எப்போதும் உன்னை நேசித்துக்கொண்டே இருப்பேன்..குட்பை தர்ஷன்.. சனம் ஷெட்டியின் கண்ணீர் வாக்கு

எப்போதும் உன்னை நேசித்துக்கொண்டே இருப்பேன்..குட்பை தர்ஷன்.. சனம் ஷெட்டியின் கண்ணீர் வாக்கு

பிக்பாஸ் டைட்டில் வின்னராகப் போவது இவர்தான் என மக்களால் அடையாளம் தரப்பட்ட நபர் தர்ஷன். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும்போது இவரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு யாரென்றே தெரியாது.

இலங்கையில் இருந்து தான் பார்த்து வந்த ஐடி வேலையை விட்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்று நான்கு வருடங்களுக்கு முன்பாக சென்னையில் வந்து இறங்கியவர் தர்ஷன் (tharshan). பல சிரமங்களுக்கு இடையில் தர்ஷன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்தார்.

அதற்கு அவரது காதலியான சனம் ஷெட்டியே உடன் நடிக்கும் துணையாகவும் தயாரிப்பாளர் ஆகவும் மாறி இருந்தார். மேகி எனப் பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் உடன் பிக் பாஸ் வீட்டில் தர்ஷன் 50 நாட்கள் கடந்ததற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் காதலி சனம் ஷெட்டி.

தங்கள் காதலின் மேல் அதீத நம்பிக்கை கொண்டிருந்த தர்ஷன் சனம் ஷெட்டி ஜோடி என்பதற்கு சாட்சி தர்ஷன் பிக் பாஸிற்குள் (biggboss) நுழையும் போதும் சனம் ஷெட்டி உடன்தான் வந்திருந்தார். காதலியின் முகத்தை பார்த்தபடியேதான் அவர் உள்ளே சென்றார்.

எனக்கு அவளை பார்க்க இஷ்டம் இல்லை.. லாஸ்லியா அம்மா கருத்து - இலங்கைக்கு விரைந்த பிக்பாஸ் குழு

Twitter

இப்படி ஒரு அழகான காதல்கதை நடந்து கொண்டிருக்க உள்ளிருந்த ஷெரினுக்கு தர்ஷன் மேல் க்ரஷ் விழுந்தது. இதனைக் கூட சனம் ஷெட்டி பெரிதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுக் கொள்ளவில்லை. தன்னுடைய தர்ஷன் தன்னுடைய தர்ஷனாகவே திரும்பி வருவான் என்பதுதான் அவரது எண்ணமாக இருந்திருக்கக் கூடும்.

ஷெரின் மற்றும் தர்ஷன் இடையிலான இந்த கெமிஸ்ட்ரி நியாயமான எல்லைகளோடு இருந்தது. 64 கேமராக்கள் மத்தியில் எங்கும் சறுக்காமல் ஒரே சீராகவும் நேராகவும் சென்று கொண்டிருக்கிறார் தர்ஷன். ஷெரின் மனதை நோகடிக்காமல் அதே சமயம் தன்னுடைய கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொண்டு அற்புதமான இதயம் கொண்ட நபராக தர்ஷன் ஜொலிக்கிறார்.

இதனை வெளியில் இருந்து பார்த்த வனிதா உள்ளே சென்றதும் ஷெரீனுக்கு பல விதங்களில் அறிவுறுத்தினார். ஷெரினும் எனக்கு அவனைப் பார்த்தால் எல்லாம் மறந்துடுது என்றும் நான் ஏன் இப்படி ஆகிறேன் எவ்வளவோ கட்டுப்படுத்தியும் கூட என்னால் தர்ஷன் பக்கம் போகாமல் இருக்க முடியவில்லை. இந்த வீட்டில் ஏதோ இருக்கிறது என்றும் பலவாறாக பேசிக் கொண்டிருந்தார்.

சில சமயங்களில் தர்ஷன் சுயநலமாக இருப்பதாகவும் தன்னைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் தான்தான் தர்ஷனிடம் சென்று பேசுகிறோம் தவிர தர்ஷன் தன்னுடன் பிரியமாக இல்லை என்றும் பல்வேறு விதமாகப் புலம்பினார். ஷெரினின் இந்த நிலைக்கு சங்கத் தமிழில் பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றன. அதை சொன்னால் பிரச்னையாகிவிடும். ஆகவே வேண்டாம்!

டிஷர்ட்டை வைத்து 'குருநாதர்' செய்த இன்டர்னல் பாலிடிக்ஸ்..சாண்டி மனைவி மூலம் அம்பலமான உண்மை

Twitter

இதனை சரியாக உணர்ந்த வனிதா பக்குவமாக ஷெரினுக்கு இதனை எடுத்து சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் என்னுடைய காதலனோ புருஷனோ இப்படி உள்ளே இருந்து யாரோ ஒரு பெண் இப்படி நடந்து கொண்டால் எனக்கு நிச்சயம் கோபம் வரும். இதற்கு பெயர் affair என்று கூறி ஷெரினின் மனதை காயப்படுத்தி விட்டார்.

வனிதா சொல்ல வந்த விஷயம் தர்ஷன் தெளிவாக இருக்கிறான் ஆனால் வெளியே ப்ரொஜெக்ட் ஆவது வேறு. ஷெரின் தர்ஷனை காதலுடன் பார்ப்பதும் காஃபி தருவதும் தவறாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே நீ நீயாக இந்த விளையாட்டை விளையாடு என்பதை சொல்லாமல் ஷெரின் தர்ஷன் இருந்தால் டைவர்ட் ஆகிறார் வேலை செய்யவில்லை என்றெல்லாம் சுத்தி வளைத்து கடைசியில் affair என்கிற வார்த்தையில் முடிக்க கிளம்பியது பூதாகரமான பிரச்னை.

சாக்ஷியின் தோழியான சனம் ஷெட்டி இதுபற்றி ஏதோ மனம் வருந்த அதனை மனதில் வைத்துக் கொண்டே சாக்ஷி ஷெரினிடம் வனிதாவுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த பஞ்சாயத்தை வழக்கம் போல நாட்டாமை கமல்ஹாசன் முடிவுக்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில் தர்ஷனின் காதலி என்று ஒரு பெண் வெளியே இருப்பதால்தான் உள்ளே தர்ஷன் ஷெரின் காதலிக்க முடியவில்லை என்று ஒரு முட்டாள்தனமான க்ரூப் நினைத்திருக்கிறது. தவிர உன்னால்தான் தர்ஷனுக்கு கெட்ட பேர் என வெளியே தான் பாட்டுக்கு சந்தோஷமாக தனது காதலனை வாழ்த்துக்களோடு அவனது பயணத்தை ரசித்து வந்த பெண் ஆன சனம் ஷெட்டி மீது அந்த க்ரூப் தாறுமாறாக குற்றம் சாட்டி இருக்கிறது.

அதுமட்டும் அல்லாமல் தர்ஷனின் சகோதரர் தனது தம்பி தற்போது ஹீரோ ஆகக் கூடிய நிலைமையில் இருப்பதால் இந்த நேரத்தில் இந்தக் காதல் அவனது எதிர்காலத்தை குலைக்கலாம் என அவராகவே எண்ணிக் கொண்டு சனம் ஷெட்டியிடம் நீ விலகியே இரு என்று கூறியிருக்கிறார்.

தர்ஷனுடனானஉறவை விமர்சனம் செய்ய உனக்கு உரிமையில்லை : வனிதாவை வெளுத்து வாங்கிய ஷெரின்!

இது எல்லாம் சேர்ந்து தந்த அழுத்தம் தற்போது சனம் ஷெட்டி கண்ணீருடன் அழுது கொண்டே ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் நான் தர்ஷன் முன்னேற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் எடுத்திருக்கிறேன். எப்போதும் தர்ஷன் நன்றாக இருக்க வேண்டும் அதுவே எனது ஆசை.

தர்ஷன் இமேஜ் கெடுவதற்கு நான் ஒருபோதும் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை. என்னால் தர்ஷன் மற்றும் ஷெரின் இருவரும் மனவேதனை அடைய வேண்டாம். இனிமேல் எங்கும் நான் தர்ஷன் குறித்து பேசவே மாட்டேன். இந்த நிமிடத்தில் இருந்த நான் தர்ஷன் வாழ்க்கையில் இல்லை (எனும் போது உடைந்து அழுகிறார்)

ஆனாலும் மனதிற்குள் நான் தர்ஷனைக் காதலிப்பேன். அதற்கு யாரும் என்னை எந்த தடையும் செய்ய முடியாது என்று கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து பல விடியோக்கள் மற்றும் சில பதிவுகளை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

 

அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள்

தர்ஷா.. நீ வைரம் போல பிரகாசிக்க வேண்டும். இந்த உலகம் உன்னைப் பார்த்துக் கொள்ளும் என்பதால் நான் உன்னை விட்டு விலகுகிறேன்.இந்த உலகம் உனக்கான சிறந்த வாழ்க்கையையும் சிறந்த காதலையும் தரும் என்று நான் நம்புகிறேன்.

தொடர்ந்து இந்த வெறுப்பு வார்த்தைகளை என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை.எல்லாப் பக்கத்தில் இருந்தும் நான் வெறுப்புகளை உள்வாங்குவது எனக்கு சிரமமாக இருக்கிறது.இந்த மொத்த உலகமும் என்னை உன்னிடம் இருந்து காப்பாற்ற துடிக்கிறது. அவர்கள் விருப்பம் போலவே இப்போது நீ என்னிடம் இருந்து காப்பாற்றப்படுகிறாய்.

தர்ஷன் ரசிகர்கள் மற்றும் தர்ஷன் ஷெரின் காதல் ரசிகர்கள் இப்போது சந்தோஷமாக இதனைக் கொண்டாடலாம். பிக் பாஸின் ஆகச் சிறந்த காதல்கதை வெல்லட்டும். பிரியம் ஆரம்பித்து 75 நாட்கள் ஆகும் அவர்கள் இருவரும் எனக்காக எதையும் தியாகம் செய்ய வேண்டாம். என்னுடைய காதலை நான் அவர்களுக்காக தியாகம் செய்கிறேன். தர்ஷனின் சந்தோஷத்திற்காக அவனது வெற்றிக்காக நான் எனது காதலை தியாகம் செய்கிறேன்.

என் குடும்பத்தார் இதனால் மனம் உடைந்து போயிருக்கின்றனர். நான் மொத்தமாக உடைந்து விட்டேன். இந்த நேரம் இதனை நான் சொல்லியாக வேண்டிய நேரமாக கருதுகிறேன். தர்ஷன் எப்போதும் நீ என் இதயத்திலும் பிரார்த்தனைகளில் இருப்பாய். ஆனால் உன்னை நான் இனி என்றுமே தொந்தரவு செய்ய மாட்டேன்.

எப்போதும் என்றும் உன்னை நேசித்துக் கொண்டே இருப்பேன், குட்பை தர்ஷன்

என்று மிகவும் உருக்கமாக தனது இறுதி போஸ்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி.

நடப்பதையெல்லாம் பார்க்கும்போது இன்னொரு பெண் இருக்கும்போது நீ தர்ஷன் மீது க்ரஷ் ஆவது தவறு என்று ஷெரீனுக்கு எடுத்து சொன்ன வனிதாவை விடவும் மோசமானவர்கள் நீண்ட காலம் தர்ஷனை நேசித்த காதலி சனம் ஷெட்டியை பிக் பாஸ் புகழுக்காக தர்ஷனை விட்டு விலகுமாறு வற்புறுத்திய மனிதர்கள் தான். அது ரசிகர்களோ அல்லது தர்ஷனின் உறவினரோ யாராக இருந்தாலும் தர்ஷனுக்கு பதிலாக இவர்கள் தர்ஷன் வாழ்க்கையில் முடிவெடுத்தது நிச்சயம் மகாப் பெரிய தவறாகும்.

நடப்பது எதுவும் அறியாத தர்ஷன் வெளியே வந்த உடன் நிச்சயம் இதற்காக மனம் வருந்தத்தான் போகிறார். அவரது பங்கு எதுவுமே இல்லாமல் அவரில்லாமலே முறிந்து போன இந்தக் காதலை மீண்டும் இணைக்க தர்ஷன் முயற்சிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன