இன்று பலரும் தலைமுடி உதிர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அது அவர்களை மிகவும் மன வருத்தம் அடைய செய்துள்ளது. எனினும், இது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல. இதற்கு நல்ல பல தீர்வுகள் உள்ளன.
தலைமுடி உதிர்வை குறைக்க, நீங்கள் சில விடயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். மேலும் இந்த பிரச்சனையை போக்க பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை நீங்கள் சரியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல பலனை எதிர் பார்த்தது போல் பெறலாம்.
உங்களுக்கு உதவ, இங்கே சில பயனுள்ள குறிப்புகள் உங்களுக்காக!
தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள் என்ன(Symptoms of hair loss)
தலைமுடி உதிர்வுக்கான மருத்துவ காரணங்கள் (Medical reasons and causes of hair loss)
முடி உதிர்வை எப்படி தடுப்பது? (How to control hair loss)
தலைமுடி உதிர்வை குறைக்க சில வீட்டு குறிப்புகள் (Home remedies to control hair fall)
மருத்துவ சிகிச்சை மூலம் தலைமுடி உதிர்வை தடுக்க சிகிச்சை (How to medically treat hair fall)
தலைமுடி உதிர்வை தடுக்க உணவு முறைகள்(Diet to consider to stop hair fall)
தலைமுடி உதிர்வை தடுக்க மேலும் சில குறிப்புகள்(Additional hair fall prevention tips)
கேள்வி பதில்கள் (FAQ)
தலைமுடி உதிர்வுக்கான காரணங்கள் என்ன(Symptoms of hair loss)
ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 100 முடிகள் உதிர்வது இயல்பே. எனினும், உங்கள் தலையில் 100,000 முடிகள் இருக்கும் வரையில் அது ஒரு பெரிதாக கவனத்திற்கு வராது. இந்த எண்ணிக்கைக்கு குறைவாக இருக்கும் போது, நீங்கள் அதனை கவனிக்கத் தொடங்குவீர்கள். தலைமுடி உதிர்வு என்பது சிலருக்கு நிறந்திர நிகழ்வாகவும், சிலருக்கு தற்காலிக நிகழ்வாகவும் இருக்கும். எனினும், உதிர்வை நிறுத்துவதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்கும் முன், ஏன் தலைமுடி உதிர்கின்றது என்பதற்கான காரணங்களை புரிந்து கொள்வது முக்கியம். இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:
1. ஊட்டசத்து குறைவு. போதிய ஊட்டசத்து உங்கள் உணவில் இல்லையென்றால், முடி உதிர்வு ஏற்படக் கூடும். ஜின்க், செம்பு, புரதம் மற்றும் இரும்பு சத்து உங்கள் உணவில் நிச்சயம் இருக்க வேண்டும்
2. வைட்டமின் டி குறைபாட்டால் முடி உதிர்வு ஏற்படும்
3. உடலில் ஹார்மோன்கள் சரியாக சுரக்காமல் போனால் முடி உதிர்வு ஏற்படும்
4. தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படக் கூடும்
5. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் இருந்தால் முடி உதிர்வு ஏற்படக் கூடும்
6. கர்ப்பத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும்
7. இருதய நோய், இரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகிய காரணங்களால் முடி உதிர்வு ஏற்படும்
8. அதிக ரசாயனங்கள் கலந்த கடைகளில் விற்கப்படும் தலைமுடி வளர்ச்சிக்கான பொருட்களை பயன்படுத்தினால் முடி உதிர்வு அதிகரிக்கக் கூடும்
9. குடும்பத்தினர்களுக்கு முடி உதிர்வு அதிகம் இருந்தால், உங்களுக்கும் ஏற்படக் கூடும்
10. புற்றுநோய், குடல் நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருந்தாள், தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும்
11. கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள், தலைமுடி உதிர்வு ஏற்படும்
12. சரியான முறையில் தலைமுடியை பராமரிக்கவில்லை என்றால், முடி உதிர்வு ஏற்படும்
13. வயதாவதால் முடி உதிர்வு ஏற்படும்
14. உடல் எடை குறைவு காரணமாக முடி உதிர்வு ஏற்படும்
தலைமுடி உதிர்வுக்கான அறிகுறிகள்
- தலைமுடியின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும்
- ஆங்காங்கே வழுக்கை தலையில் ஏற்படுவது தெரியும்
- தினமும் அதிக அளவு முடி உதிர்வு ஏற்படும்
- உங்கள் உடல் முழுவதும் முடி உதிர்வு ஏற்படக் கூடும்
- தலையில் திட்டு திட்டாய் வறண்ட இறந்த அணுக்களின் படிவங்கள் இருக்கும்
தலைமுடி உதிர்வுக்கான மருத்துவ காரணங்கள் (Medical reasons and causes of hair loss)
மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் மட்டும் இல்லாமல், மருத்துவ காரணங்களும் தலைமுடி உத்திரவுக்கு உள்ளன. அவற்றில் சில:
• டெலோஜென் எஃப்ளூவியம் : இது தலை பகுதி முழுவதும் முடி உதிர்வை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 1௦௦ முடிகள் வரை கொட்டுவது இயல்பு என்றால், இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு அது நாளடைவில் மேலும் அதிகரிக்கும்
• ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா 1: இந்த பிரச்சனை இருப்பவர்களுக்கு உச்சந்தலையில் மற்றும் நெற்றி பகுதியில் முடி மெல்லியதாக ஆகும். எனினும், தலையின் பின் புறத்தில் முடி அடர்த்தியாக இருக்கும்.
• அலோபீசியா அரேட்டா: இது 2% மக்கள் தொகையை பாதிக்கும் ஒரு பிரச்சனையை. இந்த நோய் ஏற்பட்டால், தலைமுடி மொத்த மொத்தமாக கொட்டத் தொடங்கும், விரைவில் வழுக்கை ஏற்படக் கூடும்.
முடி உதிர்வை எப்படி தடுப்பது? (How to control hair loss)
தலைமுடி உத்திரவுக்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவாக அனைவருக்கும் ஒரு சில காரணங்கள் இருக்கக் கூடும். அப்படி இருப்பதில், நீங்கள் புரிந்து கொள்ள இங்கே சில:
1. நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்தை கவனிக்கவும்
பல நேரங்களில், உங்களுக்கு உடலில் ஏதாவது நோய் இருந்து, அதன் காரணமாக தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தாள், அதுவும் உங்கள் தலைமுடி உத்திர முக்கிய காரணமாகும். அதனால், எந்த மாதிரியான மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்கள், அது உங்கள் உடலுக்கு பாதுகாப்பானதா என்று கவனித்து பின்னர் மருத்துவரின் ஆலோசனைப் படி தொடரவும்.
2. ஊட்டச்சத்து
உங்கள் உணவில் போதிய சத்துக்கள் நிறைந்துள்ளதா என்று கவனிக்க வேண்டியது அவசியம். அப்படி போதிய சத்துக்கள் இல்லை என்றால், நீங்கள் தினமும் தேவையான ஊட்டச்சத்து நிறைந்த பானங்கள், தானிய கஞ்சி வகைகள், பழச்சாறு என்று எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். இது தேவையான போஷாக்கை தலைமுடி வேருக்கு கொடுத்து கூந்தல் நன்கு வளர உதவும்.
3. சல்பேட் இல்லாத உணவுகள்
முடிந்த அளவு சல்பேட் இல்லாத பொருட்களை பயன்படுத்தோது நல்லது. இது முடி உதிர்வை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ தரமானதா, மேலும் அதில் இருக்கும் சல்பேட்டின் அளவு போன்றவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும்.
4. சிகை அலங்காரம்
நீங்கள் செய்யும் சிகை அலங்காரமும் ஒரு முக்கிய காரணம். நீங்கள் எந்த வகையான சிகை அலங்காரம் செய்கின்றீர்கள் என்பதை பொறுத்து உங்கள் தலைமுடி உதிரவும் ஏற்படும். அதனால், சிகை அலங்காரத்தை தேர்வு செய்யும் முன் அது உங்களுக்கு ஏற்றதாக இருக்குமா, பாதுகாப்பானதாக இருக்குமா என்பதை கவனிக்க வேண்டும்.
5. சத்து நிறைந்த எண்ணையால் மசாஜ்
உங்கள் தலைமுடி வேர் பகுதிக்கு தினமும் சத்துக்கள் நிறைந்த எண்ணைகளைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வரும் போது, வேர் பகுதி பலம் பெற்று, முடி உதிர்வு நின்று, நல்ல நீண்ட கூந்தல் வளரும்.
6. தலைமுடியின் வகை
அனைவருக்கும் ஒரே மாதிரியான தலைமுடி இருப்பதில்லை. சிலருக்கு வறண்ட முடி, சிலருக்கு சுருள் முடி, சிலருக்கு போஷாக்கு இழந்து சோர்வாக காணப்படும் முடி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் இருக்கும். ஆகையால், அனைவரும் ஒரே மாதிரியான சிகிச்சையை பெறுவது பலனளிக்காது. உங்கள் முடியின் வகையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு சிகிச்சையை செய்ய வேண்டும்.
7. சரியான உணவு
தலைமுடி நன்கு வளர உணவிற்கும் முக்கிய பங்கு உள்ளது. அதனால், நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவின் மீது நீங்கள் கவனம் வைக்க வேண்டும். சரியான உணவு, அல்லது சரியான உணவு முறை இல்லையென்றால், உங்களுக்கு இந்த பிரச்சனையை நாளடைவில் ஏற்படக் கூடும்.
8. அதிக அலங்கார பொருட்கள்
ஏதாவது விழாக்களுக்கு மட்டும் அலங்கார பொருட்களை பயன்படுத்துவது போய், இன்று பெண்கள் தினமும் அலங்கார பொருட்களை சிகை அலங்காரத்திற்கு பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால், தலைமுடி உதிர்வு அதிகரிக்கத் தொடங்கி விட்டது. எனினும், அதிக அளவு அத்தகைய இரசாயனம் கலந்த பொருட்களை நீங்கள் பயன்படுத்துவதை தவிர்பப்து நல்லது.
9. தலைக்கு எண்ணை தேய்ப்பது
தலைக்கு தினமும் எண்ணை தேய்த்தால், முகத்தில் எண்ணை வடியும் அல்லது முக அழகு பாதிக்கும் என்று கருதி, பலர் இன்று தலைக்கு போதிய எண்ணை வைப்பதில்லை. இது தலைமுடிக்கு வறட்சியை அதிகப்படுத்தி, எளிதாகவும், விரைவாகவும் உத்திர செய்து விடும். அதனால், தினமும் போதிய எண்ணையை தலைக்கு தேய்க்க வேண்டும்.
10. உடற் பயிற்சி மற்றும் உணவு முறை
தினமும் உடற் பயிற்சி செய்து, அதனோடு சரியான உணவு முறையை பின்பற்றி வந்தால், தலைமுடி உதிர்வை தவிர்க்கலாம். மேலும் இதனால் உங்கள் உடலின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
11. ரசாயன சிகிச்சை
தலைமுடி நன்கு வளர வேண்டும் என்று பெண்கள் பலர் இன்று அழகு நிலையங்களுக்கு சென்று பல சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிநிட்றனர். இந்த சிகிச்சையில் அதிக அளவு ரசாயனங்கள் பயன்படுத்தபப்டுகின்றது. இதனால் உங்கள் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்காமல், மாறாது உதிரவே தொடங்குகின்றது.
12. கண்டிஷனர்
நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் கண்டிஷனர் மீது கவனம் வைக்க வேண்டும். இதில் சல்பேட், மற்றும் பிற பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயனங்கள் எவ்வளவு உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் எந்த ரசாயனும் உங்களுக்கு ஒவ்வாமை மற்றும் உடல் நல பிரச்சனையை ஏற்படுத்தக் கூடும் என்பதை பற்றியும் நீங்கள் தெரிந்து, அதற்கேற்றவாறு வாங்க வேண்டும்.
13. ஷாம்பூ
தொலைக்காட்சி விளம்பரங்களை பார்த்து சிந்திக்காமல் எதேதோ ஷாம்பூகளை வாங்கி மாற்றி மாற்றி பயன்படுத்தினால், நிச்சயம் தலைமுடி உதிர்வு ஏற்படும். அதனால், நீங்கள் ஏதாவது ஒரு தரமான ஷாம்பூவை தேர்வு செய்து அதனை முதலில் சில நாட்கள் பயன்படுத்தி பார்த்து, பின்னர் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்த பின்னர் பயன்படுத்தலாம்.
14. சுடுதநீரில் தலைமுடி அலசுவது
தலைக்கு குளிக்கும் போது எப்போதும் சுடு தண்ணீரை பயன்படுத்தக் கூடாது. இது தலைமுடி மற்றும் வேர் பகுதியை பலவீனமாக்கி விடும். இதனால் தலைமுடி உதிர்வு அதிகரிக்கும். மேலும் வறட்டுத் தன்மையை அதிகரித்து, தலைமுடி போஷாக்கை இழக்க வைத்து விடும்.
தலைமுடி உதிர்வை குறைக்க சில வீட்டு குறிப்புகள் (Home remedies to control hair fall)
நீங்கள் உங்கள் வீட்டிலேயே தலைமுடி உதிர்வை குறைப்பதற்கான முயற்சிகளை செய்யலாம். இதற்கு சில எளிய மற்றும் சுலபமாக உங்கள் சமையல் அறையில் கிடைக்கும் பொருட்களே போதுமானது. எப்படி அதனை செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்;
1. முட்டை
- ஒன்று அல்லது இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வண்டும்
- இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்
- பின்னர் இந்த கலவையை தலைமுடியின் வேர் பகுதியில் இருந்து நுணி வரை நன்கு தேக்க வேண்டும்
- சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த நீரில் முடியை சீயக்காய் தேய்த்து அலச வேண்டும்
2. தயிர்
- தேவையான அளவு தயிர் எடுத்துக் கொள்ளவும்
- இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து கலக்கவும்
- பின்னர் இந்த கலவையை தலைமுடியின் வேர் முதல் நுணி வரை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முடியை சீயக்காய் தேய்த்து அலச வேண்டும்
3. எலுமிச்சை மற்றும் மருதானி
- தேவையான அளவு மருதாணி இலைகளாய் எடுத்துக் கொள்ளவும்
- மருதாணி இலைகள் கிடைக்கவில்லை என்றால், கடையில் மருதாணி இலை பொடியை வாங்கி பயன்படுத்தலாம்
- இந்த இலைகளை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை கலந்து, தேவைப்பட்டால் சிறிது தயிரும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்
- இந்த கலவையை தலைமுடி வேர் முதல் நுணி வரை நன்கு தேய்த்து, அப்படியே 2 மணி நேரம் விட்டு விட வேண்டும்
- பின்னர் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும்
4. தலைமுடி உதிர்வை தடுக்க மூலிகைகள்
- மருதாணி, கருவேப்பிள்ளை, கற்பூரவள்ளி, துளசி, ஆவாரம் இலை, செம்பருத்தி இலை, ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்
- இதனுடன் கிடைத்தால் ஆவாரம் பூ மற்றும் செம்பருத்தி பூவையும் சேர்த்துக் கொள்ளலாம்
- அனைத்து இலைகளையும் நன்கு பசை போல அரைத்துக் கொள்ளவும்
- இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்துக் கொள்ளவும்
- இப்போது, இதனை தலையில் வேர் முதல் நுணி வரை நன்கு தேக்க வேண்டும்
- சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்
- பின்னர் குளிர்ந்த நீரில் சீயக்காய் தேய்த்து முடியை நன்கு அலச வேண்டும்
5. தேங்காய்
- வழக்கமாக தேங்காய் எண்ணையை தேய்ப்பதோடு, சற்று மாறுபட்டு, தேங்காய் பாலை பயன்படுத்தி பாருங்கள்
- தேவையான அளவு கெட்டியான தேங்காய் பாலை தயார் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்
- இதனை தலைமுடி வேர் முதல் நுணி வரை நன்கு தேக்க வேண்டும்
- சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்யவும்
- பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டுவிட்டு, குளிர்ந்த நீரில் சீயக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்
6. வெங்காய சாறு
- தேவையான அளவு சின்ன வெங்காயத்தை எடுத்துக் கொள்ளவும்
- இதனை நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்
- தண்ணீர் சேர்க்கக் கூடாது
- இந்த சாரை தலைமுடி வேர் பகுதியில் நானு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் முடியை அலசி விட வேண்டும்
7. இஞ்சி சாறு
- தேவையான அளவு இஞ்சியை எடுத்துக் கொள்ளவும்
- நன்கு அரைத்து சாறை எடுத்துக் கொள்ளவும்
- தண்ணீர் சேர்க்கக் கூடாது
- இந்த சாறை தலைமுடி வேர் பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும்
- சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் நன்கு அலச வேண்டும்
8. கற்றாழை
- இளம் கற்றாழை இலை ஒன்றை எடுத்துக் கொள்ளவும்
- இதன் சதை பகுதியை எடுத்து பசை போல அரைத்துக் கொளவும்
- இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து கலந்து கொள்ளவும்
- இந்த கலவையை நன்கு வேர் முதல் நுணி வரை தலைமுடியில் தேய்க்க வேண்டும்
- பின்னர் அப்படியே விட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் சீயக்காய் தேய்த்து அலச வேண்டும்
9. வெந்தயம்
- தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். குறைந்தது 3 முதல் 4 மணி நேரமாவது ஊற வேண்டும்
- பின்னர் அதனை நன்கு பசை போல அரைத்துக் கொள்ளவும்
- இதனுடன் தயிர் மற்றும் எழுமிச்சைபழ சாறை தேவைகேற்ப சேர்த்து கலந்து கொள்ளவும்
- இந்த கலவையை வேர் முதல் நுணி வரை நன்கு தேய்க்க வேண்டும்
- பின்னர் சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, குளிர்ந்த நீரில் சீயக்காய் தேய்த்து தலைமுடியை அலசி விட வேண்டும்
10. எண்ணை சிகிச்சை
- இதற்கு நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணை வகைகளை அல்லது தையலம் வகைகளை பயன்படுத்தலாம்
- குறிப்பாக பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி பூ, கேசவர்த்தினி, மருதாணி, போன்ற தையலங்களை சமமான அளவு எடுத்துக் கொள்ளவும்
- இதனை தேங்காய் எண்ணை, அல்லது ஆமணக்கு எண்ணையோடு கலந்து மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும்
- இந்த எண்ணையை தலையில் நன்கு வேர் முதல் நுணி வரை தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
- பின்னர் அப்படியே இரவு முழுவதும், அல்லது குறைந்தது 6 மணி நேரமாவது பகல் நேரத்தில் விட்டு விட வேண்டும்
- பின்னர் சீயக்காய் பயன்படுத்தி முடியை நன்கு அலச வேண்டும்
குறிப்பு:
- மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளை நீங்கள் செய்யும் முன் தேங்காய் எண்ணை அல்லது ஆமணக்கு எண்ணையை சிறிது மிதமாக சூடு செய்து தலையில் தேய்த்த பின்னர் செய்யவும். இப்படி செய்தால், தலைமுடி நல்ல பலபல்ப்பை பெறுவதோடு, ஈரத்தன்மையையும் தக்கவைத்துக் கொள்ளும்
- இந்த குறிப்புகளை குறைந்தது வாரம் 2 முறையாவது செய்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
மருத்துவ சிகிச்சை மூலம் தலைமுடி உதிர்வை தடுக்க சிகிச்சை (How to medically treat hair fall)
மருத்துவ ரீதியாக, உங்களுக்கு உடலில் தைராய்டு, இரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அதுவும் உங்கள் தலைமுடி உத்திர ஒரு முக்கிய காரணமாகும். இது மட்டுமல்லாது, சிறுநீரகம், கல்லீரல், குடல் பிரச்சனை இருந்தாலும் தலைமுடி உதிர்வு ஏற்படக் கூடும். அதனால், அத்தகைய பிரச்சனைகள் உங்கள் உடலில் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
மருத்துவ ரீதியாக நீங்கள் முடி உதிர்வை தடுக்க, இங்கே சில குறிப்புகள்/ ஆலோசனைகள்:
• மைனாக்சிடில்: இந்த சிகிச்சை ஆண் மற்றும் பெண் இருவரும் முயற்சி செய்து பார்க்கலாம். இதில் மருந்துகளை பயன்படுத்தி சிகிச்சை வழங்கப்படும்.
• முடி மாற்று அறுவைசிகிச்சை அல்லது மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை: இதில் அதிக முடி வளர்ச்சி உள்ள சருமத்தின் ஒரு பகுதியை எடுத்து தலையில் வழுக்கையாக இருக்கும் இடத்தில் பொருத்தப்படும்
• லேசர் சிகிச்சை: இது தலைமுடியின் அடர்த்தியை அதிகப்படுத்த பயன்படுத்தப்படுகின்றது
தலைமுடி உதிர்வை தடுக்க உணவு முறைகள்(Diet to consider to stop hair fall)
தலைமுடி உத்திரவுக்கு உணவு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. சரியான உணவு முறையும், போதிய சத்துக்கள் உள்ள உணவுகளையும் எடுத்துக் கொள்ளும் போது, தலைமுடி உதிரும் பிரச்சனை குறைகின்றது. அப்படி உங்கள் உணவில் சில மாற்றங்களை செய்ய உங்களுக்காக இங்கே சில தினமும் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
1. கீரை
குறிப்பாக பசளிக்கீரை. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அனைத்து கீரை வகைகளிலும், நார் சத்தும், பிற தாது சத்துக்களும், குறிப்பாக மக்னேசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஒமேக 3 கொழுப்பு அமிலமும் நிறைந்துள்ளது. இவை வேர் பகுதிக்கு போதிய இரத்த ஓட்டம் கிடைக்கவும், ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக உள்ளது
2. துவரம்பருப்பு
இதில் இரும்பு, புரதம், ஜின்க், பயொடின் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது. மேலும் இதில் போலிக் அமிலம் இருப்பதால், சிவப்பு இரத்த அணுக்களுக்கு போதிய சத்துக்களை தருகின்றது. மேலும் தலைமுடி வேர் பகுதிக்கு போதிய பிராணவாயு கிடைக்கவும் உதவும். இதனால் தலைமுடி நல்ல ஆரோக்கியத்தோடு வளரும்.
3. முட்டை
இதில் 68% கெரட்டின் புரதம் உள்ளது. இது சேதமடைந்த தலைமுடியை மீண்டும் கட்டமைக்க உதவுகின்றது, மேலும் இதில் இருக்கும் வைட்டமின் பி தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது.
4. ஓட்ஸ்
இதில் நார், ஜின்க், இரும்பு, ஒமேக 6 கொழுப்பு அமிலம் மற்றும் பாலியான்சசுரேடெட் கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்த பெரிதும் உதவுகின்றது. இதனால் முடி அடர்த்தியாகவும் வளரும்.
5. கேரட்
இது குறிப்பாக இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வேர் பகுதியை பலப்படுத்த உதவும், மேலும் தூசி, மாசு போன்ற புற பிரச்சனைகளில் இருந்து தலைமுடியை ஆரோக்கியத்தோடு பாதுகாக்கவும் உதவும். இதனை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால், அடர்த்தியான தலைமுடியை நீங்கள் நிச்சயம் பெறலாம்.
6. வாதுமை கொட்டை
இதில் வைட்டமின் பி, இ, புரதம் மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. இவை வேர் பகுதிக்கு தேவையான போஷாக்கைத் தரும். மேலும் சூரிய கதிர்களால் ஏற்படும் பாதிப்பில் இருந்தும் முடியை பாதுகாக்கும்.
7. கோழி
குறிப்பாக நாட்டுக்கோழி. இதில் உடலுக்கு தேவையான உயர்தர புரதம் உள்ளது. இது பாதிக்கப்பட்ட தலைமுடிக்கு போதிய பலத்தை பெற உதவுகின்றது. இதனால் தலைமுடி நல்ல வளர்ச்சியைப் பெறுகின்றது.
8. ஸ்ட்ராபெரி மற்றும் கொய்யா
இவற்றில் அதிக அளவு தாது சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக எளிதாக நம் நாட்டில் கிடைக்கும் கொய்யாவில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பழங்களில் வைட்டமின் சி இருப்பதால், தலைமுடிக்கு போதிய சத்துக்களை இது பெற உதவுகின்றது. இதனால் தலைமுடி நல்ல ஆரோக்கியம் பெற்று, உதிர்வு குறைகின்றது.
9. தயிர்
இதில் வைட்டமின் பி 5 மற்றும் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது. இது தலைமுடி வளர்ச்சியை ஊக்கவிக்க உதவும். இதனால் தலைமுடி உதிரவும் குறையும்
10. சக்கரவளி கிழங்கு
இதில் பிட கெரோடின் சத்து நிறைந்துள்ளது. இது தலைமுடி வளர்ச்சியை ஊக்கவித்து, வேர் பகுதிகளுக்கு பலத்தை கொடுகஈன்றது. மேலும் இதில் வேறு பல சத்துக்களும் நிறைந்திருப்பதால், உடலுக்கு நல்ல ஆரோகியத்தையும் தருகின்றது.
11.ஆளிவிதை
இதில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது தலைமுடியின் வேர் பகுதிக்கு போஷாக்களித்து, முடி நன்கு பற்றிக் கொள்ள உதவுகின்றது. இதனால் தலைமுடி உதிர்வு குறைகின்றது. மேலும் இதில் இருக்கும் பிற சத்துக்கள் நல்ல ஆரோக்கியமான கூந்தலை பெற உதவுகின்றது.
தலைமுடி உதிர்வை தடுக்க மேலும் சில குறிப்புகள்(Additional hair fall prevention tips)
மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகள் மட்டுமல்லாது, தலைமுடி உதிர்வை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு மேலும் சில குறிப்புகள்:
• உங்கள் தலைமுடியிடம் அன்பாக இருந்தால். மெதுவாகவும், சீராகவும் அலங்காரம் செய்யும் போது அல்லது தலைமுடியை அலசும் போது கையாளுங்கள்
• இறுக்கமாக தலைமுடியை கட்டுவதை தவிர்க்க வேண்டும். இது வேர் பகுதியை மிகவும் பாதிக்கும்
• முடி நுணியில் வெடிப்பு ஏற்படாமல், போதிய இடைவெளிக்கு ஒரு முறை நுணி முடியை வெட்டி விடுங்கள்
• பகல் நேரத்தில் வெளியே செல்லும் போது, சூரிய கதிரில் இருந்து தலைமுடிய பாதுகாக்க, போதிய நடவடிக்கைகளை செய்யுங்கள்
• எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். இதனால் மன அழுத்தம் குறைந்து, தலைமுடி உதிரவும் குறையும்
• எண்ணாற்ற சிக்ச்சைகளை ஒரே நேரத்தில் செய்வதை தவிர்ப்பது நல்லது
• எந்த ரசாயனம் கலந்த பொருட்களும் இல்லாமல் சிகை அலங்காரம் செய்ய முயற்சி செய்யுங்கள்
• தலைமுடியை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்
• வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்படும் போது, உங்கள் தலைமுடிக்கும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்
• வியர்வை இல்லாமல் தலைப் பகுதியை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அழுக்கு சேராமல் தவிர்க்கலாம்
• இயற்கை பொருட்களையே அதிகம் பயன்படுத்துங்கள். குறிப்பாக ஷாம்பூக்கு பதிலாக சியக்காய் பயன்படுத்தலாம்
கேள்வி பதில்கள் (FAQ)
1. தலைமுடி உதிர்வை உடனடியாக குறைக்க எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்?
தயிர், மற்றும் முட்டை சிறந்த உணவாகும். இதில் வைட்டமின் பி 12, இரும்பு, ஜின்க் மற்றும் ஒமேக 6 கொழுப்பு அமிலம் உள்ளது. இது விரைவாக தலைமுடி நல்ல ஆரோக்கியத்தைப் பெற உதவும்.
2. எப்படியெல்லாம் தலைமுடி உதிர்வை நிறுத்தலாம்?
வீட்டு குறிப்புகளை பின்பற்றலாம் அல்லது தேர்ச்சி பெற்ற மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசனை பெறலாம். நீங்கள் பயன்படுத்தும் தலைமுடிக்கான பொருட்களில் மாற்றங்களை கொண்டு வரலாம், அல்லது முற்றிலும் அவற்றை தவிர்த்து விடலாம். சுடு தண்ணீரில் தலைக்கு குளிப்பதை தவிர்த்து விடலாம். தினமும் தரமான தேங்காய் அல்லது ஆமணக்கு எண்ணை பயன்படுத்தி மசாஜ் செய்யலாம்.
3. தலைமுடி உதிர்வை கட்டுபடுத்த முடியுமா?
நிச்சயம் முடியும். அதற்கு நீங்கள் சில முயற்சிகளை செய்ய வேண்டும். குறிப்பாக மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பின்னர் உங்கள் உணவு முறையில் மாற்றங்களை கொண்டு வந்து, தேவையான சிகிச்சைகளை அல்லது வீட்டு குறிப்புகளை செய்ய வேண்டும்.
4. தலைமுடி உதிர்வை தடுக்க சிறந்த வைட்டமின் எது?
வைட்டமின் பி 3, வைட்டமின் சி ஆகியவை சிறந்தது. இவற்றை தவிர ஜின்க், இரும்பு மற்றும் கொழுப்பு அமிலமும் மிக முக்கியம்.
5. தேங்காய் எண்ணை தலைமுடி மீண்டும் வளர உதவுமா?
தேங்காய் எண்ணையில் நல்ல கொழுப்பு, வைட்டமின் இ, விடமின் கே மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆக்சிஜனேற்றம் அதிக அளவு உள்ளது. அதனால், தேங்காய் எண்ணை நிச்சயம் தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
6. தலைமுடியை சிறிதாக வெட்டி விடுவதால் உதிர்வு நிற்குமா?
இல்லை. இதற்கும் தலைமுடி உதிர்வுக்கும் சம்பந்தம் இல்லை. தலைமுடி வேர் பகுதி ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உதிர்வை குறைக்க முடியும்.
7. நீண்ட தலைமுடி இருப்பதால், உதிர்வு ஏற்படுமா?
இல்லை. தலைமுடியின் நீளம் எந்த விதத்திலும் இதற்கு சம்பந்தப்படாது. மாறாக, நீண்ட கூந்தல் இருக்கும் போது, அதனை அழுக்கு சேராமல் பாதுகாக்க வேண்டும். இது தலைமுடி ஆரோக்கியமாக இருக்க உதவும்.
8. மருந்துகளால் ஏற்பட்ட தலைமுடி உதிர்வை எப்படி குறைப்பது?
நீங்கள் நோயின் காரணமாக தினமும் எடுத்துக் கொள்ளும் மருந்தால் தலைமுடி உதிர்வு ஏற்படுகின்றது என்பதை உணர்ந்தால், அவற்றை முதலில் நிறுத்தி விட வேண்டும். பின்னர் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சரியான சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
9. தலைமுடி உதிர்வை தடுக்க எந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்?
நன்னீர் மீன், கமலாபழம், திராட்சை பழம், எலுமிச்சைபழம், மற்றும் பெர்ரி வகைகளை, குறிப்பாக வைட்டமின் சி நிறைந்துள்ள உணவு பொருளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க – வெப்ப பாதுகாப்பு சீரம்: கூந்தலின் அழகை மேம்படுத்த தரமான சீரம் தேர்வு செய்ய சில குறிப்புகள்
பட ஆதாரம் – Shutterstock
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!