நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. நாவல் பழம், விதை, இலை, பட்டை என்று அனைத்துமே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கவல்லது. நாவல் பழத்தால் கிடைக்கூடிய பலன்கள் குறித்து இங்கு காணலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு : நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் உள்ளது, இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் குறைத்துவிடலாம்.
புற்றுநோயை தடுக்கும் : நாவல் பழத்தில் (Jamun fruit) அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது புற்று நோய் வராமல் காக்க உதவுகின்றது. தினமும் நாவல் பழம் உண்பவர்களுக்கு 30 சதவீதம் புற்று ஏற்படுவது குறைவு என பலவித ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள் தினமும் அதிகளவு நாவல் பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. நாவல் பழத்தில் வைட்டமின் சி மற்றும் பலவித வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். மேலும் உங்களுக்கு நோய் வராமல் காக்க உதவும்.
எலும்புகளின் வலிமையை அதிகரிக்க : நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும். எனவே எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க தினமும் நாவல் பழத்தினை சாப்பிட வேண்டும்.
பற்கள் பிரச்சனைகளுக்கு : நாவல் பழம் (jamun fruit) அதிகம் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. பலருக்கு ஈறுகளில் வீக்கம், ரத்தம் வடிதல், பற்கூச்சம், பற்களில் சொத்தை ஏற்படுவது, வாய் மற்றும் பற்களில் கிருமிகளால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாவல் பழங்களை நன்றாக சாறு பிழிந்து அந்த சாற்றில் சிறிது உப்பு கலந்து தினமும் காலை மற்றும் மதிய வேளைகளில் அருந்தி வந்தால் வாய், பற்கள் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு : ஒரு சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் மற்றும் பித்தப்பையில் வீக்கம் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய நாவல் பழம் சிறப்பாக செயல்படுகிறது. தினமும் காலையில் சிறிது உப்பு சேர்த்த நாவல் பழங்களை சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் பித்தப்பைகளில் ஏற்பட்டிருக்கும் அழற்சி மற்றும் வீக்கத்தை குறைத்து உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
ரத்தத்தை சுத்திகரிக்க : ரத்தத்தை சுத்தப்படுத்தும் வேலையையும் நாவல்பழம் செய்கிறது. நாவல் பழம் மட்டுமின்றி அதன் கொட்டைகளும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாவல் பழக்கொட்டையை அரைத்து அதை வடிகட்டி தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கிட்டதட்ட 35 சதவீதம் அளவுக்கு குறையும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனால் குறைந்த ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
பருக்கள் நீங்க : நாவல் பழத்தின் (jamun fruit) விதையை எடுத்து காய வைத்து பொடி போன்று தயாரித்து கொள்ளவும். இதனுடன் பால் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் நீங்கும். மேலும் நாவல் விதை, ஆரஞ்சு தோல், பாதாம் எண்ணெய், பன்னீர் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து நீரால் கழுவினாலும் பருக்கள் கட்டுப்படுத்தப்படும்.
பளீச் சருமத்திற்கு : நாவல் பழத்தின் விதையை பொடி செய்து அதனுடன் கடலை மாவு, காய வைத்து பொடி செய்த எலுமிச்சை தோல் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். அதன் பின் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடத்திற்கு பின் முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகம் வெண்மை பெறும்.
அழகான பாதத்திற்கு : முதலில் நாவல் பழத்தின் சதை பகுதியை தனியாக எடுத்து அவற்றை நன்கு அரைத்து கொள்ளவும். இவற்றுடன் எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு சேர்த்து பாதத்தில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் அழுக்குகள் நீங்கி பாதங்கள் சுத்தம் ஆகும். அத்துடன் அழகான பாதத்தையும் பெறலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.