விவாகரத்தா?.. புகைப்படம் வெளியிட்டு 'பதிலளித்த' பிரியங்கா சோப்ரா!

விவாகரத்தா?.. புகைப்படம் வெளியிட்டு 'பதிலளித்த' பிரியங்கா சோப்ரா!

விவாகரத்து குறித்த செய்திகளுக்கு, நடிகை பிரியங்கா சோப்ரா(Priyanka Chopra) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு பதில் அளித்திருக்கிறார்.


பிரியங்கா சோப்ரா(Priyanka Chopra)தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா(Priyanka Chopra) தொடர்ந்து தனது நடிப்புத்திறமையால் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். கோலிவுட், பாலிவுட்டைத் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ரா(Priyanka Chopra) கால்பதித்து அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார். ஹாலிவுட் படங்களில் நடித்தபோது பாப் பாடகர் நிக் ஜோனாஸ்(Nick Jonas)-பிரியங்கா இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து இரு வீட்டினரின் சம்மதத்துடன் கடந்த டிசம்பர் 2018-ம் ஆண்டு இருவரும் மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர்.


10 வயது
 

 

 


View this post on Instagram


 

 

Thank you @vanityfair @radhikajones now that was a party 🎈 @nickjonas ❤️ 📸 @markseliger


A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
திருமணத்தின் போது இருவருக்கும் இடையில் சுமார் 10 வருட வயது வித்தியாசம் இருந்தது. நிக்கை விட பிரியங்கா 10 வயது மூத்தவர். இதனால் இந்த ஜோடியை சமூக வலைதளங்களில் பலரும் திருமணத்தின்போது கிண்டல் செய்திருந்தனர். நீண்ட நாட்களுக்கு இந்த ஜோடி ஒற்றுமையாக இருக்காது என வித்தியாசமாகவும் ஏராளமானோர் வாழ்த்தி இருந்தனர். எனினும் நிக் தனது காதல் மனைவி பிரியங்கா மீது காட்டிய அன்பு இவை அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி, ட்ரோல் செய்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


விவாகரத்து
 

 

 


View this post on Instagram


 

 

My first ever #jonasbrothers show. And it was incredible!!! I’m so proud of these guys!! #Family ❤️🎉🙌🏽


A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
இந்தநிலையில் பிரியங்கா-நிக் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள போவதாக அமெரிக்காவை சேர்ந்த (OK Magazine) சில நாட்களுக்கு முன் அட்டைப்படத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தது.அதில் பிரியங்கா-நிக் இருவருக்கும் எந்தவொரு விஷயத்திலும் ஒத்து போகவில்லை, இதனால் விரைவில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுத்து இருக்கிறார்கள் என கூறியிருந்தது.


பிரியங்கா விளக்கம்

இதுகுறித்து பிரியங்கா-நிக் நேரடியாக எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் சமீபத்தில் நிக் தனது சகோதர்களுடன் இணைந்து நடத்திய ஜோனாஸ் பிரதர்ஸ் கான்சர்ட்டில் பிரியங்கா கலந்து கொண்டார். மேலும் தனது கணவர் மற்றும் அவரின் சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதே கான்சர்ட்டில் தனது காதல் மனைவி பிரியங்காவுக்கு, நிக் மேடையில் இருந்தபடியே 'ஐ லவ் யூ' சொல்வது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


இதன் வழியாக தங்கள் இருவருக்குள் எல்லாம் சுமூகமாகத் தான் உள்ளது என, பிரியங்கா மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.