அஜீத் இன்னும் நடிக்கிறாரா?.. சமூக வலைதளங்களை அதிர வைத்த அபிநந்தன்!

அஜீத் இன்னும் நடிக்கிறாரா?.. சமூக வலைதளங்களை  அதிர வைத்த அபிநந்தன்!

தனது வீரத்தால் ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப்பார்க்க வைத்த இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுதலையாகி இந்தியா வந்து 3 நாட்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னும் சமூக வலைதளங்களில் அபியை கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அபிநந்தன்(Abinanthan) ட்ரெண்டடித்து வருகிறார்.கோலிவுட்டைப் பொறுத்தவரையில் நடிகர்கள் அஜீத்(Ajith), விஜய்(Vijay), இஷா கோபிகர், சிம்பு ஆகியோரும் தங்களின் செயல்களால் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் அதிக ஆதிக்கம் செலுத்திய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம்.


அபிநந்தன் (Abinanthan)பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டுவந்த ரியல் ஹீரோ அபிநந்தனின் பாதுகாப்பை முன்னிட்டு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவருக்கு பல்வேறு கட்டமாக சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. அவரது உடலில் ஏதேனும் சிப் உள்ளதா என கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானியர்களால் தாக்கப்பட்ட அபிக்கு மருத்துவ சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பல்வேறு பெருமைகளுக்கும் அபி தற்போது
சொந்தக்காரராகி இருக்கிறார். அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.


விமான விரட்டல்பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பைஸன் ரக போர்
விமானத்தின் மூலம் விரட்டிச் சென்றார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜவுரி வான் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை அபிநந்தன் (Abinanthan) 
இடைமறித்தார். அப்போது அந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து திரும்பியபோது
அந்நாட்டு விமானப்படையினர் அபிநந்தன் விமானத்தைச் சுட்டனர். இதில் அவர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். ஏற்குறைய 60
மணிநேரத்துக்கும் மேலாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து அதன்பின் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் (Abinanthan) ஒப்படைக்கப்பட்டார்.முதல் இந்தியர்இந்தநிலையில் பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்- 16 விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியது பெரும் வியக்கத்தக்க விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால், அமெரிக்கத் தயாரிப்பான எப்-16 ரக போர் விமானம் அதி நவீன தொழில்நுட்பம் கொண்டது. இந்தியாவின் மிக்-21 விமானத்தைக் காட்டிலும் அதிகமான வசதிகள், நவீன தொழில்நுட்பங்கள் கொண்டது. இதுவரை அந்த விமானத்தை யாரும் சுட்டு வீழ்த்தியது இல்லை.ஆனால், 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷிய தயாரிப்பான மிக்-21 பைஸன் ரக விமானத்தின் மூலம் எப்-16 ரக விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தியதுதான் ஆச்சர்யமானது . இதன்மூலம் எஃப்-16 போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமை அபிக்கு கிடைத்துள்ளது.


'கன்ஸ்லிங்கர்' மீசைரியல் ஹீரோ அபிநந்தனுக்குப் புகழாரம் சூட்டும் வகையில் இந்திய இளைஞர்கள் பலரும் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையைப் போல் தங்கள்
மீசையையும் வடிவமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த இரு நாட்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அபிநந்தன் வைத்திருக்கும் மீசை குறித்த விவாதம் தீவிரமாக இருந்து வருகிறது. தாடி வைத்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் சலூன் கடை நோக்கி படையெடுத்து தங்கள் தாடியை முழுவதையும் எடுத்துவிட்டு அபிநந்தனைப் போல மீசை வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் ஒருசில நாட்களில் இந்த 'கன்ஸ்லிங்கர்' மீசை மேலும் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அஜீத்(Ajith)சிவகார்த்திகேயன் படம் வழியாக தமிழில் தனது 2-வது இன்னிங்க்சை தொடங்கும் நடிகை இஷா கோபிகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி சர்ச்சைகளை விலைக்கு வாங்கிக்கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் குறித்து பேசும்போது அவர் தனக்கு ரஜினியை நினைவுபடுத்துவதாக கூறியிருக்கும் இஷா, அஜீத் (Ajith) குறித்த ஒரு கேள்விக்கு அவர் இன்னும் நடிக்கிறாரா? என கேள்வி எழுப்பி சர்ச்சைக்கு திரி கொளுத்திப் போட்டிருக்கிறார். இதன்வழியாக ரஜினி மற்றும் அஜீத் (Ajith) ரசிகர்களின் கோபத்திற்கு அவர் ஆளாகியுள்ளார். தற்போது சமூக வலைதளங்களில் இஷாவை அஜீத் (Ajith),ரஜினி ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


நேர்கொண்ட பார்வை போனி கபூர் தயாரிப்பில் அஜீத் நடித்து வரும் புதிய படத்திற்கு நேர்கொண்ட பார்வை என படக்குழு பெயர் சூட்டியுள்ளது. இப்படத்தின் தலைப்புடன் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் நேர்கொண்ட பார்வை வைரலானது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் இப்படம் பிங்க் படத்தின்  ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் எந்த படமும் அஜீத் நடிப்பில் வெளியாகவில்லை. அதற்குப்பதில் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இந்த வருடம் தல டபுள் ட்ரீட் கொடுக்க ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.


விஜய்சமீபத்தில் நடைபெற்ற தனது கார் ஓட்டுநர் ராஜேந்திரன் மகள் நிச்சயதார்த்தத்தில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். தான் நடித்த விளம்பரமொன்றில் கார் ஓட்டுநர் மகளின் ஆசையை நிறைவேற்றுவது போல விஜய் நடித்திருப்பார். அதேபோல நிஜவாழ்விலும் அவர் நடந்து கொண்டுள்ளது விஜய் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.


சிம்பு-ஹன்சிகாமுன்னாள் காதலர்களான சிம்பு-ஹன்சிகா இருவரும் வாலு படத்துக்குப்பின் மஹா படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்துக்காக சிம்பு 10 நாட்கள் கால்ஷீட் அளித்திருக்கிறாராம். வாலு படத்துக்குப்பின் மீண்டும் சிம்பு-ஹன்சிகா ஜோடி சேர்வதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேவேளையில் உடற்பயிற்சியில் சிம்பு தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.