கிவி பழத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்களும் (Health Benefits Of Kiwi In Marathi)

கிவி பழத்தால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்களும் (Health Benefits Of Kiwi In Marathi)

பல வகை பழங்கள் இன்று கடைகளில் கிடைகின்றது. அவை ஒவ்வொன்றிற்கும் வெவேறு சத்துக்களும், நற்குணங்களும் இருகின்றது. இந்த வகையில் கிவி(Kiwi) பழம் இன்று அனைவருக்கும் பிரபலமாகிவரும் ஒரு பழ வகையாக இருகின்றது. கிவி பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் சரும நலத்திற்கும் பயன் தருகின்றது. ஒரு சிறிய முட்டை வடிவத்தில், சப்போட்டாவை போன்று தோற்றம் கொண்டது இந்த கிவி பழம். இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு சுவையை இது தரும். இதில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது.


கிவி பழத்தின் நன்மைகள், மற்றும் மேலும் பல தகவல்கள பற்றி தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்.

கிவி பலத்தை பற்றி விரிவான சில தகவல்கள் (Fast Facts Of Kiwi)

  • கிவி ஒரு பெர்ரி பழ வகையை சேர்ந்தது
  • நல்ல உறக்கம் மற்றும் சரும ஆரோக்கியம் ஆகிய இவை இரண்டும் இந்த பழத்தின் குறிப்பிடத்தக்க நற்பண்புகள்.
  • சீனாவில் இது அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகின்றது.
  • ஒரு கிவி பழத்தில் 54 கலோரிகள் உள்ளன.
  • கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான சத்துக்களை இது தரும்

கிவி பழத்தின் பயன்கள் (Uses Of Kiwi)

கிவி(Kiwi) பழம் பல வகைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதனை பொதுவாக அப்படியே சாப்பிட்டாலும், இதனை மேலும் பல உணவு வகைகளில் சேர்த்தும் பயன்படுத்தலாம். இந்த வகையில், இங்கே சில குறிப்புகள்.

1. கிவி பலத்தை வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், சுவாசம் குறித்த பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் குணமடையும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது

2. மல சிக்கலை போக்க, இதனை ஒரு நாளைக்கு இரண்டு என்ற முறையில் நான்கு வாரம் சாபிட்டால் முற்றிலும் இந்த பிரச்சனை குணமடையும்

3. ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் எட்டு வாரத்திற்கு தொடர்ந்து இதனை சாபிட்டால் அதிக இரத்த அழுத்தம் குணமடையும்

4. கிவி பழத்தை, தெதேன், பால், மற்றும் ஓட்ஸ், இவைகளோடு சாலடாக செய்து சாபிட்டால் நல்ல ருசியோடு, நற்பலனையும் தரும்

5. கிவி பழத்தை முந்திரி, பாதம், கீரை வகைகள், மற்றும் காளான் போன்றவற்றோடும் சாப்பிடலாம். இது நல்ல சுவையைத் தரும்

Also Read About பெண்களின் உடல்நலப் பிரச்சினைகள்

கிவி பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள் (Nutritional Values Of Kiwi)

ஒரு கிவி(Kiwi) பழம் சுமாராக 69 கிராம் எடை இருக்கும். இந்த எடை கொண்ட ஒரு கிவியில் எவ்வளது சத்துக்கள் நிறைந்துள்ளது என்று இங்கே பார்க்கலாம்;


• 42 கலோரீகள்

• 215 மில்லி கிராம் பொட்டாசியம்

• 1 கிராம் நார் சத்து

• 8 கிராம் புரதம்

• 23 கிராம் கால்சியம்

• 64 கிராம் வைட்டமின் C

• 2 கிராம் சர்க்கரை

• 1 மில்லி கிராம் வைட்டமின் E

• 8 மைக்ரோ கிராம் வைட்டமின் K

• 7 மில்லி கிராம் மக்னேசியம்

• 17 மைக்ரோ கிராம் பாலேட்

கிவி பழத்தின் 10 அற்புதமான நன்மைகள் (10 Health Benefits Of Kiwi)

கிவி(Kiwi) பழத்தில் அனேக நற்பலன்கள் நிறைந்துள்ளது. நல்ல ஜீரனத்தை ஏற்படுத்துவது முதல் உங்கள் சருமம் மற்றும் தலை முடி ஆரோக்கியத்தை அதிகப் படுத்துவது வரை கிவி பழம் பல நன்மைகளை உங்களுக்குத் தரும். இதனை தினமும் ஒன்று என்ற விகிதத்தில் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் பல நல்ல மாறுதல்கள் ஏற்படுவதை நீங்கள் காணலாம். இந்த பழத்தின் நற்பலன்களை பற்றித் தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

கிராம்பு உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை தீமைகள்!

1. நல்ல உறக்கம் (Good Sleep)

கிவி பழம், குறிப்பாக நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்க உதவும். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், நாளடைவில் நல்ல தூக்கம் கிடைப்பதை நீங்கள் உணரலாம்.

2. ஆரோக்கியமான சருமம் (Healthy Skin)

சருமத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய கோலோஜென் வைட்டமின் C யை பெரிதும் நம்பியுள்ளது. இந்த வைட்டமினில் தேவையான சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அடங்கி உள்ளது. இதனால் சூரிய கதிர், மாசு மற்றும் புகையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முடியும். மேலும் சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுத்து, நல்ல மிருதுவான தோற்றத்தைத் தரும்.

3. இருதய ஆரோக்கியத்தை அதிகப் படுத்தும் (Improves Cardiovascular Health)

கிவியில் நிறைந்துள்ள பொட்டசியம் மற்றும் நார் சத்து உங்கள் இருதய ஆரோக்கியத்தை அதிகப் படுத்த உதவும். பொட்டசியம் எடுத்துக் கொள்வதால் சோடியத்தின் அளவை குறைத்து இருதயத்தில் ஏற்படக் கூடும் பிரச்சனைகளை குறைகின்றது. ஒரு ஆய்வில் ஒரு நாளைக்கு 4 கிராம் பொட்டாசியம் எடுத்துக் கொண்டால் 5௦% இருதய நோயால் ஏற்படும் மரணத்தை குறைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

4. சிறுநீரக கற்களை அகற்ற உதவுகின்றது (Eliminates Kidney Stones)

அதிக அளவு பொட்டாசியம் எடுத்துக் கொள்ளும் போது, பக்கவாதம், தசை இழப்பு, எலும்பு தாது அடர்த்தி குறைவு, மற்றும் குறிப்பாக சிருநீரகப்பையில் கல் உற்பத்தி ஆவது போன்ற பிரச்சனைகளை வர விடாமலும், முன்பே இருந்தால், அதனை சரி செய்யவும் உதவுகின்றது.

5. மல சிக்கலை போக்கும் (Stomach Problems)

பல ஆய்வுகளில் கிவி பழத்திற்கு மலமிளக்கும் தன்மை இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. இதனால் இது சுலபமாக மலம் கழிக்க உதவுகின்றது.

6. இரத்த அழுத்தத்தை குணப்படுத்தும் (Healing Blood Pressure)

கிவி(Kiwi) பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குறிப்பாக இரத்த அழுத்தம் அதிகம் இருந்தால், அதனை சரி செய்து சீரான அளவிற்கு பெற உதவும். அதிக அளவு சோடியம் எடுத்துக் கொள்ளும் போது, இரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. எனினும், கிவி பழம் அதனை சீர் செய்ய உதவுகின்றது.

gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock

7. நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் (Helps Control Diabetes)

கிளைசெமிக் குறியீடு கொண்ட கிவி உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. கிவியில் இனோசிடோல் இருப்பதால், உடனடியாக சர்க்கரையின் அளவை உயர விடாமல் இது தடுகின்றது. இதனால், சர்கரையின் அழு சீராக இருக்கும்.

8. புற்றுநோயை தடுக்க உதவும் (Prevents Cancer)

கிவி(Kiwi) பழத்தில் வைட்டமின் C நிறைந்துள்ளது. இது ப்ரீ ராடிகல்களை அகற்ற உதவுவதால் அணுக்கள் சேதம் அடைவதை தடுகின்றது. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்புகளும் குறைகின்றது. இந்த பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளதால், நல்ல பக்டீரியா பெருங்குடலில் உருவாக உதவுகின்றது. இதனால் குறிப்பாக பெருங்குடல் பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் தடுக்கப் படுகின்றது.

9. உடல் எடையை குறைக்க உதவுகின்றது (Helps You Loose Weight)

கிவியில் அதிகம் நார் சத்து நிறைந்துள்ளதால் இது உடலில் சேரும் கேட்ட கொழுப்புகளை அகற்ற உதவுகின்றது. இதனால் உடல் எடை அதிகமாவதையும் குறைத்து, சீரான உடல் எடை பெற உதவுகின்றது.

10. நல்ல கண் பார்வை (Good Eye Sight)

கிவி(Kiwi) பழம் மாகுலர் சிதைவை தடுக்க உதவுகின்றது. இதில் பிட்டோ கெமிக்கல்ஸ் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் அதிகம் உள்ளதால் கண் ஆரோக்கியத்தை அதிகப் படுத்த உதவுகின்றது. இந்த பலன்கள் மட்டுமல்லாமல், மேலும் பல நன்மைகளையும் இது தருகின்றது. இதில் அதிகம் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், கர்ப்பிணி பெண்களும் சாப்பிடலாம். இது தாய் மற்றும் சேய் இருவருக்கும் நல்ல பலனைத் தரும்.

gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock

ஏன் தினமும் ஒரு கிவி பழமாவது சாப்பிட வேண்டும்? (Reasons Why You Need To Take At Least One Kiwi Daily)

கிவி(Kiwi) பழத்தை தினமும் சாப்பிடுவதால் நல்ல பலன்கள் கிடைகின்றது. இதில் குறிப்பிடத்தக்க சில பலன்கள் நீங்கள் கட்டாயம் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்ற என்னத்தை உங்களுக்குள் உருவாக்கும். இந்த வகையில் ஏன் நீங்கள் தினமும் கிவி பழத்தை சாப்பிட வேண்டும் என்பதற்கான சில காரணங்களை பார்க்கலாம்.

ஆலிவ் ஆயிலின் மருத்துவ நன்மைகள் மற்றும் அழகு குறிப்புகள்

1. அல்களின் இருப்பு (Presence Of Alcs)

கிவி ஒரு அல்களின் பழம். இது இதில் அதிகம் தாது பொருட்கள் இருப்பதை உணர்த்துகின்றது. இதனால் இது அமிலம் கலந்த உணவை அதிகம் உட்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவுகின்றது.

2. ஆஸ்த்மா அறிகுறியை போக்க உதவுகின்றது (Helps Relieve Asthma Symptoms)

கிவியில் வைட்டமின் C மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளதால் அது நுரையீரல் நல்ல சீராக செயல் பட உதவுகின்றது. இதனை தொடர்ந்து நீங்கள் தினமும் உண்ணும் போது ஆஸ்த்மா அறிகுறிகள் நாளடைவில் குறைவதை நீங்கள் காணலாம்.

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தும் (Increases Immunity)

இது கிவியின்(Kiwi) மற்றுமொரு குறிப்பிடத்தக்க குணமாகும். குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்கள், இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல சக்தி பெற்று நோய் எதிர்ப்பு பண்புகளை உடலில் பெறுவார்கள். இது நுண்ணுயிர்களை எதிர்த்து போராடி, பருவகால நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. மேலும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளையும் இது பெற்றுள்ளது.

4. தூக்கமின்மையை எதிர்த்து போராட உதவுகின்றது (Helps Fight Insomnia)

இன்றைய காலகட்டத்தில் அனைத்து வயதினர்களுக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தூக்கமின்மை. இதில் இருக்கும் செரோட்டனீன் நல்ல தூக்கத்தை பெற உதவுகின்றது. குறிப்பாக இந்த பழத்தை மாலை நேரத்தில் தினமும் சாப்பிட்டு வந்தால், நலல் உறக்கத்தை இரவில் பெறலாம்.

5. இரத்த சோகையை போக்க உதவுகின்றது (Helps To Alleviate Anemia)

இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் C மற்றும் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற பைடோ கேமிகள்கள் உடம்பில் இரும்பு சத்து சார உதவுகின்றது. இதனால் இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பும் குறைகின்றது.

6. ஜீரணத்தை அதிகப் படுத்துகின்றது (Increases Digestion)

கிவியில் ஆக்டினிடைன் என்னும் ஒரு புரதத்தை கரைக்கும் நொதி இருப்பதால், இது எளிதாக உண்ணும் உணவு ஜீரணமாக உதவுகின்றது.

7. நச்சை அகற்றும் (Get Rid Of Toxins)

கிவி (Kiwi) பழத்தில் அதிகம் நார் சத்து நிறைந்திருப்பது உடலில் உள்ள நச்சை வெளியேற்ற பெரிதும் உதவுகின்றது. குறிப்பாக இது குடல் பகுதியில் இருக்கும் நச்சை சுத்தம் செய்ய உதவுகின்றது. இதனால் உடல் எடையும் குறைகின்றது. சீரான உடல் எடை பெற இது ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock

சரும ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பிற்கு கிவி பழம் (Kiwi For Skin Care)

அனைவரும் நல்ல அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறவே விரும்புகின்றனர். இந்த வகையில், சரும ஆரோக்கியம் மட்டுமல்லாமல், அழகும் அதிகரிக்கும் வகையில் ஒரு வாய்ப்பை இந்த கிவி பழம் உருவாகின்றது. இந்த பழத்தை தினமும் சாப்பிடுவதால் மட்டுமல்லாமல், உங்கள் சரும அழகை அதிகப் படுத்தும் வகையிலும் இதனை நீங்கள் பயன் படுத்தலாம். இது மேலும் பல நல்ல பலன்களை உங்களுக்குத் தரும்.

கிவியில் அதிகம் வைட்டமின் C, E மற்றும் ஆக்ஸிஜெனேற்றம் இருப்பதால் உங்கள் உடலுக்கு நல்ல பலன்களை இது தரும் என்பதில் சந்தேகம் இல்லை. கிவி சருமத்திற்கு தரும் பலன்களை பற்றி தெரிந்து கொள்ள மேலும், சில தகவல்கள், உங்களுக்காக:

1. இளமையான சருமம் (Younger Skin)

வயதாகும் போது ஒருவருக்கு சருமத்தில் இயற்கையாக இருக்கும் சத்துக்கள் குறையத் தொடங்கும். அவற்றை மீண்டும் பெற நீங்கள் கடைகளில் கிடைக்கும் இரசாயனம் கலந்த அழகு சாதனா பொருட்களை பயன் படுத்தும் போது, தற்காலிகமாக பலன் தந்தாலும், அது ஒரு நிரந்தர தீர்வாக இருக்க முடியாது. இந்த வகையில், கிவியில் அதிகம் நிறைந்துள்ள வைட்டமின் C சத்துக்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகப் படுத்தி நல்ல இளமையான மற்றும் ஆரோக்கியமான தோற்றத்தை பெற உதவும். இது முகத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் போக்க உதவுகின்றது.

2. முகப்பருவை போக்கும் (Acne Will Go Away)

இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் பரு ஏற்படுவதை தடுக்கும். மேலும் இது நல்ல சுத்தமான சருமத்தை பெற உதவும். கிவி பேஸ் பாக் செய்து வாரம் இரண்டு முறையாவது பயன் படுத்தி வந்தால், உங்கள் முகம் நல்ல சீரான தோற்றம் பெறுவதை காணலாம்.

3. எண்ணை பிசுக்கை போக்கும்: (Numbers Will Go Berserk)

கிவி (Kiwi) பழம் சருமத்தில் ஏற்படும் எண்ணை பிசுக்கை போக்க உதவுகின்றது, இதனால் முகம் எப்போதும் நல்ல பொலிவோடும், புத்துணர்ச்சியோடும் இருக்க உதவுகின்றது. மேலும் பல சரும பிரச்சனைகள் ஏற்படாமலும் இது தடுகின்றது.

4. சூரிய கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும் (Protects The Skin From Sun Rays)

கிவியில் இருக்கும் அமினோ அமிலம் மற்றும் வைட்டமின் C சூரிய கதிர்களாலும், ஊதா கதிர்களாலும் உங்கள் சருமத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. தினமும், ஒரு சிறிய மெல்லிய துண்டு கிவி பழத்தை உங்கள் சருமத்தின் மீது சிறிது நேரம் வைத்து வந்தாலே, நீங்கள் நல்ல பலனை காணலாம்.

5. கண்களை சுற்றி ஏற்படும் கரும் வளையத்தை போக்கும் (Dark Skin Around The Eyes)

கண்களுக்கு கீழ் கரும் வளையம் தோன்றுவது இயல்பே. எனினும், இது முக அழகை குறைக்கும். அதனை போக்க, கிவி பழம் பெரிதும் உதவும். கிவி பேஸ் பாக் செய்து தொடர்ந்து பயன் படுத்தி வரும் போதும், கரும் வளையம் மறைந்து, நல்ல சுத்தமான மற்றும் மிருதுவான சருமம் கிடைக்கும்.

கிவி பழத்தை பயன்படுத்தி பலன் தரும் பேஸ் பாக் செய்வது எப்படி? (Kiwi Face Pack)

எளிய முறையில் நீங்கள் வீட்டிலேயே கிவி பழத்தை பயன் படுத்தி பேஸ் பாக் செய்து விடலாம். இது சுலபமான ஒரு முறையாகவும் இருக்கும். எப்படி கிவி பேஸ் பாக் செய்வது என்று இங்கே பார்க்கலாம்:
• ஒரு மசித்த கிவி பழத்தை எடுத்துக் கொள்ளவும்

• ஒரு தேக்கரண்டி தயிர் எடுத்துக் கொள்ளவும்

• இதனை நன்கு கலந்து முகத்தில் தடவவும்

• பின் மிதமாக மசாஜ் செய்யவும்

• அப்படியே 15 நிமிடங்கள் வரை விட்டு விடவும்

• பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

• இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலனை நீங்கள் காணலாம்

இந்த பேஸ் பாக்கோடு நீங்கள் முட்டையின் வெள்ளை கரு, தேன், எலுமிச்சை பழம் மற்றும் திராட்சை பழம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இது மேலும் பல நல்ல பலனை விரைவாக உங்களுக்கு தர உதவும்.

இவை மட்டுமல்லாமல், கிவி பழம், இறந்த அணுக்களை சருமத்தில் இருந்து அகற்றவும், சருமத்திற்கு பொலிவையும், உயிரோட்டத்தை தரவும் உதவுகின்றது. இது சருமத்தில் ஏற்படும் நோய் வராமலும் தடுக்க உதவுகின்றது.

திருமண நாள் நெருங்கி விட்டதா? குறைபாடற்ற பிரைடல் மேக்கப்பிற்கான 8 படிகள்

gifskey, pexels, pixabay, Youtube, Shutter Stock

கிவி தொடர்பான கேள்விகள் (FAQ)

1. அதிக அளவு கிவி பழத்தை உண்டால் ஒவ்வாமை ஏற்படுமா?

ஒரு சிலருக்கு அதிக அளவு இந்த பழத்தை சாப்பிடும் போது அல்லது சருமத்தில் பயன் படுத்தும் போது ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வீக்கம், வயிற்று வலி, போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.  அப்படி ஏற்பட்டால், இந்த பழத்தை சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, மருத்துவரை அணுகவும்.


2. கிவி(Kiwi) பழத்தை அதிகம் உண்ணும் போது வாயில் எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்படுமா?

இந்த பழத்தில் அமிலத் தன்மை இருப்பதால், இதனை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது இத்தகைய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.


3. கிவி(Kiwi) பழம் வயிற்று போக்கை ஏற்படுத்துமா?

இது ஒரு இயற்க்கை மலமிளக்கி என்பதாலும், இதில் அதிக அளவு நார் சத்து இருப்பதாலும், இதனை அதிக அளவு சாப்பிடும் போது வயிற்று போக்கு ஏற்படுவது இயல்பே. அப்படி உங்களுக்கு ஏற்பட்டால், இதனை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.


4. இரத்த போக்கு கோளாறுகள் இருப்பவர்கள் இதனை சாப்பிடலாமா?

 இரத்த போக்கு கோளாறு இருப்பவர்கள் இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அல்லது குறைந்த அளவு சாப்பிடலாம். அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது, பல பிரச்சனைகளை இது உண்டாக்கக் கூடும்

5. குழந்தைகள் இந்த பழத்தை சாப்பிடலாமா?

அனைத்து வயதினர்களும் இந்த பழத்தை சாப்பிடலாம். இது அனைவருக்கும் நல்ல பலனைத் தரும். எனினும் பரிந்துரைக்கப் பட்ட அளவு சாப்பிடுவதால் நல்ல பலனை நீங்கள் எதிர் பார்க்கலாம்.