கர்ப்பமடைவது எப்படி – பெண்களுக்கான சில ஆலோசனைகள்!|POPxo | POPxo

கர்ப்பமடைவது எப்படி – பெண்களுக்கான சில ஆலோசனைகள்!

கர்ப்பமடைவது எப்படி – பெண்களுக்கான சில ஆலோசனைகள்!

பல பெண்கள் குழந்தை பேரு எப்படி பெறுவது என்பதை பற்றின விழிப்புணர்வு இல்லாமல் இருகின்றனர். இதனால் அவர்கள் கர்ப்பம் அடையும் காலம் தள்ளிப்போவதோ அல்லது, சரியாக கருவுற முடியாமல் போவது வழக்கமாகிவிடுகின்றது. இதனை தவிர்க்க பெண்களுக்கு(women) போதிய விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. நீங்கள் குழந்தை பேரு பெற திட்டமிட்டு, விரைவாக கருவுற எண்ணினால், இந்த தொகுப்பு உங்களுக்கானது.

இதில் கருவுற பல எளிய குறிப்புகளும்(tips), ஆலோசனைகளும் அடங்கியுள்ளது. தொடர்ந்து படியுங்கள்!

Table of Contents

  கர்ப்ப காலம் எப்படி தொடங்குகிறது? (How pregnancy starts)

  பல பெண்கள் இன்று அவர்களது அறியாமையால், தான் கருவுற்றிருகின்றோமா இல்லையா என்று தெரியாமல், தவறான புரிதலோடு இருகின்றனர். இது அவர்கள் சரியாக கருவுற முடியாத ஒரு சூழலையும் உண்டாக்குகின்றது. நீங்கள் சில அடிப்படை விடயங்களை தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:

  • கர்ப்பம் அடைவதற்கான காலம் பொதுவாக உங்கள் மாதவிடாயின் முதல் நாள் தொடங்கி அடுத்த மாதவிடாயின் முதல் நாள் வரை இருக்கும்.
  • கரு முட்டைகள் மாதம் ஒரு முறை முதிர்ச்சி அடைகின்றது
  • கருவுற்ற முட்டைகளைத் தயார் செய்ய உங்கள் கருப்பையின் புறணி தடிமனாகத் தொடங்குகிறது
  • முட்டை முதிர்ச்சி அடைந்த பின், கருப்பையில் இருந்து வெளியேற்றப் படுகின்றது, இதுவே அண்டவிடுப்பு என்று அழைக்கப்படுகின்றது
  • அண்டவிடுப்பின் போது உங்கள் கர்ப்பப்பை வாய் சளி (இது உங்கள் கருப்பை வாயில், யோனி மற்றும் கருப்பைக்கு இடையில் உள்ள பொருள்) மெல்லியதாகவும் தெளிவாகவும் மாறும், இதனால் விந்தணுக்கள் முட்டையை நோக்கி எளிதாக நீந்தி செல்ல முடியும்
  • அண்டவிடுப்பின் கட்டத்தில் விந்து இருந்தாளோ, அல்லது அடுத்த 24 மணி நேரத்தில், முட்டை கருவுற்றிருக்கும் (pregnant) வாய்ப்பு உண்டாகின்றது. இது நடக்க ஒரு விந்து மட்டுமே முட்டையுடன் சேர வேண்டும்
  • முட்டை கருவுற்றிருந்தால், அது கருப்பை நோக்கி நகர்ந்து அதிக உயிரணுக்களாகப் பிரியத் தொடங்குகிறது.
  • இது கருப்பையை அடைந்ததும் கருவுற்ற முட்டை கருப்பையின் புறணியை இணைக்க வேண்டும். இது உள்வைப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது கர்ப்பத்தின் தொடக்கமாகும்.
  • பல கருவுற்ற முட்டைகள் இதனுடன் பொருத்தப்படாமல், உடலுக்கு வெளியே அனுப்பப்படுகின்றன.
  • முட்டை கருவுறாவிட்டால், அது மீண்டும் உடலால் உறிஞ்சப்பட்டு, ஹார்மோன் அளவு குறைகிறது. மேலும் கருப்பைப் புறணி சிந்தப்படுகிறது - உங்கள் அடுத்த மாதவிடாயின் தோத்க்கமாகும்

  கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள சிறந்த நேரம்(Right time for sex )

  Pexels
  Pexels

  பெண்கள் விரைவாக கருவுற வேண்டும் என்றால், அதற்கு சரியான நேரத்தை உடலுறவு கொள்ள தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த வகையில், இங்கே சில தகவல்கள்:

  • கருவுறும் வாய்ப்பை அதிகபடுத்த முதலில், நீங்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ள வேண்டும். இதனால், ஆரோக்கியமான விந்தணு முட்டையுடன் சேர வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்
  • உங்கள் மாதவிடாய் காலத்தை கணக்கில் கொண்டு, முட்டைகள் முழு வளர்ச்சி பெற்றிருக்கும் நாட்களை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில், நீங்கள் கருவுறும் முயற்சிகளை செய்யலாம். இது கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்
  • பொதுவாக உங்கள் மாத விடை ஏற்படுவதற்கு 12 முதல் 16 நாட்கள் உள்ள காலகட்டம் கருவுற ஏற்ற காலமாகும்

  கருவுறும் வாய்ப்பை பாதிக்கும் காரணங்கள்(Factors affecting pregnancy)

  அனைத்து பெண்களுக்கும் இது இயல்பாக எழும் கேள்வி தான். தான் கருவுற உள்ள சாத்தியங்கள் மற்றும் கருவுற முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் எவ்வளு உள்ளன என்று தெறித்து கொள்ள நினைப்பார்கள். அந்த வகையில், நலல் ஆரோக்கியமாக இருக்கும் தம்பதியினர்கள், கருவுறும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றனர். எனினும், அப்படி கருவுற முடியாமல் போனால், அதற்க்கான வாய்ப்புகள் 15% முதல் 25% மட்டுமே இருக்கும்.

  எனினும், ஒரு பெண் கருவுற முடியாமல் போவதற்கு சில குறிப்பிடத்தக்க காரணங்கள் உள்ளன. அவை:

  • 3௦ வாதுக்கு மேலாகும் பெண்களுக்கு கருவுறம் வாய்ப்புகள் 3௦ வயதுக்கு கீழ் இருக்கும் பெண்களை விட குறைவாக இருக்கும்
  • இந்த சதவிதம் 40 வயது பெண்களுக்கு மேலும் குறையும்
  • சீரற்ற மாத விடை மேலும் கருவுறும் காலத்தை பாதிக்கின்றது. இதனால் சரியான உடலுறவு கொள்ளும் நாட்களை கணக்கிட முடியாமல் போகலாம்
  • நீங்கள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்கிறீர்கள் எனபதை பொருத்தும், கருவுறும் வாய்ப்புகள் அதிகமாகின்றது. குறைந்த அளவே அல்லது வெகு சில நாட்களே உடலுறவு கொள்கின்றீர்கள் என்றால், கருவுறும் வாய்ப்பும் குறையும்
  •  நீங்கள் எத்தனை காலம் கருவுறம் முயற்சியில் உள்ளீர்கள் என்பதும் இதில் அடங்கும். நீங்கள் ஒரு ஆண்டு காலம் முயற்சி செய்தும் கருவுறவில்லை என்றால், நீங்கள் கர்ப்பமாகும் வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும்
  • நீங்கள் ஏதாவது மருத்துவ சிகிச்சையில் இருந்தாலோ அல்லது உங்களுக்கு உடலில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும், உங்கள் கருவுறும் வாய்ப்பு பாதிக்கப்படும்

  கற்பகாலத்தின் தொடக்க அறிகுறிகள்(Early symptoms of pregnancy)

  ஓவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பம் தரித்ததன் அறிகுறி மாறுபடும். எனினும், பொதுவாக சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்கள் விழிப்புணர்வோடு இருக்கலாம். இங்கே உங்களுக்காக அந்த தகவல்கள்;

  1. முதல் அறிகுறியாக உங்கள் மாத விடாய் ஏற்படாது
  2. மார்பகங்கள் மிருதுவாகவும், அல்லது வீக்கம் உள்ளது போலவும் தோன்றும்
  3. வாந்தி மற்றும் கொமட்டல் ஏற்படும்
  4. உடலில் அதிக சோர்வு உண்டாகும்
  5. ஒரு சிலருக்கு உடலில் வீக்கம் உண்டாகும்
  6. மல சிக்கல் உண்டாகும்
  7. அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்

  இதில் சில அறிகுறிகள், உங்கள் உடலில் வேறு சில பிரச்சனைகள் இருந்தாலும் உண்டாகலாம். அதனால், உங்கள் கர்ப்பத்தை உறுதிபடுத்திக் கொள்ள, கர்ப்ப பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

  இரட்டை குழந்தைகள் எப்படி உண்டாகின்றது(How twin children are born )

  Pixabay
  Pixabay

  இரட்டை குழந்தைகள் பிறக்க, இரண்டு வாய்ப்புகள் உள்ளன.

  1. ஒன்று போல இரட்டையர்கள் உருவாக, ஏற்கனவே கருவுற்ற 1 முட்டை 2 தனித்த கருக்களாக பிரிக்கிறது.
  ஒரே விந்தணு மற்றும் ஒரே முட்டையில் இருந்து இரட்டையர்கள் பிறப்பதால், அவர்களுக்கு ஒரே மரபணு பொருள் மற்றும் டி என் ஏ உண்டாகின்றது. மேலும் அவர்களும் பார்ப்பதற்கு ஒன்று போலவே உள்ளனர்.

  2. ஒரே மாதிரியான இரட்டையர்கள் இரண்டு தனித்தனி முட்டைகள் மற்றும் இரண்டு தனித்தனி விந்தணுக்களால் உண்டாகின்றனர். மேலும் கருவுற்ற முட்டைகள் இரண்டும் கருப்பையில் பொருத்தப்படுகின்றன.உங்கள் கருப்பைகள் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை விடுவித்தாலோ அல்லது சில வகையான கருவுறுதல் சிகிச்சையின் போது இது போன்று நிகழலாம்.

  இந்த இரட்டையர்கள் முற்றிலும் மாறுபட்ட மரபணு பொருட்கள் மற்றும் டி என் ஏ அமைப்பை கொண்டிருப்பார்கள்.அவர்கள் வெவ்வேறு தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். இது போன்ற இரட்டையர்களே அதிகம் பிறக்கின்றனர்.

  எளிதாக கர்ப்பமடைய சில குறிப்புகள்(How to get pregnant easily)

  நீங்கள் எளிதாகவும், விரைவாகவும் கருவுற வேண்டும் என்றால், சில விடயங்களை பின்பற்ற வேண்டும். உங்களுக்கு உதவ, இங்கே சில குறிப்புகள்:

  1. வைட்டமின் மற்றும் பாலிக் அமிலம்

  குறைந்தது 0.4 மில்லிகிராம் பாலிக் அமிலம் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாது சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பாலிக் அமிலம் பிறப்பு குறைபாடுகளை போக்க உதவும். குறிப்பாக இது குழந்தையின் முதுகு தண்டை பலப்படுத்த உதவும். பாலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள உணவை அதிகம் எடுத்துக் கொண்டால், கருவுறும் வாய்ப்பு அதிகமாகும். குறிப்பாக வைட்டமின் A, D, E மற்றும் K நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  2. நல்ல உறக்கம்

  பெண்கள் ஆரோக்கியமாக இருக்க தூக்கம் மிக முக்கியமான ஒன்று. நல்ல தூக்கம், மன அழுத்தம் மற்றும் வேறு சில பிரச்சனைகளை போக்க உதவும். இதனால் மனம் அமைதியாக இருப்பதோடு உடலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கும். இதனால் ஆரோக்கியமான உடலுறவும் கொள்ள முடியும். இது கருவுரு வாய்ப்பை அதிகப்படுத்தும்.

  3. மது மற்றும் புகை ஆகியவற்றை தவறிக்க வேண்டும்

  Pixabay
  Pixabay

  மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் அல்லது புகையிலை பொருட்களை பயன்படுத்துவது போன்ற விடயங்கள், கர்ப்பம் அடையும் வாய்ப்பை குறைகின்றது அல்லது இல்லாமல் செய்து விடுகின்றது. இது உடலின் பல உருபுகளை பாதிப்பதோடு, கர்ப்பப்பையையும் பாதிகின்றது. அதனால் இத்தகைய தீய பழக்கங்களை விட்டுவிடுவது நல்லது.

  4. குடும்ப மரபு

  குடும்பத்தில் உள்ள உறுபினர்கள் எத்தனை வயதில் கருவுற்றார்கள் மற்றும் அவர்கள் கருவுற தாமதம் ஆகி இருந்தால், அதன் காரணம் என்ன என்றெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய விடயங்களும், மரபு ரீதியாக உங்கள் உடலிலும் சில மாற்றங்களை உண்டாக்கி இருந்திருக்கலாம். அதனாலும், உங்கள் குருவுறும் வாய்ப்பும் குறையலாம்.

  5. உங்கள் வயது

  3௦ வயதுக்கு கீழ் இருக்கும் இளம் பெண்கள் கருவுறும் சதவிதம் அதிகமாக உள்ளது. ஆனால் 3௦ வயதுக்கு மேல் ஆகும் பெண்கள் கருவுறும் சதவிதம் குறைந்து கொண்டே போகும். அதனால், உங்களது தற்போதைய வயது என்ன என்பதையும் நீங்கள் புரிந்து, மருத்துவரின் ஆலோசனை பெற்று, முறையான சிகிச்சைகளையும் பெற வேண்டும். இப்படி செய்தால், நீங்கள கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும்.

  6. ஆரோக்கியமான உணவு

  நீங்கள் உண்ணும் உணவும் உங்கள் கருவுறும் வாய்ப்பை பாதிக்கும். குறிப்பாக இன்று கிடைக்கும் ப்ரைளர் கோழிகள் மற்றும் ப்ரைளர் ஆடுகள் மற்றும் பண்ணையில் ரசாயன உணவு கொடுக்கப்பட்டு வளர்க்கப் படும் சில வகை மீன்கள், மற்றும் முட்டைகள், இது போன்ற உணவுகள் உங்கள் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கின்றது. குறிப்பாக இது ஆண் மற்றும் பெண், இருவரது விந்து மற்றும் ஆரோக்கியமான முட்டை உற்பத்தி திறனை பெரிதும் பாதிகின்றது. மேலும் துரித உணவுகள், ரசாயனம் கலந்த, டின்களில் கிடைக்கும் நாள் பட்ட உணவுகள் போன்றவைகளும் உங்கள் கருவுறும் வாய்ப்பை குறைக்க வாய்புகள் உள்ளன. அதனால், இயற்கையான, அதிக வைட்டமின்கள் உள்ள, குறிப்பாக பாலிக் அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  7. சத்துக்கள்

  Pixabay
  Pixabay

  புரதம், கார்போஹைட்ரேடஸ், நார் சத்து, தேவையான கொழுப்பு சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக பழங்கள், மற்றும் காய் மற்றும் பயிர் வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உங்கள் உடலுக்கு பலத்தை கொடுத்து நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க உதவுகின்றது. அதனால், விரைவாக கருவுறும் வாய்ப்பும் உண்டாகின்றது.  

  8. உடற்பயிற்சி / யோகா

  ஆண் மற்றும் பெண் இருவரும் சரியான உடற் பயிற்சி செய்து தங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால், விந்து மற்றும் கரு முட்டை நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்து விரைவாக கருவுறும் தன்மையைப் பெரும். மேலும் பெண்களுகேன்றே சிறப்பாக சில குறிப்பிடத்தக்க யோகா உள்ளது. அவற்றை முறையாக செய்து வரும் போது, நீங்கள் கருவுறும் வாய்ப்புகள் அதிகமாகும்.

  9. உடலுறவு கொள்ளும் நிலை

  தம்பதியினர் இருவரும் எந்த நிலையில் உடலுறவு கொள்கின்றனர் என்பதும், நீங்கள் கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்தும். இருவரும் ஆரோக்கியமான நிலையில் இருந்தாலும், உறவு கொள்ளும் போது சரியான நிலையில் இருந்தால் மட்டுமே விந்தணு முட்டையை சென்று அடையும். அப்படி நடந்தால் விரைவாக 24 மணி நேரத்தில் கரு உண்டாகும். அதனால் இதை பற்றிய விழிப்புணர்வை நீங்கள் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

  10. உடலுறவு கொள்ளும் நேரம்

  இது பெண்களின் மாத விடாய் காலத்தை பொறுத்து பெரும்பாலும் இருகின்றது. பெண்கள் தங்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு 12 முதல் 16 நாட்கள் இருக்கும் காலகட்டத்தில் உடலுறவு கொண்டால், எளிதாக கருவுறும் வாய்ப்பு உண்டாகும். மேலும், 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்வது அவசியம். இது மேலும் உங்கள் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

  11. உங்கள் மாதவிடாய் நாட்களை கணக்கில் வைத்துக் கொள்ளூங்கள்

  Pixabay
  Pixabay

  ஒவ்வொரு மாதமும் உங்கள் மாதவிடாய் எந்த நாட்களில் ஏற்படுகின்றது மற்றும் தோராயமாக எத்தனை நாட்கள் மாதாமாதம் மாறுபடுகின்றது என்பதை பற்றின குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது பொறுத்து கருத்தரிக்கும் நாட்களை கணக்கிட்டு, கர்ப்பம் பெற முயற்சி செய்யலாம்.

  12. வேக குறுகிய காலத்தில் உடலுறவு கொள்ள வேண்டும்

  உங்கள் மாதவிடாய் காலத்தை கணக்கில் கொண்டு, நீங்கள் அதிக இடைவேளை விடாமல், தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது உறவு கொள்ள வேண்டும். இப்படி செய்தால், கருவுறும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

  13. உடல் எடை

  உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தாலும் கருவுறும் வாய்புகள் குறையும். அதனால், நீங்கள் முதலில் உங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் உடல் எடை அதிகமாக இருந்தால், வேறு பல பிரச்சனைகளையும் அது உண்டாக்கக் கூடும். இதனால் உங்களால் ஆரோகியமான உறவு கொள்ள முடியாமல் போகலாம். மேலும் உடல் எடை உங்கள் மாதவிடாயையும் பாதிக்கக கூடும்.

  14. தேவையான வைட்டமின்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை

  நீங்கள் விரைவாக கருவுற வேண்டும் என்றால், அல்லது உங்கள் கருவுறும் விகிதம் அதிகரிக்க வேண்டும் என்றால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான வைட்டமின்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்து உங்களை தயார் படுத்திக் கொண்டால், நீங்கள் விரைவாக கருவுறும் வாய்ப்பை பெறலாம்.

  15. கடுமையான உடற்பயிற்சியை தவிர்க்கவும்

  Pixabay
  Pixabay

  பெண்கள் முற்றிலும் கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய் போன்றவற்றை பாதிக்கக் கூடும். இதனால் உங்கள் கருவுறும் விகிதம் குறையக் கூடும். அதனால், கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்த்து, பாதுகாப்பான பயிற்சிகளை செய்வது நல்லது.

  16. எப்போது மருத்துவ உதவி பெற வேண்டும்

  நீங்கள் இளம் வயதினராக இருந்து, திருமணம் ஆன சில நாட்களிலேயே கருவுறவில்லை என்றால், அவசரப் பட வேண்டும். மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருந்து முயற்சிகள் செய்யலாம். ஆனால் நீங்கள் 3௦ வயதுக்கும் மேலானவர், பல ஆண்டு காலமாக முயற்சி செய்தும் கருவுறவில்லை என்றால், மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் உங்களுக்கு சரியாக மாதவிடாய் ஏற்படவில்லை, உண்டாகும் கரு சில நாட்களிலேயே சிதைந்து விடுவது போன்ற பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

  கர்ப்பம் அடைதலும் பெண்களின் வயதும்(Pregnancy and age factors)

  ஒரு சில பெண்கள் முதல் முயற்சியிலேயே கர்ப்பம் அடைகின்றனர். ஆனால் சில பெண்கள், பல ஆண்டு காலம் முயற்சி செய்தாலும், கர்ப்பம் அடைவதில்லை. இதற்கு முக்கிய காரணம், அனைத்து பெண்களுக்கு ஒரே மாதிரியான உடல் அமைப்போ, உடல் ஆரோக்கியமோ, வயதோ இருப்பதில்லை.
  பொதுவாக வயதாகும் பெண்களுக்கு, கருவுறும் வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகும்.

  • 20 -24 வயது இருக்கும் பெண்கள் 86% கருவுறும் வாய்ப்பை பெறுகின்றனர்
  • 24- 29 வயது இருக்கும் பெண்கள் 78% கருவுறும் வாய்ப்பை பெறுகின்றனர்
  • 30 – 34 வயது இருக்கும் பெண்கள் 63% கருவுறும் வாய்ப்பை பெறுகின்றனர்
  • 35 -39 வயது இருக்கும் பெண்கள் 52% கருவுறும் வாய்ப்பை பெறுகின்றனர்

  மொத்தத்தில் 80% பெண்கள் கருவுறும் வாய்ப்பை பெறுகின்றனர், அவர்களுக்கு எந்த உடல் நல பிரச்சனைகளும் கருவுற ஏற்படுவதில்லை. விடா முயற்சியோடு, கருவுற முயற்சி செய்யும் பெண்கள், 6 மாதத்தில் கர்ப்பம் அடைந்து விடுகின்றனர்.

  கர்ப்பம் அடைய நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்(Foods to avoid )

  Pixabay
  Pixabay

  நீங்கள் ஆரோகியமாக கருவுற வேண்டும் என்றால், சரியான உணவு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். இந்த வகையில், ஒரு சில உணவுகள், நீங்கள் எளிதாகவும், விரைவாகவும் கருவுற உதவுகின்றது. நீங்கள் அதை தெரிந்து கொள்ள, இங்கே சில தகவல்கள்;

  • கபையின் நிரந்த உணவை தவிர்க்க வேண்டும். இது உடலில் கால்சியம் சாருவதை தடுகின்றது, இதனால் உடல் பலவீனமாகின்றது. மேலும் நீங்கள் கருவுறும் வாய்ப்பை 3௦% வரை குறைகின்றது
  • பதபடுத்திய உணவுகள்: இன்று கடைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவு கிடைகின்றது. இவற்றில் பல ரசாயனங்கள் கலக்கப்பட்டிருக்கும். இது உடலுக்கு பல கேடுகளை விளைவிப்பதோடு, கர்ப்பப்பையையும் பாதிக்கும். அதனால், இத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது.
  • சிவப்பு மாமிசங்கள்: இது குறிப்பாக ஆடு, பன்றி மற்றும் மாட்டிறைச்சியை குறிக்கும். இத்தகைய மாமிசத்தை தவிர்த்து விட்டு, நட்டுக்கோழி, கடல் மீன் மற்றும் ஏரிகளில் கிடைக்கும் மீன் போன்ற புலால் உணவுகளை எடுத்துக் கொள்ளாலாம். இவற்றில் கொழுப்பு சத்து குறைவாக இருந்தாலும், உடலுக்குத் தேவையான புரதம், ஒமேக 3 அமிலம், மற்றும் பிற தாது சத்துக்கள் அதிகம் உள்ளது.
  • சோயா பொருட்கள்: இவை விந்து அணுவின் எண்ணிக்கையை குறைக்கும். அதனால், கருவுறும் வாய்ப்பும் குறையும்.

  கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும் குறிப்புக்கள்(Things to increase fertility)

  விரைவாக கருவுற வேண்டும் என்றால் சில விடயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்களுக்காக இங்கே அவை:

  1. நச்சுத்தன்மை உள்ள உணவுகளை தவிர்க்கத்வும்

  இன்று பெரும்பாலான உணவுகளில் நச்சுத் தன்மை அதிகமாக உள்ளது. அது பெண் மற்றும் ஆண், ஆகிய இரு பாலாரையும் பாதிகின்றது. இதனால் கருவுறும் வாய்புகள் வெகுவாக குறைகின்றது. முடிந்த வரை இரசாயனம் கலந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

  2. அதிக உடலுறவு

  ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டும் முயற்சி செய்து விட்டு, கருவுறவில்லை என்று விட்டுவிடாமல், விடாமல் நீங்கள் தினமும் முயற்சி செய்து கொண்டு இருக்க வேண்டும். அப்படி முயற்சி செய்தால் மட்டுமே நீங்கள் கருவுறும் வாய்ப்புகள் அதிகமாகும்.

  3. உடலுறவுக்கு பின் செய்யவேண்டியாவை

  உடலுறவு கொண்ட பின் சில விடயங்களை பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே, கருவுரம் வாய்ப்புகள் அதிகரிக்கும். குறிப்பாக, உறவுக்கு பின் உடனே சூடான நீரில் குளிப்பது, மற்றும் கடுமையான உடற்பயிற்சி செய்வது அல்லது கடுமையான வேலை பார்ப்பது, கனமான பொருட்களை தூக்குவது போன்ற விடயங்களை செய்யக் கூடாது. இது கருவுறும் வாய்ப்பை குறைத்து விடக் கூடும்.

  4. அதிகம் நீர் அருந்த வேண்டும்

  Pixabay
  Pixabay

  பலரும் நினைக்கலாம், தண்ணீர் அதிகம் அருந்துவதால் எப்படி கருவுற முடியும் என்று. ஆனால், தண்ணீர் அதிகம் அருந்துவதால், கரு முட்டையும் காரோகியமகின்றது. இதனால் அது கருவுறும் வாய்ப்புகளை அதிகம் பெறுகின்றது. மேலும் இது நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு, சோர்வடையாமல் இருக்கவும் உதவுகின்றது. மேலும் தண்ணீர் அதிகம் அருந்துவதால், உங்கள் உடலின் வெப்ப நிலை சீராக இருக்கும். இதனால் நீங்கள் நல்ல ஆரோக்கியமான் உறவில் ஈடுபடலாம்.

  5. சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்

  எப்போதும் சோர்ந்து போகாமல், ஊக்கத்தோடும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், நீங்கள் கருவுறும் வாய்புகள் அதிகமாகும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாகவும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யக் கூடாது. அது உங்களை சோர்வடைய செய்து விடக் கூடும்.

  6. மூலிகைகள்

  நீங்கள் ஆரோக்கியமாக கருவுற வேண்டும் என்றால், அதற்கு மருத்துவரை அணுக வேண்டும் என்று மட்டுமில்லை. சில எளிதாக கிடைக்கும் மற்றும் குறிப்பிடத்தக்க சில மூலிகைகளும் உங்களுக்கு உதவ முடியும். இவை உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவதோடு, எந்த விதத்திலும் பக்க விளைவுகளை உண்டாக்காது. உங்கள் பாட்டி அல்லது மூத்தவர்கள் இதனை பற்றி அறிந்திருப்பார்கள். மேலும் நாட்டு வைத்தியர்கள், சித்த வைத்தியர்களும் இதை பற்றி அறிந்திருப்பார்கள். அவர்களை நீங்கள் அணுகி ஆலோசனை பெற்று, மூலிகைகளை பயன்படுத்த முயற்சி செய்யலாம்.

  7. அழகு சாதனா பொருட்களை கவனிக்கவும்

  நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனா பொருட்களும் உங்கள் கருவுறும் வாய்ப்புகளை பாதிக்கும். இது சற்று ஆச்சரியமாக இருந்தாலும், உண்மையே. நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் அதிகம் மீதில் பராபென்ஸ், ஃபார்மால்டிஹைட், சோடியம் லாரில் சல்பேட், பாரஃபின், ஐசோபிரைல் ஆல்கஹால் அல்லது புரோபில் பராபன்கள் இருந்தால், அது ஆண் மற்றும் பெண் இருவரது ஹார்மோன்கள் மற்றும் கருவுறும் தன்மையை பாதிக்கும். இதனால் கரு உற்பத்தி இல்லாமலும் போகலாம்.

  8. உணவு முறைகள்

  உங்கள் உணவு முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். குறிப்பாக நேரம் தவறி உண்பது, உணவு உண்ணாமல், தவிர்ப்பது, போதிய உணவு உண்ணாமல் இருப்பது போன்ற விடயங்களை தவிர்ப்பது நல்லது. இவை அனைத்தும் ஏதாவது ஒரு விதத்தில் உடல் உபாதைகளை உண்டாக்குவதோடு, உங்கள் கருவுறும் வாய்ப்புகளையும் குறைக்கும். குறிப்பாக, ஆரோக்கியமான கரு முட்டைகள் உற்பத்தி ஆகாமல் போகலாம். அதனால் உங்கள் உணவின் மீது கவனம் வேண்டும்.  

  கருவுற சில வீட்டு குறிப்புகள்(Home remedies to get pregnant)

  மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகள் மட்டுமல்லாது, நீங்கள் எளிதாகவும், விரைவாகவும் கருவுற மேலும் சில எளிய விட்டு குறிப்புகள் உங்களுக்காக இங்கே:

  1. சூரிய கதிர்கள்

  Pixabay
  Pixabay

   சூரிய கதிர்களின் வைட்டமின் D சத்து நிறைந்துள்ளது. இந்த சத்து சூரிய கதிர்களில் இருந்து மட்டுமே கிடைக்கும். மேலும் இது உடலில் கால்சியம் சாரவும் உதவுகின்றது. இந்த வைட்டமின் D சத்து ஆரோக்கியமாக கருவுறவும் உதவுகின்றது. அதனால் தினமும் இளம் சூரிய கதிர்கள் உங்கள் மீது படும் படியாக சில நிமிடங்கள் இருக்க வேண்டும்.

  2. மாதுளை பழம்

  இந்த பழத்தில் அதிக ஆக்சிஜனேற்றம் உள்ளது, மேலும் இதில் இருக்கும் பிற சத்துக்கள் ஆரோகியமான கரு முட்டைகள் உருவாக உதவுகின்றது. இதனால் கருவுறும் வாய்ப்பும் அதிகமாகின்றது.
   

  3. ஆலிவ் எண்ணை

  இந்த எண்ணை பெண்கள் விரைவாக கர்ப்பம் அடைய உதவுகின்றது. இதனை முறையாக உங்கள் உணவில் பயன்படுத்தி வந்தால், நீங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம்.

  4. துரித உணவு

  கடைகளில் கிடைக்கும் துரித உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அவை உங்கள் உடலுக்கு கேடு விளைவிப்பதோடு, அவற்றில் இருக்கும் ரசானங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். இதனால் நீங்கள் கருவுறும் வாய்ப்பும் பாதிக்கப்படுகின்றது.

  5. யோகா

  Pixabay
  Pixabay

  உங்கள் உடல் வாகை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் மனமும், ஆன்மாவும் நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். பெண்கள் கருவுற வேண்டும் என்றால், உடல் மட்டும் ஆரோக்கியமாக இருந்தால் போதாது. அவர்களது மனமும், ஆன்மாவும் நிம்மதியாக இருக்க வேண்டும். மன நிம்மதீயும், மகிழ்ச்சியும், விரைவாக கருவுற உதவியாக இருக்கும்.

  கேள்வி பதில்கள்(FAQ)

  1. கருவுற சில எளிமையான குறிப்புகள்?

  உங்களுக்காக இங்கே சில எளிமையான கருவுறும் குறிப்புகள்:

  • உங்கள் மாதவிடாய் காலத்தையும், எவ்வளவு விரைவாக ஏற்படுகின்றது என்பதை பற்றின குறிப்புகளை கவனிக்க வேண்டும்
  • உங்கள் மாதவிடாய் காலம் எத்தனை நாட்கள் உள்ளது என்று கவனிக்க வேண்டும்
  • கருமுட்டை ஆரோக்கியமாக கருவுறம் நிலையில் இருக்கும் நாட்களை கணக்கில் கொண்டு தினம்தோறும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உறவு கொள்ள வேண்டும்
  • உங்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எடையை குறைக்க வேண்டும்
  • தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
  • கடினமான உடற்பயிற்சி மற்றும் வேலைகளை தவிர்க்க வேண்டும்

  2. எவ்வளவு நேரம் விந்தணுவை கருவுற உள்ளே வைத்திருக்க வேண்டும்?

  விந்தணு பெண்ணின் கருப்பையில் 5 நாட்கள் வரை உயிருடன் இருக்கும். ஆனால், உடலுறவு கொண்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே கருமுட்டையும், விந்தணுவும் சேர்ந்து கரு உண்டாகி விடுகின்றது.

  3. மாதவிடாய் ஆன பின் எத்தனை நாட்களுக்குள் கருவுறம் தன்மையை பெண் பெறுகின்றாள்?

  பொதுவாக ஒரு மாதவிடாய் முடிந்து அடுத்த மாதவிடாய் தொடங்க 12 முதல் 14 நாட்கள் இருக்கும் காலகட்டத்தில் பெண் கருவுறும் தன்மையை அதிகம் பெறுகின்றாள். இந்த காலகட்டத்தில் செய்யும் முயற்சி, கருவுறம் வாய்ப்பை அதிகப்படுத்தும்.

  4. உடலுறவுக்கு பின் சிறுநீர் கழித்தால் விந்தணு வெளியேறி விடுமா?

  உடலுறவுக்கு பின் விந்தணுக்கள் சிறுநீர் வடிகுழாயில் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அதனால, உறவுக்கு பின், உடனடியாக சிறுநீர் கழிக்க முயற்சி செய்தால், விந்தணு வெளியேறிவிடும் வாய்புகள் உள்ளது.

  5. இரண்டு நாட்களில் கரு உண்டாகி இருப்பது தெரியுமா?

  ஒரு சிலருக்கு கர்ப்பம் அடைந்திருப்பது வெகு விரைவாக தெரிய வந்தாலும், பலருக்கும் அது உடனடியாக தெரியாது. நீங்கள் கருவுற்றிருப்பதை தெரிந்து கொள்ள நிச்சயம் சில நாட்கள் ஆகும். குறைந்தது 2 வாரங்களில் இருந்து 4 வாரங்களாவது ஆகும்.

  6. நாள்காட்டி முறையில், உடலுறவு கொள்ள எது பாதுகாப்பான நாட்கள்?

  நீங்கள் எடுத்துள்ள குறிப்பிலேயே குறைந்த காலகட்டம் கொண்ட மாதவிடாய் காலம் எது என்று பாருங்கள். பின் உங்கள் மாதவிடாயின் மொத்த நாட்களில் இருந்து 18 கழிக்கவும். பின் அந்த எண்ணை நாள் ஒன்றில் இருந்து தற்போது நடக்கும் மாதவிடாய் காலத்தில் கணக்கிடவும். பின் அந்த நாளை குறித்துக் கொள்ளவும். நீங்கள் குறிக்கும் அந்த நாள் தான் முதல் கருவுற வளமான நாள்.

   

  மேலும் படிக்க - நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா? இதோ தாய்மார்களுக்கான வழிகாட்டிகள்!

  மேலும் படிக்க - கர்ப்ப காலத்தில் அணிய வேண்டிய கலக்கலான உடைகள் மற்றும் அதற்கான கடைகள் !

  பட ஆதாரம்  - Shutterstock

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!