logo
ADVERTISEMENT
home / Home & Garden
ஒரே நாளில் உங்கள் வீட்டை சுத்தம் செய்வது எப்படி!

ஒரே நாளில் உங்கள் வீட்டை சுத்தம் செய்வது எப்படி!

நாம் வசிக்கும் வீடு கோவில் போன்றது என முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள். அதற்கு காரணம் நமது வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும். நம் வீடு சிறியதோ பெரியேதோ, வீட்டை சுத்தம்(clean) செய்து அழகாக வைப்பது நமது கடமை. எனவே, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள எப்படி அட்டவணை போட்டுக் கொண்டு செயல்படுவது என்பதைப் பார்க்கலாம்.

தினமும் – கிச்சன்: பாத்திரங்களைக் கழுவி ஸிங்க்கை சுத்தம்(clean) செய்யுங்கள். சமையல் திண்டையும் டேபிள்களையும் சுத்தமாக வையுங்கள். தரை அழுக்காக இருந்தால், அதைக் கூட்டுங்கள் அல்லது துடையுங்கள்.

பாத்ரூம்: வாஷ் பேஸினையும் டாய்லெட்டையும் கழுவுங்கள். பொருட்களை அவற்றிற்குரிய இடங்களில் வையுங்கள்

வரவேற்பறை மற்றும் பிற அறைகள்: அறையை ஒழுங்குபடுத்துங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள். தேவைப்பட்டால் தரையைப் கூட்டித் துடையுங்கள், அல்லது வாக்யூம் க்ளீனரால் சுத்தம்(clean) செய்யுங்கள்.

ADVERTISEMENT

வாரம் ஒரு முறை – பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை மாற்றுங்கள். தேவைப்பட்டால் தரையைக் கூட்டித் துடையுங்கள் அல்லது வாக்யூம் செய்யுங்கள். ஃபர்னிச்சர்களைத் தூசிதட்டி விடுங்கள்

கிச்சன்: ஸ்டவ்வையும், திட்டின் மேல் வைக்கப்படும் மிக்ஸி போன்ற சாதனங்களையும், பாத்திரம் கழுவுகிற ஸிங்க்கையும் சுத்தம்(clean) செய்யுங்கள். தரையைத் துடைத்து சுத்தம் செய்யுங்கள்

பாத்ரூம்: சுவர்கள், வாஷ் பேஸின் போன்றவற்றைக் கழுவிவிடுங்கள். டாய்லெட்டையும், ஷெல்ஃபையும், மற்ற இடங்களையும் சுத்தம்(clean) செய்வதற்குக் கிருமிநாசினிகளைப் பயன்படுத்துங்கள். டவல்களைத் துவையுங்கள். தரையைப் கூட்டிவிட்டுத் துடையுங்கள்.

மாதம் ஒரு முறை – பாத்ரூம்: சுவர் முழுவதையும் நன்றாகக் கழுவிவிடுங்கள்

ADVERTISEMENT

வீடு முழுவதும்: கதவு நிலைகளைச் சுத்தம்(clean) செய்யுங்கள். சோஃபாவை வாக்யூம் செய்யுங்கள், அல்லது நன்கு தூசிதட்டி விடுங்கள்

தோட்டம், முற்றம், கார் ஷெட்: தேவைப்பட்டால் கூட்டி சுத்தம்(clean) செய்யுங்கள். வேண்டாத பொருட்களை கழித்துவிடுங்கள்

ஆறு மாதத்திற்கு ஒரு முறை – பெட்ரூம்: படுக்கை விரிப்புகளை, தயாரிப்பாளர்களின் அறிவுரைப்படி துவைத்து, காய வைத்து மடித்து பராமரியுங்கள்.

கிச்சன்: ஃபிரிட்ஜை காலி செய்துவிட்டு, நன்றாகச் சுத்தம்(clean) செய்யுங்கள்

ADVERTISEMENT

பாத்ரூம்: ஷெல்ஃபுகளையும் டிராயர்களையும் காலி செய்துவிட்டு சுத்தம் செய்யுங்கள். தேவையற்ற அல்லது பழைய மருந்து, மாத்திரைகள், கெமிக்கல்கள் போன்றவற்றைத் தூக்கிப்போடுங்கள்

வீடு முழுவதும்: லைட், ஃபேன், கூண்டுவிளக்குகள் ஆகியவற்றையெல்லாம் சுத்தம்(clean) செய்யுங்கள். ஸ்கிரீன்களைத் துவையுங்கள். கதவுகளையும் ஜன்னல்களையும், ஜன்னல் நிலைகளையும் கழுவுங்கள்.

சுத்தம்(clean) செய்ய பயன்படுத்தும் பொருட்கள்

ஜன்னல்

ADVERTISEMENT

சுத்தம் செய்வதற்கு ரொம்ப கஷ்டமான விஷயங்களில் ஒன்று ஜன்னல்கள். ஜன்னலைக் கழுவுவதற்கு, அரை கப் அமோனியா, 550 மி.லி. துடைக்கும் ஆல்கஹால், 1 தேக்கரண்டி டிஷ் வாஷர் மற்றும் 4.5 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள். கண்ணாடி ஜன்னல்களுக்கான ஸ்லைடிங் பகுதிகளில் அழுக்கும், தூசியும் சேர்ந்து திறப்பதற்குக் கஷ்டமாவதற்கு முன்பாக, முதலிலேயே சுத்தம்(clean) செய்துவிடுவது நல்லது. அந்தப் பகுதியைப் பழைய, உலர்ந்த டூத்பிரஷ் மூலம் சுத்தம் செய்து, பின்னர் வாக்குவம் கிளீனரைப் பயன்படுத்தவும். கடைசியில் ஈரமான ஸ்பாஞ்சைக் கொண்டு துடைத்தெடுக்கவும்.

சமையலறை
ஸ்டவ் மற்றும் சமையல் மேசைகளில் மிச்சமிருக்கும் உணவுத்துணுக்குகளின் காரணமாகச் சமையலறை எப்போதுமே பாக்டீரியாக்களுக்கான சரணாலயமாக மாறிவிடுகிறது. டிஸ்இன்ஃபெக்டன்ட் கொண்டு சமையலறையை முதலில் மாப் செய்யவும், எல்லாப் பொருள்களின் வெளிப்புறங்களையும் ஈரத் துணியைக் கொண்டு துடைக்கவும். வெளிர் நிறப் பிளாஸ்டிக் பொருள்கள், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களின் மேலிருந்து அழுக்குகளை நீக்க ஒரு பங்கு பிளீச் மற்றும் நான்கு பங்கு நீரில் ஊற வைத்துத் துடைக்கவும்.

குளியலறை
பொதுவான ஸ்பிரே கிளீனர்கள் அல்லது வினிகரையும் நீரையும் கலந்து சிங்க், டாய்லெட்டின் வெளிப்பகுதி மற்றும் குழாய்கள் போன்றவற்றைத் துடைக்கவும். டாய்லெட் பௌலை டிஸ்இன்ஃபெக்டண்ட் மற்றும் சோடாவைக் கலந்து கழுவவும்.

வரவேற்பறை
மென்மையான தோல் பொருட்களை, கிளீனர் மற்றும் கண்டிஷனரைக் கொண்டு சுத்தம் செய்யவும். சற்றுக் கடினமான தோல் பொருள்களைப் பிரஷால் துடைக்கவும். மரச் சாமான்களைச் சுத்தம்(clean) செய்யக் கிளீனரை உருவாக்கலாம். அரை தேக்கரண்டி ஆலிவ் ஆயில், அரை கப் வினிகர் அல்லது லெமன் ஜூஸ் இவற்றை ஒரு பிளாஸ்டிக் ஸ்பிரே பாட்டிலில் கலந்துகொண்டு, நன்றாகக் குலுக்கித் துணியில் ஸ்ப்ரே செய்து துடைக்கவும்.

ADVERTISEMENT

திரைச்சீலைகளைச் சுத்தம்(clean) செய்ய, உங்கள் வாக்குவம் கிளீனரைப் பயன்படுத்தவும். அவற்றில் உள்ள அழுக்குகளை, உங்கள் டிரையரை மெதுவாக ஓடச் செய்து நீக்கலாம்.

கறை மீது தாக்குதல்
வாஷிங் மெஷினைப் பயன்படுத்தும்போது, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்:

துணிகளைத் தனித்தனியாகப் பிரிக்கவும். அதாவது வெளிர் மற்றும் அடர் நிறத் துணிகளைக் கலக்க வேண்டாம். அதேபோல மென்மையான அண்டர் கார்மென்ட் துணிகளை ஜீன்ஸ் போன்ற கடினமான துணிகளுடன் கலக்கக் கூடாது. மாறாக உள்ளாடைகள் போன்ற மென்மையான துணிகளை நெட்பேக்கில் போட்டுத் துவைக்கவும். கையால் துவைக்க அல்லது டிரைகிளீன் மட்டும் என்று குறிப்பிடப்பட்ட துணிகளை மெஷினில் பயன்படுத்தக் கூடாது

இப்படி வாரம் வாரம் செய்தால் உங்கள் வீடு பிரகாசமாகிவிடும்.

ADVERTISEMENT

சரியான பிரா சைஸ்சை கண்டுபிடிப்பது எப்படி? மார்கெட்டில் கிடைக்கும் பிரா வகைகள்!

கோடை காலத்தில் பெண்கள் விரும்பும் துப்பட்டா ஸ்டைல்ஸ்

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு முடி உதிர்வை தடுக்கும் எளிய வழிகள்

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

10 Apr 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT