தன்னை விட 'இளைய' ஹீரோக்களுடன்... 'ஜோடி' போட்ட ஹீரோயின்கள்!

தன்னை விட 'இளைய' ஹீரோக்களுடன்... 'ஜோடி' போட்ட ஹீரோயின்கள்!

பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரையில் வயதில் மூத்த ஹீரோக்கள் (Hero) தன்னைவிட பலமடங்கு வயது குறைந்த ஹீரோயின்களுடன் (Heroine) நடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். ஹீரோக்களுக்கு (Hero) ரசிகர்கள் அதிகம் இருப்பதும், ஹீரோயின்களின் (Heroine) சினிமா வாழ்க்கை மிகவும் குறுகிய காலம் தான் என்பதாலும் காலம்காலமாக இது நடைபெற்று வருகிறது.


மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல சினிமாவிலும் தற்போது பல்வேறு மாற்றங்கள் நடைபெறத் துவங்கியுள்ளன. ஹீரோக்களின்(Hero) மாஸுக்கு சற்றும் குறைவில்லாமல், ஹீரோயின்களும்(Heroine) மாஸ் காட்டி வருகின்றனர். ஹீரோக்களை சுற்றிவந்து டான்ஸ் ஆடியதைத் தவிர்த்து தனியாக ஒரு படத்தினைத் தாங்கும் அளவுக்கு ஹீரோயின்களும் மெனக்கெட ஆரம்பித்துள்ளனர்.


அதேபோல சினிமாவில் தன்னைவிட குறைந்த வயதுடைய ஹீரோக்களுக்கு, ஹீரோயின்கள் சினிமாவில் ஜோடியாக நடிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தன்னைவிட வயது குறைந்த ஹீரோக்களுடன்(Hero) சினிமாவில் ஜோடி போட்ட போல்டான ஹீரோயின்கள்(Heroine) குறித்து இங்கே பார்க்கலாம்.


பிரசன்னா-சினேகாஅச்சமுண்டு அச்சமுண்டு, கோவா படங்களில் சேர்ந்து நடித்த இந்த ஜோடி நிஜவாழ்விலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். சினேகாவை விட பிரசன்னா ஒருவயது இளையவர்.அன்பான இந்த ஜோடிக்கு அழகான ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கவுதம் கார்த்திக்-பிரியா ஆனந்த்வை ராஜா வை, முத்துராமலிங்கம் என இரண்டு படங்களில் இந்த ஜோடி சேர்ந்து நடித்து இருந்தனர். நிஜவாழ்வில் கவுதமை விட பிரியா 3 வயது பெரியவர்.


அப்பாஸ்-தபுகாதலர்களின் பேவரைட் படமான காதல் தேசம் படத்தில் அப்பாஸ்-தபு சேர்ந்து நடித்து இருந்தனர். நிஜவாழ்வில் அப்பாஸை விட தபு 4 வயது பெரியவர்.


அனுஷ்கா-உன்னி முகுந்தன்பாஹமதி படத்தில் அனுஷ்கா ஜோடியாக உன்னி முகுந்தன் நடித்து வருகிறார். நிஜவாழ்வில் அனுஷ்காவை விட உன்னி முகுந்தன் 6 வயது இளையவர்.


சிம்பு-ஜோதிகாஎல்லா விஷயத்திலும் முன்னோடியாக விளங்கும் சிம்பு இந்த விஷயத்திலும் முன்னோடி தான். மன்மதன், சரவணா என இரண்டு படங்களில் ஜோதிகாவுடன், சிம்பு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நிஜவாழ்வில் சிம்புவை விட ஜோதிகா 4 வயது பெரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல குத்து படத்திலும் தன்னைவிட 3 மாதங்கள் பெரியவரான திவ்யாவுடன் சிம்பு சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்துக்குப் பின் குத்து ரம்யா என்பது ரம்யாவின் அடைமொழியாகிப் போனது.


ஜி.வி.பிரகாஷ்குமார்-ஸ்ரீதிவ்யாஇசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகங்களைக் கொண்ட ஜி.வி.பிரகாஷ் பென்சில் படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். அதிக வித்தியாசம் எதுவும் இல்லை என்றாலும் ஸ்ரீதிவ்யா, ஜிவியை விட வயதில் ஒரு மாதம் மூத்தவர். (கடமைன்னு வந்துட்டா நாங்க கண்ணும் கருத்துமா இருப்போம் மக்களே)


பிருத்விராஜ்-ஐஸ்வர்யாஇருப்பதிலேயே அதிக வயது வித்தியாசத்தில் சேர்ந்து நடித்த ஜோடி இவர்களாகத் தான் இருப்பர். ராவணன் படத்தில் செம ரொமான்டிக்காக 'கள்வரே' என பிருத்வியை கொஞ்சிய ஐஸ் நிஜவாழ்வில் பிருத்வியை விட 9 வயது மூத்தவர். எனினும் படத்தில் பார்க்கும்போது அந்தளவு வித்தியாசம் இருவருக்கும் தெரியவில்லை.


தனுஷ்-ரம்யாபொல்லாதவன் படத்தில் தனுஷ்-ரம்யா இருவரும் சேர்ந்து நடித்து கெமிஸ்ட்ரியில் கலக்கி இருந்தனர். நிஜவாழ்வில் தனுஷை விட ரம்யா ஒருவயது மூத்தவர். இதேபோல புதுப்பேட்டை படத்திலும் தன்னைவிட 2 வயது மூத்தவரான சினேகாவுடன், தனுஷ் சேர்ந்து நடித்திருந்தார். காதல் கொண்டேன் படத்தில் தன்னைவிட 1 வயது மூத்தவரான சோனியா அகர்வாலுடன் தனுஷ் சேர்ந்து நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


அதர்வா-சமந்தா சிம்பு, தனுஷுக்கு அடுத்ததாக தன்னைவிட வயதில் மூத்த ஹீரோயின்களுடன் அதிகமாக ஜோடி போட்டவர் இவராகத் தான் இருக்கும். பரதேசி படத்தில் அதர்வா-வேதிகா இருவரும் சேர்ந்து நடித்து இருந்தனர். நிஜவாழ்வில் அதர்வாவை விட வேதிகா 2 வயது மூத்தவர். இதேபோல பாணா காத்தாடி படத்தில் சமந்தா-அதர்வா ஜோடி சேர்ந்து நடித்து இருந்தனர். நிஜத்தில் சமந்தா, அதர்வாவை விட 2 வயது மூத்தவர். இதே 2 வயது வித்தியாசத்தில் மீண்டும் ஒருமுறை தன்னைவிட பெரியவரான ஸ்ரீதிவ்யாவுடன் அதர்வா இணைந்து ஈட்டி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும். பெண்களுக்கான மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.