'பட டிக்கெட்டுடன் பாப்கார்ன் அனுப்புகிறேன்'.. நடிகரை வெளுத்து வாங்கிய சமந்தா!

'பட டிக்கெட்டுடன் பாப்கார்ன் அனுப்புகிறேன்'.. நடிகரை வெளுத்து வாங்கிய சமந்தா!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக நயன்தாராவின் (Nayanthara) மார்க்கெட் இருக்கிறது. ஹீரோவுக்கு இணையாக தனிப்பட்ட முறையில் ஒரு படத்தினையே தோள்களில் தாங்கும் அளவுக்கு தனது நடிப்பால் விஸ்வரூபமெடுத்து இருக்கிறார். அவ்வப்போது சர்ச்சைகள் வந்தாலும், தனிவாழ்வில் ஏற்ற-இறக்கங்கள் இருந்தாலும் அவரது நடிப்புக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் பேவரைட் நடிகையாக நயன்தாரா(Nayanthara) திகழ்கிறார்.நயன்தாரா(Nayanthara) நடிப்பில் உருவாகி இருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மூத்த நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து மேடையில் பேசியது திரையுலகில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இவரது கீழ்த்தரமான பேச்சுக்கு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.


இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான ஐரா படத்தின் ஸ்நீக் பீக் வீடியோ வெளியானது. அதில் உங்கள மாதிரி ஆளுங்களால தாண்டா பொண்ணுங்க வெளில போக முடில என்று நயன்தாரா காட்டமாகத் தெரிவித்து இருப்பார். இந்த வீடியோ ராதாரவிக்கான பதிலடி என்றே அனைவரும் நினைத்தனர். தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக ராதாரவி நீக்கப்பட்டார்.


கும்பிட-கூப்பிட


விழாமேடையில் ராதாரவி பேசுகையில் ''எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவாக நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத் தான் தேடுவார்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்,'' என்றார்.வரலட்சுமி-குஷ்பூ


இவரின் இந்த பேச்சுக்கு நடிகை வரலட்சுமி, ராதிகா சரத்குமார், டாப்சி பன்னு, குஷ்பூ என முன்னணி நடிகர்-நடிகைகள் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக நடிகை வரலட்சுமி ராதாரவியை வெளுத்து வாங்கியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விஷாலையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஆணாதிக்க சங்கங்கள் என நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றையும் அவர் திட்டித்தீர்த்து இருந்தார்.சமூக வலைதளங்கள்


நடிகை என்பதையும் தாண்டி தனது அலட்டல் இல்லாத நடவடிக்கைகளாலும் ஏராளமானோர் நயனுக்கு ரசிகர்களாக உள்ளனர். இந்த விவகாரத்தால் சமூக வலைதளங்கள் அனைத்தும் தற்போது திகுதிகுவென தீப்பிடித்தது போல பற்றி எரிந்து வருகிறது. ரசிகர்கள் பலரும் நாங்கள் நயன்தாராவுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை வலியுறுத்தும் பொருட்டு #istandwithnayanthara என்னும் ஹேஷ்டேக்கில் நயனுக்கு அதரவு தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.


சமந்தா(Samantha)


இந்தநிலையில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா(Samantha), ராதாரவியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். நடிப்பு என்று வரும்போது நயனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் சமந்தா(Samantha). எனினும் நயனுக்கு ஆதரவு தெரிவித்து அவர் ட்வீட் செய்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.பாப்கார்ன்சமந்தா(Samantha) தனது ட்வீட்டில், ''அய்யோ பாவம், ராதாரவி அவர்களே, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும் பாடு இருக்கிறதே. நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள். உங்கள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர்ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப்கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள்,'' என தெரிவித்துள்ளார்.


ராணா டகுபதிஇதேபோல தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ராணா டகுபதியும், ''ஒரு மிகச்சிறந்த நடிகையை பற்றி ராதாரவி அருவருப்பான கருத்துகள் கூறியதைக் கேட்டேன். உங்கள் கருத்துகள் உங்கள் அருவருப்பான குணத்தை காட்டுகிறது. பல கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்த அவரது திறனைக் காட்டுகிறது. இந்த சமூகத்துக்கு அவமானம் நீங்கள்,'' என வெளுத்து வாங்கியுள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாராவும் தனது நிலைப்பாட்டினை நேற்று அறிக்கை வழியாகத் தெரிவித்தார், என்பது குறிப்பிடத்தக்கது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.