ரகசியம்: திருமணத்திற்கு பெண்கள் தங்களை தயார் செய்து கொள்வது எப்படி?

ரகசியம்: திருமணத்திற்கு பெண்கள் தங்களை தயார் செய்து கொள்வது எப்படி?

திருமணம் நிச்சயிக்கப்பட் உடனே பெண்களுக்கு கவலை வந்துவிடும். திருமண நாளன்று எப்படி நம்மை அழகாக வைத்துக்கொள்வது என்பது குறித்து ஒரே யோசனையாகவே இருப்பார்கள். திருமணத்திற்கு பெண்கள் குறைந்தது 3 மாதத்திற்கு முன்பாகவே தயாராக வேண்டும். நிச்சயிக்கப்பட்ட நாளிலிருந்தே தங்கள் சருமத்தை(beauty) அழகுபடுத்துவது மற்றும் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். எந்த முன்னேற்பாடும் செய்யாமல் அன்று ஒரு நாள் மட்டும் நம்மை அழகாக வைத்துக்கொள்ளலாம் என்று எண்ண முடியாது.


நீர்ச்சத்து உணவுகள்
பொலிவான சருமம்(beauty) பெறுவதற்கான முதல் வழி நிறைய தண்ணீர் குடிப்பது. உங்கள் உடலை நீர்ச்சத்து மிக்கதாக வைத்திருக்க வேண்டும். சருமத்திற்கு நீர்ச்சத்து அளிக்கக் கூடிய தர்பூசணி பழங்களை அதிகம் நாடலாம். திராட்சை, பிராகோலி மற்றும் கீரைகளையும் நாடலாம்.


திருமணத்திற்கு 3 மாதம் முன் சருமத்தை(beauty) தயார் செய்யவும்
உங்கள் சருமம் தயாராக அவகாசம் கொடுக்கும் வகையில் மூன்று மாத காலம் முன்னதாகவே தயாரிப்பை துவக்கவும். உங்கள் சருமத்தை(beauty) சிறந்த முறையில் பராமரிக்க இது சரியான நேரமாகும். உணவு ஆரோக்கியமாகவும், இயற்கையானதாகவும் இருக்கட்டும். எண்ணெய் பசை உணவை குறைத்துக்கொண்டால் பருக்கள் தோன்றுவதையும் குறைக்கும்.


homemade-beauty-tips-brides-before-marriage003
பேசியல்ஸ்
சருமத்தில்(beauty) பருக்கள் மற்றும் வண்ணம் பாதிப்பு தோன்றும் பருவம் இது. மாதம் ஒரு முறை ஆழமாக சுத்தம் செய்யும் பேசியல் செய்யவும். இது உங்கள் சருமம் தயாராக உதவும்.


எக்ஸ்போலியேட் செய்யுங்கள்
வாரம் ஒரு முறை எக்ஸ்போலியேட் செய்து சருமத்தின்(beauty)தோற்றத்தை மேம்படுத்தவும்.


அழகு தூக்கம்
தினமும் 8 மணி நேர தூக்கம் இல்லாமல் எந்த அழகு சாதன சிகிச்சையும் முழுமை அடையாது. நீங்கள் நன்றாக தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன் தூக்கத்தில் சிக்கல் இருந்தால், தலையணையில் கொஞ்சம் லாவண்டர் எண்ணெய் சேர்த்துக்கொண்டால் நன்றாக தூக்கம் வரும். ஆனால், இதைப் பழக்கமாக்கி கொள்ள வேண்டாம்.


பிரஷ்களை சுத்தம் செய்தல்
பல்வேறு தேவைகளுக்காக மேக்கப் செய்வதால் உங்கள் மேக்கப் சாதனங்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் சருமத்தின்(beauty) மீது கிருமிகள் சேருவதை தவிர்க்க மேக்கப் சாதனங்களை ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யவும். ஷாம்பூவில் அலசி, கீழே பார்த்தபடி உலர வைக்கவும்.


முகத்தைப் பராமரிக்க
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள். பயிற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.


homemade-beauty-tips-brides-before-marriage004
வீட்டு அழகு சாதன குறிப்புகள்
பொலிவான சரிமத்திற்காக வீட்டிலேயே சிலவற்றை தயார் செய்து கொள்ளலாம். கடலை மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், பால் சேர்த்து பேஸ் பேக் தயார் செய்து சருமத்தை(beauty) பொலிவாக்கி கொள்ளவும். பொடியாக்கிய புதினா இலைகள் மூலம் பருக்களுக்கான பேக்கை தயார் செய்யவும். எண்ணெய்ப் பசை சருமம் எனில் முல்டானி மிட்டியை பயன்படுத்தவும்.


கழுத்தை பராமரிக்க
நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான். அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.


சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.


சருமத்தைப்(beauty) பராமரிக்க
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில்(beauty) நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.


கருவளையம் நீங்க
கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும். கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில் தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள்.


இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல் போயிருக்கும்.


homemade-beauty-tips-brides-before-marriage005
கருப்பு திட்டுகளை நீக்க
சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள். இவற்றைப் போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர் கலந்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள் இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள் கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.


அழகுக்கு ஏற்ற உணவுகள்
மீன்
பிஸ்தா
சின்னமோன்
மஞ்சள்
டார்க் சாக்லெட்
பெப்பர்மிண்ட்
பீட்ரூட்
பழுப்பு அரிசி
அவரை ரகங்கள்
பூண்டு
பிரோகோலி


ஒரே நாளில் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி!


கூந்தல் அழகை பராமரிக்கும் கற்றாழையின் 6 அற்புத பயன்கள்


வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo