உங்க ஆபிஸ்ல 'இந்தமாதிரி' யாராவது இருக்காங்களா?.. செக் பண்ணிக்கோங்க!

உங்க ஆபிஸ்ல 'இந்தமாதிரி' யாராவது இருக்காங்களா?.. செக் பண்ணிக்கோங்க!

வேலையில்லாத் திண்டாட்டம் நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது. இதனால் பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் உணவு டெலிவரி,
டிரைவர் என ஏதாவது ஒரு வேலையில் காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை உங்களுக்கு தகுதிக்கேற்ற வேலை
கிடைத்தால் அதனைத் தக்கவைத்துக்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. நாளொன்றுக்கு 8 மணிநேரம் என்பது மாறி சிலர் ஆபிசிலேயே தங்கி, குளித்து வேலை செய்யும் நிலை வெகுவேகமாக உருவாகி வருகிறது.மாறிவரும் காலச்சூழ்நிலையில் மூன்று வேளை சாப்பாடும் கொடுத்து விட்டால் நாள் முழுவதும் ஆபிசிலேயே தங்கிக்கொள்ளலாம். வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு மிச்சம் என்ற சூழலுக்கு இளைஞர்கள் மாறும் தூரம் வெகுதொலைவில் இல்லை. ஆனால் இதையும் பலர் சீரியஸாக எடுத்துக்கொண்டு எந்நேரமும் வேலையே(Workaholic) கதி என்று கிடக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் வெகுவிரைவிலேயே இதுபோன்ற நபர்கள் வேலைக்கு அடிமையாகி(Workaholic) விடுகின்றனர்.


உங்க ஆபிஸ்லேயும் இந்த மாதிரி யாரும் இருக்காங்களானு? படிச்சு பார்த்து செக் பண்ணிக்கோங்க. ஒருவேளை இந்த லிஸ்ட்ல நீங்க இருந்தா, சீக்கிரம்
இதுல இருந்து வெளில வர பாருங்க!கரெக்ட் டைம்


நேர விஷயத்தில் இதுபோன்ற நபர்கள் பங்சுவல் பரமசிவன்களாக இருப்பார்கள். 9 மணிக்கு ஆபிஸ்(Office) என்றால் 8.30 மணிக்கே ஆபிஸ்(Office) வந்து கதவு திறந்து காத்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் கூட வேலைக்கு லேட்டாக வர மாட்டார்கள். அவ்வளவு ஏன்? மற்றவர்கள் லேட்டாக வருவதைப் பார்த்தால் இவர்களுக்கு ஆட்டோமேடிக்காக பிரஷர் எகிறிவிடும்.


அதிக கவனிப்பு


படித்தவுடன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தனது வேலை (Workaholic) மட்டுமின்றி மற்றவர்கள் செய்யும் வேலைகளையும் துல்லியமாகக் கவனிப்பார்கள். அவர்கள் ஏதாவது தவறு செய்து விடுவார்களோ? என்ற பதட்டம் அவர்களை விட இவருக்குத் தான் அதிகமாக இருக்கும். மேலும் அவர்கள் நம்மைப்போல சரியாக வேலை செய்ய மாட்டார்கள் என்ற எண்ணமும் இவர்களுக்கு இருக்கும். இதனால் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி வைத்துக்கொண்டு மற்றவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.10 நிமிடங்களுக்கு


ஏதேனும் எமர்ஜென்சி காரணமாக விடுமுறை எடுத்தால் கூட இவர்களது மனம் முழுவதும் ஆபிஸில் தான் இருக்கும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒருமுறை மொபைலை எடுத்து ஆபிஸ் மெயில்கள் அல்லது வாட்ஸ்ஆப் உரையாடல்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் ஆபிஸ் போகவில்லை என்பதை குறைந்தது பத்து முறையாவது ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.வார விடுமுறை


வார நாட்களில் ஆபிஸ்(Office) செல்லக்கூட நாம் அனைவரும் அலுத்துக்கொள்வோம்.ஆனால் கம்பெனி எம்.டி வாரவிடுமுறை நாட்களில் ஆபிஸ்(Office) வரவேண்டும், முக்கியமான வேலை இருக்கிறது என்று சொன்னால் கூட அல்வா கொடுப்பதுபோல சிரித்த முகத்துடன் ஊருக்கு முன்பு அதனை ஓடிச்சென்று ஏற்றுக்கொள்வார்கள்.


சம்மர் வெகேஷன்


சம்மர் வெகேஷன் என குடும்பமாக புதிய ஊர்,நாடுகளுக்கு சென்று இருப்பார்கள். ஆனால் அங்கு சென்றாலும் கூட ஆபிஸ்(Office) குறித்த சிந்தனையிலேயே மூழ்கி இருப்பார்கள். எல்லா வேலைகளும் நாம் இல்லாமல் சரியாக நடக்குமா? என்று சதா அதுகுறித்த சிந்தனையிலேயே இருப்பார்கள். இதனால் சுற்றுலா போன்றவற்றை இவர்களால் நன்றாக என்ஜாய் செய்ய முடியாது.விழாக்கள்


குடும்ப நிகழ்ச்சிகள், விருந்து விழாக்கள் போன்றவை இருந்தால் கூட ஆபிஸ் சென்றே தீருவேன் என அடம் பிடிப்பார்கள். அதேபோல நண்பர்கள், உறவினர்கள் என யார்வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் செல்ல மாட்டார்கள். அதேநேரம் சக ஊழியர்கள் விருந்து, விழாக்களுக்கு சென்றால் அவர்கள் நேரத்தை வீணாக செலவு செய்வதாக நினைத்து வருத்தப்படுவார்கள்.


இதுபோன்ற அறிகுறிகள் ஏதாவது உங்ககிட்ட இருந்தா? கண்டிப்பா அதை மாத்திக்க பாருங்க. 'வாழ்வதற்காக தான் வேலை, வேலைக்காக வாழ்க்கை அல்ல' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான
மிகச்சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.