பெருகிவரும் விவாகரத்து (divorce) வழக்குகளால் கோர்ட்கள் திணறி கொண்டிருக்கின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கைகள் குறைவாக இருக்கும்பட்சத்தில் தீர்ப்புகள் கிடைக்க பல வருட தாமதங்கள் ஏற்படுகின்றன.
தங்கள் மூலமாக உருவான உயிர்களை காப்பதன் பொறுப்பையும் மறந்து விவாகரத்துக்கள் பெருகி வருகின்றன. சகிப்புத்தன்மை இல்லாததாலும் நிரூபிக்க முடியாத சந்தேகங்களாலும் மனதுக்கு பிடித்த வாழ்வை அமைத்துக் கொள்ளக் கூடிய பொருளாதார சுதந்திரம் இருப்பதாலும் பெண்களும் விவாகத்தை ரத்து செய்ய தயாராகவே இருக்கின்றனர்.
பெண்களும் என்கிற வார்த்தை ஏன் வந்தது என்றால் முன்னோர்கள் காலத்திலும் இதே கணவன் மனைவி தகராறுகள் இருந்தன. பாட்டிகள் பல தசாப்தங்களாக தாத்தாக்களுடன் மௌன யுத்தம் செய்தனர். தனி தனியே ஒரே வீட்டில் இருந்தனர்.
அன்றில் பறவைகள் ஒன்றாகும் போது.. லிவிங் டு கெதர் - தேவைகளும் தீர்வுகளும் !
பிடிக்காத மனைவியாகவே இருந்தாலும் பிள்ளைகளின் நலன் பொருட்டு கணவர்கள் பொருளாதாரத்தை ஈட்டி மனைவி கையில் தந்து கொண்டுதான் இருந்தனர். கணவனின் நடவடிக்கைகளால் மனம் உடைந்தாலும் மனைவிகள் எல்லோரும் குடும்ப சுமைகளை ஏற்று கொண்டனர். அதற்கான அழுத்தமான காரணம் ஒன்று இருந்தது.
அடுத்த தலைமுறையான தங்கள் பிள்ளைகள் வாழ்வில் தங்களது பிரிவால் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதை அவர்கள் தெளிவாக தெரிந்து வைத்திருந்தனர். ஆகவே சில சுய த்யாகங்களோடு வாழ்வெனும் வாகனத்தை பொறுப்பாக இயக்கி கொண்டிருந்தனர்.
இப்போதைய தலைமுறைகளோ எதற்காகவும் பொறுப்பதில்லை. திருமணமான அரைமணி நேரத்தில் விவாகரத்து கோரிய மனைவி கதைகள் பற்றியெல்லாம் நாம் செய்தி தாள் வழியாக பார்த்து சிரித்தபடி கடந்திருப்போம். அதுவே நமக்கு தெரிந்தவர் வீட்டிலோ நம் வீட்டிலோ நடக்கும்போது நாம் அதிர்ச்சியடைகிறோம்.
விவகாரத்துக்கான காரணங்கள் பற்றி வேறொரு பதிவில் பேசிக்கொள்ளலாம். இப்போது அதனால் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்படும் குழந்தையின் மனநிலை பற்றி மட்டுமே பார்க்கலாம். ஒரு ஆணுடைய விந்தணு ஒரு பெண்ணின் கருப்பையில் நுழையும் சமயத்தில் ஒரு உயிர் ஜனிக்கிறது.
இதற்கு பெரிய முயற்சிகள் எதுவுமே தேவையில்லை. காமம் மட்டுமே போதுமானது. உச்சகட்ட சுகத்தின் அடையாளமாகவே ஜனிக்கின்ற உயிரை நாம் அதன் பின்னர் எப்படி பாதுகாக்கிறோம் என்பதில் இருக்கிறது பெற்றோர்களின் பொறுப்பு.
பிரிவை கேட்டதும் நெஞ்சம் நொறுங்கியது.. கமல்ஹாசன் சரிகா பற்றி அக்ஷரா உருக்கம்
ஆனால் திருமணமான மூன்று வருடங்களில் விவாகரத்து ஒரு வருடத்தில் விவாகரத்து ஐந்து வருடத்தில் விவாகரத்து போன்றவை வரும்போது இவர்கள் சுயநலமாக உணர்ந்த மகிழ்ச்சியின் விளைவாக பெற்றிருக்கும் பிள்ளைகளின் நலனை பற்றி யோசிப்பதில்லை.
பெற்றோர்கள் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் ஆரோக்கியமான மனநிலையோடு வளர்க்கின்றனர். அதே சமயம் குடும்பத்தில் சண்டை வெறுப்பு போன்றவற்றால் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் தாங்கள் உல் வாங்கியதையே வெளிக்காட்ட வேண்டி வருகிறது.
கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டைகளால் குழந்தைகளை கவனிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அவர்களுக்கு தேவையான பரிவோ பாசமோ கிடைப்பதில்லை. அவர்களுக்கு தேவையானதை கவனிக்கவும் யாரும் இல்லாமல் அவர்கள் தனிமைப்படுத்த படுகிறார்கள்.
அக்கறையில்லாமல் தனிமையில் வளரும் குழந்தைகள் தங்களை மாற்று திறனாளிகள் போல உணர தொடங்குவார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா. ஆமாம். அதுதான் உண்மை. ஒவ்வொரு குழந்தைக்கும் அப்பா அம்மா ஆகிய இருவரின் அரவணைப்பும் அதன் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு எண்ணமும் இல்லாவிட்டால் குழந்தைகள் மனதில் வன்முறைகள் ஏற்படுகின்றன. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முரட்டுத்தனம் கொண்ட குழந்தையாக ஒரு பிஞ்சை மாற்றிவிட இந்த பெற்றோர்கள் பிரிவும் ஒரு காரணம்.
ஒரு உறவில் ஏன் முறிவு நிகழ்கிறது? பிரேக்கப் என்பதன் பின்னணி அறிந்து கொள்ளுங்கள்
தனியாக விடப்படும் குழந்தைகள் தன்னைத்தானே பார்த்து கொள்ளும் சுயத்தோடு வளரும் அதே சமயம் வெளிக்காட்ட முடியாத ஏக்கங்கள் அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளால் அதன் மனதில் ஆழமான காயங்கள் ஏற்படும். அதன் வளர்ச்சியை முக்கியமாக மன வளர்ச்சியை அது பாதிக்கிறது.
கணவன் மனைவிக்குள் சண்டைகள் என்றால் குழந்தைகள் பார்வை படும் இடங்களை தவிர்த்து தனியாக பேசி கொள்ளுங்கள். பேசினால் 90 சதவிகித சிக்கல்கள் சரியாகிறது. அதிலும் பொய்கள் முன்னிலையில் இருந்தால் உங்கள் குழந்தைகள் வளரும்வரைக்கும் பொறுமையாகவும் சகிப்பு தன்மையோடும் இருக்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்புதான்.
உங்களால் இந்த பூமிக்கு வந்த ஒரு சிறு உயிர்.. வாய் திறந்து தனது வலிகளை பேச தெரியாத ஒரு உயிர்.. உங்கள் குழந்தை. அதன் மனஓட்டம் தெரியாமல் உங்கள் சொந்த மன நிம்மதிக்காக மற்றொரு உயிரின் வளர்ச்சியை தனிமை எனும் அமிலம் ஊற்றி அணைக்காதீர்கள்.
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !
உங்களால் பேசி தீர்க்க முடியவில்லை என்றாலும் கூட முன்னோர் வழியில் அவரவர் சுதந்திர எல்லைகளோடு குழந்தைகளின் மன வளர்ச்சி பாதுகாப்பானதாக இருக்க ஒன்றாக வாழுங்கள். குழந்தை ஐந்து வயதாக இருக்கும் போது விவாகரத்து எண்ணம் தோன்றினால் 15 வயது வரைக்கும் குழந்தைக்காக பிரியாமல் இருக்க முயலுங்கள்.
உங்களை கேட்டு வேண்டி விரும்பி கொண்டு உங்கள் குழந்தை பிறக்கவில்லை என்பதை உணருங்கள். அதற்கு முழு உலகமுமே பெற்றோர்களாகிய நீங்கள்தான். தாயின் பரிவும் தகப்பனின் அறிவும் அக்குழந்தைக்கு சமமாக தேவை. நீதிமன்ற உத்தரவுப்படி வாரம் ஒருமுறை தகப்பனை 1 மணி நேரம் மட்டுமே சந்திக்கும் எத்தனையோ குழந்தைகளை நாம் பார்த்து கொண்டே இருக்கிறோம்.
உங்கள் உயிரில் இருந்த வந்த உயிர்களுக்காக சில காலம் உங்கள் விருப்பு வெறுப்புகளை தாண்டி சில தியாகங்கள் செய்யுங்கள். எதிர்கால தலைமுறை வன்முறை வன்மம் இல்லாமல் நேசம் ப்ரியத்தோடு வளர்வது உலகிற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.
உங்க காதல் எந்த நிலை.. திருமணத்தில் முடியுமா.. தெரிந்து கொண்டு தெளிவாகுங்கள்!
இதில் விதி விலக்காக சொந்த குழந்தையை காமத்திற்காக பயன்படுத்தும் மோசமான தகப்பன்கள் குடித்து விட்டு குழந்தைகளை அடிக்கும் தகப்பன் சுயநலமான தாய் தனது சுகத்திற்காக குழந்தையை கொடுமை செய்யும் அம்மா போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் மேற்கண்ட முறைகள் சரியாக வராது. உங்கள் குழந்தை நலனுக்காக நீங்கள் கோர்ட் வழக்கு முடியும் வரை காத்திருக்காமல் தொலைதூரம் சென்று குழந்தைகளை நல்லவிதமாக வளர்த்தெடுங்கள்.
---
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.