தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை : கிங் ஆஃப் கோலிவுட் - யூடியூப் புகழாராம்!

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை  : கிங் ஆஃப் கோலிவுட் - யூடியூப் புகழாராம்!

நடிகர் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை (nerkonda parvai)படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தில் நடிகர் அஜித் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாளில் இருந்தே அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே நடிகர் அஜித் வைத்துள்ளார். அவரது படம் வெளியாவதை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.


சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வினோத் இயக்கத்தில் ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் என்ற படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். இதில் அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். அவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில், நீரவ்ஷா ஒளிப்பதிவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி படம் வெளியாக உள்ளது.

Subscribe to POPxoTV

12 நிமிடத்தில் ஒரு லட்சம் லைக்குகள் : யூடியூபில் சாதனை


இந்நிலையில் படத்தின் ட்ரைலர் நேற்று மாலை யூடியூபில் வெளிவந்த நிலையில், இணையதளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது. ட்ரைலரில் அஜித்தின் வசங்கங்கள், ரங்கராஜ் பாண்டேயின் வாதங்கள் என ரசிகர்களை திருப்திபடுத்தும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. ஒருத்தர் மேல நீங்க வைத்துள்ள விஸ்வாசத்தை காட்ட ஏன் இன்னொருத்தரை அசிங்கப்படுத்துறீங்க என்று அஜித் ட்ரைலரில் கூறுகிறார். அஜித் ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் இந்த ட்ரைலரை ஷேர் செய்து வருகின்றனர். 12 நிமிடத்தில் ஒரு லட்சம் லைக்குகளை இந்த ட்ரைலர் பெற்றுள்ளது. மேலும் ஒரே நாளில் மில்லியன் கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.


ci2


முதல் முறையாக குழந்தையை வெளியில் காமித்த ப்ரஜின் மற்றும் சாண்ட்ரா


ரசிகர்கள் கொண்டாட்டம்
மேலும் ரசிகர் ஒரு அஜித்தின் ட்ரைலர் காட்சியின் முன்பு கையில் சூடம் ஏத்தி கட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சில நிமிடங்களிலே அதிக பார்வையாளர்களை இந்த ட்ரைலர் பெற்றுள்ள நிலையில் யூடியூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கிங் ஆஃப் கோலிவுட் தல அஜித் என்று பதிவிட்டுள்ளது. இதனை பார்த்த அஜித் ரசிங்கர்கள் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். படத்தின் மற்றொரு போஸ்டர் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.


கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்துகோலிவுட் பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகர் விஜய் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்ரைலர் அருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த படம்  பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை மையமாக வைத்து படம் இருக்கும் என கூறப்படுகிறது.நேர்கொண்ட பார்வை படத்தின் (nerkonda parvai) ட்ரைலர் கிளாஸ். இயக்குனர் வினோத் கதையை கையாண்ட விதம் அருமை. நீரவ்ஷா, ஷ்ரத்தா, போனி கபூர் சார் மற்றும் ஒட்டு மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.விக்னேஷ் ஷிவன் கண்கள் வழியாக நயன்தாரா.. வைரலாகும் புகைப்படம் !


இந்த படத்தை தேர்வு செய்த அஜித்திற்கு பாராட்டுகள். இயக்குனர் வினோதிடம் இருந்து மாஸ் மற்றும் கிளாஸ் படைப்பு என்றும், படம் பிளாக் பஸ்டர் ஆக வாழ்த்து என இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க' என்ற அஜித்தின் வசனத்தை வெங்கட் பிரபு அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.என்ன ஒரு ட்ரைலர், தல அஜித் சாரின் நடிப்பு, வசனம் மற்றும் மேனரிசம் அருமை என்று ஆத்க் ரவிச்சந்திரன் பாராட்டியுள்ளார் 'ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க' என்ற வசனத்தை குறிப்பிட்டு புல்லரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய அளவில் யூடியூப் ட்ரென்டிங்கில் முதலிடத்தில் நேர்கோண்ட பார்வை படத்தின் ட்ரைலர் உள்ள நிலையில், அதிக அஜித் ரசிகர்கள் உள்ள மலேசியாவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பல்வேறு விமர்சனம் மத்தியில் பேரன் பிறந்தநாளை விமர்சியாக கொண்டாடிய ராதிகா சரத்குமார்


Image Credits - Twitter, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.


பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo