அழகை அதிகரிக்க இந்த ஒரு வாதுமைப் பழத்தை சாப்பிட்டால் போதும்!

அழகை அதிகரிக்க இந்த ஒரு வாதுமைப் பழத்தை சாப்பிட்டால் போதும்!

வட்டமாகவும், மஞ்சள் நிறத்திலும் இருக்கும் வாதுமைப் பழம்(apricot) பல சத்துக்கள் நிறைந்தது. சமீப காலத்தில் இதனை பற்றின விழிப்புணர்வு பலருக்கும் உண்டாகுகின்றது. இந்த பழம், உடல் நலத்திற்கு மட்டும் பயன் படாமல், முக அழகு மற்றும் சரும பொலிவை அதிகப்படுத்தவும் பயன்படுகின்றது. இன்று பல கடைகளில் இந்த பழம் மலிவான விலைக்கு எளிதாக அனைத்து காலங்களிலும் கிடைகின்றது.
உடல் எடை, கொழுப்பு சத்து, போன்றவற்றை சீரான அளவில் வைத்துக் கொள்ள இந்த பழம் பெரிதும் உதவுகின்றது. இந்த வாதுமைப் பழத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்

Table of Contents

  வாதுமை பழத்தை பற்றி சில தகவல்கள்(About Apricot)

  இந்த வாதுமை பழம் எப்படி உங்கள் உடல் நலம் மற்றும் முக அழகை அதிகப்படுத்துகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், இதை பற்றின சில சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக இங்கே:
  · இந்த வாதுமைப் பழம் ப்ளம்ஸ் மற்றும் நாகப்பழம் போன்று இருக்கும்
  · சில பலன்கள் மஞ்சள் நிறத்திலும், சில சிவப்பு நிறத்திலும் மற்றும் சில ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும்
  · இது அதிக சுவை நிறைந்ததாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் உள்ளது
  · வைட்டமின் A, C மற்றும் பீட்டா கரோடின் மற்றும் காரோடினைட்ஸ் நிறைந்துள்ளது
  · இதில் அக்சிஜனேற்றம் அதிகம் உள்ளது
  · இளமை தோற்றத்தைத் தரும்
  · நல்ல ஜீரணத்தை உண்டாகும் மற்றும் நல்ல பலத்தை உடலுக்குத் தரும்
  · இதனை பச்சையாக அப்படியே சாப்பிடலாம் அல்லது உலர்ந்த பலத்தை சாப்பிடலாம்
  · வாதுமை எண்ணை பல உடல் நலன்கள் கொண்டது

  வாதுமை பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்(Nutritional Values Of Apricot)

  இந்த பழம் அதிக சத்துக்கள் நிறைந்ததாக கருதப்படுகின்றது. இதில் விட்டமின்கள், தாது பொருட்கள் என்று பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் அருந்தி வந்தால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
  35 கிராம் வாதுமை பழத்தில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்;

  மொத்த கலோரிகள் 17
  மொத்த கொழுப்பு சத்து ௦%
  கொழுப்பு சத்து ௦%
  பொட்டாசியம் 90.65 கிராம்
  கார்போஹைட்ரெட் 3.8 கிராம்
  நார் சத்து 0.7 கிராம்
  சர்க்கரை 3.2 கிராம்
  புரதம் ௦5 கிராம்
  வைட்டமின் A 14%
  வைட்டமின் C 6%
  இரும்பு 1%

  மேலே குறிப்பிடப்பட்டுள்ள சத்துக்கள் தவிர, இதி பீட்ட கரோடின், லுடீன் மற்றும் ஜீசேந்தின் போன்ற சத்துக்களும் உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்த்திகளை அதிகரிக்க உதவும்.

  pixabay

  ஏன் வாதுமை பழத்தை உண்ண வேண்டும்? (Why Consume Apricot?)

  நீங்கள் ஏன் வாதுமை பழத்தை உண்ண வேண்டும் என்பதற்கு இங்கே சில முக்கிய காரணங்கள்:

  1. குறைந்த கலோரிகள்

  இந்த பழத்தில் கலோரிகளின் அளவு மிகக் குறைவாக உள்ளதால், இதனை நீங்கள் எந்த ஐயமும் இல்லாமல் உண்ணலாம். இதனால் உங்கள் உடல் எடை உயராது, மாறாக சீரான அளவிற்கு வரும்.

  2. அதிக ஆக்சிஜனேற்றம்

  இந்த பழத்தில் வைட்டமின் A, C, E மற்றும் பீட்ட கரோடின் போன்ற ஆக்சிஜனேற்றம் அதிகம் உள்ளது. மேலும் பாலோனைட்ஸ் போன்ற ஆக்சிஜனேற்றமும் உள்ளது. இது இருதய நோய், மற்றும் நீரழிவு நோய், போன்ற நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாகின்றது.

  3. அதிக பொட்டசியம்

  பொட்டாசியம் என்னும் தாதுப் பொருள் ஏலேக்ட்ரோளைட்டாக செயல் படுகின்றது. இது தகவல்களை உடல் முழுவதும் நரம்புகள் மூலமாக அனுப்பவும், தசைகளின் செயல்பாடு மட்றும் திரவங்களின் அளவுகளை சீரான நிலையில் வைத்திருக்கவும் உதவுகின்றது. போதுமான அளவு இந்த பழத்தை உண்ணும் போது, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகின்றது.

  4. அதிக நார் சத்து

  இந்த பழத்தில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனால், இது உடலுக்குத் தேவையான சத்துக்களை தருவதோடு, உடல் எடையையும் சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

  வாதுமைப் பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள்(Health Benefits Of Apricot)

  வாதுமைப் பழம் பல நன்மைகளையும், ஆரோக்கிய பலன்களையும் உடலுக்குத் தருகின்றது. இதனால், நல்ல ஆரோக்கியத்தோடு, எந்த நோய் தாக்குதலும் இல்லாமல் வாழலாம். இந்த பழத்தை உண்பதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கே காணலாம்

  1. மல சிக்கலை போக்கும்

  இந்த பழத்தில் அதிகம் நார் சத்து இருப்பதால், இது ஜீரணத்தை உண்டாக்கி, மல சிக்கலை போக்க உதவுகின்றது. இதில் இருக்கும் நார் சத்து ஜீரண சுரபிகளை அதிகம் சுரக்க வைக்கின்றது. இதனால், ஜீரணமும் எளிதாகின்றது. மேலும் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இலகுவாக கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றது.

  2. எலும்புகளைப் பலப்படுத்துகின்றது

  வாதுமைப் பழத்தில் அதிகம் தாது பொருட்கள், குறிப்பாக கால்சியம், பாஸ்பரஸ், மங்கனீஸ், இரும்பு மற்றும் செம்பு இருப்பதால், இது எலும்புகள் பலம் பெற பெரிதும் உதவுகின்றது. மேலும் எலும்புகள் நல்ல வளர்ச்சியை அடையவும் இது உதவுகின்றது. குறிப்பாக மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை போக்க இந்த பழம் உதவுகின்றது.

  3. இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்

  இருதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் ஒரு அற்புத பழம் என்று இதை கூறலாம். மாபாடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் வர விடாமல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த பழத்தில் இருக்கும் சத்துக்கள் உதவுகின்றது, இதில் வைட்டமின் C, பொட்டசியம், மற்றும் நார் சத்து நிறைந்து இருகின்றது, இது இருதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. மேலும், இதில் ஆக்சிஜனேற்றம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

  4. காது வலியை போக்குகின்றது

  வாதுமை எண்ணை காது வலியை போக்க பெரிதும் உதவுகின்றது. ஒரு சில சொட்டு இந்த எண்ணையை காதுகளில் விட்டால், விரைவான தீர்வு கிடைக்கும். இது ஒரு நல்ல வீட்டுத் தீர்வாகவும் இருக்கும்.

  5. சுரத்தை குறைக்கும்

  சுரத்தால் அவதிப்படுபவர்களுக்கு இந்தப் பழம் ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது. இதில் இருக்கும் வைட்டமின்கள், தாது பொருட்கள், கலோரிகள் மற்றும் நீர் சத்து, உடலுக்குத் தேவையான நோய் எதிரிப்பு சக்த்தியைத் தந்து, உடனடியாக சுரத்தில் இருந்து விடு பட உதவுகின்றது.

  pixabay

  6. சரும பிரச்சனைகளை போக்கும்

  வாதுமை எண்ணையை சருமத்தில் தேய்த்தால், அது உடனடியாக நன்கு உறிஞ்சப்பட்டு, சருமத்திற்குத் தேவையான சத்துக்களை கிடைக்க உதவும். இதனால் சருமம் மிருதுவாகவும், பலபலப்பாகவும் இருக்கும். மேலும் சருமத்தில் இருக்கும் அரிப்பு, தோல் உரிதல், சோரியாசிஸ், எக்சீமா போன்ற சரும பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றது. இதில் இருக்கும் வைட்டமின் A சத்து சருமம் ஆரோக்கியமாக இருக்க பெரிதும் உதவுகின்றது.

  7. இரத்த சோகையை போக்கும்

   இந்த பழத்தில் இருக்கும் இரும்பு மற்றும் செம்பு, உடலில் ஹீமோக்ளோபின் அளவை அதிகப்படுத்த உதவுகின்றது. இதனால் இரத்த சோகை பிரச்சனைகள் குறைக்கப்படுகின்றது. இரும்பு சத்து உடலில் குறைந்தால் , சோர்வு, தளர்ச்சி, மயக்கம் மற்றும் ஜீரண பிரச்சனைகள் உண்டாகும். இந்த பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால், உங்கள் உடலுக்குத் தேவையான இரும்பு சத்து கிடைத்து இரத்த சோகையை போக்கி விடலாம்.

  8. ஆஸ்த்மா அறிகுறியை போக்கும்

  வாதுமை எண்ணை ஆஸ்த்மா அறிகுறியை போக்க பெரிதும் உதவுகின்றது. இது ஆஸ்தமா மற்றும் அது குறித்த அறிகுறிகளை போக்கும். மேலும் மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற உணர்வுகளையும் போக்க உதவுகின்றது. நுரையீரல் மற்றும் சுவாச குழாய் ஆகியவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த பழம் உதவுகின்றது.

  9. குடல் / வின்னரம்பு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்

  தினமும் இந்த வாதுமை பழத்தை உண்டு வந்தால் குடலில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். இதில் அதிகம் கரையும் மற்றும் கரையாத நார் சத்து இருப்பதால், உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் கொழுப்பு சத்தையும் சரியான அளவு உடலில் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதில் இருக்கும் நார் சத்து உணவு குடல் பகுதியில் சரியான ஜீரணம் ஆன பின் பயணிக்கவும் தவுகிண்ட்ரகுடு. இதனால் ஆரோக்கியமான ஜீரணமும், மல போக்கும் உண்டாகின்றது.

  10. நீரற்றம்

  இந்த பழத்தில் அதிகம் நீர் சத்து உள்ளது. இதனால் இது உடலில் இருக்கும் இரத்த அழுத்தம், உடல் சூடு மற்றும் இருதய செயல்பாடு ஆகியவற்றை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. சரியான அளவு இந்த பழத்தை தினமும் உண்டு வந்தால், உங்கள் உடலுக்குத் தேவையான நீர் சத்து இதில் இருந்தும் கிடைக்கும்.

  11. கல்லீரலின் ஆரோக்கியம்

  ஒரு மருத்துவ ஆய்வின் படி, இந்த பழம் கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து, சீராக செயல்பட உதவுகின்றது. ஆக்சிஜனேற்றம் அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த பழம் உதவுகின்றது.

  12. கண் ஆரோக்கியம்

  இந்த பழத்தில் வைட்டமின் A மற்றும் பல சத்துக்கள் கணிண ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவுகின்றது, இதனால் கண்களில் இருக்கும் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் குணமடைந்து, நலல் ஆரோக்கியம் பெற உதவுகின்றது.

