நம் உடலில் 60 சதவிகிதம் நீர்ச்சத்துதான் இருக்கிறது. தண்ணீரினால்தான் உடல் இயங்குகிறது என்று கூறலாம். இதயம், மூளை, தசைகள், நுரையீரல், கணையம், சிறுநீரகம், இப்படி உடலில் உள்ள அனைத்து அமைப்புகளும் நீரினால்தான் இயங்குகிறது. உடல் முழுவதும் சத்துக்களை அனுப்பி, கழிவுகளை வெளியேற்றவும் நீர்ச்சத்து மிகவும் அவசியம். அவ்வாறு கழிவுகளை அகற்றாமல் இருந்தால், நம் உடல் குப்பைத்தொட்டியாகி விடும்.
அச்சோ, எனக்கு தண்ணீரே பிடிக்காதே…! ஆம்! இப்படியும் பலர் இருக்கின்றனர். தண்ணீர் குடிக்க பிடிக்காது, சிறுநீர் களிக்க பிடிக்காது. சிறு வயதில் எந்த பிரச்சனையும் இல்லை. வயதாகும்போது அதுவே உங்களை பெரிய பிரச்சனைகளுக்குள் தள்ளிவிடும்.குளிர்காலத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படாது என்றும், வெறும் தாகத்திற்கு மட்டும் தண்ணீர் அருந்தாமல், எப்போதும் உங்கள் உடலை நீரோட்டமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். அதற்காக, அளவிற்கு அதிகமாக தண்ணீர் அருந்தி சிறுநீரகத்திற்கு அதிக வேலை கொடுத்தாலும் பிரச்சனை வரும். எனவே, தண்ணீர் அருந்த பிடிக்காதவர்கள் வேறு வகைகளில் நீர்/பானம் (water/drink) அருந்தலாம். இன்னும் அதிக சத்துக்கள் பெறலாம். உங்களுக்காகவே இதோ ஒரு பட்டியல்.
1. காய்கறி ஜூஸ்
Pexels
பழங்களைவிட கேரட் பீட்ரூட் போன்ற காய்களில் ஜூஸ் செய்து பருகினால் நல்ல நீரோட்ட சக்தி கிடைக்கும். இது கல்லீரல் ஆரோக்கியத்தை(health) மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இருக்கும் நச்சுகளை நீக்குகிறது.
2. மூலிகை தேநீர்
குளிருக்கு சற்று சூடாக பருக நினைத்தால், செவ்வந்திப்பூ, செம்பருத்திப்பூ, ரோஜா போன்ற பூக்களை பயன்படுத்தி தேநீர் தயாரித்து பருகுங்கள். சோர்ந்துபோன நரம்புகளுக்கு புத்துணர்ச்சியூட்டி, மனதை சாந்தப்படுத்தும்.
3. பழங்களின் ஜூஸ்
Pexels
பழரசம் நிச்சயம் நல்ல நீரோட்டத்தையும் சக்தியையும் தரும். தண்ணீரில் பழங்களை நறுக்கிப்போட்டு வைத்திருந்து, அந்த நீரை பருகினால் சக்கரை அதிகம் உடலில் சேராது. நல்ல நீரோட்டமாகவும் (hydrate) இருக்கும்.
4. பால்/மோர்
தண்ணீரைவிட அதிக சக்தியுள்ள பொருட்கள் கொண்டது. மாவுச்சத்து, சுண்ணாம்புசத்து, புரதச்சத்து, சோடியம் போன்ற பல சத்துக்கள் கொண்டது பால்.மில்க் ஷேக் , லஸ்ஸி இப்படி எந்த ரூபத்திலும் பால்/மோர் அருந்தலாம்.
5. இளநீர்
Pexels
இளநீரில் ஆறு வகையான சுவை உள்ளது. இதற்கு இணையான இயற்கை பொருள் வேறு எதுவும் இல்லை. உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும், நீரோட்டத்தையும் தரக்கூடியது.
6. எலுமிச்சை
தண்ணீரோடு சிறிது எலுமிச்சையை நறுக்கி கலந்து கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான பானம்.
இப்போது, நீரோட்டம் இல்லாமல் ஆக்கிவிடும் பொருட்களைப்பற்றி பார்க்கலாம்.
- ஸ்மூத்தி(smoothie) மிகவும் அடர்த்தியாக, அதிக பழங்கள் சேர்த்து செய்வதால் அது உடலில் நீரோட்டத்தை ஏற்படுத்தாது.
- சக்கரை சேர்த்து தேநீர் அருந்தினால், தாகம் அதிகம் இருக்கும். நிச்சயம் தேநீர் பருகிய பின் அதிக தண்ணீர் அருந்த வேண்டும்.
- சோடா: வெயிலில் திரிந்து, களைப்புற்றபோதும், நன்றாக உணவருந்தியபின்னும் சோடா குடிப்பது பெரும்பாலானவர்களின் வழக்கம். அது தவறு. உங்கள் உடலுக்கு அந்த நேரங்களில் தண்ணீர்தான் மிக முக்கியம். அதை விடுத்து சோடா பருகினால், குடிக்கும்போது நாக்கிற்கு மட்டும்தான் சுவையாக இருக்கும். நீங்கள் மேலும் அதிக தண்ணீர் அருந்தினால்தான் உடல் வலிமை பெரும்.
Pexels
- லெமெனேட்: சக்கரை சேர்த்து தயாரிக்கப்படுவதால், உங்கள் உடலுக்கு நல்லதல்ல. கவனித்திருக்கிறீர்களா? வெயிலில் சுற்றும்போது இதைப் பருகினால், நாக்கு மேலும் வரண்டுதான் போகும்.
- காபி: இது மிகவும் கெடுதல் இல்லை. ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு கப் காபிக்கு மேல் பருகினால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து விடும்.
- சூடான ஹாட் கோகோ: அதிக சக்கரை உள்ளதால் இதுவும் உங்கள் உடல் நீர்ச்சத்தை உறிஞ்சிவிடும் தன்மை கொண்டது.
- சுவையூட்டப்பட்ட பால்(flavoured milk): பாலிற்கு சுவையூட்டி விற்கப்படும் பாட்டில்களில் அதிக சக்கரை சேர்க்கப்பட்டிருக்கும். நிச்சயம் இவை உங்கள் உடலுக்கு நல்லதல்ல.
அலட்சியம் இல்லாமல், வெளியே செல்லும்போது கட்டாயம் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லுங்கள் அல்லது மேல் கூறிய வழிகளில் உங்கள் உடலை நீரோட்டமாக வைத்துக்கொள்ளுங்கள்!
மேலும் படிக்க – பெண்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு குறிப்புகள்!
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் !