'அர்ஜுன் ரெட்டி'யின் ரீமேக் 'வர்மா'வின் தமிழ் ரீமேக் இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'அர்ஜுன் ரெட்டி'யின் ரீமேக் 'வர்மா'வின் தமிழ் ரீமேக் இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி டோலிவுட்டில் வெளியாகி கோலிவுட் ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு படமென்றால் அது அர்ஜுன் ரெட்டி(Arjun
Reddy) தான். இன்று தெலுங்கின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு, டோலிவுட்டில்
செமையான ஒரு 'விசிட்டிங் கார்டு' கொடுத்து அழகுபார்த்த பிளாக்பஸ்டர் படமிது. இந்த படம் கொடுத்த வெற்றியால் தற்போது அவரின் படங்கள்
சென்னை திரையரங்குகளில் அதுவும் காலை 5 மணி காட்சியில் வெளியாகிறது.



இப்படத்தின் பிரமாண்ட வெற்றியைப் பார்த்த கோலிவுட்டினர் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க போட்டா போட்டி போட்டனர். கடைசியில் இ4
எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பலத்த போட்டிகளுக்கு இடையில் கைப்பற்றியது. தனது மகன்
துருவ்வை(Dhruv) கோலிவுட்டில் அறிமுகப்படுத்த நினைத்த நடிகர் விக்ரம், தமிழில் தன்னை முன்னணி நடிகராக உயர்த்தி விட்ட இயக்குநர் பாலா தான்
இப்படத்தை இயக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்து அதில் வெற்றியும் பெற்றார்.


அதன்படி 'வர்மா'(Varma) என பெயர் சூட்டப்பட்டு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றது. இதில் துருவ்க்கு ஜோடியாக வங்காள நடிகை மேகா நடிக்க முக்கிய வேடங்களில் ரைசா வில்சன், ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த வருட காதலர் தினத்துக்கு இப்படம் வெளியாகும் என
தயாரிப்பு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.


அதிரடி அறிவிப்பு



இந்தநிலையில் காதலர் தினத்துக்கு முன்பாக இப்படத்தில் தங்களுக்கு திருப்தி இல்லை. 'வர்மா'(Varma) அர்ஜுன் ரெட்டி(Arjun Reddy ரீமேக் போல இல்லை அதனால் வேறு ஒரு இயக்குநரை வைத்து இப்படத்தை மீண்டும் ஷூட் செய்து ஜூன் மாதம் வெளியிடுகிறோம் என தயாரிப்பு நிறுவனமான இ4 எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்தது. மேலும் துருவ்(Dhruv) தவிர மற்ற அனைவரும் மாற்றப்படுவார்கள் விரைவில் அதுகுறித்த அறிவிப்பினை வெளியிடுவோம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.


பாலா அறிக்கை



இதைக்கேட்டு ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் உலகமே அதிர்ச்சியில் உறைந்து போக, பதிலுக்கு இயக்குநர் பாலா,''படைப்பு சுதந்திரம் கருதி வர்மா(Varma) படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன். துருவ்(Dhruv) விக்ரமின் எதிர்கால நலன்கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை,'' என தெரிவித்திருந்தார்.


கவுதம் மேனன்



வர்மா(Varma) படத்தில் இருந்து பாலா விலகியதைத் தொடர்ந்து இப்படத்தை யார் இயக்கப்போகிறார்கள்? என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மட்டுமின்றி
திரையுலகினர் மத்தியிலும் நிலவி வந்தது. ஒருபுறம் கவுதம் மேனன், செல்வரகாவன் என முன்னணி இயக்குநர்களின் பெயர்கள் அடிபட, மறுபுறம் எந்த இயக்குநர் இப்படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும்? என பிரபல ஊடகங்ககள் அனைத்தும் ரசிகர்களிடம் கருத்துக்கணிப்புகளை நடத்த ஆரம்பித்தன. தற்போது அந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது. எஸ். வர்மா(Varma) படத்தின் ரீமேக்கை இயக்கப்போவது யார்? என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


ஆதித்ய வர்மா



இந்தநிலையில் இன்று மாலை இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பினை தயாரிப்பு குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி படத்தின் பெயர் 'ஆதித்ய வர்மா' என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் அசோஸியேட் இயக்குநர் கிரிசய்யா இயக்குகிறார். பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்து துருவ்வுக்கு(Dhruv) ஜோடியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே வருண் தவானுடன் `அக்டோபர்’ பாலிவுட் படத்தில் அறிமுகமானவர். இவர்களைத் தவிர்த்து நடிகை ப்ரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.மார்ச் 10-ம் தேதி ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.



துருவ் நியூ லுக்



கிட்டத்தட்ட அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவரகொண்டா அப்படத்தில் வைத்திருந்த லுக் போல துருவ்(Dhruv) விக்ரம் தலை நிறைய முடி, மீசை, தாடி வைத்து புதிய லுக் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த புதிய லுக்கானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது. அதேபோல படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினைப் பெறுமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.


ஆல் தி பெஸ்ட் ஆதித்ய வர்மா!


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான
மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.