இல்வாழ்க்கை உறவை ஆரோக்கியமாக மேம்படுத்த பின்பற்ற வேண்டிய கட்டளைகள்!

இல்வாழ்க்கை உறவை ஆரோக்கியமாக மேம்படுத்த பின்பற்ற வேண்டிய கட்டளைகள்!

கணவன்-மனைவிக்குள் சண்டை வருவது இயற்கையே. ஆனால் அந்த சண்டையானது நிரந்தரமானதாக அல்லாமல் தற்காலிகமாக மட்டுமே இருக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் அவுட்டிங், டேட்டிங் என்று வாழ்கின்றனர். எவ்வளவு வேகமாக ஒருவரை ஒருவர் நேசிக்க அரம்பிக்கின்றனரோ, அதே வேகத்தில் பிரிந்தும் விடுகின்றனர். ஒருவரை வருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தாலே பிரிவு என்ற சொல்லையே வாழ்க்கையில் இருந்து நீக்கிவிட்டலாம். உங்களது உறவை (relationship) ஆரோக்கியமாகவும், வலுமையாகவும் மேம்படுத்த சில விஷயங்களை முறையாக பின்பற்றினாலே போதுமானது. அவை என்ன என்பதை இங்கு காணலாம்.

pixabay

குணத்தை நேசியுங்கள்

 • கணவன் மனைவிக்கும் அவர்களது குணங்களே உறவை (relationship) மேம்படுத்தி இல்லற வாழ்க்கையை இனிமையாக வழிநடத்தி செல்ல உதவுகிறது. தங்களது வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதே அனைவரது தேடலாகவும் இருக்கிறது. ஆனால் வெளித்தோற்றத்தை கருத்தில் கொள்ளாமல் துணையின் குணத்தை ஆராய வேண்டும். 
 • திருமணத்திற்கு முன்னர் துணையின் குணத்தை ஓரளவிற்கு தான் யூகிக்க முடியும். எனவே திருமணத்திற்கு பின்னர் அவரது குணத்தை நேசியுங்கள். அதுவே வாழ்நாள் முழுவதும் நிலையானது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

ஒரு நாள் சென்னை மக்களுடன் தலைமறைவாக வாழ விரும்பும் தீபிகா!

நேரம் ஒதுக்குங்கள்

 • வேலைக்கு தரும் முன்னுரிமையை உங்கள் மனைவி/கணவருக்கு அளியுங்கள். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் பிரித்து பார்க்க கற்றுக்கொள்ளுங்கள். வேலை பார்க்கும் போது இடையே நேரம் கிடைக்கும் போது போன் செய்து பேசுங்கள். அப்போது தான் உங்கள் துணைக்கு நீங்கள் அவரை நினைத்து கொண்டே இருப்பதாக உணருவார். இதனால் உங்கள் மீதான பாசம் அதிகரிக்கும்.
 • வீட்டிற்கு வந்த பின்னரும் அலுவலக வேலை குறித்து சிந்திக்காதீர்கள். அலுவலகத்தில் நடந்த சந்தோசமான விஷயங்கள் குறித்து பேசுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உங்கள் துணை தனிமையாக இருப்பதாக உணர வைக்காதீர்கள். முடிந்தவரை அவருக்கான நேரத்தை ஒதுக்குங்கள்.
 • துணைக்கு ஒதுக்கும் நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க முயலுங்கள். அவருக்காக நேரம் ஒதுக்கி விட்டு அந்த நேரத்தில் நீங்கள் உங்க வேலையை அல்லது பொழுதுபோக்கை செய்வதால் எந்த ப்ரயோஜமும் இல்லை. 
 • துணைக்காக ஒதுக்கிய நேரத்தில் எதிர்காலம் குறித்து திட்டமிடுங்கள். அவரது விருப்பங்கள் குறித்து கேட்டறிங்கள். வெற்றி என்பது உங்கள் உறவுகளை (relationship) இழந்து வருவதாக இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைதூர உறவை சிக்கல் இன்றி எப்படி கொண்டு செல்லலாம்

pixabay

மன்னியுங்கள்

 • மன்னிப்பு கேட்பது மற்றும் கொடுப்பது சிறந்த குணங்களில் ஒன்றாகும். உங்கள் துணை ஏதேனும் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடுங்கள். அவர் உங்களிடம் மன்னிப்பு கேட்கும் போதே அவரது தவறை உணர்ந்து விட்டதாக தான் அர்த்தம். நீங்கள் தொடர்ந்து கோபமாக இருந்தால் இருவடையே பிரிவுகள் அதிகமாகும். 
 • தவறு செய்தால் அதனை ஒப்புக்கொண்டு உடனடியாக மன்னிப்பு கேட்பது நல்ல வாழ்க்கை துணைக்கு அழகு. ஈகோவை விட்டு மன்னிப்பு கேட்பவரிடமிருந்து அவரது துணை விலக விரும்புவதில்லை என்பதே உண்மை. 
 • சின்ன சின்ன தவறுகளை பெரிதுபடுத்தாமல் இருப்பதும், தவறு நேர்ந்தால் துணை மீது பழிபோடாமல் இருப்பதும் உறவுக்கு (relationship) நலம் சேர்க்கும். ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதில் யார் மீது தவறு உள்ளது என்று ஆராயாமல், பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துங்கள். 

பெற்றோர்கள் விவாகரத்து.. தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள்..

அன்பை வெளிப்படுத்துங்கள்

 • இன்றைய காலத்தில் பெரும்பாலோனோர் செய்யும் தவறுகளில் முக்கியமான ஒன்று அன்பை வெளிப்படுத்தாமல் இருப்பது. தங்கள் துணையை நன்கு புரிந்து வைத்து கொள்வார்கள். அவர் மீது போதுமான அன்பும் வைத்திருப்பார்கள். ஆனால் அவரது துணை அதனை அறியும் வகையில் காதலை வெளிப்படுத்த மாட்டார்கள்.
pixabay

 • உங்கள் துணைக்கு நீங்கள் பாசம் வைத்திருப்பது தெரியலாம், அனால் அதனை வெளிக்காட்டினால் தான் இருவருக்கும் இடையேயான பாசம், இணைப்பு அதிகமாகும். எனவே உங்கள் காதலை நிலைமை, சூழல், கவலை என எதையும் காரணம் கட்டமால் துணையிடம் காட்டுங்கள். 

Also Read : திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்வது

கடந்த காலத்தை விட்டு தள்ளுங்கள்

 • கடந்த கால நிகழ்வுகளை அதிகம் நினைப்பதே பிரிவுக்கு காரணமாக அமையும். உங்கள் கடந்த காலம் இருளாக இருந்திருந்தாலும், அழகாக இருந்திருந்தாலும் அது முக்கியமல்ல. உறவில் நிகழ்காலமே முக்கியமானது. கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டு வாழ்வது உங்கள் நிகழ்காலத்தை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் பாதிக்கும் எனபதை கருத்தில் கொள்ளுங்கள். 
 • நல்ல விஷயங்களை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த விரும்பத்தக்க விஷயங்களை முடிந்தவரை மறந்து விடுங்கள். மேலும் கடந்த காலத்தில் செய்த தவறை சொல்லி காட்டாதீர்கள். உங்கள் துணையுடன் கிடைக்கும் ஒவ்வொரு நிகழ்கால நொடியையும் அனுபவித்து மகிழ்ச்சியாக இருங்கள்.

ஆரோக்கிய வாழ்விற்கு பெண்கள் பின்பற்ற வேண்டிய எளிய குறிப்புகள்!

மற்றவர்களை நுழைய விடாதீர்கள்

 • உங்களின் உறவில் ஏற்படும் பிரச்சனையில் மூன்றாம் நபர் நுழைவதை தவிருங்கள். மற்றவர்களின் கருத்துக்கள் உங்கள் உறவை பாதிக்க ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். முடிந்தவரை உங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே தீர்த்து கொள்ளுங்கள். உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை உங்கள் துணையுடன் நீங்களே எடுத்து கூறினால் அவர் புரிந்து கொள்வர். 
 • நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்களுக்கு விருப்பமானவர்கள் என அனைவரும் அவர்கள் சொந்த கருத்துக்களை கூறுவார்கள். அவர்களின் கருத்துக்களை கேளுங்கள் தவறில்லை. ஆனால் முடிவை உங்கள் மனதை கேட்டு எடுங்கள். உங்கள் துணைக்கு உங்கள் மீது நம்பிக்கை இருப்பின் எந்த விதமான பிரச்னைகளையும் எளிதாக தீர்த்து விடலாம்.
Youtube

இந்த விஷயங்களை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் துணையுடனான உறவு நீடிக்கும். ஒருவருக்கொருவர் யார் பெரியவர் என்று போட்டி போடாமல் விட்டுக்கொடுத்து சென்றாலே இல்லற வாழ்க்கை இனிதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே உங்கள் துணையை புரிந்து கொண்டு, விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.

புல்லாங்குழல் கேள்விகளையும் படியுங்கள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.