டீனேஜ் பெண்களுக்கான வித்தியாச ஹேர்ஸ்டைல்கள் ! திரும்பி பார்க்க வைக்கும் அழகை பெறுங்கள் !

டீனேஜ் பெண்களுக்கான வித்தியாச ஹேர்ஸ்டைல்கள் ! திரும்பி பார்க்க வைக்கும் அழகை பெறுங்கள் !

எப்போதும் ஒரே மாதிரியான ஹேர்ஸ்டைல்கள் (hairstlyles) உங்கள் காலேஜ் நாட்களை சலிப்படைய வைக்கலாம். அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் சில ஹேர்ஸ்டைல்கள் உங்களை உங்கள் வகுப்பறையின் கவனமயமாக மாற்ற கூடும்.

கூந்தல் தான் பெண்களின் முதல் அழகு என்பதால் அதனை கொண்டே உங்கள் அழகை நீங்கள் எப்படி மெருகேற்றி கொள்ளமுடியும் என்று பார்க்கலாம்.

youtube

போனி ஸ்டைல்

போனி டைல் எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஹேர்ஸ்டைல்(hairstyles). அதில் ஒரு வித்யாசமான முறை உங்கள் கூந்தலின் அழகை வேறுபடுத்திக் காட்ட கூடியது என்றால் அதனை முயற்சி செய்யாமலா இருப்பீர்கள்?

முதலில் உங்கள் கூந்தலின் ஒரு மத்திம பகுதியை பிரித்து உங்கள் முன் பக்கம் போட்டுக் கொள்ளுங்கள். மிச்சம் உள்ள கூந்தலை உங்கள் வழக்கமான போனி டைல் பாணியில் கொஞ்சம் தளர்வாக போடுங்கள். இப்போது முன்பக்கம் பிரித்து வைத்த கூந்தலை எடுத்து பின்புறம் உள்ள போனி டைலொடு இணைத்து அந்த முடியாலேயே சிறிய முடிச்சு போடுங்கள். அதன் பின்னர் போனியின் பக்கத்தில் உள்ள முடியில் இருந்து சிறிது எடுத்து இரண்டாவதாக இணைத்த முடியுடன் சேர்த்து ஒரு சிறு முடிச்சிடுங்கள். இதன் மூலம் இவை இரண்டும் பிரியாமல் இருக்கும். அவ்வளவுதான் உங்கள் வகுப்பறையில் உங்கள் கூந்தல்தான் மீதுதான் அனைவரின் பார்வையும் இருக்கும்.

youtube

டிவிஸ்டட் பன்

இது குறைவான கூந்தல் கொண்டவர்களுக்கானது. இதுவும் போனி டைல் போலத்தான் ஆனால் வித்தியாசமானது.

முதலில் சிறிது தளர்வான மத்திம உயரத்தில் ஒரு போனியை போடுங்கள். அதன் பின்னர் எலாஸ்டிக் பேண்ட் உள்ள இடத்தில் சிறிய ஓட்டையை உருவாக்குங்கள். அதன் மூலம் போனிடைலின் தொங்கும் முடிப்பகுதியை உள்ளே நுழையுங்கள். பன் வடிவத்தில் மாற்றி பின் செய்யுங்கள். இந்த ஸ்டைல் டீனேஜ் பெண்களை பக்குவமானவராகவும் படிப்ஸ் பெண் போல என்றும் தோற்றமளிக்கும் விதத்தில் இருக்கும்.

Also Read நீண்ட சுருள் முடி சிகை அலங்காரங்கள்

youtube

நீளமான கூந்தல்

இவர்கள் எப்போதுமே கொடுத்து வைத்தவர்கள்தான் என்பதால் எந்தவிதமான ஹேர்ஸ்டைல்களும் இவர்களுக்கு பொருந்தும். இப்போது குறிப்பிட போகும் ஹேர்ஸ்டைல் இன்னொரு நபரின் உதவியுடன் செய்ய வேண்டி வரும்.

முதலில் உங்கள் நெற்றி மற்றும் பக்கவாட்டு கூந்தலை தனியாக எடுத்து அதனை பேண்ட் போட்டு ஒன்றிணைக்க வேண்டும். இப்போது காதுகளின் பின் இருக்கும் முடிகளை சேர்த்து அந்த பேண்டிற்கு மேல் கொண்டு சென்று பின்னின் உதவியுடன் அதனுள் இணைக்க வேண்டும். இதைப் போலவே அடுத்த காதிற்கும் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் பேண்ட் போடப்பட்ட முடியை எடுத்து அதனுடன் கொஞ்சம் நடுப்பகுதி முடியை சேர்த்து தளர்வாக இன்னொரு பேண்ட் போடவும். இப்படியே பேண்ட் போடப்பட்ட நடுமுடியுடன் மற்ற முடியை சேர்த்து ரப்பர் பேண்ட் இணைத்து கீழ் வரையிலும் போடவேண்டும். ஒரு பெரிய தளர்வான பின்னல் போன்ற தோற்றம் வரும். இதன் பின்னர் ரப்பர் பேண்ட் போடப்பட்ட இடங்களில் உங்களுக்கு பிடித்த முத்து பின்களையோ அல்லது கற்கள் அல்லது பூக்கள் கொண்ட பின்களையோ இணைக்க.. தளர்வான கூந்தல் ஸ்டைல் அதேசமயம் நடுவே அழகான பின்னல் ஸ்டைலுடன் ஸ்டைலுடன் நீங்கள் அழகாக தெரிவீர்கள்.

வீடியோவிற்கு இங்கே அழுத்தவும்.

youtube

வழக்கமான ஹேர்ஸ்டைல் கொஞ்சம் வித்யாசமாக செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த முறையை முயன்று பாருங்கள்.

உங்கள் நெற்றியில் இருந்து ஒரு பக்கமாக உங்கள் முடியை ஈடுத்து அதனை சுருட்டி காதுக்கு பின்புறமாக பின் செய்யுங்கள். இப்போது மீதம் உள்ள முடியை எந்தப்பக்கமாக பின் செய்தீர்களோ அதே பக்கத்திற்கு கொண்டு வாருங்கள். அதன் பின்னர் எல்லா முடிகளையும் சேர்த்து பின்னலிட ஆரம்பியுங்கள். பின்னி முடித்து பேண்ட் போட்ட உடன் கொஞ்சம் பின்னலில் உள்ள முடிகளை அகலமாக்கி விடுங்கள். ஆங்காங்கே முடிகளை எடுத்து விடுங்கள். ஒரு பிரீக் ஸ்டைல் பெண்ணாக நீங்கள் மாறியிருப்பதை உணர்வீர்கள்.

விடீயோவிற்கு இங்கே அழுத்தவும்.

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன