'காதலில்' துளியும் ஒத்துப்போகாத ராசிகள்.. 'உங்க' ராசியும் இதுல இருக்கா?

'காதலில்' துளியும் ஒத்துப்போகாத ராசிகள்.. 'உங்க' ராசியும் இதுல இருக்கா?

என்னதான் ஜாதி, மதம், இனம்,மொழி கடந்து காதலித்தாலும் சில ராசிகளைப்(Zodiac) பொறுத்தவரையில் சில பேருடன் இவர்களுக்கு துளியும் ஒத்துப்போகாது. அவ்வளவு ஏன்? அதுபோன்ற ராசிகளைப் பார்த்தாலே தூர ஓடிவிடுவார்கள். ஒருவர் கிழக்கு என்றால் இன்னொருவர் மேற்கு என்பார். எல்லா விஷயத்திலும் ஏட்டிக்குப் போட்டியாகவே இருக்கும்.இதனால் தான் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது இரண்டு ராசிகளுக்கும்(Zodiac) ஓரளவாவது ஒத்துப்போகுமா? என்பதை தீர ஆராய்வார்கள்.பணம், படிப்பு, அந்தஸ்து என எவ்வளவு இருந்தாலும் மனநிம்மதி என்ற ஒன்று இல்லாவிடில் அந்த வாழ்க்கை வீண்தான்.காதலித்து திருமணம் செய்யும் ஏராளமான பேர் ஆரம்ப கட்டத்தில் நன்றாக இருந்தாலும் திடீரென காரணமே இல்லாமல் பிரிந்து விடுவதை அடிக்கடி கேட்டு,பார்த்து இருப்பீர்கள். இதற்கு இருவரின் ராசிகளும் கூட காரணமாக இருக்கக்கூடும். உதாரணமாக மேஷம், சிம்மம் போன்ற ராசிகள் ஆதிக்கம் மிகுந்தவை. அதேநேரம் கும்பம், மிதுனம் போன்ற ராசிகள் தனிமையை அதிகம் விரும்பக்கூடிய ராசிகள்.


இதேபோல ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. அந்தவகையில் எந்தெந்த ராசிகளுக்கு(Zodiac) இடையே இணக்கம் மிகவும் குறைவாக இருக்கக்கூடும்? எந்த இரண்டு ராசிகளுக்கும் இடையில் துளியும் ஒத்துபோகாது? என்பதை இங்கே பார்க்கலாம்.


மேஷம்-கடகம்இந்த இரண்டு ராசிகளுக்கும்(Zodiac) அறவே ஆகாதாம். மேஷ ராசியை நெருப்பு என்றும் கடக ராசியை நீர் என்றும் கூறுவார்கள். நீருக்கும், நெருப்புக்கும் இடையில் என்றுமே ஒத்துப்போகாது. அன்போ, வெறுப்போ எதுவாக இருந்தாலும் மேஷ ராசியினர் நேரடியாக வெளிப்படுத்தி விடுவார்கள். அதேவேளையில் கடக ராசியினர் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். இருவரும் தங்களது குணாதியங்கள் குறித்து முழுமையாக அறிந்திருந்தாலும், நீண்ட உறவுக்கான நெருக்கம் இவர்கள் இருவர் மத்தியிலும் இருக்காது.


ரிஷபம்-சிம்மம்இந்த இரண்டு ராசிக்காரர்களைப் பொறுத்தவரை மிகவும் மோசமான ஜோடி என்று சொல்ல முடியாது. அதேநேரம் இவர்கள் சிறந்த ஜோடியாகவும் திகழ மாட்டார்கள். சிம்ம ராசிக்காரர்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள். ரிஷப ராசியினர் மிகுந்த பிடிவாதக்காரர்கள். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதால் இவர்கள் இருவர் மத்தியிலான உறவு அவ்வளவு சிறப்பான ஒன்றாக இருக்காது. அதிக கவனம் வேண்டும் என்பதற்காக இருவருமே தீவிரமாகப் போராடுவார்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் சிறந்த தகவல் தொடர்பு இருக்கும் பட்சத்தில் ஒரு நீண்டகால உறவு சாத்தியப்படும்.


மிதுனம்-கன்னிமிதுன ராசியினர் தங்களது மனதை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். கன்னி ராசியினர் மிகுந்த புத்திசாலிகளாக திகழ்வர். கன்னி ராசியினர் நிலையான தன்மையை மிகவும் தீவிரமாக விரும்புவர். அதேநேரம் மிதுன ராசியினர் கொஞ்சம் மந்தமாகவும், சோம்பேறித்தனமும் கொண்டிருப்பர். இவர்கள் இருவருக்கும் மத்தியிலான அதிகாரப் போராட்டங்கள், சுயநலம் மற்றும் கவலைகள் ஆகியவை ஒரு வெளிப்படையான வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.


கடகம்-துலாம்இந்த இரண்டு ராசிகளும்(Zodiac) ஒன்றுக்கொன்று எதிர்மறையானவை. கடகம் ராசிக்காரர்கள் நேரத்திற்கு நேரம் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் துலாம் ராசியைப் பொறுத்தவரையில் இவர்கள் மிகவும் நேர்மறையான எண்ணங்களுடன் திகழ்வர். துலாம் ராசிக்காரர்கள் தங்களது துணை குறித்து அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்படுவர். இதற்கு நேர்மாறாக கடகம் ராசிக்காரர்கள் அனைத்தையும் தங்களுக்குளேயே போட்டு புதைத்துக் கொள்வர். இவர்கள் இருவருக்கும் மத்தியில் பேச்சுவார்த்தை அதிகமாக இல்லாவிடில் இந்த உறவு நீண்டகாலம் நீடிப்பது கடினமாகும்.


துலாம்-மகரம்இந்த இரண்டு ராசிக்காரர்களும்(Zodiac) ஒருவருக்கொருவர் ஒத்துப்போக மாட்டார்கள் என்பதற்கு பல்வேறு காரணங்களை சொல்லலாம். துலாம் ராசிக்காரர்கள் கலை மற்றும் கவிதை ஆர்வத்தில் மிகுந்த கொண்டிருப்பார்கள். மகர ராசிக்காரர்கள் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள். துலாம் ராசிக்காரர்கள் பிறரது கவனத்தை கவர எடுத்துக்கொள்வார்கள். அதேநேரம் மகர ராசிக்காரர்கள் மற்றவர்களிடம் இருந்து தனித்து இருக்க விரும்புவார்கள். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு சமநிலை என்பது இருக்காது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.