  வாதுமைப் பழமும், சரும ஆரோக்கியமும்! (Apricot And Skin Care)

  வாதுமை பழம் உடல் நலத்திற்கு மட்டும் அல்லாமல், உங்கள் சரும ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. இந்த பழத்தை சரியான முறையில் பயன்படுத்தும் போது, சருமம் நல்ல ஆரோக்கியம், பொலிவு மற்றும் பலபலப்பைப் பெறுகின்றது. இளமை மற்றும் அழகான தோற்றத்தை பெற உதவுகின்றது. இந்த பழம் எப்படி உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்

  1. சேதமடைந்த சருமத்தை குணப்படுத்தும்

  வாதுமை பழத்தின் காய்ந்த கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட எண்ணை, சருமத்தில் எதாவது சேதம் ஏற்பட்டிருந்தால், அதனை போக்கி, மிருதுவான சருமத்தை பெற உதவுகின்றது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின் C சத்து உங்கள் சருமம் அதிக எண்ணை பிசுக்குப் பெறாமல், சீரான தோற்றத்தோடு, உடனடி நிவாரணத்தையும் பெற உதவுகின்றது. மேலும் எந்த பக்க விளைவுகளையும் இது உண்டாக்குவதில்லை.

  2. சுருக்கங்களை குறைக்கும்

   அனைவருக்கும் 3௦ வயதுக்கு மேல், முகத்தில் சுருக்கங்கள் உண்டாவது இயல்பாக உள்ளது. குறிப்பாக 35 வயதிற்கு மேல் இது அதிகரிக்கின்றது. இதனால் முகம் வயதான தோற்றம் பெறுவதோடு, அழகையும் இழக்கின்றது என்கின்ற வருத்தமும் பலருக்கு உள்ளது. எனினும், இந்த வாதுமை பழத்தில் இருக்கும் சத்துக்கள், இறந்த அணுக்களை விரைவாக சருமத்தில் இருந்து வெளியேற்றி, புது அணுக்களை உண்டாக்க உதவுகின்றது. இதனால் உங்கள் சருமம் இளமையான தோற்றம் பெறுவதோடு, அழகையும் பெறுகின்றது.

  3. தோல் நெகிழ்ச்சித்தன்மையை பாதுகாகின்றது

  தோல் நெகிழ்வு மற்றும் தெளிவான சருமம் நல்ல அழகான தோற்றத்தை பெற உதவும். இந்த பழத்தில் இருக்கும் சத்துக்கள், உங்கள் சருமத்திற்கு இந்த நெகிழ்வுத் தன்மையையும், நல்ல தெளிவையும் பெற உதவுகின்றது. மேலும் இது உங்கள் சருமத்திற்கு போஷாக்கை அளித்து போதுமான சத்துக்களை இயற்கையான வழியில் பெற உதவுகின்றது.

  4. கருமுள்ளை அகற்றுகின்றது

  கருமுள் முக அழகை பாதிக்கும் மற்றுமொரு பிரச்சனையாக உள்ளது. இந்த வாதுமைப் பழத்தின் க்ரீம், முகத்தை நன்கு சுத்தம் செய்து, கருமுள் மற்றும் இறந்த அணுக்களை அகற்றுகின்றது. இதனால் சருமம் மிருதுவாகவும் நல்ல பலபலப்பையும் பெறுகின்றது.

  5. சரும கோளாறுகளை போக்குகின்றது

  சருமத்தில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, சிவந்தால், மற்றும் பிற பிரச்சனைகளை இந்த பழம் போக்க உதவுகின்றது. வாதுமை எண்ணையை முறையாக தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, சோரியாசிஸ், எக்சீமா, புண் மற்றும் பிற பிரச்சனைகளை போக்குகின்றது. மேலும் சூரிய கதிர் மற்றும் ஊதா கதிர்களால் உண்டாகும் பிரச்சனைகளையும் இது போக்க உதவுகின்றது.

  pixabay

  6. கறைகளை நீக்குகின்றது

  ஏதாவது புண் அல்லது பிற காரணங்களால் சருமத்தில் உண்டாகும் தழும்பு மற்றும் கறைகளை இந்த பழம் போக்க உதவுகின்றது. இதனால் முதிர்ச்சி அடையும் காலமும் சருமத்திற்கு குறைகின்றது. எந்த பக்க விளைவுகளும் இல்லாமல், சருமத்தில் இருக்கும் கறைகளை இந்த பழம் போக்க உதவுகின்றது.

  7. சருமத்திற்கு ஈரத்தன்மையை உண்டாக்குகின்றது

  சருமம் வறண்டு போகாமல் இருக்கவும், நல்ல போஷாக்குடன் இருக்கவும், ஈரத்தன்மை மிகவும் முக்கியம். இந்த பழம் சருமத்திற்குத் தேவையான ஈரத்தன்மையை போதுமான அளவு தந்து எப்போதும் நீரேற்றத்தோடு வைத்திருக்க உதவுகின்றது. இதனால் சருமம் மிருதுவாகின்றது.

  8. சருமத்தின் நிறத்தை அதிகப்படுத்துகின்றது

  அனைவரும் நல்ல நிறம் பெற வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த வகையில், இந்த பழத்தை சரியான முறையில் சரும ஆரோகியதிர்காக பயன்படுத்தி வரும் போது, உங்கள் சருமத்திற்கு நல்ல அழகான நிறத்தையும் இது தருகின்றது.

  9. நல்ல ஸ்கரப்பாக பயன்படுகின்றது

  இந்த பழம் ஒரு நல ஸ்க்ரப்பாகவும் பயன்படுகின்றது. இதனால், சருமத்தின் மீது இருக்கும் இறந்த அணுக்கள், தூசிகள், அழுக்கு போன்றவை அகற்றப்பட்டு, நல்ல தெளிவைப் பெறுகின்றது.

  10. சேதமடைந்த சருமத்தை குணப்படுத்துகின்றது

  சருமத்தில் ஏதாவது சேதம் ஏற்பட்டிருந்தால், அதனை எளிதாக போக்க இந்த பழம் உதவுகின்றது. இதனால், உங்கள் சருமம், நல்ல அழகான தோற்றம், பொலிவு மற்றும் சீரான அமைப்பை பெறுகின்றது. பருக்கள், தழும்பு போன்றவற்றையும் போக்க இது உதவுகின்றது.

  வாதுமை பழத்தை எப்படி சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துவது?

  இந்த வாதுமை பழத்தை சரியான வழியில் பயன்படுத்தி, அதிக பலனைப் பெற, உங்களுக்காக இங்கே சில குறிப்புகள் மற்றும் செயல்முறை விளக்கம்.

  1. வாதுமைப் பழம் மற்றும் பால்

  தேவையான பொருள்:
  · அரை கப் காய்ந்த வாதுமைப் பழம்
  · ஒரு தேக்கரண்டி பால் தூள்
  · ஒரு தேக்கரண்டி தேன்
  செய்முறை
  · மேலே கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் சிறிது தண்ணீர் அல்லது பன்னீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  · இந்த கலவையை முகத்தில் தேய்த்து மிதமாக மசாஜ் செய்யவும்
  · பின் சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்
  · குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

  2. பப்பாளி மற்றும் வாதுமைப் பழம்

  தேவையான பொருள்
  · ஒரு தேக்கரண்டி வாதுமை பழத்தின் சதை
  · ஒரு தேக்கரண்டி பப்பாளி பழத்தின் சதை
  · சிறிது பால்
  செய்முறை
  · இவை அனைத்தையும் நன்கு மசித்துக் கொள்ளவும்
  · முகத்தில் தடவி சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும்
  · பின் சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடவும்

  3. வாதுமைப் பழம் மற்றும் ஆரஞ்சு / கமலாப் பழம்

  தேவையான பொருள்
  · ஒரு தேக்கரண்டி வாதுமை எண்ணை
  · ஒரு தேக்கரண்டி ஆல்மன்ட் எண்ணை
  · அரை தேக்கரண்டி வைட்டமின் E எண்ணை
  · சில துளிகள் ஆரஞ்சு எண்ணை
  செய்முறை
  · இவை அனைத்தையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  · முகத்தில் தடவி மிதமாக சுழற்சி முறையில் மசாஜ் செய்யவும்
  · பின் சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்
  · மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்

  4. வாதுமை மற்றும் ஆலிவ் எண்ணை

  தேவையான பொருள்
  · 2 வாதுமை பழத்தின் சதை
  · சிறிது ஆலிவ் எண்ணை
  செய்முறை
  · இவ்விரண்டையும் நன்கு கலந்து மசித்துக் கொள்ளவும்
  · முகத்தில் தடவி மிதமாக மசாஜ் செய்யவும்
  · பின் சிறிது நேரம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்

  pixabay

  5. வாதுமை பழம் மற்றும் தேன்

  தேவையான பொருள்
  · நன்கு பழுத்த இரண்டு வாதுமைப் பழம்
  · இரண்டு தேக்கரண்டி தேன்
  · சிறிது ஆல்மன்ட்
  செய்முறை
  · அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும்
  · முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
  · சிறிது நேரம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்
  · இது முகத்தில் இருக்கும் கருமுள்ளை போக்க உதவும்

  6. வாதுமைப் பழம் மற்றும் காரட்

  தேவையான பொருள்
  · 5 வாதுமை பழம்
  · வேகவைத்த அவகோட்
  · இரண்டு காரட்
  · சிறிது தயிர்
  · சிறிது தேன்
  செய்முறை
  · இவை அனைத்தையும் நன்கு பசை போல அரைத்துக் கொள்ளவும்
  · இதனை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
  · சிறிது நேரம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்

  வாதுமை பழமும் பக்க விளைவுகளும்(Side Effects Of Apricot)

  வாதுமை பழத்தில் பெரிதாக எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும், இதனை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றாலோ அல்லது பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக உண்டாலோ, சில உபாதைகளை உண்டாக்கக் கூடும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

  · உலர்ந்த பழத்தில் சல்பைட்ஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை அதிகமாக உண்ணும் போது, சில ஆஸ்த்மா அறிகுறிகளை உண்டாக்குவதோடு, சுவாச பிரச்சனைகளை உண்டாக்கலாம் என்று கருதப்படுகின்றது
  · சரியாக பழுக்காத பழத்தை உண்ணும் போது, வயிற்று வலி ஏற்படும் என்று கருதப்படுகின்றது
  · கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும், இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது
  · அதிக அளவு இந்த பழத்தை உண்ணும் போது மயக்கம், தலைவலி மற்றும் தலைசுற்றல் போன்ற உபாதைகள் உண்டாகலாம் என்று கருதப்படுகின்றது

  கேள்வி பதில்கள்(FAQ)

  1. வாதுமை பழத்தின் தோலை உண்ணலாமா?

  இந்த பழத்தை நீங்கள் தோலுடன் உண்ணலாம். எனினும், இந்த பழத்தை நீங்கள் சமைத்து சாப்பிட எண்ணினால் மட்டுமே இதன் தோலை நீக்க வேண்டிய தேவை உண்டாகலாம்.

  2. சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்க இந்த பழம் உதவுமா?

  குறிப்பாக வாதுமை எண்ணையில் அதிக ஆக்சிஜனேற்றம் இருப்பதால், இந்த பழம் நிச்சயம் உங்கள் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்கி நலல் மிருதுவான மற்றும் போஷாக்கு பெற்ற சருமத்தை பெற உதவும்.

  pixabay

  3. காய்ந்த வாதுமை பழத்தின் பலன் என்ன?

  • காந்த பழத்தின் பலன் – இதனை எளிதாக அதிக நாட்கள் வைத்து பயன்படுத்தலாம்
  •  இது உடனடி சத்தை உடலுக்குத் தரும்
  • இதில் அதிக அளவு நார் சத்தும், இரும்பு சத்தும் உள்ளது

  4. அதிக அளவு காய்ந்த வாதுமை பழத்தை உண்பதால் உண்டாகும் உபாதைகள் என்ன?

  காய்ந்த பழத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. இது உங்கள் ஜீரணம் மற்றும் மல போக்கை சீர் படுத்தும். எனினும், அதிக அளவு நார் சத்து எடுத்துக் கொண்டால் இது அதிக வயிற்று போக்கு, வாய்வு மற்றும் ஜீரண பிரச்சனையை உண்டாக்கலாம். அதனால் சரியான அளவு எடுத்துக் கொள்வதே நல்லது.

  நீ கூட விரும்பலாம் - 

  Health Benefits of Apricot in Hindi

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்கு,மராத்தி மற்றும் பெங்காலி!

  அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.