திருமணமான 'நான்கே' மாதங்களில் பிரியங்கா-நிக் விவாகரத்தா?.. விளக்கம் உள்ளே!

திருமணமான 'நான்கே' மாதங்களில் பிரியங்கா-நிக் விவாகரத்தா?.. விளக்கம் உள்ளே!

திருமணம் செய்துகொண்ட நான்கே மாதங்களில், பிரியங்கா சோப்ரா(Priyanka Chopra)-நிக் ஜோனாஸ்(Nick Jonas) தம்பதி விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பிரியங்கா

தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா(Priyanka Chopra) தொடர்ந்து தனது நடிப்புத்திறமையால் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். கோலிவுட், பாலிவுட்டைத் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ரா(Priyanka Chopra) கால்பதித்து அங்கும் வெற்றிக்கொடி நாட்டினார். ஹாலிவுட் படங்களில் நடித்தபோது பாப் பாடகர் நிக் ஜோனாஸ்(Nick Jonas)-பிரியங்கா இடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து இரு வீட்டினரின் சம்மதத்துடன் கடந்த டிசம்பர் 2018-ம் ஆண்டு இருவரும் மிகவும் பிரமாண்டமாகத் திருமணம் செய்து கொண்டனர்.


வயது வித்தியாசம்பிரியங்காசோப்ரா(Priyanka Chopra)-நிக் ஜோனாஸ்(Nick Jonas)இருவருக்கும் இடையே சுமார் 10 வயது வித்தியாசம் இருந்தது. இதனால் பலரும் இவர்களின் வயது வித்தியாசம் குறித்து சமூக வலைதளங்களில் கிண்டல் செய்திருந்தனர். எனினும் அவற்றை எல்லாம் இந்த ஜோடி எளிதில் சமாளித்து திருமணம் செய்து கொண்டது. தற்போது இருவரும் மியாமியில் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையைக் கழித்து வருகின்றனர்.


ஹாலிவுட் பத்திரிக்கை


இந்தநிலையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவெடுத்து உள்ளதாக ஹாலிவுட்டைச் சேர்ந்த ஓகே(Ok Magazine) மேகஸின் செய்தி வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
 

 

 


View this post on Instagram


 

 

Best day off ever!!! @nickjonas @joejonas @sophiet #jsisters ❤️☀️🙌🏽🎉


A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on
பிரியங்கா-நிக் இருவருக்கு இடையில் எந்தவொரு விஷயத்திலும் ஒற்றுமை இல்லை.இருவருக்கும் எல்லா விஷயத்திலும் சண்டை வந்துள்ளது. வேலை, பார்ட்டிக்கு செல்வது, ஒன்றாக நேரம் செலவிடுவது உள்பட பலவற்றில், இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. பிரியங்காவை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நிக் வருந்துவதாகவும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நிக் ஆசைப்பட பிரியங்கா அதுகுறித்து ஆர்வம் காட்டவில்லை என்றும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


நிக் ஜோனாஸ்இதனால் பிரியங்கா உடனான உறவை முறித்துக்கொள்ள நிக் ஜோனாஸ் குடும்பத்தினர் கருதுவதாகவும் கூறப்படுகிறது. பிரியங்கா குழந்தை பெற்றுக்கொள்வார் என்று நினைத்தால், இன்னும் 21 வயது பெண்மணி போல அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் என்று நிக் குடும்பத்தினர் கருதுகின்றனர், ஆனால் பிரியங்கா நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விவாகரத்து

இதன் காரணமாக இருவரும் தற்போது விவாகரத்து நோக்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பிரியங்கா தரப்பில் இந்த செய்தியில் உண்மையில்லை என்றும், இருவரும் குடும்பத்தினருடன் தற்போது மியாமியில் விடுமுறை நாட்களை என்ஜாய் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக் தரப்பில் இதுகுறித்து எந்தவொரு விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.