அழகான கோவைப் பெண்களின் ஆடை ரசனைகள் (Best Boutiques In Coimbatore In Tamil)

அழகான கோவைப் பெண்களின் ஆடை ரசனைகள் (Best Boutiques In Coimbatore In Tamil)

அழகான தமிழ்ப் பெண்கள் நிறைந்த மாவட்டம் என்றால் அதில் முதல் இடத்தில் வருவதென்னவோ நம்ம கோவைப் பெண்கள்தான். மேற்குத் தொடர்ச்சி மலையின் காற்றும் சிறுவாணி ஆற்றின் நீரும் கோவைப் பெண்களை பேரழகிகள் ஆக மாற்றி விடுகிறது.

அழகு என்பது குணம், நடவடிக்கைகள் , மொழியின் மரியாதையை, அணியும் ஆடைகளில் உள்ள தனித்தன்மை என எல்லாம் சேர்ந்ததுதான். எப்போதுமே கோவைப் பெண்களுக்கான ஆடைத் தேர்வுகள் வித்தியாசமானதாக அதே சமயம் நாகரிகம் ஆனதாக அழுத்தமான வண்ணங்கள் அதிகமான அலங்காரங்கள் என்று இல்லாமல் எளிமையான கைத்தறி உடைகளிலும் தேவதைகளாக மின்ன வைக்கும் ஆடைகளையே தேர்வு செய்வார்கள்.               

 

Table of Contents

  கோவையின் சிறந்த பொட்டிக் (boutiques) நிறுவனங்கள் (Best Boutiques In Coimbatore In Tamil)

  கோவையில் உள்ள சிறந்த பொட்டிக் நிறுவனங்கள் (boutiques) பற்றி பார்க்கலாம். இங்கே பெரும்பாலும் திருமண ஆடைகள் அதிகமான டிசைனர் ஆடைகள் கிடைக்கும்.                  

  மணப்பெண் ஆகப் போகிறீர்களா! தேர்ந்தெடுங்கள் உங்களுக்கான சிறந்த மணப்பெண் அலங்கார பார்லரை!

  Anya Boutique

  பாரம்பர்ய பட்டுபுடவைகள் முதல் டிசைனர் சாரிகள் ஷெர்வானிகள் என மணமகள் மணமகன்களுக்கு பிடித்த இடமாக இருப்பது ANYA BOUTIQUE. இவர்களிடம் இருக்கும் டிசைனர் குழுவினர் பாரம்பர்யம் மாறாமல் அதில் தங்களது ஃபியூஷன் வேலைகளை செய்வதில் வல்லவர்கள்.

  Arvi The Couturier

  மணமகள் மற்றும் பார்ட்டி ஆடைகளுக்கான சரியான தேர்வு  ARVI – THE COUTURIER. இவர்களிடம் நமக்கு வேண்டிய டிசைனில் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பல ஆடைகள் இங்கே குவிந்துள்ளன. ஒரே மாதிரி ஆடை அணிய விரும்பும் அம்மா மகள்களுக்கான செம சாய்ஸ்  ARVI – THE COUTURIER.                                                        

  Sasthas Online Studio

  உள்ளம் கவரும் டிசைன்கள், அதில் செய்யப்பட்டிருக்கும் ஆடம்பரமான வேலைப்பாடுகள் இவர்களின் தனித்திறமை நிரூபிக்கிறது. அதனால் தான் இவர்கள் கோவையில் சிறந்த பொட்டிக்களில் ஒருவராக இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான ஆடைகளஞ்சியம் SASTHAS ONLINE STUDIO.                                                                                     

  டீன் பெண்களுக்கு ஏற்ற ட்ரெண்டிங் ஆடைகள்.. பட்ஜெட் விலையில் !

  Ekviraz Hues

  பெண்களுக்கான பாரம்பர்ய ஆடைகள் திருமண ஆடைகள் வாங்க சரியான இடம் EKVIRAZ HUES. உடனுக்குடன் டெலிவரி செய்வதில் முதலிடத்தில் இருப்பதே இவர்கள் தனிச்சிறப்பு. டிசைனர் ஆடைகளின் வண்ணங்களும் டிசைன்களும் காண்பர் மனதை கொள்ளை கொள்ளும்.

  Mantra The Design Studio

  உங்கள் திருமணம் நெருங்கி விட்டது என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் MANTRA – THE DESIGN STUDIOதான். மணமகளுக்கு தேவையான முழுமையான ஆடைத் தேர்வுகளை இவர்களே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து கொடுக்கிறார்கள். இது தவிர டிசைனர் ஆடைகள் குழந்தைகள் ஆடைகள் மற்றும் அழகான வேலைப்பாடுகளால் நம் கண்களைக் கவரும் டிசைனர் பிளவுஸ் ரகங்கள் இவர்கள் தேர்வாக இருக்கிறது. 

  MANTRA

  கோவையின் பெஸ்ட் பொட்டிக் பட்டியல் (List Of Boutiques In Coimbatore)

  கோவையின் பெஸ்ட் பொட்டிக்குகள் பட்டியல் உங்கள் ஆடைத் தேர்வுகளை எளிதாக மாற்றும். அதற்கான வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொட்டிக் நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

  The Butterflies

  கோவையின் பிரபலமான பல பொட்டிக் நிறுவனங்கள் இருக்கும்போதே அதில் தனியாக தெரிவது THE BUTTERFLIES பொட்டிக் நிறுவனம். பெண்களுக்கான பாரம்பர்ய ஆடைகளை மற்ற யாரும் தராத விலையில் இவர்கள் விற்பனை செய்கின்றனர். டிசைனர் ஆடைகளுக்கான சரியான தேர்வு THE BUTTERFLIES.

  The Butterfly

  Tanushiya

  கோவையில் 2011 ஆம் ஆண்டு முதல் ஆடை விற்பனையில் தனித்தன்மையோடு விளங்கி வருகிறது Tanushiya. இங்கே உள்ள அதிக அளவிலான சேலைகள் உங்கள் தேர்வுகளை மிகவும் சிரமத்துக்குள்ளாக்கும். எல்லா புடவைகளில் இவர்களின் கலைவண்ணம் ஜொலிக்கும்.இங்கே சென்றால் நீங்கள் எதனாலும் ஏமாற்றம் அடையாமல் விரும்பிய ஆடையை வாங்கி வரலாம். 

  Vrutsha

  வ்ருட்ஷா கோவையில் உள்ள ஆன்லைன் பொட்டிக்களில் ஒன்று. காஞ்சிபுரம் பட்டுபுடவைகளில் இவர்கள் உருவாக்கும் ரிச் மற்றும் ஸரி ஒர்க் இவர்களைத் தனித்து காட்டுகிறது. இதற்கு முன்பு யாரும் அணியாத உடைகளை நீங்கள் அணிய விரும்பினால் உங்கள் தேர்வாக இந்தக் கடை இருக்கட்டும். 

  Keya

  ஃபேஷன் துறையில் மிக சிறந்து விளங்கும் ஃபேஷன் டிசைனர் ஆன கீர்த்தனா ஸ்ரீராம் அவர்களால்  KEYA பொட்டிக் நிர்வகிக்கப்படுகிறது. அனார்கலி ஆடைகள் மற்றும் காக்டைல் ஆடைகள் போன்றவை இவர்களின் தனிச்சிறப்பு. பார்ட்டி ஆடைகள் வாங்க சரியான இடம் KEYA. வித்யாசமான டிசைனர் புடவைகள் இங்கே வாங்கலாம்.

  Riyanns Boutique

  RIYANNS BOUTIQUE நிறுவனம் 2013ம் ஆண்டு முதல் கோவையில் தங்கள் விற்பனையை ஆரம்பித்திருக்கின்றனர். நல்ல டிசைன்களில் குறைந்த விலை நிரந்தர தரத்துடன் இவர்களின் ஆடைகள் கோவை மக்களை கவர்ந்திருக்கிறது.

  Riyan Boutique

  Rangvarsha

  தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆன கோவையில் தங்கள் முதல் அடியை எடுத்து வைத்த Rangvarsha நிறுவனம் தங்களின் விற்பனை விரிவடைந்ததன் காரணமாக ஹைதராபாத்தில் இன்னொரு கிளையை திறந்தனர். அந்த அளவிற்கு இவர்களின் டிசைன்கள் முதல் ரகத்தில் இருக்கிறது. 

  Sparkle Boutique

  கோவை ராமநாதபுரத்தில் இயங்கி வரும் இந்த Sparkle Boutique நிறுவனம் தங்களுடைய நுணுக்கமான டிசைனர் உடைகளால் தனித்துவம் பெற்ற நிறுவனமாக இருக்கிறது. வண்ணமயமான பிளவுஸ்களில் பல்வேறு விதமான நுணுக்கமான கலையுணர்வு தெறிக்கும் எம்ப்ராய்டரிகளை இடுவதில் இதுவே சிறந்த கடை.இங்கே ஆடைகளுடன் பல்வேறு அலங்கார பொருட்களும் கிடைக்கிறது.

  பட்ஜெட் விலையில் காலேஜ் பெண்களுக்கான புடவை கலெக்ஷன்கள் !

  Femme La Boutique

  புது சித்தாபுதூர் அருகே ஆவாரம்பாளையம் ரோட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது

  Femme La Boutique. நவீன ஆடைகளின் சங்கமம் என்று இந்த பொட்டிக் நிறுவனத்தை நாம் அழைக்கலாம். எளிமையான சுடிதார்கள் முதல் கண்ணைக்கவரும் டிசைனர் ஆடைகள் வரை அத்தனையும் இங்கே சங்கமம்.

  Swan The Boutique

  வித்யாசமான பெயர் மட்டும் அல்லாமல் வித்யாசமான கண்கவர் ஆடைகளின் தொகுப்பு இந்த swan the boutique. அடிக்கடி இவர்கள் தரும் தள்ளுபடி விற்பனையை பயன்படுத்தி கொள்ளவே பல மக்கள் இங்கே வாடிக்கையாளர்களாக இருக்கிறார். அன்றாட ஆடைகளின் அலங்கார சங்கமம் swan the boutique.

  Cocun Boutique

  கோவை உப்பிலிபாளையத்தில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் பொட்டிக் சென்டர் Cocun Boutique. இங்கே இல்லாத ஆடைகளே இருக்காது எனலாம். அந்த அளவிற்கு அதிகமான கலெக்ஷன் இவர்களிடம் இருக்கிறது.

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.