கருத்தடை உறை (Condom) என்பது பாலுறவின் போது அணியப்படும் ஒரு உறை வடிவ தடுப்புச் சாதனமாகும். இது மெல்லிய, மென்மையான, நெகிழ்ச்சித் தன்மை கொண்ட உறையையும், மீட்சிப்பண்பு கொண்ட வளையத்தை உறையின் முடிவிலும் கொண்டிருக்கும். விரும்பப்படாத கருத்தரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், பால்வினை நோய்களின்பரவலைத் தடுக்கவும் கருத்தடை உறைகள் பயன்படுகின்றன.
கருத்தடை உறைகளில் ஆணுறை(condom), பெண்ணுறை என்பன உள்ளன. ஆணுறைகள்(condom) ஆண்குறியை மூடி அணியப்படுவதால் பாலுறவின்போது வெளியேறும் விந்துப் பாய்மம் பாலியற்துணையின் உடலில் நுழைவதைத் தடுக்கிறது. பெண்ணுறைகள் பெண்ணுறுப்பினுள்ளே பயன்படுத்தப்படும்போது, பாலுறவின்போது, விந்துப் பாய்மமோ அல்லது வேறு உடல் திரவங்களோ பெண்ணுடலினுள் செல்வதைத் தடுக்கிறது.
தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கவும், தொற்றுக்களில் இருந்து விடுபடவும் உடலுறவின் போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆணுறை (condom)பயன்படுத்தப்படுகின்றது.
கருத்தடை என்றாலே கருத்தடை மாத்திரைகளும் ஆணுறையும்(condom) மட்டுமே நமக்கு நினைவில் வரும். ஆனால் கருத்தடை மாத்திரைகளால் பெண்கள் உடல்நிலையில் பக்க விளைவுகளை உண்டாக்கும். அதற்கு பதிலாக ஆணுறையை பயன்படுத்தலாம்.
கருத்தரிப்பு தவிர்த்துவிடலாம்
ஆணுறை(condom) பயன்படுத்தினால் கருத்தரிப்பை தவிர்த்து விடலாம் என்பது நூறு சதவித உண்மை கிடையாது. தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது கடின உராய்வுகளால் ஆணுறையில்(condom) கிழிசல் ஏற்பட்டாலோ, காலாவதியான, தரமற்ற ஆணுறை பயனப்டுதினாலோ கருத்தரிப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு.
தரமான ஆணுறை
தரமான ஆணுறையாகவே(condom) இருப்பினும், அதை சரியாக அணிய தெரியவில்லை எனிலும் நீங்கள பக்கவிளைவுகளை அனுபவிக்க கூடும். எனவே, ஆணுறை சார்ந்த இந்த தவறுகள் இனிமேல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்…
காலாவதி
இதர பொருட்களுக்கு காலாவதி நாள் இருப்பது போலவே ஆணுறைக்கும்(condom) காலாவதி நாள் இருக்கிறது. எனவே, காலாவதி நாளை தாண்டிய அல்லது காலாவதி நாளை நெருங்கும் ஆணுறைகளை(condom) பயன்படுத்த வேண்டாம். இதனால், எளிதாக கிழிசல் ஏற்படலாம், கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
சரியான ஆணுறை
சரியான ஆணுறை அணியாமல் அல்லது தரமற்ற, காலாவதியான ஆணுறைகளை(condom) பயன்படுத்தினால் கருத்தரித்தல், நோய் (பால்வினை) தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, சரியாக அணியவும், தரமான ஆணுறை பயன்படுத்துவும் கற்றுக் கொள்ளுங்கள்.
அலர்ஜி
சிலருக்கு லேடக்ஸ் ஆணுறைகள்(condom) பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படும். லேடக்ஸ் என்பது ரப்பர் போன்ற பொருளாகும். இதனால் ஊருச்சுவிடுவதில் சிரமம், வீக்கம், தும்மல் போன்றவை கூட ஏற்படலாம்.
இயற்கையான ஆணுறை(condom)
லேடக்ஸ் ஆணுறை தவிர்த்து, இயற்கையான தோல்களின் மூலம் தயாரிக்கப்பட்ட ஆணுறைகள், சின்தடிக் ரப்பரில் தயாரிக்கப்படும் ஆணுறைகளும்(condom) இருக்கின்றன. இவர் அலர்ஜிகளில் இருந்து பாதுகாக்கும். அதிக இன்பம் பெற உதவும்.
சரியாக மாட்டவும்
ஆணுறையை சரியான அளவில் மாட்டினால் தான் உறவின் போது இன்பம் காண முடியும். இல்லையெனில் பாதியிலேயே கலன்றுவிடும். பிறகு உறவில் மிகப்பெரிய விரிசல் தான் ஏற்படும்.
பொருத்தமான ஆணுறை(condom)
உங்களது ஆணுறுப்பின் அளவுக்கு பொருத்தமான ஆணுறையை(condom) தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். இவை சந்தைகளில் பலதரப்பட்ட அளவுகள் மற்றும் நறுமணங்களில் கிடைக்கின்றன. இதில் உங்களுக்கு பொருத்தமானதை வாங்கி பயன்படுத்துங்கள்.
தரம்
ஆணுறை வாங்கும் போது அதன் அளவு மற்றும் நண்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இவை பல்வேறு தரங்களிலும் கிடைக்கின்றன.
விரிசல்
நீங்கள் உடலுறவில் ஈடுபடும் போது ஏதேனும் மாற்றம் தெரிந்தால், உடனடியாக உடலுறவை நிறுத்திவிட்டு உங்களது ஆணுறையை சோதித்துப்பாருங்கள். நீங்கள் உடலுறவின் மீது உள்ள ஆர்வத்தில் இந்த விஷயத்தை கவனிக்காமல் இருப்பது முற்றிலும் தவறு.
செக்ஸ் உணர்வை தூண்டும் பெண்களின் மார்பகம் ஆண்கள் காதலிக்க காரணம்?
கூந்தல் அழகை பராமரிக்கும் கற்றாழையின் 6 அற்புத பயன்கள்
வயதில் குறைவான நடிகர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்
பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo