'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்'.. 'எல்கேஜி'யாக ஆர்.ஜே.பாலாஜி ஏமாற்றினாரா? ஏமாந்தாரா?

'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்'.. 'எல்கேஜி'யாக ஆர்.ஜே.பாலாஜி  ஏமாற்றினாரா? ஏமாந்தாரா?

ரொம்ப நாளா எதிர்பார்த்துக் காத்திருந்த ஆர்.ஜே.பாலாஜியின்(RJBalaji) எல்கேஜி(LKG) திரைப்படம் இன்னைக்கு வெளியாகி இருக்கு. பாரபட்சம் பார்க்காம நடப்பு அரசியல் நிகழ்வுகள வச்சு வெளியான டிரெய்லர் எல்லார் மத்தியிலும் செமையா ரீச் ஆச்சு. படத்துல ஆர்.ஜே.பாலாஜியோட(RJBalaji) சேர்ந்து பிரியா ஆனந்த், ஜே.கே.ரித்தீஷ், நாஞ்சில் சம்பத், மயில்சாமி ஆகியோர் சேர்ந்து நடிச்சிருந்த இந்தப்படம் எப்படி இருந்துச்சுன்னு பார்க்கலாம்.லால்குடி கருப்பையா காந்தி என்கிற எல்கேஜி(LKG) (ஆர்.ஜே.பாலாஜி) லால்குடி பகுதியில கவுன்சிலரா இருக்கார். 30 வருஷம் அரசியல்ல இருந்தும் தனக்குன்னு எதுவும் சேர்த்து வச்சிக்காத தன்னோட அப்பா(நாஞ்சில் சம்பத்) மாதிரி தானும் இருந்துடக் கூடாது. நெறைய பணம்,புகழ் சேர்த்து பெரிய ஆளா ஆகணும் அப்படிங்கிறது எல்கேஜியோட ஆசை. பாலாஜியோட இந்த ஆசைக்கு அவரோட மாமாவா இருக்குற மயில்சாமி உதவி செய்றார்.


திடீர்னு அரசியல்ல ஏற்படுற தலைகீழ் மாற்றத்தால முதலமைச்சர் மாறுறார்.அவரோட தொகுதிக்கு இடைத்தேர்தல் வருது. அதுல ரொம்பவும் வலிமை வாய்ந்த வேட்பாளரான ஜேகே ரித்தீஷை எதிர்த்து, எல்கேஜி(LKG) போட்டி போடறார். இதுக்கு இடையில ஊழல் வழக்குகள் காரணமா முதலமைச்சர் ஜெயிலுக்கு போறமாதிரி சூழ்நிலை வருது. பலம்வாய்ந்த ஜேகே ரித்தீஷை எதிர்த்து எல்கேஜி(LKG) ஜெயிச்சு எம்எல்ஏ ஆகுறாரா? முதலமைச்சர் ஜெயிலுக்கு போறதால ஆட்சியில என்னென்ன மாற்றங்கள் வருது? அப்படிங்கிறது தான் எல்கேஜி.


ஆர்ஜேபாலாஜி(RJBalaji)ரொம்ப ஹீரோயிசம் பண்ணாம தனக்கு என்ன வருமோ அத மட்டும் பாலாஜி பண்ணி இருக்கார். டைமிங் காமெடி, அரசியல் கட்சிகள கலாய்க்கிறது,
கவுன்சிலரா அட்டகாசம் பண்ணுறது, அப்பா மாதிரி ஒண்ணும் இல்லாம போய்டுவோமோன்னு பயப்படுறது அப்படின்னு நிறைய இடங்கள்ல ஸ்கோர்
பண்ணி இருக்கார். ஹீரோவா நடிச்சி இருந்தாலும் சண்டை எதுவும் அவர் போடாதது ஆறுதல்.


பிரியா ஆனந்த்நீண்ட இடைவெளிக்குப்பின் பிரியா ஆனந்த் தமிழில் மீண்டும் வெல்கம் பேக் கொடுத்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜியை(RJBalaji) கலாய்ப்பது, தேர்தல்
ஸ்டண்டுகள், கேஷுவல் டயலாக்குகள் என பிரியாவின் நடிப்பு செம சூப்பர். நாலு பாட்டு ரெண்டு டான்ஸ் என வழக்கமான ஹீரோயினாக இல்லாமல்
படம் நெடுகிலும் அவருக்கு நடிக்க ஸ்கோப் இருப்பது ஆறுதல்.


நாஞ்சில் சம்பத்முதன்முறையாக வெள்ளித்திரையில் எண்ட்ரி கொடுத்திருக்கும் நாஞ்சில் சம்பத் அப்பாவி அப்பாவாக கவர்கிறார். திருக்குறள், பழமொழிகள்,
மேடைப்பேச்சு என பேச்சாளராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் கவர்கிறார். ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த
வேடங்களை சிறப்பாக செய்திருக்கின்றனர்.


எத்தனை காலம்லியோன் ஜேம்ஸ் இசையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் பாடல் நடப்பு அரசியல் நிகழ்வுகளை தோலுரித்துக் காட்டுகிறது. தண்ணீரில்
தெர்மாகோல் விடுவது தொடங்கி நடப்பு அரசியலை முடிந்தவரை பகடி செய்திருக்கிறார்கள்.திமிரு காட்டாதடி, தமிழ் ஆந்தெம், டப்பாவா கிழிச்சான் என பிற பாடல்களும் கவனம் ஈர்க்கின்றன.படத்துக்கு தேவையான பின்னணி இசையிலும் லியோன் ஜேம்ஸ் கவர்கிறார். அந்தோணியின் எடிட்டிங்கும், விது அய்யன்னாவின் ஒளிப்பதிவும் படத்தை பலமாக தாங்கிப்பிடிக்கிறது.


ஒன்லைனர்கள்


ரெண்டு நிமிஷம் தலை சுத்திடுச்சு, ஆண்டி இந்தியன், மாடா மனுஷனா என படத்தின் பெரும்பாலான ஒன்லைனர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் செம
ரெஸ்பான்ஸ்.இதேபோல படத்தின் நீளம் ரெண்டு மணி நேரம் என்பதும் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல். முதல்பாதி ஜாலி மோடில் செல்ல, 2-ம் பாதி
சற்று சீரியசாக செல்ல வேண்டும் என ஆங்காங்கே லேசாக ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள்.முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சென்னையில் காலை 5 மணி காட்சிகள் இப்படத்துக்கு கிடைத்ததை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். ஆனால் இந்த மாதிரி அரசியல் ஸ்பூப் படங்களுக்கு
ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


ஒரு அரசியல் படம்னா இப்படித்தான் இருக்கணும் அப்படிங்கிறதுக்கு எடுத்துக்காட்டா இந்த படத்த சொல்லலாம். அரசியல் கட்சிகள எதிர்த்து வசனங்கள் வசனங்கள் வச்சு மக்கள் மத்தியில எதிர்பார்ப்ப உண்டாக்கி கடைசியில ஒண்ணும் இல்லாம போறதுக்கு, இந்த எல்கேஜி எவ்வளவோ மேல்.


மொத்தத்தில் எல்கேஜி- வாய்விட்டு சிரிக்கலாம்..


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப்
ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான