உலகில் கவலையற்ற உள்ளங்கள் என்றால் அது குழந்தையின் உள்ளம் தான் என்றுதான் பொதுவாகச் சொல்வார்கள். உண்மையில் அந்தப் பிஞ்சுகளின் உள்ளங்களிலும் கவலைகளும் துயரங்களும் இருக்கலாம் என்பதை பற்றி அறிய வரும்போது உள்ளபடியே மனம் வெதும்புகிறது.
அவர்களுக்கும் மன அழுத்தம் இருக்கிறது. அதனை ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் வாய் மூடி உம்மென்று அமர்ந்திருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் தங்களது மன வலிகளைக் கோபமாக வெளிப்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகளோ எப்போதும் சோகமாகவே காணப்படுவார்கள்.
இதற்கு பின்னணியில் இருப்பது வழக்கம் போலவே சுற்றுப்புற சூழல்கள்தான் என்கிறார்கள் உளவியலாளர்கள்.
குழந்தைகளுக்கு எது நல்லது? ஹோம் ஸ்கூலிங்கா ட்ரெடிஷனல் ஸ்கூலிங்கா !
Pinterest, Youtube, Pixabay
மனக்கவலைக்கான காரணங்கள்
குழந்தைகள் வளர்கின்ற வீட்டில் ஏற்படும் வாக்குவாதங்கள் சண்டைகள் போன்றவற்றால் அவைகள் மன ரீதியாக பயத்தை சந்திக்கின்றன. பெற்றோர்களுடன் விரிசல்கள் ஏற்படுகின்றன. உறவினர்களுடனும் பேசாமல் தனித்து இருக்க விரும்புகின்றனர்.
குழந்தைகள் பள்ளி செல்லும்போது அங்கே நட்பு மூலமாக சில மன வருத்தங்களை குழந்தைகள் சந்திக்கின்றனர்.
குடும்பத்தில் பிரிவுகள் நிகழும்போது குழந்தைகளால் அதனைத் தாங்க முடிவதில்லை. அப்பா அம்மா ஆகிய இருவரும் விவாகரத்து மூலம் பிரிவது என்பது குழந்தைகளின் பிஞ்சு இதயத்தை நொறுங்க செய்கிறது.
அதைப் போலவே அவர்களுக்கு நெருக்கமானவர்களின் பிரிவும் அவர்களை பாதிக்கிறது. செல்லப்பிராணிகள் சில சமயம் இறந்து விட்டாலோ பிரிந்து விட்டாலோ அவர்கள் துயரத்தின் அளவு அதிகமாகிறது.
குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனாலும் அவர்கள் அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தொற்று நோய்கள் வரும்போது அதனை எதிர்கொள்ள பயப்படுகிறார்கள்.
உடன் வளரும் குழந்தைகளின் பிடிவாதம் முரட்டுத்தனம் எல்லாமே இந்தக் குழந்தையையும் பாதிக்கிறது. அதைப்போலவே பள்ளியில் பழகும் சக குழந்தைகளின் குணங்கள் இந்தக் குழந்தையை கடுமையாக மன ரீதியாகவே பாதிப்படைய செய்கிறது.
பள்ளி மற்றும் வெளி சூழல்களில் ஏற்படும் தோல்விகள் அதன்பின்பான எதிர்வினைகள் குழந்தைகள் மனத்தை மிகவும் பாதிக்கிறது. பெற்றோரை பாதிக்கும் எந்தவிதமான உணர்வுகளும் குழந்தைகளையும் உடனே பாதிக்கிறது.
உடல் நோய்க்காக நீங்கள் குழந்தைக்கு கொடுத்த மருந்தின் பக்க விளைவுகளால் இந்த வகையான மன பாதிப்புகள் ஏற்படலாம்.
மிக முக்கியமாக குழந்தையை யாரேனும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமயங்களில் வெளியில் சொல்லத் தெரியாமல் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இதனைத் தாண்டி பரம்பரை ரீதியான சில விஷயங்களால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். இப்படியாக பல இடங்களில் சிறு குழந்தைதானே என்று நாம் அலட்சியமாக நினைக்கும் உயிர்கள் மனரீதியான பாதிப்பை அடைகின்றன.
பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான உறவு எப்படி இருந்தால் சிறந்தது? ஓர் உளவியல் பார்வை.
Pinterest, Youtube, Pixabay
இதற்கான தீர்வு
இதற்கான தீர்வாக உளவியலாளர்கள் சில விஷயங்களை குறிப்பிடுகின்றனர். பொதுவாக இவ்வகை மனஅழுத்தத்தால் (mental depression) பாதிக்கப்பட்ட குழந்தைகள் பெற்றோரிடம் பேசுவதற்கு விரும்ப மாட்டார்கள். ஆனாலு அவர்களை பேச வைப்பதுதான் முதல் தீர்வு. அவர்களுக்கு பிடித்த உறவினர் மூலமாகவோ நண்பர்கள் மூலமாகவோ அவர்களை மனம் திறந்து பேசவைக்கும் சூழ்நிலையை பெற்றோர் உருவாக்கித் தர வேண்டும்.
அவர்கள் மனம் திறந்து பேசும்போது அதனைக் கூர்மையாகவும் அக்கறையோடும் கவனிக்கின்ற திறன் கேட்பவர்களுக்கு இருக்க வேண்டும். நீங்களே நேரடியாக களமிறங்குகையில் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். உதாரணமாக அவர்கள் பேசும்போது குறுக்கிட்டு எனக்கு அப்பவே தெரியும் உனக்கு எதுவுமே தெரியலை சொன்னால் கேட்டால்தான் போன்ற வார்த்தைகளை உபயோகித்தால் குழந்தையின் இதயம் மேலும் சுருங்கி விடும்.
பிள்ளைகள் எதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் மூலமாகவே அறிவது அவசியம். அவர்கள் சொந்த வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். பொறுமையாக அவர்களின் பிரச்னையைக் கேட்க வேண்டும். அவர்களின் பேச்சின் மூலம் அவர்களின் கற்பனை எப்படியெல்லாம் இருந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.
குழந்தைகள் பேசும்போது தேவைப்படும் இடங்களில் ஆதரவாக நம்பிக்கை தரும் விதத்தில் வார்த்தைகளை நீங்கள் கொடுக்க வேண்டும். உங்கள் வார்த்தைகள் அவர்களைத் தொடர்ந்து பேச ஊக்கப்படுத்த வேண்டும்.
உதாரணமாக சில நாட்களாகவே நீ கவலையோடு இருக்கிறாய் என்பதை சொல்வதன் மூலம் தன் மீது தனது பெற்றோர் அக்கறையுடன்தான் இருக்கிறார்கள் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ள முடியும்.
இப்படியாக அவர்களுடன் பேசி அவர்களின் துயரங்களில் உங்கள் பங்கை கொடுத்து அவர்களை பாதுகாப்பாக உணரவையுங்கள். அவர்களின் மன சிக்கல்களை அறிந்து அதனை தீர்த்து வைக்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு பின்னரும் குழந்தை மன அழுத்தத்தில் இருந்தால் யோசிக்காமல் உளவியல் மருத்துவரை நீங்கள் அணுகுவதுதான் சிறந்த வழி.
“ஹெலிகாப்டர் பெற்றோர்” – உலகின் மிக நீண்ட தொப்புள் கொடி பற்றி அறிந்ததுண்டா ?
Pinterest, Youtube, Pixabay
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.