'கர்ப்பமாக இருக்கிறேன்'.. திருமணத்துக்கு முன்பே 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த நடிகை!

'கர்ப்பமாக இருக்கிறேன்'.. திருமணத்துக்கு முன்பே 'அதிகாரப்பூர்வமாக' அறிவித்த நடிகை!

 


மறந்துட்டியா? என 'பூக்கள் பூக்கும் தருணம்' பாடலில் ஆர்யாவைப் பார்த்துக் கேட்ட எமி ஜாக்சனை(Amy Jackson) ஞாபகம் இருக்கிறதா? ஆங்கிலோ-இந்திய பெண்ணாக மதராசப்பட்டினம் படத்தில் நடித்து தமிழக ரசிகர்களைக் கவர்ந்த எமி ஜாக்சன்(Amy Jackson) தொடர்ந்து தனுஷுடன் தங்கமகன், விஜய்யுடன் தெறி விக்ரமுடன் ஐ போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தினை உருவாக்கிக் கொண்டார்.
சமீபத்தில் வெளியான 2.O படத்தில் லேடி ரோபோவாக நடித்திருந்தார். ரஜினிக்கு இணையாக அந்தப்படத்தில் எமிக்கும் எக்கச்சக்க காட்சிகள் இருந்தன. ஷங்கரின் ஒரு படத்திலாவது நடித்து விடவேண்டும் என ஏராளமான நடிகைகள் காத்திருக்க, தொடர்ந்து அவரின் இரண்டு படங்களில் எமி ஜாக்சன்(Amy Jackson) ஹீரோயினாக நடித்திருந்தார்.2.O படத்துக்குப்பின் வேறு எந்த படங்களிலும் எமி ஜாக்சன்(Amy Jackson) நடிக்கவில்லை. இதனால் கிட்டத்தட்ட தமிழக ரசிகர்கள் இவரை மறந்தே விட்டிருந்தனர். இந்தநிலையில் தான் இருக்கிறேன் என்பதை மீண்டும் ரசிகர்களுக்கு எமி ஜாக்சன்(Amy Jackson) ஞாபகப்படுத்தி இருக்கிறார்.


காதல்

கடந்த ஜனவரி மாதத்தில் தன்னுடைய காதலர் ஜார்ஜ் முத்தமிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட எமி,தனது காதலையும் உறுதி செய்திருந்தார். இதைத் தொடர்ந்து இவர்களது திருமணம் கிரீஸ் நாட்டில் 2020-ம் ஆண்டில் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது.ஜார்ஜின் தந்தை ஆன்ட்ரியஸ் பனயியோட்டு இங்கிலாந்தின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். அவரின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரத்து 600 கோடி என கூறப்படுகிறது. ஜார்ஜ் எபிலிட்டி குரூப்பின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


விடுமுறை

விடுமுறையைக் கொண்டாட ஜாம்பியா சென்ற இடத்தில் ஜார்ஜ் தன்னிடம் ப்ரொபோஸ் செய்ததாக எமி தெரிவித்து இருந்தார். தொடர்ந்து தனது காதலருடன் பிகினியில் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றையும் வெளியிட்டு, தனது காதலின் தீவிரத்தை ஊர்-உலகுக்கே முறைப்படி தெரிவித்து இருந்தார்.


தாய்மை

இந்தநிலையில் தான் விரைவில் அம்மாவாக போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமி ஜாக்சன் முறைப்படி அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர்,''நான் தாய்மையடைந்த இந்த தருணத்தை என் வீட்டு மொட்டை மாடியில் நின்று சத்தமாக சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. இந்த உலகத்தில் எதன்மீதும் இல்லாத தூய்மையான காதல் உன்னிடம் மட்டுமே உள்ளது. எங்களுடைய குழந்தையை சந்திக்க காத்திருக்க முடியவில்லை,'' என தெரிவித்திருக்கிறார்.


இங்கிலாந்துஇங்கிலாந்து நாட்டைப் பொறுத்தவரையில் திருமணத்துக்கு முன் தாய்மை அடைவது, குழந்தை பெற்றுக்கொள்வது போன்றவை மிகவும் சாதாரண விஷயங்கள் ஆகும். தனது தாய்மை குறித்து அறிவித்த எமிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தாய்மை அடைந்திருப்பதால் அவர் மீண்டும் படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. எனினும் அவர் இதுகுறித்து எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.