எனக்கு அவளை பார்க்க இஷ்டம் இல்லை.. வெறுப்பில் லாஸ்லியா அம்மா - விரைந்த பிக்பாஸ் குழு!

எனக்கு அவளை பார்க்க இஷ்டம் இல்லை.. வெறுப்பில் லாஸ்லியா அம்மா - விரைந்த பிக்பாஸ் குழு!

சண்டையும் வேதனையும் வன்மமும் துரோகமும் கலந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்வை (biggboss) பார்த்தாலே லாஸ்லியா கவின் காதல் காட்சிகள்தான் அதிகமாகப் பார்க்க முடிகிறது. ஊடகங்களை பார்த்தாலோ அல்லது படிக்க நேர்ந்தாலோ லாஸ்லியா கவினின் லீலைகள் என பல்வேறு வகையில் கண்டனங்கள் குவிகிறது.

இந்நிலையில் லாஸ்லியாவின் காதல் நடவடிக்கைகளால் லாஸ்லியாவின் அம்மா பாதிக்கப்பட்டிருக்கிறார். மகள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்கிறது பிக்பாஸ் குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்கள்.

லாஸ்லியாவின் இன்னொரு காதலர்..இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சி தகவல் !

எப்போதும் உன்னை நேசித்துக்கொண்டே இருப்பேன்..குட் பை தர்ஷன்..சனம் ஷெட்டியின் கண்ணீர் வாக்கு

Youtube

75 நாட்கள் நெருங்கிய நிலையில் அடுத்த வாரம் முதல் நாளில் இருந்து பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை பார்க்க அடுத்த வாரம் அவர்களின் நெருங்கிய உறவினர்கள் வருவது நிகழ்வின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது.

முதல் சீசனில் ஸ்நேகனின் அப்பா வந்தது பெரும் பரபரப்பையும் மனநெகிழ்வையும் ஏற்படுத்தி இருந்தது. அதே போலவே இரண்டாவது சீசனில் ஐஸ்வர்யாவின் அம்மா மற்ற போட்டியாளர்களிடம் வந்து மன்னிப்பு கேட்டது மனதை தொட்டது.

அதைப் போலவே சென்றாயன் நீண்ட காலத்திற்கு பின்னர் தந்தையாக போகிறார் என்கிற தகவல் பிக்பாஸ் (biggboss) மூலம் உலகிற்கே தெரிந்தது. அவரின் மனைவிக்கு அங்கேயே சின்னதாக சீமந்தம் கூட நடத்தப்பட்டது. இதனால் உறவினர்கள் வரும் வாரம் என்பது போட்டியாளர்களை விட பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யமான வாரமாகவே இருக்கும்.

என்னமோ இவர் பெத்து வளர்த்த மாதிரி..ஆத்திரத்தில் கவின்.. அதிர்ச்சியில் சேரன்..

 

Youtube

இந்த சீசனுக்காக போட்டியாளர்களின் உறவினர்களை பிக் பாஸ் குழுவினர் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதற்காக லாஸ்லியாவின் அம்மாவை தொடர்பு கொண்ட போது காதலின் பெயரால் லாஸ்லியா செய்பவைகளில் அவருக்கு திருப்தி இல்லை என்று தோன்றுகிறது.

இதனை அடுத்து பிக் பாஸ் குழுவினர் லாஸ்லியாவின் அம்மாவை சமாதானம் செய்து நிகழ்ச்சிக்கு அழைத்து வர முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக இலங்கைக்கு ஒரு குழு சென்றிருக்கிறது. ஏற்கனவே லவ் என்ற பெயரில் தனது முதல் மகளைத் தான் இழந்து விட்டதாகவும் லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் இப்படி நடப்பது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 

 

Youtube

லாஸ்லியாவின் அம்மாவை போலவே பல இலங்கைத் தமிழர்களும் லாஸ்லியா மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். லாஸ்லியா மற்றும் தர்ஷன் இருவரும் இலங்கைத் தமிழர்கள் என்பதால் அங்கே அவர்கள் சந்தித்த பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் இந்த நிகழ்வில் ஜெயிக்க வேண்டும் என்று கவின் போலித்தனமாக பேசி வருகிறார்.

உண்மையில் காதலின் பெயரை டேமேஜ் செய்த கவினால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து விட்டதால் ஜெயிக்கும் குதிரையின் மேல் பணம் கட்ட விரும்பும் நபர்போல தர்ஷனுக்கு கிடைத்த கைதட்டல்களை வைத்து ஜெயிக்க போகும் தர்ஷனுக்கு தான் விட்டு கொடுப்பதாக பாசாங்கு செய்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பார்த்து வரும் இலங்கைத் தமிழர்கள் "தர்ஷன் , லாஸ்லியா மட்டும் இங்கே பிரச்னைகளை சந்திக்கவில்லை இங்குள்ள அனைவரும் அதனை சந்தித்திருக்கிறோம். அவர்களை விடவும் உயிர் இழப்பும் பொருள் இழப்பும் ஏற்பட்ட எத்தனையோ பேர் இங்கே இருக்கிறோம். எங்கள் நாடு சார்பாக இந்தப் போட்டியில் கலந்து கொண்ட லாஸ்லியா எங்கள் நாட்டுக்கு பெருமை தரும் வகையில் எதையும் செய்யாமல் காதல் என்கிற ஒற்றை உணர்வுக்கு மட்டுமே மதிப்பு கொடுத்து எங்களை பெருமைப்படுத்த தவறி விட்டார். வெற்றி என்பது அவரவர் கடுமையாக முயற்சி செய்து அதன் மூலம் பெற வேண்டுமே தவிர இப்படித் தவறான தூண்டுதல்களால் குறுக்கு வழிகளால் வெற்றியை பெற முயற்சி செய்யக் கூடாது. தனிப்பட்ட உணர்வுகளை தூண்டி இரக்கம் மூலம் கிடைக்கும் வெற்றி வெற்றியாக இருக்க முடியாது" என்கிறார்கள்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.