நண்பர்கள் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வாழ்த்து தொகுப்புகள்! (Friendship Day Quotes)

நண்பர்கள் தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வாழ்த்து தொகுப்புகள்! (Friendship Day Quotes)

நண்பர்கள் (Friendship Day) தினம் எப்போது வரும் என்று நீங்கள் காத்துக் கொண்டிருந்தாள், அதற்கு வெகு நாட்கள் இல்லை. வரும் 2019, ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப் படுகின்றது. இந்த நாளன்று, அனைத்து நண்பர்களும், வயது வரம்பின்றி தங்கள் அன்பையும், நன்றியையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். 

நண்பர்கள் தினம் ஒன்று மட்டுமே, எந்த வித இரத்த சொந்தம் இல்லாமல், யார் யாரோ, எங்கிருந்தோ ஓர் இடத்தில் ஒன்று கூடி, பின் அறிமுகமாகி, ஒருவருக்கொருவர் நட்பு ஏற்பட்டு, எந்த வித எதிர் பார்ப்புகளும் இல்லாமல், ஆயுள் வரை தொடருகின்றது அந்த நட்பை பிரதிபலிக்கும் விதத்தில் கொண்டாடப்படுகின்றது. இது ஒன்றே இதன் சிறப்பு அம்சம். 

Table of Contents

  நண்பர்கள் தினத்தின் முக்கியத்துவம் (Importance Of Friendship Day)

  நண்பர்கள் தினத்தை நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால், பின் எந்த சூழலிலும், இந்த நாளை நீங்கள் தவற விட மாடீர்கள். இந்த தினத்தின் முக்கியத்துவத்தை இங்கே பார்க்கலாம்

  • நண்பர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாததில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப் படுகின்றது 

  • இந்த நண்பர்கள் தின கொண்டாட்டம் முதலில் 1935ல், ஆரம்பிக்கப் பட்டு, பின் ஐக்கிய நாடுகள் இதனை சர்வதேச நண்பர்கள் தினமாக அறிவித்தனர் 

  • இந்த நாள் நட்பின் ஒரு அடையாளமாக கருதப்பட்டாலும், இன்று அது வர்த்தக மயமாக்கப்பட்டு, பரிசு பொருட்களையும், இனிப்புகளையும், மேலும் சில வர்த்தக நோக்கத்தோடு பல பொருட்களும் எந்த ஒரு அவசியமும் இன்றி விற்ப்பனைக்கு ஊக்கவிக்கப்படுகின்றது  

  • வேறு எந்த ஒரு உறவும் கொடுக்க முடியாது நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் நட்பால் நிச்சயம் கொடுக்க முடியும் 

  • நேருக்குநேராக நண்பர்களை அமைத்துக் கொள்வது மட்டுமல்லாது, உன்று சமூக வலைதளங்களில் முகம் தெரியாத ஒரு நபரும் நம்பிக்கையின் அடிப்படையில் நல்ல நண்பராக இருகின்றார்

  Also Read About மாணவர்களுக்கான ஊக்க மேற்கோள்கள்

  நண்பர்கள் தினத்தின் வரலாறு (Friendship Day History)

  இந்த வருடம் நீங்கள் நண்பர்கள் தினத்தை கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், இந்த சிறிய வரலாற்றுப் பதிவு உங்களுக்கு நிச்சயம் இந்த கொண்டாட்டத்தை பற்றின புரிதலை அதிகரிக்கும் என்று நம்புகின்றோம்!

  • நண்பர்கள் தினம் வெவேறு நாடுகளில் வெவேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தது 

  • வேர்ல்ட் பிரிண்ட்ஷிப் க்ருசேட் முதல் நண்பர்கள் தினத்தை ஜூலை, 3௦, 1958ல், அன்று அனுசரித்தது 

  • ஜெனரல் அச்செம்ப்லி ஆப் தி யுனைடட் நேசன், ஏப்ரல் 27, 2011 அன்று, ஜூலை 3௦ நண்பர்கள் தினமாக அறிவித்தது 

  • எனினும் இந்திய உட்பட சில நாடுகள் ஆகஸ்ட் மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றது 

  Also Read Best Success Quotes In Tamil

  Pixabay

  நண்பர்களுடன் சேர்ந்து செய்ய சுவாரசியகள் (Fun Things To Do With Your Friends)

  நண்பர்கள் தினம் என்று வந்து விட்டாலே, கொண்டாட்டத்திற்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை என்று கூறலாம். எப்போது இந்த நாள் வரும் என்று அனைவருக் காத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு நாளை நீங்கள் நிச்சயம் சுவாரசியமானதாகவும், என்றும் உங்கள் நினைவில் இருக்கும் வகையிலும் அமைத்துக் கொள்ள நினைப்பது இயல்பே. அப்படி நீங்கள் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தாள், உங்களுக்காக, உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து செய்ய இங்கே சில சுவாரசியமான விடயங்கள்

  Also Read : ஒரு செல்ஃபி எடுப்பது எப்படி

  1. உங்கள் நண்பருக்கான வளையல் / ரக்ஷையை நீங்களே செய்யுங்கள்

  இது சுவாரசியமாக இருப்பதோடு, உங்கள் நண்பருக்கு எப்படி இருந்தால் பிடிக்கும் என்று பார்த்து நீங்களே விரும்பி அதை செய்வீர்கள். மேலும் அது உங்கள் நண்பருக்கு உங்கள் மீதான நட்பை அதிகப்படுத்தும்

  2. கடற்கரைக்கு செல்லுங்கள்

  இதை விட நண்பர்கள் சேர்ந்து ஒன்றாக கொண்டாட வேறு நல்ல இடம் இருக்க முடியுமா? நிச்சயம் உங்களுக்கு அருகாமையில் இருக்கும் கடற்கரைக்கு உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சென்று நல்ல நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்

  3. விருந்து. ஒரு நல இரவு விருந்துக்கு திட்டமிடுங்கள்

  அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல விருந்தில் கலந்து கொள்வது மற்றுமொரு சிறந்த கொண்டாட்டமாகும். நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு உணவு விடுதிக்கு சென்றோ அல்லது உங்கள் நண்பர் ஒருவரின் வீட்டில் உணவு ஏற்பாடுகள் செய்தோ விருந்தை கொண்டாடலாம். 

  4. திரைப்படத்திற்கு செல்லலாம்

  நிச்சயம் நண்பர்கள் தினத்தன்று புதிதாக திரைப்படங்கள் வெளியிடப்படும். உங்களுக்கு பிடித்த ஒரு நடிகரின் திரைப்படம் அப்போது வெளிவர இருந்தால், உங்கள் அனைவருக்கும் டிக்கட்டுகள் முன் பதிவு செய்து, ஒன்று கூடி திரைப்படத்திற்கு செல்லலாம்.

  5. ஒரு நாள் சுற்றுலா செல்லலாம்.

  இதுவும் ஒரு சுவாரசியமான ஒன்று. நீங்கள் யாரும் இது வரை செல்லாத ஒரு இடத்தை தேர்வு செய்து ஒன்று கூடி சுற்றுலா சென்று வர திட்டமிடலாம். இது உங்கள் மனதிற்கும் புத்துணர்ச்சியைத் தரும். நீங்கள் உற்சாகத்துடன் உங்கள் சுற்றுலாவை கொண்டாடுவீர்கள். இது ஒரு நல்ல நினைவாகவும் மாறும்.

  6. ஒரு நீண்ட இருசக்கர வாகணப் பயணம்

  அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒன்று இருசக்கர வாகனம் ஓட்டுவது. அதிலும், நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நீண்ட பயணம் செல்ல வேண்டும் என்றால், யாருக்குத் தான் பிடிக்காது. அப்படி ஒரு கொண்டாட்டத்தை நீங்கள் திட்டமிடலாம். ஆனால், உங்கள் பயணத்தில் நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது, சாகசங்கள் செய்யாமல் இருப்பது முக்கியம்

  7. தொண்டு நிறுவனத்திற்கு சென்று உதவி செய்வது

  இதில் எவ்வளவு சுவாரசியம் உங்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை என்றாலும், நீங்கள் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ, அல்லது உங்கள் நட்பின் அடையாளமாக பிறருக்கு உதவிகளை செய்ய எண்ணினாலோ, உங்கள் நண்பர்களுடன் ஒன்று சேர்ந்த ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்று அங்கு இருக்கும் குழந்தைகள், ஆதரவற்றவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உங்களாலான உதவிகளை செய்து அவர்களுடன் அந்த ஒரு நாளை செலவிடலாம். இது உங்களுக்கு நிச்சயம் ஒரு அர்த்தமுள்ள நண்பர்கள் தினமாக இருக்கும். 

  8. ஒன்று சேர்ந்து சமையல் செய்யுங்கள்

  உங்களுக்கு சமைக்கத் தெரிகின்றதோ இல்லையோ, நிச்சயம் உங்கள் நண்பர்களுடன் ஒன்று சேரும் போது அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை மகிழ்ச்சியோடு செய்வீர்கள் என்பதில் செந்தேகம் வேண்டாம். உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து உங்கள் வீட்டிலேயோ, அல்லது உங்கள் நண்பர்கள் வீட்டிலேயோ அல்லது வெளிபுறங்களில் எங்காவது மரத்தின் அடியில் சமையல் செய்து சாப்பிடலாம். இது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தையும், மகிழ்ச்சியான சூழலையும் உண்டாக்கிக் கொடுக்கும். 

  9. கடைகளுக்கு சென்று – ஷாப்பிங் செய்யலாம்

  ஷாப்பிங் என்றாலே யாருக்குத்தான் பிடிக்காது. சற்று உங்கள் பணப்பையில் இருக்கும் பணம் காணாமல் போகும். ஆனால், உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் அந்த நேரத்திற்கு இந்த பணம் மிகையாகாது. நீங்கள் அனைவரும் சேர்ந்து ஏதாவது ஒரு கடைக்கு அல்லது கடைத்தெருவிற்கு ஷாப்பிங் செய்ய திட்டமிடலாம். இது நிச்சயம் உங்களுக்கு ஒரு சுவாரசியமான கொண்டாட்டமாக இருக்கும். 

  நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (Happy Friendship Day Quotes In Tamil)

  1. வாழ்க்கையை நினைக்க நின் நட்பை நீ தந்தாய் 
  அதை வார்த்தையால் வடிக்க கவிதையை வரமாய் தந்தார் கடவுள் 
  இதுதான் வாழ்க்கை வரமோ! 
  நண்பர்கள் தின நல வாழ்த்துக்கள்! 

  சகோதரிகளுக்கான கவிதைகள் (Raksha Bandhan Quotes For sisters)

  2. நல்ல நண்பனை நீ அடைய விரும்பினால் 
  நீயும் நல்ல நண்பனாக இருக்க வேண்டும் 
  நண்பகல் தின வாழ்த்துக்கள்!  

  3. இதயத்தில் உணரப்பட்டு 
  இதயத்தில் வாழ்வது நட்பு 
  நிரந்தர மகிழ்ச்சி நட்பால் மட்டுமே 
  உறுதி கொடுக்கவல்லது! 

  4. வாழும் வரை வாழ்க்கை 
  வெல்லும் வரை தோல்வி 
  வலிக்கும் வரை கண்ணீர் 
  உதிரும் வரை பூக்கள் 
  மறையும் வரை நிலவு 
  மரணம் வரை நம் நட்பு!  

  5. உப்பு இருந்தால் தானே 
  உணவு சுவைக்கும்! 
  நட்பு இருந்தால் தானே 
  வாழ்க்கை இனிக்கும்!  

  6. தாயின் அன்பு...
  அது வானம் வரை! 
  தந்தையின் அன்பு...
  அது கடல் வரை! 
  நட்பின் அன்பு... 
  அது உயிருள்ள வரை! 

  7. சிறந்த நண்பர்கள் கண்ணாடியும் நிழலும் போல! 
  கண்ணாடி பொய் சொல்லாது...
  நிழல் நம்மை விட்டு விலகாது...

  8. சொந்தம் என்பது பனித்துளி போல.
  நொடி பொழுதில் மறைந்து விடும் 
  ஆனால் நட்பு என்பது ஆகாயம் போல.
  என்றும் நிலைத்து இருக்கும். 

  9. ஆயிரம் சொந்தம் நம்மை தேடு வரும்....
  ஆனால், தேடினாலும் 
  கிடைக்காத ஒரே சொந்தம் 
  நல்ல நண்பர்கள் ...! 

  10. தம்மாறி பொய், தடுமாறும் போதெல்லாம் 
  தாங்கிப்பிடித்து தடம்பதிக்க வைக்கும் 
  சிறப்பு நட்புக்கு மட்டுமே உண்டு!!!

  Pixabay

  தோழிக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (Friendship Day Wishes For Her)

  1. எண்ணில் வைக்கும் அன்பை மிஞ்ச
  எவரும் இல்லை உன்னை விட
  அதனாலேயே
  உன்னை கெஞ்சி நிற்கிறேன்
  எண்ணை நேசி என்று

  2. சதா ரணப்பட்டு கொண்டிருந்தவனையும்
  சாதனையாலனாக்கி
  சந்தோசப்படும் பெருமை
  நட்பிற்கு மட்டுமே உரியது!

  3. நிலையான அன்பிற்கு பிரிவில்லை
  சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை
  தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை
  உண்மையான நம் நட்புக்கு
  என்றும் மரணமில்லை

  4. கண்கள் அழவில்லை
  உதடுகள் சொல்லவில்லை
  இதயம் மட்டும்
  வலியால் துடிக்கிறது
  தோழி உன்னை காணாமல்

  5. மிகச் சிறந்த பரிசு ஒரு அம்காடியில் இல்லை,
  ஒரு மரத்தின் கீழ் அல்ல, ஆனால்
  உண்மையான நண்பர்களின் இதயங்களில்.
  நண்பர்கள் தின வாழ்த்துக்கள் என் தோழியே!

  6. மரணமே வந்தாலும்
  உன்னை மறக்காத இதயம் வேண்டும்
  மீண்டும் ஜனனம் என்றால் அதில்
  நீயே ஏன் தோழியாக வேண்டும்!

  7. அம்மாவின் அன்பை அடுத்தவரிடம் காண்பது போல
  அப்பாவின் அறிவுரைகள் நம்மில் ஊரிவிடுவது போல
  சகோதர்களிடம் சண்டை போடுவது போல
  அனைத்தையும் உணர நீ ஒருத்தி போதும்
  என்ன்று எண்ணம் வரவைப்பதே உண்மையான நட்பு உன்னை போல!

  8. ஒரு நல்ல தோழி மட்டும் இருந்தால் போதும்
  தோல்வியையும் துவட்டி போட்டு விடலாம்
  அத்தகைய ஏன் நேசமிகு உண்மையான தோழிக்கு
  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  9. ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
  அழுவதில் கூட ஆனந்தம் உண்டு.
  தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
  விழுவதால் கூட சுகம் உண்டு!

  10. நிஜத்தில் உன்னை தொலைத்த நான்
  இன்று நினைவுகளில் உன்னை தேடிப்பார்க்கிறேன்
  ஏன் தேடலோ நிஜமானது
  உன் நினைவுகளோ நிலையானது
  என்றும் ஏன் மனதில் நட்புடன்!

  நண்பனுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்(Friendship Day Wishes For Him)

  1. முகத்தில் தெரியும் அழகையும் சிரிப்பையும்
  காண்பது உறவு.
  அழுகைக்கும், சிரிப்பிற்கும் பின் இருக்கும் காரணத்தை
  கண்டறிவது நட்பு!

  2. நட்பு நம்பிக்கையிலானது,
  நட்பு நீடித்து வருவது,
  நட்பு மறக்கக்கூடியது அல்ல,
  நட்பு எளிதில் முரியாதது!

  3. எத்தனையோ மனஸ்தாபங்கள்,
  கிண்டல்கள், சின்ன சின்ன வன்முறைகள்
  என நாம் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டாலும்
  என்னால் உன்னை என்றுமே மறக்க முடியாது
  ஏன் இனிமையான நண்பனே!

  4. மரணமே வந்தாலும்
  உன்னை மறக்காத இதயம் வேண்டும்
  மீண்டும் நனனம் என்றால் அதில் நீயே
  ஏன் நண்பனாக வேண்டும்!

  5. நம்பிக்கை என்பது தும்பிக்கை போல
  நம்பிக்கை தான் நட்பின் சுவரு
  நம்பிக்கை உடைந்து போகும் போது
  நம்மிடம் இருந்து எத்தனையோ விஷயம்
  இறந்து போகிறது!

  6. பிறரை நேசிக்க மறக்காதே
  கல்வியை கற்க மறக்காதே
  தவறை மன்னிக்க மறக்காதே
  இரவில் உறங்க மறக்காதே
  கனவுகளை காண மறக்காதே
  விடியலில் விழிக்க மறக்காதே
  நட்பில் நல்ல நண்பர்களை இழக்காதே!

  7. எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் அனுபவத்தால் வரும் என்போர் பெரியோர்!
  அன்பால் உண்டாவது என்போர்
  அன்பர்!
  பக்தியால் வரும் என்போர்
  பக்தர்!
  அனைத்தும் கலந்த நட்பால் மட்டுமே வரும் என்போர்
  நண்பர்!

  8. உன்னை கொடுத்தால் எண்ணை கொடுப்பேன் என்று
  காதலை போல் பேராசை எல்லாம் நட்புக்கு இல்லை
  எதையும் எதிர்பார்க்காமல் வருவது நட்பு!

  9. படிப்பில் முதல் இடம் பிடிக்க ஊக்கப்படுத்துபவர்கள் பெற்றோர்
  பாசத்தை முதலாய் கொடுக்கும் இதயம் நட்பு!

  10. அழகான உன்னை ஆழமான இதயத்தில்
  உயிருக்குள் உன்னை வைத்து உள்ளம் முழுவதும்
  உன் நட்பை வைத்து
  உன் நனைவுகளுடன் வாழும் உன் நண்பன்!

  நெருங்கிய நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் (Friendship Day Wishes For Best Friends)

  1. நட்பு நம்பிக்கையிலானது,
  நட்பு நீடித்து வருவது,
  நட்பு மறக்கக்கூடியது அல்ல,
  நட்பு எளிதில் முறியாதது!

  2. உண்மையான நட்பு எதற்காகவும் நட்பை விட்டுக்கொடுக்காது!
  அதிசயங்கள் நட்பால் மட்டுமே சாத்தியமாகும்,
  முடியாததும் முடியும் நட்பில் மட்டுமே!

  3. உண்மையான நட்பை அடைவது கடினம்,
  நிபந்தனைகள் கொண்ட அன்பை கொண்டது உறவுகள்,
  நிபந்தனைகள் அற்ற அன்பை கொண்டது நட்பு!

  4. பின்னோக்கி பார்ப்பதில் உறவுகள் வேதனைகளை கொடுக்கலாம்,
  அனால் நட்பில் பின்னோக்கி பார்த்தல் சந்தோசத்தையே கொடுக்கும்!

  5. கிடைத்தற்கரிய பரிசு நட்பு!
  நட்பு அன்பில் நிறைந்து வழிவது,
  நட்பில் கரைகள் கிடையாது!

  6. மலர்களின் எண்ணிக்கை கொண்டு தோட்டத்தின் அழகை அறியலாம்,
  நட்பின் எண்ணிக்கை கொண்டு வாழ்கையின் அழகை அறியலாம்!

  7. நட்புக்கு தூரம் கிடையாது,
  நட்பு எல்லைகளுக்கு அப்பாற்பட்டது!

  8. இதயத்தில் உணரப்பட்டு இதயத்தில் வாழ்வது நட்பு,
  நிரந்தர மகிழ்ச்சி நட்பால் மட்டுமே உறுதி கொடுக்கவல்லது!

  9. நட்புகள் செய்யபடுபவை அல்ல,
  நீண்ட நாட்கள் நம்முடன் தொடர
  அது தானாக நிகழ வேண்டும்.

  10. விரும்பிய ஒருவரை மட்டும் சொந்தமாக்கி கொள்வது காதல்,
  விரும்பிய அனைவரையும் சொந்தமாக்கி கொள்வது நட்பு!

  Pixabay

  முகநூல் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (Friendship Day Status For Facebook)

  1. நட்பில் நான் ஒரு காற்று மாதிரி...!
  நான் இருப்பது உனக்கு தெரியாது...!
  ஆனால் நான் இல்லாமல்
  உன்னால் இருக்க முடியாது...!

  2. பூத்த பூக்கள் தான் உதிரும்
  நம் மனதில் பூத்த நட்புக்கள் என்றும்
  உதிர்வதில்லை...!

  3. பூவின் மனமும் நட்பின் குணமும் ஒன்று தான்...!
  பூ வாடினாலும் வாசம் போவதில்லை
  நட்பு பிரிந்தாலும் நேரம் மறைவதில்லை...!

  4. தினம் ஒரு முறை தோல்வி பெற விரும்புகிறேன்..!
  என் தோழன் என் தோளில் தட்டி ஆறுதல்
  சொல்வதை எதிர்பார்த்து....!

  5. இசையை இனிக்க வைத்தது...!
  வரிகளை ரசிக்க வைத்தது...!
  மொத்தத்தில் என் தனிமைக்கு
  உற்சாகம் ஊட்டும் தோழியாக இருந்தது நீயே...!

  6. பெண்மைக்கு கற்பு புனிதம் என்றால்..
  தோழமைக்கு நட்பு புனிதம்..
  நண்பனாக நீ கிடைத்த பின்..!

  7. வீழ்ந்தவன் மீண்டும் எழ ஒரு நொடி போதும்
  ஊக்குவிக்க உண்மையான நண்பர்கள் இருந்தால்...

  8. காதலின் ஆழம் கை சேரும் வரை...
  நட்பின் ஆழம் கல்லறை வரை...

  9. பார்த்தது பல முகம்...
  பழகியது சில முகம்...
  பிடித்தது உன் முகம்...
  அதுவே நம் நட்பின் அறிமுகள்...

  10. ஒருவர் இதயத்தில் இன்னொருவர் வாழ்வது
  காதல்!
  ஆனால்
  ஒருவர் இன்னொருவரின் இதயமாக வாழ்வது
  நட்பு!!

  வாட்ஸ் ஆப் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (Friendship Day Status For Whatsapp)

  1. சோகமான நேரம் கூட
  சுகமாக மாறிப்போகும்..
  வலிகள் கூட தொலைந்து போகும்
  நண்பர்களுடன் இருந்தால்..
  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..

  2. நல்ல நண்பர்களுடன் இருக்கும் போது தான் எப்போதும்
  மனம் விட்டு சிரிக்க முடிகிறது
  நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

  3. மனம் இருந்தால் வருவேன் என்றது காதல்..
  பணம் இருந்தால் வருவேன் என்றது சொந்தம்...
  எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன் என்றது நட்பு...
  நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..

  4. பிரச்சனை என்றால் ஏன் நண்பன் துணை நிற்பான் எனும்
  நம்பிக்கையே வாழ்க்கையின் பலம்...
  நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

  5. உண்மையான நட்பை அடைவது கடினம்.
  ஏனென்றால்...
  நிபந்தனைகளற்ற அன்பை கொண்டது தான் நட்பு...
  நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

  6. திசை மாறும் என தெரிந்தும்
  உன்னுடன் பயணிக்க நினைக்கிறது என் நட்பு...

  7. காரணம் இல்லாமல் கலைத்து போக
  இது கனவும் இல்லை...
  காரணம் சொல்லி பிரிந்து போக
  இது காதலும் இல்லை...
  உயிர் உள்ள வரை தொடரும் உண்மையான நட்பு!!

  8. வளர்ச்சியில் மட்டுமல்ல..
  வர்யுமையிலும் துணை நிற்பவனே
  உண்மையான நண்பன்...!!

  9. முன்னோக்கி வளரும் பகல் போல
  நம் நட்பு வளரட்டும்
  பின்னோக்கிக் கரையும் இரவு போல
  பிணக்குகள் எந்நாளும் அகலட்டும்!!

  10. ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
  அழுவதில் கூட ஆனந்தம் உண்டு
  தூக்கி நிருத்த தோழன் இருந்தால்
  விழுவதால் கூட சுகம் உண்டு!

  Pixabay

  சுவாரசியமான நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (Funny Friendship Messages)

  1. நீ மேலே உயரும் போது
  நீ யார் என்பதை உன் நண்பர்கள் அறிவார்கள்.
  ஆனால், நீ கீழே போகும் போது தான்
  உன் உண்மையான நண்பர்கள் யார் என்பதை
  நீ அறிய முடியும்!

  2. புன்னகை என்ற முகவரு உங்களிடம் இருந்தால்...
  நண்பர்கள் என்ற கடிதம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்...

  3. காரணம் இல்லாமல் களைந்து போக இது
  கனவும் இல்லை
  காரணம் சொல்லி பிரிந்து போக இது
  காதலும் இல்லை
  உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நட்பு!

  4. உனக்காக எதையும் இழப்பேன்
  என்று சொல்லும் நண்பனை விட...
  நீ எதை இழந்தாலும் உன் கூடவே இருப்பேன்..ன்னு
  சொல்ற நண்பன் தான் சிறந்தவன்...

  5. எண்ணை விட நல்ல நண்பனை நீ கண்டுபிடித்தால்...
  எண்ணை கடந்து செல்...!
  உன்னை தடுக்க மாட்டேன்.
  ஆனால் அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால்
  பின்னால் திரும்பி பார்
  அங்கே உனக்காக நான் காத்திருப்பேன்
  அதே நட்புடன்...!

  6. ஆயிரம் பேராசி நண்பர்களாக வைத்திருப்பது உனக்கு
  பெருமையல்ல...
  ஆயிரம் பேர் எதிர்க்கும் போது
  உனக்காக அவர்களை எதிர்க்கக் கூடிய நண்பன் ஒருவனை
  வைத்திருப்பதே உனக்கு
  பெருமையாகும்...

  7. பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம்,
  ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது கடினம்.
  பணம் தேய்ந்துகொண்டே செல்லும்.
  ஆனால், நண்பர்கள் நம்மை ஊக்கப்படுத்தி மேம்படுத்திக் கொண்டே இருப்பர்.

  8. நண்பர்கள் மாம்பழங்களை போன்றவர்கள்.
  யார் இனிப்பார், யார் இனிக்கமாட்டார் என்பது தெரியாது.
  ஆனால், நான் அதிர்ஷ்டம் நிறைந்தவர்.
  நான் உன்னிடம் மிக இனிப்பான மாம்பழங்களை கண்டிருக்கிறேன்.

  9. மனம் விட்டு பேச ஒரு நல்ல நட்பு கிடைத்தால்
  அதுவும் தாய் மடி தான்...!

  10. நட்பு ஒரு புத்தகம் போன்று
  அதை நிமிடங்களில் அழித்துவிடலாம்...
  ஆனால் அதை எழுத ஆண்டுகள் ஆகும்!

  திருவள்ளுவரின் நட்பு

  1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
  வினைக்கரிய யாவுள காப்பு.

  சாலமன் பாப்பையா விளக்கம்: சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.

  2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
  பின்னீர பேதையார் நட்பு.

  மு.வரதராசன் விளக்கம்: அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

  3. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
  நட்பாங் கிழமை தரும்.

  சிவயோகி சிவக்குமார் விளக்கம்: பார்த்து பழகுதல் இல்லை என்றாலும் உணர்ச்சிதான் நட்பை தொடரச் செய்யும்.

  4. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
  அகநக நட்பது நட்பு.

  சாலமன் பாப்பையா விளக்கம்: பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

  5. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
  இடுக்கண் களைவதாம் நட்பு.

  மு.வரதராசன் விளக்கம்: உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

  வைரமுத்துவின் நட்பு

  1. "நட்பு என்பது
  சூரியன் போல்
  எல்லா நாளும்
  பூரணமாய் இருக்கும்

  நட்பு என்பது
  கடல் அலை போல்
  என்றும்
  ஓயாமல் அலைந்து வரும்

  2. நட்பு என்பது மலரை போல்
  அல்ல. ஒரு நாளில் பூத்து உதிர்ந்துவிடுவதற்கு
  அது வானில் இருக்கும் நட்சத்திரம் போல!
  வானம் இருக்கும் வரை இருக்கும்!

   

  Pixabay

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!  ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

   

  You Might Like This

  சுதந்திர தின வாட்ஸ்ஆப், முக நூல்