'இந்த வயசுல' இளம்ஜோடியா?.. ரன்பீர்-அலியாவை கடுமையாக விமர்சித்த 'தலைவி'

'இந்த வயசுல' இளம்ஜோடியா?.. ரன்பீர்-அலியாவை கடுமையாக விமர்சித்த 'தலைவி'

மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர் என்ற பெயர் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்துக்கு(Kangana Ranaut) உண்டு. இதன் காரணமாகவே அவர் பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகிறார். எனினும் இதன் காரணமாக அவருடைய பெயரோ,புகழோ சற்றும் குறையவில்லை. சொல்லப்போனால் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக, இவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் மட்டும் 24 கோடி என்கிறார்கள்.


ஹிருத்திக் ரோஷன்-கங்கணா(Kangana Ranaut)பாலிவுட் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷனுக்கும், கங்கணா ரணாவத்துக்கும்(Kangana Ranaut) இடையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மிகப்பெரிய யுத்தமே நடந்தது. ஹிருத்திக் தனது மனைவியை பிரிய கங்கணா தான் காரணம் என்றும், ஹிருத்திக்-கங்கணா இருவருக்கும் இடையில் காதல் இருந்ததாகவும் தகவல்கள் அடிபட்டன. இதன் காரணமாக இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் மோசமாக விமர்சித்துக் கொண்டனர். இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்று ஒருவழியாக ஓய்ந்தது.


ரன்பீர்-அலியா(Alia Bhatt)இந்தநிலையில் பாலிவுட்டின் லேட்டஸ்ட் காதலர்கள் ரன்பீர்-அலியா குறித்து கங்கணா வெளிப்படையாக மீண்டும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் அவர் கூறுகையில்,''அலியா(Alia Bhatt)-ரன்பீர் இருவரையும் இளம் காதல் ஜோடி என்கிறார்கள். ரன்பீருக்கு 37 வயதாகிறது,அலியா அண்மையில் தான் தனது 27வது பிறந்தநாளை கொண்டாடினார். 27 வயதில் என் அம்மா 3 பிள்ளைகளை பெற்றுவிட்டார். அப்படி இருக்கும்போது அவர்களை இளம் ஜோடி என்று கூறக்கூடாது.


என்னிடம் மோதினால்திரையுலக பிரபலங்களிடம் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பற்றி கேட்டால் சந்தோஷமாக பேசுவார்கள். யாருடன் இருக்கிறார்கள் என்பதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் போடுவார்கள். ஆனால் நாடு பற்றி ஏதாவது கேட்டால் அது என் தனிப்பட்ட விவகாரம் என்பார்களாம். நான் ஒன்றும் ஆசைப்பட்டு மற்றவர்களுடன் மோதவில்லை. என்னுடன் மோதினால் மட்டுமே மோதுவேன்,'' என்று தெரிவித்துள்ளார்.


கங்கணா-அலியா(Alia Bhatt)கடந்த மாதத்திலும் இதேபோல அலியா பட்டை, கங்கணா கடுமையாக விமர்சித்து இருந்தார். இதுகுறித்து அவர், ''ராஸி' படம் வந்தபோது அலியா அவர் படத்தைக் காணுமாறும், படத்தைப் பற்றி கருத்து தெரிவிக்குமாறும் என்னிடம் கூறினார். ஆனால் என் படம் வரும்போது அவர் வாய் திறக்கவில்லை. அவர் கரண் ஜோஹரின் கைப்பாவையாக இருக்கிறார்,'' என்று தெரிவித்து இருந்தார்.


வருத்தம்தொடர்ந்து இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கங்கணா கூறும்போது, ''என்னுடைய படங்களை பிற நடிகர்கள் விளம்பரப்படுத்துவதால் என் படத்துக்கு எந்தப் பலனும் இல்லை. என் 33 வயதில் ஏற்கெனவே மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளேன். அவர்கள் தங்களை வெற்றிகரமாக பிரபலப்படுத்திக் கொள்வதுதான் அவர்களுக்கான மிகப் பெரிய வெற்றி'' என்று அலியா குறித்து கருத்து தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து அலியா பட், கங்கணா ரணாவத்திடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.


திருமணம் இந்த சம்பவம் முடிந்து முழுதாக ஒரு மாதம் முடியவில்லை. அதற்குள் மீண்டும் அலியா-ரன்பீர் ஜோடியை கங்கணா விமர்சித்து இருக்கிறார். ரன்பீர்-அலியா இருவரும் காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்த ஜோடிக்கு இடையில் 10 வருட கால வித்தியாசம் இருக்கிறது. எனினும் வயது வித்தியாசங்கள் காதலுக்கு கிடையாது என்னும் கூற்றுப்படி விரைவில் இந்த ஜோடி மணக்கோலத்தில் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தாம் தூம் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கணா நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் மீண்டும் நடிக்கவிருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் இப்படத்துக்கு தலைவி என பெயர் சூட்டியிருக்கிறார்கள். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.