logo
ADVERTISEMENT
home / Diet
வாழைப்பழம் சாப்பிடுவதால் எடை கூடுமா? குறையுமா?

வாழைப்பழம் சாப்பிடுவதால் எடை கூடுமா? குறையுமா?

நீங்கள் வாழைப்பழத்தை சாப்பிட விரும்புபவரா? நம் நாட்டின் பிரதான பழமான வாழைப்பழத்தை , நம்மில் பெரும்பாலோர் அடிக்கடி சாப்பிட விரும்புகிறோம். பசி இருந்தால் ஒரு வாழைப்பழத்தைத் சாப்பிடுவதும் , எடை குறைக்க அறிவுறுத்தப்பட்டால் வாழைப்பழங்களை சாப்பிடுவதும் , எடை அதிகரிக்கச் சொன்னால் மீண்டும் வாழைப்பழத்தை (banana) சாப்பிடுகிறோம்! என்னது? அட ஆமா ! உண்மைதான் !

ஆனால் உண்மையில் இந்த பிரதான பழத்தின் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகள் நமக்கு தெரியுமா? உங்கள் உடல் எடையை (weight) நிர்வகிக்க இதை எப்போது சாப்பிட வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? இதை பற்றிய அணைத்து விவரங்களையும் இங்கு காணலாம் .

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களைப்பற்றியும் , வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன என்ன நன்மைகள் உண்டாகும்  என்றும் பார்க்கலாம்.

1. நார்ச்சத்து

  • வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நீண்ட நேரம் பசி தாங்கும். அதனால் உடல்  எடை குறையும்.
  • நார்ச்சத்து நல்ல ஜீரண சக்தியைத் தரும்.
  • கரையும்(soluble) நார்ச்சத்து கொலெஸ்ட்டிராலை நீக்கி, ரத்தத்தில் சக்கரை அளவை சீராக்கும். 
  • கரையாத(insoluble) நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட பாக்டீரியார்களை நீக்கிவிடும்.
  • மலச்சிக்கல், பைல்ஸ், வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்தும்
  • உடல் எடை குறையும்

2. வைட்டமின் சி

ADVERTISEMENT

Pixabay

  • வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி யானது, இரும்புச்சத்தை நன்றாக உறிஞ்ச உதவும்
  • உடலில் உள்ள செல்களும், திசுக்களும் சேதம் அடையாமல் பார்த்துக்கொள்ளும்
  • தூங்கும் நிகழ்வுகள், மனச்சோர்வு, வலியை கையாளுதல் போன்ற மூளை சம்மந்தமான ஆரோக்கியத்தை சீராக்கும் தன்மை கொண்டது வைட்டமின் சி
  • தோள், எலும்பு, உடல் ஆகியவற்றை இணைக்கும் கொலாஜென் என்னும் புரதம் இயங்க வைட்டமின் சி உதவுகிறது

3. வைட்டமின் பி6

  • வைட்டமின் பி6 வேறு பழங்களில் கிடைப்பது அரிது. வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 
  • வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 கலீரல் மற்றும் கணையத்தில் உள்ள தேவை இல்லாத ரசாயனங்களை நீக்க வல்லது.
  • நரம்பு மண்டலத்தையும் சீராக்கும்.
  • உடலில் உள்ள மாவுச்சத்தையும், கொழுப்பையும் கரைத்து ஆற்றல் தரக்கூடியது
  • அமினோ ஆசிட்டையும் கரைத்துவிடும்

4. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம்

  • வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கி, இருதய நோய் வராமல் பார்த்துக்கொள்ளும்.
  • முடி வளர பொட்டாசியம் சத்து உதவுகிறது. அதிகம் உட்கொண்டால் முடி உதிரும்.
  • இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை சீராக வைக்கவும், உடல் நன்றாக வேலை செய்யவும் மெக்னீசியம் தேவை. இது வாழைப்பழத்தில் அதிகமாகவே இருக்கிறது.
  • சருமதில் ஏற்படும் சேதத்தை சரி செய்யவும் உதவுகிறது

5. காப்பர் மற்றும் மாங்கனீஸ்

Pixabay

  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகவும், ஆரோக்கியமான எலும்பு பெறவும் காப்பர் உள்ள வாழைப்பழத்தை உட்கொள்ளலாம்.
  • வாழைப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் சத்து சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும்.

6. இரும்புச்சத்து

சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்கும். அனீமியா போன்ற நோய்கள் வராது.

ADVERTISEMENT

இத்தனை சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் உங்களுக்கு உடனடி சக்தியை தரக்கூடியது. இதில் சக்கரை அதிகம் உள்ளதால் வாழைப்பழம் சாப்பிட்டால் எடை அதிகரித்து விடும் என்று எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் உங்கள் எடை வாழைப்பழம் சாப்பிடும் நேரத்தைப் பொறுத்துத் தான் இருக்கிறது. சுமார் 105 கலோரிகளைக் கொண்ட ஒரு சிறிய வாழைப்பழத்தை நன்றாக உணவு உண்ட பின்னர் சாப்பிட்டால், இன்னும் அதிக சக்தி கிடைக்கும். அப்போது எடை கூடத்தான்(gain) செய்யும். எதுவுமே சாப்பிடாமல், நன்றாக ஒர்க் அவுட் செய்த பிறகு வாழைப்பழம் சாப்பிட்டால் சக்தி கிடைக்கும், எடை கூடாது(loss). இப்படி எந்த நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்து உடல் எடையை பாதிக்கும்.

வாழைப்பழத்தின் தன்மைகளும் அதன் பயன்களும்

மேலும், வாழைப்பழத்தின் தன்மைகளை கொண்டு அதன் பயன்களை பார்க்கலாம்.

1. ஆன்டி-ஆக்ஸிடன்ட், கரோடெனோய்ட்ஸ்(carotenoids)

இந்த இரண்டும் உள்ள வாழைப்பழத்தை உட்கொண்டால் கண்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.கேட்டராக்ட்(cataracts), குருட்டுத்தன்மை(night blindesss), கண் நோய் போன்றவை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டால் வராது. சிறுநீரகம் சீராக வேலை செய்யும்.

2. ஆன்டி-இன்ப்பிளமேடரி(anti-inflamatory)

ADVERTISEMENT

Shutterstock

வாழைப்பழத்தில் ஆன்டி-இன்ப்பிளமேடரி தன்மை உள்ளதால், வீக்கம், மூட்டுவலி, வயிற்றில் எரிச்சல், பொருமல் போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம். 

3. ஆன்டி-அல்சரோஜெனிக் (Anti-ulcerogenic)

வயிற்றில் அல்சர் தோற்றுவிக்கும் தீமையூட்டும் பாக்டீரியாவில் இருந்து வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-அல்சரோஜெனிக் தன்மை காப்பாற்றும்.

4. சுண்ணாம்பு சத்து

வாழைப்பழம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு சத்தை உணவில் இருந்து உறிஞ்ச உதவும் தன்மை கொண்டது. அதனால் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வளரும். 

ADVERTISEMENT

5. மாதவிடாய் பிரச்சனை நீங்கும்

Pixabay

மாதவிடாயின் போது ஏற்படும் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் மாதவிடாய் நாட்களில் பொட்டாசியத்தின் சரிவை சரிசெய்து தசைப்பிடிப்பு மற்றும் வலியை குறைகிறது .

6. உடல் எடை அதிகரிக்க

பாலோடு வாழைப்பழம் சாப்பிட்டால், பால் நல்ல புரதச்சத்தையும், பழம் சக்கரையையும் தந்து உடல் எடை அதிகரிக்க உதவும்.

ADVERTISEMENT

நம்ம  ஊரில் எளிதாக விளையக் கூடிய பழத்தில் எத்தனை சத்துக்கள் உள்ளடக்கி இருக்கிறது என்றும், அவரின் பயன்களையும் விரிவாக  பார்த்தோம். நாம் வாழும் இடத்தில் விளையும் பொருள் நிச்சயம் நமக்கு நன்மைகள் பல ஏற்படுத்தும். அதை உட்கொள்ளும் விதத்தில்தான் அதன் பயன்கள் வெளிப்படும்.

 

மேலும் படிக்க – வாழைப்பூ சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் சுவையான ரெசிபிகள்!

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

08 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT