நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ள மாத்திரைகள், அதாவது அதில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் போன்ற ஹோர்மோன் இருக்கும், தினசரி மாத்திரைகள் – இதில் புரோஜெஸ்டின் மட்டும் இருக்கும், தோல் திட்டுகள் – இதில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டின் ஆகிய இரண்டும் இருக்கும். இதை 21 நாட்கள் அணிய வேண்டும், அதன் பின் 7 நாட்கள் கழற்றி விட்டு, பின் புதிதாக ஒன்றை அணிய வேண்டும். யோனி வளையங்கள் – இதை 21 நாட்கள் அணிய வேண்டும் பின், 7 நாட்கள் கழற்றி விட்டு, புதிதாக ஒன்றை அணிய வேண்டும், மற்றும் கருப்பையாக சாதனங்கள் – இதை 3 முதல் 1௦ ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.

  2. பிறப்பு கட்டுபாட்டு முறையை சரியாக பயன்படுத்தவும்

  நீங்கள் பிறப்பு கட்டுபாட்டை சரியாக பயன்படுத்தவில்லை என்றால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகி விடும். கருத்தடை மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி தவறவிட்டால், உடனடியாக எடுத்துக் கொள்ள வேண்டும். வேறு பிற கருத்தடை முறைகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

  3. நேரத்தை கடைபிடியுங்கள்

  Pexels

  நீங்கள் பின்பற்றும் கருத்தடை முறைகளை சரியாக, சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் அதனை நாள்காட்டியில் குறித்து வைத்துக் கொண்டு, விடாமல் பின்பற்ற வேண்டும். உங்களுக்கு ஞாபகப்படுத்த இன்று பல கைபேசி ஸ்மார்ட் போன் செயலிகள் உள்ளன. அதனை பயன்படுத்தலாம்.

  4. கருத்தடை பாதுகாப்பை இரட்டிக்கவும்

  கருத்தடை மாத்திரைகள் மற்றும் அதற்காக பயன்படுத்தும் சில பொருட்கள் மிகவும் சிறப்பானது. அவை கர்ப்பத்தை தடுப்பதோடு, உடலுறவால் ஏறபடும் தொற்று நோய்க்களையும் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. அதனால் இது உங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்துகின்றது.

  5. ஆணுறையை சரியாக பயன்படுத்தவும்

  இது மிகவும் முக்கியமான ஒன்று. ஆணுறை சறியாக அணியப்படவிலை என்றாலோ, அல்லது அதனை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றாலோ, கர்ப்பம் உண்டாவதை தடுக்க முடியாமல் போகலாம். அதனால், ஆணுறையை சரியாக பயன்படுத்த வேண்டும்.

  6. பெண்ணுறை

  இது சற்று புதுமையாக இருந்தாலும், இன்று இதுவும் கருத்தடை பொருளாக பயன்படுத்தப்படுகின்றது. இதை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கிக் கொண்டு, சரியான முறையில் இதை பயன்படுத்தினால், கர்ப்பம் அடைவதை தடுக்க முடியும்.

  7. கருவுறுதலைக் கண்காணித்து, அண்டவிடுப்பின் போது உடலுறவைத் தவிர்க்கவும்

  Pexels

  நீங்கள் கருவுறுவதை தவிர்க்க வேண்டும் என்றால், அண்டவிடுப்பின் போது உடலுறவை தவிர்த்து விடுவது நல்லது. இது கருவுறும் வாய்ப்பை குறைத்து விடும்.

  8. அவசர கருத்தடை மாத்திரைகள்

  இதை நீங்கள் எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். இது நீங்கள் கருவுறுவதை தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும் ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய வேறு முறை அல்லது கருத்தடை பொருள் பயனளிக்கவில்லை என்றல், இதனை உடனே பயன்படுத்தி, கரு உண்டாவதை தவிர்த்து விடலாம்.

  9. நீண்ட கால கருத்தடை முறைகள்

  இது நீங்கள் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு கரு உண்டாவதை தடுக்க உதவும். நீங்கள் மருத்துவரை அணுகி இது குறித்த முறைகளை தெரிந்து கொள்ளலாம். ஒரு சில முறைகள் நீங்கள் 5 ஆண்டுகள் வரையும் கூட கரு உண்டாகாமல் தடுக்க உதவும்.

  10. நிரந்திர தீர்வு

  நீங்கள் கருவுண்டாவதை நிரந்திரமாக தடுக்க எண்ணினால், அதற்கும் சில மருத்துவ முறைகள் உள்ளன. இதனால், கருமுட்டை உண்டானாலும், அது கருப்பைக்குள் போகாமல் தடுக்கவும், அல்லது விந்தணு உள்ளே வராமல் தடுக்கவும் உதவும். மேலும், ஆண்களுக்கும் சில மருத்துவ முறைகள் உள்ளன. இவை நிரந்திர கருத்தடை செய்ய உதவும்.

  11. கர்ப்பப்பை தொப்பி

  Pexels

  இது ஒரு மெல்லிய சிலிகான் கப். இதை யோனிக்குள் வைத்து விட வேண்டும், இது கருப்பை வாயை மறைத்து விந்தணு உள்ளே செல்லாமல் தடுத்து விடும்.

  12. கருத்தடை பஞ்சு

  இது மற்றுமொரு முறையாகும். இது அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும். இந்த பஞ்சு யோனிக்குள் வைக்கப்பட்டு, கருப்பைக்குள் விந்தணு செல்லாமல் தடுக்கப்படும்.

  13. யோனி வளையம்

  இது அதிக பலன் தரக்கூடிய ஒரு முறையாக உள்ளது. இது ஒரு சிறிய நெகிழியால் செய்யப்பட்ட வளையும், இதனை யோனிக்குள் 3 வாரங்கள் வைக்க வேண்டும். இது கர்பத்தை தடுக்கக்கூடிய ஒரு விதமான ஹோர்மோனை வெளிபடுத்தும். இதனால் கரு உண்டாகும் வாய்ப்பு குறையும். அதன் பிறகு 7 நாட்கள் இதனை அகற்றி விட்டு, பின் மீண்டும் தேவைபட்டால் வைக்கலாம்.

  14. கருத்தடை சாதனங்கள்

  இந்த முறையில், கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தப்படும். எனினும், இது பரிந்துரைக்கப்பட்ட முறை இல்லை. ஏனென்றால், இதில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

  15. இயற்க்கை குடும்ப கட்டுப்பாடு

  Pexels

  இந்த முறையில் நீங்கள் உங்கள் மாதவிடாய் காலத்தை கணக்கிட்டு, அதற்கு தகுந்தவாற உங்கள் உடலுறவை வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 9 நாட்கள் வரை பாதுகாப்பான காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருவுறும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். இந்த முறையில் எந்த மருந்தும், அல்லது கருத்தடை சாதனங்களும் பயன்படுத்த வேண்டாம்.

  16. கருத்தடை

  இது ஆண் மற்றும் பெண், இருபாலாருக்கும் பொருந்தும். இந்த முறையில் நீங்கள் நிரந்தரமாக கருவுறும் வாய்ப்பை நிறுத்தி விடலாம். இது முற்றிலும் கர்ப்பமடையும் வாய்ப்பை தடுத்து விடும். அதனால், கரு உண்டாகி விடுமோ என்ற பயமில்லாமல் இருக்கலாம்.

  உடலுறவில் கர்ப்பத்தை தவிர்க்க ஏற்ற நேரம்(Best time for sex to avoid pregnancy)

  எத்தனை கருத்தடை மாத்திரைகள், சாதனங்கள் மற்றும் மருத்துவ முறைகள் இருந்தாலும், நீங்கள் கருவுறும் வாய்ப்பை உங்கள் மாதவிடாய் காலம் மற்றும் உடலுறவு கொள்ளும் காலம், ஆகிய இவை இரண்டையும் கொண்டு கர்ப்பம் உண்டாவதை தடுத்து விடலாம். பாதுகாப்பான உடலுறவு கொள்ள உங்களுக்காக சில குறிப்புகள்;

  • உங்கள் மாதவிடாய் நேரத்தை மற்றும் நாட்களை கணக்கிடவும்
  • உங்களுக்கு மாத விடை ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 9 நாட்கள் வரை உறவு கொள்ள பாதுகாப்பான காலகட்டமாக இருக்கும்
  • எனினும், சில நேரங்களில், எதிர் பாரா விதமாக உங்கள் கணிப்பு மற்றும் கணக்கு தவறாகி விட்டால், நீங்கள் கருவுறம் வாய்ப்பு உண்டாகி விடும்
  • முடிந்த வரை பாதுகாப்பான கருத்தடை முறைகளை கடைபிடிப்பது நல்லது

  கரு உண்டாவாதை தடுக்க சில சிறந்த குறிப்புகள்(Tips for birth control)

  • கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கான ஒரு சிறந்த வழி, ஆண்குறி-யோனி உடலுறவு கொள்ளாமல் இருப்பது, அல்லது விந்தணுக்கள் யோனி அல்லது யோனியில் பெறக்கூடிய எந்தவொரு பாலியல் விடயங்களையும் செய்யாமல் இருப்பது.
  • ஆனால் நீங்கள் யோனி உடலுறவு கொள்ளப் போகிறீர்கள் என்றால், கர்ப்பத்தைத் தடுப்பதற்கான சிறந்த வழி ஆணுறை போன்ற பிறப்பு கட்டுப்பாட்டு பொருளை பயன்படுத்துவதாகும்.
  • கருத்தடை மாத்திரை, யோனி வளையம், போன்றவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,.
  • கருத்தடை பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவது எதிர் பார்த்த பலனை உங்களுக்குத் தரும்.
  • ஆணுறை, கருத்தடை என்று மட்டுமல்லாது, மேலும் கூடுதலாக நீங்கள் சில பாதுகாப்பு முயற்சிகளை செய்ய வேண்டும்.
  • ஒன்றை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த கருத்தடை முறைகளும் 1௦௦% உறுதியாக கருத்தடையை செய்வதில்லை. சில தருணங்களில் கரு உண்டாகி விடுவதை நீங்கள் தடுக்க முடியாது.

  இயற்கையான முறையில் கர்பத்தை தடுப்பது(Avoid pregnancy in natural ways)

  நீங்கள் எந்த கருத்தடை மாத்திரைகளும் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் கருப்பம் உண்டாவதை தடுக்க விரும்பினால், உங்களுக்காக இங்கே சில குறிப்புகள்:

  1. இயற்கை கருத்தடை எப்படி வேலை செய்கின்றது

  Pexels

  முதலில் நீங்கள் இயற்க்கை முறையில் கருத்தடை செய்ய வேண்டும் என்றால், அது எப்படி வேலை செய்கின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் உங்கள் உடலின் மாதவிடாய் எப்படி செயல்படுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பின், நீங்கள் கருவுறும் வாய்ப்பு அதிகம் இருக்கும் நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த முறை உங்களுக்கு 98% வெற்றியைத் தரும்.

  2. உங்கள் உடல் வெப்பத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  அண்டவிடுப்பின் போது உங்கள் உடல் வெப்பநிலை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். அண்டவிடுப்பின் போது உடல் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். இது நீங்கள் கருவுறம் வாய்ப்பு அதிகமாக இருப்பதை குறிக்கும். குறிப்பாக யோனி பகுதியில் இருக்கும் வெப்பநிலையை தெரிந்து கொள்வது நல்லது.

  3. கரு உண்டாவதை தடுக்க சரியான நாளை தேர்வு செய்யும் முறையை பயன்படுத்துங்கள்

  இதற்கு நீங்கள் குறைந்தது 3 மாதங்களாவது உங்கள் மாதவிடாய் நாட்களை கணக்கிட வேண்டும், மற்றும் கண்காணிக்க வேண்டும். இது பொறுத்தே நீங்கள் கரு உண்டாகும் வாய்ப்பை தடுத்து, பாதுகாப்பான உடலுறவை கொள்ள முடியும்.

  4. கர்ப்பப்பை வாய் திரவத்தை கண்காணிக்கவும்

  தினமும் காலையில் உங்கள் கர்ப்பப்பை வாயில் இருந்து வெளியேறும் திரவத்தை கண்காணிக்க வேண்டும். இதன் நிறம் மற்றும் உறுதித் தன்மை, நீங்கள் கருவுறும் வாய்ப்புகளை தெரியப்படுத்தும்.

  5. கர்ப்பப்பை வாய் திரவத்தை தெரிந்து கொள்ளுங்கள்

  Pixabay

  இது கர்ப்பப்பை வாயில் இருந்து வெளியேறும் திரவத்தின் நிறம், வலுவளுப்புத் தன்மை, மற்றும் அடர் தன்மை போன்றவற்றை குறிக்கும். இது தினமும் மாறுபடும். அதனால், நீங்கள் இதனை தினமும் கவனித்து வந்தால், உங்கள் கருவுறும் வாய்ப்பை தானாகவே தெரிந்த கொள்வீர்கள். மேலும் இது வெளியேறும் அளவும் கவனிக்கப்பட வேண்டூம். இது பொதுவாக வெள்ளை நிறத்திலோ அல்லது முட்டையின் வெள்ளைக்கரு போன்ற நிறத்திலோ இருக்கும்.

  6. நாள்காட்டியை பின்பற்றுங்கள்

  பொதுவாக பல பெண்களுக்கு 26 நாள் முதல் 32 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்பட்டு விடும். ஒரு சிலருக்கு ஒரு வாரம் அல்லது 1௦ நாட்கள் வரையிலும் கூட தாமதமாக ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படுவதுண்டு. இதனால் பெரிதாக எந்த பாதிப்பும் உடலுக்கு இல்லை. எனினும், நீங்கள் உங்களுக்கு ஏற்படும் மாதவிடாய் நாட்களை நாள்காட்டியில் குறித்து வைத்துக் கொண்டால், உறவு கொள்ள ஒரு பாதுகாப்பான நாளை தேர்வு செய்யலாம். இதனால் கர்ப்பம் அடைவதையும் தடுக்கலாம். எனினும் குறைந்தது 8 மாதங்களாவது நீங்கள் கவனிக்க வேண்டும்.

  7. உங்கள் மாதவிடாயை தெரிந்து கொள்ளுங்கள்

  ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதாமாக மாதவிடாய் ஏற்படும். பொதுவாக பல பெண்களுக்கு 3 நாட்கள் மட்டும் இருந்தாலும், சிலருக்கு 5 நாட்கள் வரையிலும் அல்லது 2 நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படுவதுண்டடு. அதனால், அதற்கு ஏற்றவாறு நீங்கள் உங்கள் நாட்களை கணக்கிட வேண்டும்.

  8. எப்போது உடலுறவு கொள்ளலாம்

  நீங்கள் கவனிக்க வேண்டிய மிகவும் முக்கியமான விடயம் இது. நீங்கள் ஒரு பாதுகாப்பான நாளை தேர்வு செய்தால் மட்டுமே எதிர்பார்த்த பலனைப் பெற முடியும். அந்த வகையில், குறிப்பாக உங்கள் மாதவிடாய் முடிந்து 6 முதல் 9 நாட்கள் வரை உடலுறவு கொள்ள பாதுகாப்பான காலகட்டமாக இருக்கும்.

  9. அதிக கருவுறும் வாய்ப்பு உள்ள நாட்களை தெரிந்து கொள்ளுங்கள்

  Pixabay

  நீங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை, அதாவது மாதவிடாய் ஏற்படும் நாட்கள், அதன் இடைவெளி, யோனியில் இருந்து வெளியேறும் திரவத்தின் நிறம் மற்றும் தன்மை, என்று அனைத்தையும் கண்காணித்து வந்தால், நீங்கள் அதிகம் கருவுறும் வாய்ப்பு உள்ள நாட்களை கண்டறிய முடியும். அந்த காலகட்டத்தில் உடலுறவு கொள்வதை தவிர்த்து விடலாம்.

  கேள்வி பதில்கள் (FAQ)

  1. பாதுகாப்பான நாட்கள் எது?

  உங்கள் மாதவிடாய் உத்திர போக்கு உண்டான முதல் நாள் முதலே கணக்கில் கொள்ளப்படுகின்றது. அதில் இருந்து அடுத்த மாதவிடாய் ஏற்படும் நாள் வரை ஒரு மாதவிடாய் காலமாக கருதப்படுகின்றது. இதில் நீங்கள் கருவுறும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் நாட்கள், உங்களது இரண்டாம் மாதவிடாய் ஏற்படுவதற்கு 12 முதல் 14 நாட்கள் வரையிலான காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் உறவு கொள்வதை தவிர்ப்பது நல்லது.

  2. 5 நாட்களுக்கு பிறகு கர்ப்பத்தை எப்படி தடுப்பது?

  கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டும். எனினும், நீங்கள் மருத்துவரின் ஆலோசனைப் படி கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். எனினும், உறவு கொண்ட 24 மணி நேரத்திற்குள் கரு உண்டாகி விட்டால், பின் அதனை தடுப்பது இயலாத ஒன்றாக பெரும்பாலான சூழல்களில் இருக்கும்.

  3. எப்போது பெண் கருவுற முடியாமல் போகின்றாள்?

  ஒரு பெண் 35 வயதை கடக்கும் போது, கருவுறும் வாய்ப்புகளை பெரிதும் இலக்கின்றாள். மேலும் உடலில் வேறு சில பிரச்சனைகள் இருக்கும் போது, அதிக உடல் எடை இருக்கும் போது மற்றும் ஏதாவது நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருக்கும் போது, கருவுறும் தன்மையை பெரிதும் இழக்கின்றாள்.

  4. 24 மணி நேரத்திற்குள் எப்படி கருவுறுவதை தடுப்பது?

  லேவோனோஜெச்ற்றேல் நல்ல கருத்தடையாக வேலை செய்கின்றது. எனினும் இது கரு உண்டாவதை தடுக்கும் வாய்ப்பு 80% மட்டுமே உள்ளது. எனினும், இது தவிர்த்து நீங்கள் மேலும் பல வழிகளையும் முயற்சி செய்யலாம்.

  5. உடலுறவு கொண்ட 6 நாட்களுக்கு பிறகு கரு உண்டாவதை தடுக்க மருந்துகள் உள்ளதா?

  நீங்கள் உறவு கொண்ட 6 நாட்களுக்கு பிறகு கருவுறும் வாய்ப்பை குறைக்க இரண்டு முறைகள் உள்ளன. அதில் ஒன்று, புரோஜஸ்டின் மருந்துகள். இவை 89% கருவுறும் வாய்ப்பை குறைக்க அல்லது தடுக்க உதவுகின்றது. மற்றொன்று  ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜஸ்டின் ஆகிய இரண்டும் சேர்ந்தது. இது 75% கருவுன்டாகும் வாய்ப்பை குறைக்க உதவுகின்றது. இப்படி மாத்திரைகள் இருந்தாலும், நீங்கள் இயற்கையான முறையில், உறவு கொள்ளும் போதோ அல்லது அதற்கு முன்னதாகவோ தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. இது பாதுகாப்பான ஒரு முறையாகவும் இருக்கும்.

   

  மேலும் படிக்க - கர்ப்பமடைவது எப்படி?பெண்களுக்கான சில ஆலோசனைகள்!

  பட ஆதாரம் - Shutterstock

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

  மேலும் படிக்க - கருப்பை பிரச்சனையா? பெண்களின் கருப்பையை வலுவாக்கும் சிறந்த உணவுகள்!