வெள்ளரிக்காய்யின் அற்புத குணங்களும் பக்க விளைவுகளும் (Benefits Of Cucumber In Tamil)

வெள்ளரிக்காய்யின் அற்புத குணங்களும் பக்க விளைவுகளும் (Benefits Of Cucumber In Tamil)

வெள்ளரிக்காய்(cucumber) நம் அருகாமையில் இருக்கும் கடைகளிலும், சந்தையிலும் எளிதாகக் கிடைக்கும் பழ வகை. இதில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமான்ய மக்களும் எளிதாகக் குறைந்த விலைக்கு வாங்கி உண்ணக்கூடிய ஒரு சத்து நிறைந்த பழம் இது. இந்த வெள்ளரிக்காயை பொதுவாக மக்கள் கோடை காலங்களில் அதிகம் உண்ண எண்ணுவார்கள். இதில் நிறைந்துள்ள நீர் சத்து உடலுக்கு உடனடியாகப் புத்துணர்ச்சியையும் சக்தியையும் தருகிறது. மேலும் கோடை காலங்களில் நீங்கள் இதை எளிதாக எந்த இடத்திலும் வாங்கலாம். அதுமட்டும் அல்லாமல், பல வகை வெள்ளரிக்கைகள் இருப்பதால் ஆண்டுதோறும் ஏதாவது ஒரு வகை உங்களுக்குக் கடைகளில் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதனால் நீங்கள் வெள்ளரிக்காயை தினமும் உண்ணலாம்.


வெள்ளரிக்காய்(cucumber) பூசணி வகையைச் சேர்ந்தது. இதில் அதிக நீர் சத்து நிறைந்துள்ளது. மேலும் கலோரிக்கள் குறைந்த அளவே உள்ளது. வெள்ளரிக்காயில் கொழுப்புச் சத்து மற்றும் சோடியம் குறைந்த அளவில் இருப்பதால் நீங்கள் இதனைத் தினமும் உண்ணலாம். இதனால் உங்களுக்குக் கொழுப்பு சத்து அல்லது உடல் எடை அதிகரிப்பு என்று எந்தப் பிரச்சனைகளும் ஏற்படாது.


வெள்ளரிக்காயில் நிறைந்துள்ள சத்துக்கள்


வெள்ளரிக்காயை பற்றிச் சில சுவாரசியமான தகவல்கள்


வெள்ளரிக்காயின் நன்மைகள்


சுவாரசியமான மற்றும் ருசியான வெள்ளரிக்காய்(cucumber) சமையல் குறிப்பு 


சரும / முக அழகிற்கு வெள்ளரிக்காய்


வெள்ளரிக்காய்(cucumber) சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்


வெள்ளரிக்காய்(cucumber) நல்ல ருசியாகவும் இருக்கும். குறிப்பாகக் கோடை காலங்களில் நீங்கள் இதை உண்ணும்போது அதன் புத்துணர்ச்சி ஊட்டும் தன்மையை உணருவீர்கள். உடலில் நீர் சத்து குறைந்து இருப்பவர்கள் வெள்ளரிக்காயை அதிகம் உண்ணலாம். வெள்ளரிக்காய் இந்தியாவில் பெரும் அளவில் பயிரிடப் படுகிறது. இதற்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. மேலும் பண்டை காலம் தொட்டே வெள்ளரிக்காய்(cucumber) அதிக மருத்துவ தேவைகளுக்காகப் பயன் படுத்தப் பட்டு வருகிறது. நீங்கள் வாங்கும் வெள்ளரிக்காயின் வகையைப் பொறுத்து அதனைச் சாறு செய்து குடிப்பதா, சமையலுக்கு பயன்படுத்துவதா அல்லது அப்படியே பச்சையாக உண்பதா என்று தீர்மானிக்கலாம். வெள்ளரிக்காயை மக்கள் தோலுடனும் அல்லது தோலை நீக்கி விட்டும் உண்பார்கள். வெள்ளரிக்காய் உட்க்கொள்ள மட்டும் அல்லாமல் அழகு சாதனங்களுக்கும், அழகு பொருட்கள் தயார் செய்வதற்கும், நேரடியாக உங்கள் முக அழகை மெருகூட்டவும் பயன்படுத்தப்படுகிறது.


Also Read: சர்க்கரை வள்ளி கிழங்கின் சிறப்பு குணங்கள் (Sweet Potato)


வெள்ளரிக்காயில்(cucumber) நிறைந்துள்ள சத்துக்கள் (Nutritional Values In Cucumber)


சுமார் 5௦ கிராம் எடையுள்ள ஒரு பச்சை வெள்ளரிக்காயில் கீழே கொடுக்கப் பட்டுள்ள சத்துக்கள் நிறைந்துள்ளது.


• 49.52 கிராம் நீர்


• 8 கலோரிகள்


• 0.34 புரத சத்து


• 0.06 கிராம் கொழுப்பு


• ௦.9 கிராம் நார் சத்து


• 0.87 கிராம் சர்க்கரை


• 8 மில்லி கிராம் கால்சியம்


• ௦.15 மில்லி கிராம் இரும்பு சத்து


• 7 மில்லி கிராம் மக்னேசியம்


• 12 மில்லி கிராம் பாஸ்பரஸ்


• 76 மில்லி கிராம் பொட்டாசியம்


• 1 மில்லி கிராம் சோடியம்


• 15 மில்லி கிராம் வைட்டமின் C


• 4 மில்லி கிராம் போலேட்


cucumber-benefits-and-side-effects006
வெள்ளரிக்காயை(cucumber) பற்றிச் சில சுவாரசியமான தகவல்கள் (Interesting Facts About Cucumber)


• வெள்ளரிக்காயில்(cucumber) அதிகம் நீர் சத்து நிறைந்துள்ளது
• வெயில் சூட்டை தணிக்க மக்கள் பெரும்பாலும் வெள்ளரிக்காயை பயன் படுத்துவார்கள்
• மருத்துவ ஆய்வின் படி வெள்ளரிக்காயில் உள்ள பொருட்கள் புற்றுநோயைக் குணப் படுத்த பெரிதும் உதவுகிறது
• மேலும் வெள்ளரிக்காயில் உள்ள ல்னிக்ன என்னும் பொருள் இருதய நோயைக் குணப் படுத்த உதவுகிறது


Also Read About வெல்லத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள்


வெள்ளரிக்காயை நீங்கள் பல உணவு வகை சமைப்பதற்கு பயன் படுத்தலாம் (Benefits Of Cucumber In Tamil)


ஏன் நீங்கள் வெள்ளரிக்காயை உண்ண வேண்டும்?
மேலே நீங்கள் படித்த சில தகவல்கள் ஓரளவிர்க்காயினும் உங்களை வியப்படைய செய்திருக்கும். எனினும், நீங்கள் மேலும் வெள்ளரிக்காயை பற்றித் தெரிந்து கொள்ள, ஏன் அதனை நீங்கள் உண்ண வேண்டும் என்ற காரணத்தைப் புரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.


உங்கள் மூளையை பாதுகாக்கிறது (Protects our Brain)


பிசெடின் என்னும் உபாதை எதிர்ப்பு ஃபிளாவோனல் வெள்ளரிக்காயில் நிறைந்துள்ளது. இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்த்தை மேம்படுத்தப் பெரிதும் உதவுகிறது. மேலும் இது உங்கள் ஞாபக சக்தியை அதிகரித்து நரம்பு அணுக்களைப் பாதுகாக்கிறது. அல்சீமர் நோய் வரமால் தடுக்க அல்லது வாய்ப்பைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது.


இதையும் படியுங்கள் ஜாதிக்காயின் பயன்கள்


புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கிறது (Reduce Risk Of Cancer)


வெள்ளரிக்காயில் பாலிபினால்கள் லிக்னான்கள் (பினோரிசினோல், லார்சிகரீயினோல் மற்றும் செக்ஸோலார்சிகேசினோல்) இருப்பதால் மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவை வரவிடாமல் தடுக்கிறது.


நோய் தொற்றை குறைக்கிறது  (Reduce Infection)


வெள்ளரிக்காயின் சாறு நோய் தொற்று அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உங்கள் உடல் விரைவாகக் குணமடைகிறது.


ஆக்ஸிஜனேற்ற பண்புகள் (Antioxidant Properties)


வெள்ளரிக்காயில் அனேக அண்டி அக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் C மற்றும் பீட்ட-கரோடீன் நிறைந்துள்ளது. இது மேலும் பல நன்மைகளை உங்களுக்குத் தரும்.
சுவாசத்தை எளிதாக்கும்


ஆயுர்வேத சிகிச்சைப் படி வெள்ளரிக்காயை உண்பதால் வயிற்றில் ஏற்படும் சூடு தணிகிறது. மேலும் இதை உங்கள் வாயில் சிறிது நேரம் வைத்திருந்தாள் உங்கள் வாயில் இருக்கும் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகள் அளிக்கப் படுகிறது. இதனால் உங்கள் சுவாசம் புத்துணர்வு பெறுகிறது.


மன அழுத்தம் குறைகிறது (Reduce Stress)


வெள்ளரிக்காயில் அதிகம் வைட்டமின் B1, வைட்டமின் B5 மற்றும் வைட்டமின் B7 உள்ளது. இதனால் நீங்கள் மன அழுத்தம் மற்றும் சோர்வு ஆகியவற்றிலிருந்து விடு பட்டுப் புத்துணர்வோடு இருப்பீர்கள்.


ஜீரணத்தை அதிகப் படுத்தும் (Improves Digestion)


உங்களுக்கு அஜீரண பிரச்சனைகள் இருந்தால் வெள்ளரிக்காயை அதிகம் உண்ணலாம். வெள்ளரிக்காய்(cucumber) உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து எளிதாக நீங்கள் உண்ணும் உணவு ஜீரணம் அடைய உதவும்.


உடல் எடை சீராக இருக்க உதவும் (Help You Stay Healthy)


வெள்ளரிக்காயில் நார் சத்து மற்றும் நீர் சத்து அதிகம் இருப்பதால் இதை நீங்கள் எவ்வளவு உண்டாலும் உங்கள் உடல் எடை அதிகரிக்காது. மேலும் இதில் கொழுப்புச் சத்து கிடையாது. அதனால் உங்கள் உடல் எடையைச் சீராக வைத்துக் கொள்ள நீங்கள் வெள்ளரிக்காயை தினமும் உண்ணலாம்.


இருதயத்தின் ஆரோக்கியம் (Good For Heart)


உங்கள் இருதயத்தை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எண்ணினால் வெள்ளரிக்காயை தினமும் உங்கள் உணவுடன் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் இதைத் தொடர்ந்து உண்டு வரும்போது உங்கள் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை உணருவீர்கள்.


வெள்ளரிக்காயும் இளமையும் (Helps You Stay Young)


வெள்ளரிக்காய்(cucumber) நீங்கள் எப்போதும் இளமையோடு இருக்க உதவும். இது ஒரு தனி மனிதன் இயற்கையாக எப்போதும் இளமையோடும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும். இது ஒரு அற்புதமான உணவுப் பொருள். இதில் அதிகம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதில் இருப்பதால் இதனை நீங்கள் தினமும் உண்டு வரும் போதும் உங்கள் உடலில் ஒரு புத்துணர்வை நீங்கள் உணருவீர்கள்.


cucumber-benefits-and-side-effects005


மேலும் பலர் வெள்ளரிக்காயை அழகை மேம்படுத்தப் பயன் படுத்துவார்கள். இதனை உங்கள் முக அழகிற்கு பயன் படுத்தி வர உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கம் மற்றும் கண்களுக்குக் கீழ் இருக்கும் கருவளையம் மறைந்து இளமையான தோற்றத்தைப் பெறுவீர்கள். உங்கள் முகல் அழகு பெரும். மேலும் வெள்ளரித் துண்டை உங்கள் கண்கள்மேல் சிறிது நேரம் வைத்திருப்பதால் கண்கள் குளுர்ச்சி அடைந்து உங்கள் கண்களுக்குத் தேவையான பிரனவாய்வு கிடைத்து மேலும் சக்தி பெறுகிறது. இதனால் உங்கள் கண் பார்வை அதிகரிக்கிறது.


வெள்ளரிக்காயும் சர்க்கரை நோயும் (Good For Diabetes Patients)


பெரும்பாலான சர்க்கரை நோய் இருப்பவர்கள் எப்போதும் எதை உண்பது எதைத் தவிர்ப்பது என்ற குழப்பத்திலேயே இருப்பார்கள். இதனால் பல காய் மற்றும் பழ வகைகளை அவர்கள் தவிர்த்து விடுவதுண்டு. எனினும், வெள்ளரிக்காய்(cucumber) அத்தகைய குழப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்தாது. நீங்கள் வெள்ளரிக்காயை தைரியமாகத் தினமும் உங்கள் உணவோடோ, அல்லது சாறாகவோ அல்லது பச்சையாகவோ உண்ணலாம். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதாலும், கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதாலும் உங்களுக்குத் தேவையான சக்த்தியை தருவதோடு உடல் எடை அதிகரிக்காமல் வைத்துக் கொள்ள உதவும். சர்க்கரை நோய் (நீரழிவு நோய்) இருப்பவர்கள் வெள்ளரிக்காயை தினமும் உண்பது ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
பொதுவாகச் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு ரத்த கொதிப்பு, மூட்டு வலி, உள்ளங்கால் மற்றும் கை எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படுவதுண்டு. இவை அனைத்திற்கும் வெள்ளரிக்காய்(cucumber) ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


சுவாரசியமான மற்றும் ருசியான வெள்ளரிக்காய்(cucumber) சமையல் குறிப்பு (Dishes With Cucumber)


வெள்ளரிக்காயை பற்றி நீங்கள் தெரிந்த பின் அதனை எப்படி சமைத்தோ அல்லது ருசி தரும் வகையில் பச்சையாகவோ உட்கொள்வது என்று சில சந்தேகங்கள் இருக்கலாம். உங்களுக்கு உதவும் வகையில் இங்கே சில சுவாரசியமான வெள்ளரிக்காய் சமையல் குறிப்பு:


Also Read:சாதிக்காயின் பயன்பாடுகள் (Nutmeg (Jathikai) Uses)


1. வெள்ளரிக்காய் சாறு (Cucumber Juice)


இதை எளிதாக நீங்கள் 5 நிமிடத்தில் செய்து விடலாம். ஒரு சிறிய வெள்ளரிக்காயை எடுத்துத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதனோடு சிறு துண்டு இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு விட்டு மிக்சரில் தண்ணீர் விட்டு நன்கு அடித்து எடுத்துக் கொள்ளுங்கள்
சாற்றை வடி கட்டி தேவை பட்டால் உப்பு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து பருகலாம்.


2. வெள்ளரிக்காய் சாலட் (Cucumber salad)


வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய தக்காளி பழத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிது நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணைச் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் விருப்பப் பட்டால் சிறிது புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். சிறிது மிளகு மற்றும் சீரகத் தூள் சேர்த்துக் கொள்ளலாம். நன்கு கிளறி தேவைக்கேற்ப சிறிது உப்பு சேர்த்து பரிமாறலாம்


3. வெள்ளரிக்காய் தயிர் பச்சடி *Cucumber Yogurt Pudding)


இது அனைவருக்கும் பிடித்த மிக ருசியான ஒரு பலகாரம். இதனை அனைத்து உணவு வகைகலோடும் நீங்கள் சேர்த்து உண்ணலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், காரட் சேர்த்துக் கொள்ளலாம். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். கொத்தமல்லி இலையைச் சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். தேவைப் பட்டால் ஒரு சிறிய இஞ்சி துண்டை மெல்லியதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் கெட்டி தயிர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்


சரும / முக அழகிற்கு வெள்ளரிக்காய் (Beauty Benefits Of Cucumber) 


உங்கள் முக / சரும அழகை அதிகப் படுத்த என்னுகுரீர்களா? அப்படி என்றால் இந்த அழகு குறிப்பு உங்களுக்காக!


சிறிது வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். மிக்சரில் அடித்து வாடிக் கட்டி சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வெள்ளரிக்காய் சாற்றுடன் சிறிது கெட்டித் தயிர் விட்டு நன்கு கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து 3௦ நிமிடங்கள் விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தைக் கழுவி விடவும்
இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வரும்போது முகத்தில் இருக்கும் கரும் வளையம், கரும் புள்ளிகள் மற்றும் தழும்புகள் நாளடைவில் மறையும்.


வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் (Side Effects Of Cucumber)


பல நற்குணங்கள் வெள்ளரிக்காயிக்கு இருந்தாலும் சிலர் இதனால் உபாதைகள் ஏதாவது ஏற்படுமோ என்று பயப்படுகிறார்கள். எனினும், அப்படி குறிப்பிட வேண்டும் என்றால் ஒரு சிலருக்கே சில உபாதைகள் ஏற்பட மிகக் குறைந்த வாய்ப்பு உள்ளது. எனினும் அது பெரிய அளவிள் எந்தப் பாதிப்புகளையும் ஏற்படுத்தாது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வெகுசிலருக்கு சரும பிரச்சனை அல்லது ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும். எனினும் இதன் விகிதம் மிகக் குறைவே.


cucumber-benefits-and-side-effects004


  • வெள்ளரிக்காயில் உள்ள விட்டமின் C நன்மையாக இருந்தாலும், அது அளவுக்கு அதிகமாகும் போது, நமது உடம்பின் செயல்பாட்டுக்கு எதிர்மறையாகி, நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது.

  • நமது உடலில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாகும் போது, சிறுநீரக கல், அடிவயிறு வீக்கம், அழற்சி, முகப்பருக்கள் இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் வெள்ளரிக்காயில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளது.

  • நீர்ச்சத்துக்கள் அதிகமாக கொண்டுள்ள வெள்ளரிக்காயை அதிகமாக உட்கொண்டால், இதய அழுத்தம், ரத்த நாளங்களில் அடைப்பு, சுவாசப் பிரச்சனை மற்றும் அடிக்கடி கடுமையான தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

  • விவசாயம் செய்யும் போது, வெள்ளரிக்காயில் பூச்சிக்களின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு, பூச்சிக் கொல்லி மருந்துக்களை பயன்படுத்துவார்கள். அதனால் சிலருக்கு ஒவ்வாமை போன்ற அலர்ஜிகள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படும்.

  • கர்ப்பக் காலத்தில் இருக்கும் பெண்கள் வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படுவதுடன், வயிற்றில் வலியையும் ஏற்படுத்தும்.

    அதனால் நீங்கள் வெள்ளரிக்காயை எந்தப் பயமும் இல்லாமல் தைரியமாகத் தினமும் உங்கள் உணவோடு அல்லது வேறு வகையில் உண்ணலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் பல நன்மைகளைத் தரும். மேலும் வெள்ளரிக்காயை கொண்டு நீங்கள் பல வகை பலகாரங்கள் மற்றும் உணவு சமைத்தும் உண்ணலாம்.


 


பட ஆதாரம் - gifskey, pexels, pixabay, Youtube, shutter stock


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo